image

 

பொது

VI. துறவு மடத்துத் தலைவர் அல்லது தலைவிக்கு ஆசி வழங்குதல்


திருச்சடங்குத் திருப்பலிகள் அனுமதிக்கப்படும் நாள்களில் வெண்ணிறத் பருவுடையுடனோ திருவிழா நிறத் திருவுடையுடனோ இத்திருப்பலி நிறைவேற்றப்படும்.
துறவு மடத்துத் தலைவருக்கு ஆசி வழங்குதல்

வருகைப் பல்லவி

காண். யோவா 15:16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

'காண். கொலோ 3:14-15 அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே நிறைவின் பிணைப்பு. கிறிஸ்துவின் அமைதி உங்கள் இதயங்களை
அக்களிக்கச் செய்வதாக! (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும்.
|

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, (பெயர்) ... எனும் இந்த அவைக்குத் துறவு மடத்துத் தலைவராக உம் அடியார் (பெயர்) . . . ஐத் தேர்ந்தெடுத்தீர்; அதனால் இவர் தம் செயல்களாலும் படிப்பினையாலும் தம் சகோதரர்களின் இதயங்களை நேர்வழியில் நடத்தவும் நிலைவாழ்வின் பரிசை நல்ல ஆயராகிய உம்மிடமிருந்து அவர்களோடு மகிழ்வுடன் பெற்றுக்கொள்ளவும் அருள்புரிவீராக. உம்மோடு. திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களின் காணிக்கையை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர்கள் தங்களையே உள்ளார்ந்த பலியாக ஒப்புக்கொடுத்து உண்மையான மனத்தாழ்மை, கீழ்ப்படிதல், அமைதி ஆகியவற்றால் இடைவிடாது நிரப்பப்படுவார்களாக. எங்கள்.

துறவு வாழ்வின் தொடக்கவுரை (பக். 1041 - 1042 ) சொல்லப்படலாம்.

புதிதாகப் பின் வரும் வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு நற்கருணை மன்றாட்டுகளில், புனிதப்படுத்தப்பட்ட துறவு மடத்துத் தலைவர் குறிப்பிடப்படுகின்றார்:

அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே அ உம் ஊழியர்களாகிய . . ." எனும் மன்றாட்டு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உமது குடும்பம் முழுவதும் இந்தக் குழுமத்தை வழிநடத்த நீர் தேர்ந்தெடுக்கத் திருவுளம் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . ம் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை உளம் கனிந்து ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: தம் சகோதரர்களின் இதயங்களை உறுதிப்படுத்தும்படி இறை ஏற்பாட்டால் இவர் பெற்றுக்கொண்ட பணியை அதே இறைவனின் துணையால் நிறைவேற்ற உம் கொடைகளை இவரில் பாதுகாத்தருளும். (எங்கள்.)

ஆ) 9-ஆம் நற்கருணை மன்றாட்டில், "தூய ஆவியார் ஒன்றுசேர்க்க வேண்டும் என உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகின்றோம் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

ஆண்டவரே, உலகெங்கும் பரவி இருக்கும் உமது திரு அவையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் நினைவுகூர்ந்து, இறை அன்பினால் நிறைவு பெறச் செய்தருளும். இக்குழுமத்துக்குத் துறவு மடத்துத் தலைவராக அளிக்க நீர் திருவுளம் கொண்ட உம் அடியார் இவரையும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தர வேண்டும் என மன்றாடுகின்றோம்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திரு அவையை, சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்கள், இந்தக் குழுமத்துக்குத் துறவு மடத்துத் தலைவராக அளிக்க நீர் திருவுளம் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . ஐயும் திருநிலையினர் அனைவரையும் உமக்குச் சொந்தமான மக்கள் அனைவரையும் 'நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி...

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை மன்றாட்டு பயன் படுத்தப்படுகின்றது; இம் மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "கனிவாய் அருள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்:

எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்கள், இந்தக் குழுமத்தின் பணிக்காக இன்று தேர்ந்தெடுக்க நீர் திருவுளம் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . ஐயும் திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் ...

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

அல்லது

உண்மையான அன்பு எங்குள்ளதோ அங்கே கடவுள் இருக்கிறார்; கிறிஸ்துவின் அன்பு நம்மை ஒன்றாய்ச் சேர்த்துள்ளது (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; நம்பிக்கையின் மறைபொருளைக் கொண்டாடிய நாங்கள் அனைத்திலும் உம்மை மாட்சிப்படுத்தி நற்செய்தியின் வழியில் அயராது விரைந்து முன்செல்ல அருள்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

மேல்நிலையாளர் புதிதாகப் புனிதப்படுத்தப்பட்ட துறவு மடத்துத் தலைவர் மீது தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

எல்லாத் தந்தைமைக்கும் ஊற்றான இறைவன், தம் மாட்சியின் மேன்மைக்கு ஏற்றவாறு உமது உள்ளத்துக்கு ஆற்றல் தந்து உம்மை வலுப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

==============================


VII. கன்னியரை நேர்ந்தளித்தல்

இத்திருச்சடங்குத் திருப்பலிகள் கொண்டாடப்பட அனுமதிக்கப்பட்ட நாள்களில் வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழா நிறத் திருவுடையுடனோ இ. கொண்டாடப்படும்.

கன்னி ஒருவர் மட்டும் நேர்ந்தளிக்கப்படும்போது உரிய மன்றாட்டுகள் பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

காண். திபா 104:4-5
ஆண்டவரைத் தேடுங்கள்! உறுதிபெறுங்கள்; அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்! அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் இவர்கள் கன்னியராக வாழ நீர் இவர்களுக்குத் தூண்டுதல் அளித்தீர்; இவர்களில் நீர் தொடங்கிய நற்செயல் நிறைவுபெறுவதாக; இவ்வாறு இவர்கள் தம் வாழ்வு முழுவதையும் 'உமக்கு நிறைவாகக் காணிக்கை ஆக்குமாறு தாங்கள் தொடக்கத்தில் கொண்டிருக்கும் ஆர்வத்தில் இறுதிவரை நிலைத்து நிற்க அருள்புரிவீராக. உம்மோடு.

திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு ''நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, 'நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள்களை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: தங்களையே உமக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் உம் அடியார்கள் இவர்கள் எடுத்துள்ள முடிவில் நிலைத்திருக்கக் கனிவுடன் அருள்வீராக. இவ்வாறு இறுதி நாளில் மாட்சிமிகு மன்னர் வரும்போது, விண்ணக வாயில்கள் திறக்க, இவர்கள் மகிழ்வுடன் நுழையும் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

 

==============15^ 9183 ^-----------

துறவு வாழ்வின் தொடக்கவுரை (பக். 1041 - 1042) சொல்லப்படலாம்.

பின்வரும் வாய்பாடுகளுக்கு ஏற்றவாறு நற்கருணை மன்றாட்டுகளில் நேர்ந்தளிக்கப்பட்ட கன்னியரின் நினைவு இடம் பெறுகின்றது:

அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ..." எனும் மன்றாட்டு பின்வருமாறு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் இன்று தங்களை உமக்கு நேர்ந்தளித்த உம் அடியார்கள் இவர்களும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றுப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: உமது அருளால் இன்று உம் திருமகனோடு நெருங்கிய உறவு கொண்ட இவர்கள் அவர் இறுதி நாளில் மாட்சியுடன் வரும்போது அவரை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ளச் செல்ல வேண்டும் என உம்மை மன்றாடுகின்றோம். (எங்கள்)

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "நிறைவு பெறச் செய்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, இன்று தங்களை உமக்கு உள்ளார்ந்த விதத்தில் நேர்ந்தளித்த இச்சகோதரிகளை நினைவுகூர்ந்தருளும்; அன்பு, நம்பிக்கை எனும் விளக்குகளை ஏந்தி இவர்கள் உமக்கும் உம் மக்களுக்கும் இடையறாது பணி புரிந்து, மண மகனாம் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பார்களாக. மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன் ...

இ) 3-ஆம் நற்கருணை மன்றாட்டில், ''நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, உம் அடியார்கள் இவர்கள் நற்செய்தி வாழ்க்கை நெறிக்கும் 'சகோதர அன்புக்கும் சான்று பகர்ந்து, உம் கிறிஸ்துவைப் பற்றன்புடன் பின் செல்ல ஆர்வம் கொண்டவர்களாய், தங்களது நேர்ந்தளிப்பில் உறுதியாய் நிலைத்திருக்கச் செய்தருள்வீராக, நீர் விரும்பியபடி. . .

==============16^ 9184 ^-----------

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை பயன் படுத்தப்படுகின்றது ; இம்மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில் கனிவாய் அருள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்.


எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்)... எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இறைவனைப் போற்றிப் புகழவும் மக்களுக்குப் பணி புரியவும் இன்று தங்களையே நேர்ந்தளித்த இச்சகோதரிகளையும் நினைவுகூர்ந்தருளம் இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் . . .

திருவிருந்துப் பல்லவி

திபா 41:2
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல, கடவுளே! என் ஆன்மா உமக்காக ஏங்கித் தவிக்கின்றது (பாஸ்கர் காலத்தில், அல்லேலூயா .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சுகின்றோம்: உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) .... இவர்களின் வாழ்க்கை மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் திரு அவையின் வளர்ச்சிக்கும்
முறை என்றும் உறுதுணையாய் இருக்கச் செய்வீராக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

இறைவனுக்குப் புதிதாக நேர்ந்தளிக்கப்பட்ட கன்னியர்மீது ஆயர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

புனிதக் கன்னிமையை ஏற்கும் ஆர்வத்தை 'உங்கள் உள்ளத்தில் உருவாக்கிய எல்லாம் வல்ல தந்தை, இந்த நேர்ந்தளிப்பை நீங்கள் களங்கமின்றிக் காத்து வாழ 'உங்களுக்கு அருள்புரிவாராக.

பதில்: ஆமென்.

பனித கன்னியரின் இதயங்களைத் திருமண உடன்படிக்கையால் உம்மோடு இணைத்துக்கொண்ட ஆண்டவராகிய இயேசு, இறைவார்த்தையால் உங்கள் உள்ளங்களை வளமுறச் செய்வாராக.

பதில்: ஆமென்.

கன்னி மரியாவின்மீது நிழலிட்டவரும் தம் அருள்கொடையால் உங்கள் இதயங்களை இன்று புனிதப்படுத்தியவருமான தூய ஆவியார், இறைவனுக்கும் திரு அவைக்கும் ஊழியம் புரியும் ஆர்வத்தால் உங்களை நிரப்புவாராக.

பதில்: ஆமென்.

மேலும் அவர் எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை - மகன், * தூய * ஆவியார் இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

 

VIII. துறவு வார்த்தைப்பாடு

திருச்சடங்குத் திருப்பலிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நாளில் முதல் வார்த்தைப்பாடு / துறவு இறுதி வார்த்தைப்பாடு / வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக் வெண்ணிறத் திருவுடையுடனோ திருவிழா நிறத் திருவுடையுடனோ கொண்டாடப்படும்

எல்லா மன்றாட்டுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப் படலாம். மேலும் ஒருவர்-பலருக்கு ஏற்றவாறும் உரிய மாற்றங்களுடன் பயன்படுத்தப்படலாம்.

1. துறவு முதல் வார்த்தைப்பாடு

வருகைப் பல்லவி

'காண். திபா 39:8-9 ஆண்டவரே, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகிறேன்; என் கடவுளே! உமது திருச்சட்டம் என் இதயத்தில்
இருப்பதை நான் விரும்புகிறேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, கிறிஸ்துவை மிக நெருக்கமாகப் பின்பற்ற வேண்டும் எனும் மன உறுதியை இந்த எங்கள் சகோதரர்களில் (சகோதரிகளில்) தூண்டினீரே; அதனால் இவர்கள் தாங்கள் தொடங்கும் பயணத்தில் வெற்றி கண்டு, உமக்கு முழுமையான இறைப்பற்றுடன் பணி புரியும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, துறவு முதல் வார்த்தைப்பாட்டைக் கொண்டாடுகின்ற இவர்கள் உமக்கு அளிக்கும் இக்காணிக்கைகளையும் மன்றாட்டுகளையும் ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்களுடைய வாழ்வின் முதற்கனிகள் உமது அருள்துணையால் மிகுந்த பயன் தருவனவாக. எங்கள். இதற்கு உரிய தொடக்கவுரை (பக். 1041 - 1042).

திருவிருந்துப் பல்லவி

மாற் 3:35
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, 'நாங்கள் அருந்திய இத்திரு உணவு எங்களுக்குப் பேரின்பம் தருவதாக; இவ்வாறு இதன் ஆற்றலால் உம் அடியார்கள் இவர்கள் தாங்கள் மேற்கொண்ட துறவுக் கடமைகளைப் பற்றுறு 'உமக்கு மனம் உவந்து ஊழியம் புரிவார்களாக. எங்கள்.
" ைனட துறவுக் கடமைகளைப் பற்றுறுதியுடன் நிறைவேற்றி,

==============19^ 9187 ^-----------

2. துறவு இறுதி வார்த்தைப்பாடு

வருகைப் பல்லவி

காண். திபா 121:1-2 ''ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். (பாஸ்கா
காலத்தில், அல்லேலூயா). "உன்னதங்களிலே" சொல்லப்படும். திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் அடிச்சுவடுகளை மிக நெருக்கமாகப் பின்பற்றும் அளவுக்கு உம் அடியார்கள் இவர்களிடம் திருமுழுக்கின் அருள் வளம் பெற்று விளங்கச் செய்தீரே; இவர்கள் நற்செய்தி காட்டும் நிறைவை நோக்கித் தொடர்ந்து பயணித்து, திரு அவையின் புனிதத்தை வளர்க்கவும் அதன் திருத்தூது ஆர்வத்தைப் பெருக்கவும் அருள்வீராக. உம்மோடு. திருச்சடங்கு ஒழுங்குமுறைகளுக்கு ஏற்றவாறு "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஊழியர்கள் இவர்களின் காணிக்கைகளையும் வேண்டல்களையும் கனிவுடன் ஏற்றருளும்; நற்செய்தி அறிவுரைகளை ஏற்று அறிக்கையிட்ட இவர்களை உமது அன்பில் உறுதிப்படுத்துவீராக. எங்கள்.

தொடக்கவுரை : துறவு வாழ்வு, கிறிஸ்துவைப் பின்பற்றி கடவுளுக்கு ஊழியம் புரிவது.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

வாடா மலராய்ப் புனித கன்னியிடமிருந்து தோன்றிய எங்கள் ஆண்டவர் தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர் என்று மொழிந்து, தம் வாழ்க்கையினால் கற்பின் மாண்பினை விளங்கச் செய்தார். அவர் என்றும் உமது திருவுளத்தை நிறைவேற்றக் கருத்தாய் 5 எங்களுக்காகச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, முற்றும் உமக்கு உகந்த பலிப்பொருளாகத் தம்மையே ஒப்புக்கொடுக்கத் திருவுளமானார்.

உம் பொருட்டு இவ்வுலகில் அனைத்தையும் துறந்து, தங்களை இழந்து மாண்புக்கு உரிய உமக்கு ஊழியம் புரிவதற்காக அவர் இவர்களை நேர்ந்தளித்தார். இவர்கள் செல்வத்தை விண்ணகத்தில் அடைவார்கள் எனவும் உறுதி அளித்தார்.

ஆகவே வானதூதர் அணிகளோடும் புனிதரின் பெருந்திரளோடும் நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழ்ச்சிப் பண் இசைத்து, முடிவின்றிச் சொல்வதாவது :

தூயவர்.


வார்த்தைப்பாடு அளித்த ஆண்கள் / பெண்களுக்கு ஏற்றவாறு, நற்கருணை மன்றாட்டுகளில் நினைவுகூர்தல் வாய்பாடு தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தப்படும்.

1. ஆண்களுக்காக
அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ... எனும் மன்றாட்டு பின்வருமாறு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உம் அடியார்களாகிய இவர்களும் இத்துறவு வார்த்தைப்பாட்டு நாளில் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்றுப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இவர்கள் உம் அருளால் தங்கள் வாழ்வை இன்று உமக்கு நேர்ந்தளித்துள்ளனர், உம் திருமகன் மாட்சியுடன் வரும்போது இவர்கள் நிலையான பாஸ்கா மகிழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்தருளும். (எங்கள்.)

ஆ) 2-ஆம் நற்கருணை மன்றாட்டில், "நிறைவு பெறச் செய்தருளும் எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, இன்று இறுதி வார்த்தைப்பாட்டால் தங்களை உமக்கு நேர்ந்தளித்துள்ள இந்தச் சகோதரர்களையும் நினைவுகூர்ந்தருளும்: இவர்கள் தங்கள் இதயங்களிலும் மனங்களிலும் உம்மையே நாடி, என்றும் உமது பெயரை மாட்சிப்படுத்துவார்களாக. மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன்...

==============21^ 9189 ^-----------

3 ஆம் நற்கருணை மன்றாட்டில், "நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:

இன்று இறுதி வார்த்தைப்பாட்டின் பிணைப்பால் தங்களை உமக்கு என்றென்றைக்கும் நேர்ந்தளித்த உம் அடியார்கள் இவர்கள் புனித நெறியில் நிலைத்திருக்கச் செய்தருளும்: கிறிஸ்து தம் மீட்பினால் பெற்றுத் தந்த நிலையான புது வாழ்வு உமது திரு அவையில் துலங்கச் செய்தருளும். நீர் விரும்பியபடி. . . ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தப்படுகின்றது ; இம் மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், "கனிவாய அருள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்: எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்). . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) . . . ஐயும் ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். துறவு இறுதி வார்த்தைப்பாட்டால் தங்களை உமக்கு இன்று பற்றுறுதியுடன் நேர்ந்தளித்த இந்தச் சகோதரர்களையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் ...

2. பெண்களுக்காக

அ) உரோமை (முதல்) நற்கருணை மன்றாட்டில், இந்நாளுக்கு உரிய "ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய ...'' எனும் மன்றாட்டு பின்வருமாறு சொல்லப்படும்:

ஆகவே ஆண்டவரே, உம் ஊழியர்களாகிய நாங்களும் உம் அடியார்களாகிய இவர்களும் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் ஏற்று, புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம். உம் அருளால் இன்று உம் திருமகனோடு மிக நெருக்கமாக உறவுகொண்ட இவர்கள் இறுதி நாளில் அவர் மாட்சியுடன் வரும்போது சிசிசியோடு அவரை எதிர்கொள்ளச் செல்வார்களாக. (எங்கள்.)


2ஆம் கருணை மன்றாட்டில், "நிறைவு பெறச் செய்தருளும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு சேர்த்துக்கொள்ளப்படும்:

ஆண்டவரே, உமக்காக அனைத்தையும் துறந்த இந்தச் சகோதரிகளையும் நினைவுகூர்ந்தருளும். இவர்கள் அனைத்திலும் உம்மையே கண்டு, தங்களை மறந்து, பிறரின் தேவைகளைக் கண்டுணர்வார்களாக. மேலும் உயிர்த்தெழும் எதிர்நோக்குடன். . .

3-ஆம் நற்கருணை மன்றாட்டில், "நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதி பெறச் செய்வீராக" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சேர்த்துக்கொள்ளப்படும்:


ஆண்டவரே, உம் அடியார்கள் இவர்கள் நற்செய்தி வாழ்க்கை நெறிக்கும் சகோதர அன்புக்கும் சான்று பகர்ந்து, உம் கிறிஸ்துவைப் பற்றன்புடன் பின்செல்ல ஆர்வம் கொண்டவர்களாய், தங்களது நேர்ந்தளிப்பில் உறுதியாய் நிலைத்திருக்கச் செய்தருள்வீராக. நீர் விரும்பியபடி...

ஈ) உரிய தொடக்கவுரை பயன்படுத்தப்படவில்லை எனில், 4-ஆம் நற்கருணை மன்றாட்டு பயன்படுத்தப்படுகின்றது; இம் மன்றாட்டின் விண்ணப்ப வேண்டலில், ''கனிவாய் அருள்புரியும்" எனும் வார்த்தைகளுக்குப் பிறகு, பின்வருபவை சொல்லப்படும்.

எனவே ஆண்டவரே, யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோமோ அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவுகூர்ந்தருளும். சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் எங்கள் ஆயர் (பெயர்) ... ஐயும் ஏனைய ஆயர்கள், திருநிலையினர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். இறுதி வார்த்தைப்பாட்டின் பிணைப்பினால் இன்று தங்களை உமக்கு நிலையாக நேர்ந்தளித்த இந்தச் சகோதரிகளையும் நினைவுகூர்ந்தருளும். இப்பலியில் பங்கெடுப்போர் அனைவரையும் உம் திருமுன் கூடியிருப்போரையும் உம் மக்கள் எல்லாரையும் நேரிய இதயத்தோடு உம்மைத் தேடுவோர் அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும்...

திருவிருந்துப் பல்லவி

கலா 2:19-20 வோடு நான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன; • வாழ்கிறேன். ஆனால் வாழ்வது நான் அல்ல; கிறிஸ்து உண்மையிலே என்னுள் வாழ்கிறார் அல்லேலூயா.
என்னுள் வாழ்கிறார் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா)

==============23^ 9191 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்திரு உணவை வணக்கத்துடன் உட்கொண்ட நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதக் காணிக்கையால் உம்மோடு இணைக்கப்பெற்ற உம் அடியார்கள் இவர்கள் தாய ஆவியாரின் அன்புத் தீயினால் பற்றியெரிந்து, திருமகனோடு என்றென்றும் தோழமைகொள்ள அருள்புரிவீராக என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

வார்த்தைப்பாடு கொடுத்தவரை நோக்கி அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

நல்லுணர்வுகளைத் தூண்டியெழுப்பும் இறைவன், நல்லெண்ணங்களில் உங்களை நிலைத்திருக்கச் செய்து உண்மையுடன் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்தி, நீங்கள் வாக்களித்தவற்றில் நிலைத்திருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஒடுக்கமான வழியில், உங்கள் சகோதரர் சகோதரிகளுடைய சுமைகளை அக்களிப்போடு தாங்கிக்கொண்டு, கிறிஸ்து தரும் மகிழ்ச்சியில் விரைந்து செல்ல இறைவன் அருள்புரிவாராக.

பதில்: ஆமென்.

ஆண்டவர் பெயரால் ஒன்றுகூடி யிருக்கும் உங்களை இறைவன் தமது பேரன்பினால் ஒரே குடும்பமாக்கி, அது கிறிஸ்துவின் அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கிடச் செய்வாராக.

பதில்: ஆமென்.

மேலும் அவர் எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் X தூய ஆவியார் இத்திருநிகழ்வுகளுக்காக இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

வருகைப் பல்லவி

காண். திபா 65:13-14 எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்: நான் வாய் திற. சொன்னது போல என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவே. (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.


திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, தூயவரான தந்தையே, உம் ஊழியர்கள் (பெயர்) . . . , (பெயர்) . . . அளித்துள்ள வாக்குறுதியில் இவர்களைக் கனிவுடன் உறுதிப்படுத்தும்; இவர்கள் புதிய உறவுப் பிணைகளால் தங்கள் திருமுழுக்கு அருள்வாழ்வை உறுதிப்படுத்த விரும்புகின்றார்கள்; அந்த வாழ்வில் இவர்கள் நிறைவாகப் பயன் அடைந்து மாண்புக்கு உரிய உமக்கு உகந்த வழிபாடு செலுத்தவும் திருத்தூது ஆர்வத்துடன் கிறிஸ்துவின் ஆட்சியைப் பரப்பவும் அருள்வீராக. உம்மோடு.

திருச்சடங்கு ஒழுங்குகளுக்கு ஏற்றவாறு, "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்; பொது மன்றாட்டு விட்டுவிடப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் இவர்களின் காணிக்கைகளை இரக்கத்துடன் ஏற்று, அவற்றை மீட்பின் அருளடையாளமாக மாற்றியருளும்; நீர் தந்தைக்கு உரிய பராமரிப்பினால் அழைத்த இவர்கள் உம் திருமகனை மேன்மேலும் நெருக்கமுடன் பின்பற்ற தூய ஆவியாரின் கொடைகளால் நிரப்பியருளும். எங்கள்.
தொடக்கவுரையும் பரிந்துரை வேண்டல்களும் (பக். 1041 - 1044).

திருவிருந்துப் பல்லவி

திபா 33:9
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்'' அவரிடம் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர் (பாஸ்கர் காலத்த' அல்லே லூயா ).

==============25^ 9193 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
எங்கள் இன்று சிறப்புடன் கொண்டாடும் வார்த்தைப்பாட்டின் விழாவும் நாங்கள் " எங்கள் வணக்கத்துடன் உட்கொண்ட திரு உணவும் எங்களை மகிழ்விப்பனவாக: இவ்விரு இறைப்பற்று நிகழ்ச்சிகளின் பயனாக, உம் அடியார்கள் இவர்களின் உள்ளங்கள் திரு அவைக்கும் மக்களுக்கும் பேரார்வத்துடன் பணி புரிய தூண்டப்பெறுவனவாக. எங்கள்.

திருப்பலியின் முடிவில் சிறப்பு ஆசி

வார்த்தைப்பாடு கொடுத்தவரை நோக்கி அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்: புனித உணர்வுகளைத் தூண்டிச் செயல்படுத்தும் இறைவன், தமது அருளால் உங்களை எந்நாளும் பாதுகாத்து, உங்கள் அழைப்பின் கடமைகளை நீங்கள் உண்மையான உள்ளத்துடன் நிறைவேற்றச் செய்வாராக.

பதில்: ஆமென்.

இறைவன் உங்களை இறை அன்பில் பங்கேற்கச் செய்து, நீங்கள் மக்கள் அனைவர் முன்னும் சாட்சிகளாகவும் அடையாளங்களாகவும் விளங்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

இவ்வுலகில் கிறிஸ்துவோடு நீங்கள் கொண்ட அன்புறவு என்றென்றும் விண்ணகத்தில் நிலைத்திருக்க இறைவன் இரக்கத்துடன் அருள்புரிவாராக.

பதில்: ஆமென்.

தொடர்ந்து அவர் எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியார் இத்திருநிகழ்வுகளுக்காக இங்கே கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

துறவு வார்த்தைப்பாட்டின் ஆண்டு விழாவுக்கான திருப்பலிகள் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகளில் காணப்படுகின்றன (பக். 1095 - 1096).

==============26^ 9194 ^-----------

3. வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்தல்

வருகைப் பல்லவியும் திருவிருந்துப் பல்லவியும் தேவைக்கு ஏற்ப முன்னைய திருப்பலிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படலாம் (பக். 1040 - 1047).

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அனைத்தையும் நெறிப்படுத்துபவரும் மனிதரை ஆள்பவருமானவரே, தங்களின் நேர்ந்தளிப்பை உறுதிப்படுத்த விரும்பும் உம் மக்கள் இவர்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; திரு அவையின் மறைபொருளோடு இவர்கள் நெருங்கி இணைந்திருந்து மனிதக் குடும்பத்துக்கு நல் ஊழியம் செய்யக் கருத்தாய் இருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இங்கே இருக்கும் எங்கள் சகோதரர்கள் (சகோதரிகள்) கற்பு, ஏழைமை, கீழ்ப்படிதல் எனும் வார்த்தைப்பாடுகளைப் புதுப்பித்து, தாங்கள் அளிக்கும் பலிப்பொருள்களோடு உமக்குத் தங்களைக் காணிக்கையாக்குகின்றார்கள்; நீர் இவற்றைக் கனிவுடன் கண்ணோக்கி, இம்மைக்கு உரிய காணிக்கைகளை மறுமைக்கு உரிய அருளடையாளமாக மாற்றியருளும்; மேலும் இக்காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கும் எங்கள் அனைவரின் உள்ளங்கள் உம் திருமகனின் சாயலைத் தாங்க அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இதற்கு உரிய தொடக்கவுரை (பக். 1041 - 1042).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவை உட்கொண்ட நாங்கள் உம்மைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: உமது அருளையே பெரிதும் நம்பி, அதனால் இவ்வார்த்தைப்பாடுகளை மன உறுதியுடன் புதுப்ப உம் அடியார்கள் இவர்கள் கிறிஸ்துவின் ஆற்றலால் உறுதிபெற்று, அ ய ஆவியாரின் துணையால் பாதுகாக்கப்படுவார்களாக. எங்கள்.

==============27^ 9195 ^-----------

=============↑ பக்கம் 1048

====================

image