image

 

பொது

1. புனிதத் திரு அவைக்காக

1. திரு அவைக்காக

வருகைப் பல்லவி

காண். எபே 1:9-10 கடவுள் தமது திருவுளத்தின் மறைபொருளை அதாவது விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்க வேண்டும் என் திட்டத்தை, அவர் வழியாகவே நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, கிறிஸ்துவின் அரசு உலகெங்கும் பரவிடவும் எல்லா மனிதரும் மீட்பில் பங்குபெறவும் உமது வியத்தகு பராமரிப்பால் ஏற்பாடு செய்துள்ளீர்; அதனால் உமது திரு அவை மனிதக் குலம் முழுவதற்கும் மீட்பின் அருளடையாளமாக விளங்கவும் கிறிஸ்து எல்லா மக்களின் எதிர்நோக்காகவும் அவர்களின் மீட்பராகவும் எல்லா நாடுகளுக்கும் அறிவிக்கப்படவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உமக்கெனப் புனிதமாக்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கொண்டுவரும் காணிக்கைகளைக் கனிவாய்க் கண்ணோக்கியருளும்; இவ்வாறு உம்மில் நம்பிக்கை கொண்ட மக்கள் திரள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், புனித மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்களாய் இடையறாது உருவாகுமாறு இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் செய்தருள்வீராக. எங்கள்.

பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VIII (பக். 543).

திருவிருந்துப் பல்லவி

தூய ஆவியாரும் மணமகளும் சேர்ந்து வருக' என்கின்றனர். ஆமென், ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் அருளடையாளங்களால் திரு அவைக்கு இடைவிடாது உணவூட்டி உறுதிப்படுத்துகின்றீர்; இவ்வாறு விண்ணக விருந்தால் ஊட்டம் பெற்ற நாங்கள் உமது அன்பின் படிப்பினைகளைக் கடைப்பிடித்து, புத்துயிர் அளிக்கும் புளிப்பு மாவாகவும் சமுதாயத்தில் மீட்பின் கருவியாகவும் செயல்பட அருள்வீராக. எங்கள்

வருகைப் பல்லவி

திவெ 7:9 யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெருங்கூட்டத்தைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் கிறிஸ்துவில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்படி எல்லா இனத்தாரிடமிருந்தும் உமக்கென மக்களைத் திரட்டித் தூய ஆவியாரில் ஒருங்கிணைக்க நீர் தவறுவதில்லை ; அதனால் உமது திரு அவை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியில் உண்மையாய் இருந்து, மனிதக் குடும்பத்தோடு தொடர்ந்து முன்னேறிச் செல்வதாக; அது கிறிஸ்துவில் புதுப்பிக்கப்படவேண்டிய மனித சமுதாயத்தின் புளிப்பு மாவு போலவும் ஆன்மா போலவும் என்றும் திகழ்ந்து இறைக் குடும்பமாக உருமாற்றம் பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; சிலுவையில் இறந்த கிறிஸ்துவின் விலாவிலிருந்து பிறந்த உமது திரு அவை, இம்மறைநிகழ்வில் பங்குபெறுவதால் எப்பொழுதும் புனிதத்தை முகந்து கொள்ளவும் அப்புனிதத்தால் எப்போதும் வாழவும் தனது மீட்பராகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு உகந்தவாறு செயல்படவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VII (பக். 543),

திருவிருந்துப் பல்லவி

யோவா 19:34 படைவீரருள் ஒருவர் அவருடைய விலாவை ஈட்டி யால் குத்தினார்: உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.

அல்லது

திவெ 7:12 புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும்
வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன. ஆமென்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அரசில் சிறப்பான இடம் பெற அழைப்புப் பெற்ற ஏழைகளுக்குத் திரு அவையின் பணி வழியாகவே, மீட்பு அளிக்கும் மறைநிகழ்வுகளின் முழுமையைத் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றீர்; உம் திருமகனின் அருளடையாளத்தால் புத்துயிர் பெற்று அத்திரு அவையின் பணி வளம் பெற அருள்வீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

மத் 18:20 இரண்டு

அல்லது

மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

அல்லது

உரோ 12:5 நாம் பலராயிருந்தாலும் கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் ஒரே உடலாய் இருக்கிறோம்; ஒருவருக்கொருவர் உடனுறுப்புகளாய் இருக்கிறோம்.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, தூயமை, ஒற்றுமை ஆகியவற்றின் அருளடையாளமாக உமது திரு அவை இவ்வுலகுக்கு வெளிப்பட்டு உமது அன்புப் பணியை நிறைவுக்கு இட்டுச்செல்கின்றது; இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவியாரின் பிணைப்பால் ஒன்றுசேர்க்கப்பட்ட அத்திரு அவை பத் மக்களினமாக என்றும் நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய மாபெரும் அன்பின் நினைவைக் கொண்டாடும் நாங். உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது திரு அவையின் பணி வழியாக அவருடைய மீட்பு அளிக்கும் செயலின் பயன் உலகம் அனைத்தையும் மீட்பு நோக்கி வழிநடத்துவதாக. எங்கள்.

கிறிஸ்தவர்களின் ஒற்றுமையின் தொடக்கவுரை (பக். 1104).

திருவிருந்துப் பல்லவி

அப்பம் ஒன்றே; நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்கு கொள்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, வியப்புக்கு உரிய அருளடையாளத்தால் திரு அவைக்கு உறுதியும் ஆறுதலும் அளிக்கின்றீர்; இப்பலி விருந்தின் வழியாக உம் மக்கள் நாங்கள் கிறிஸ்துவோடு இணைந்திருப்போமாக: அதனால் நாங்கள் இவ்வுலகக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி உமது அரசை விடுதலை உணர்வுடன் கட்டியெழுப்ப அருள்புரிவீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

காண். யோவா 17:20-21 தந்தையே, என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காக வேண்டுகிறேன். அதனால் அவர்கள் நம்முள் ஒன்றாய இருப்பார்களாக; அதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்புவதாக.

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்துவில் உமது மாட்சியை மக்கள் இனங்களுக்கெல்லாம் வெளிப்படுத்தினீர்; இவ்வாறு உம்முடைய இரக்கத்தின் செயல்களை 'நீர் தொடர்ந்து பாதுகாப்பதால், உலகெங்கும் பரவியிருக்கும் திரு அ உறுதியான நம்பிக்கையுடன் உமது பெயரை அறிக்கையிடுவதில் நிலைத்திருக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, ப்ெபலியின் வழியாக உமது திரு அவையைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தி வருகின்றீர்; அதனால் அது தன் தலையாகிய கிறிஸ்துவுடன் ஒன்றித்து, அவருடன் தன்னை உமக்கு ஒப்புக்கொடுத்து தாய உள்ளத்துடன் உம்மோடு ஒன்றித்திருக்கச் செய்வீராக. எங்கள். பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VIII (பக். 543).

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:5
ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். ஏனெனில் என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனித உணவால் ஊட்டம் பெற்ற உமது திரு அவையை நீரே உளம் கனிந்து வழிநடத்த உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அது உமது ஆற்றலால் ஆளப்பட்டு உரிமை வாழ்வில் வளர்ச்சி பெறவும் சமய வாழ்வில் உறுதியுடன் நிலைத்து நிற்கவும் செய்வீராக. எங்கள்.
தலத் திரு அவைக்காக

வருகைப் பல்லவி

திவெ 1:5-6
இயேசு கிறிஸ்து நம் மீது அன்புகூர்ந்தார்; த ம து இரத்தத்தால் நம் பாவங்களிலிருந்து நம்மைக் கழுவினார். மாட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் கடவுளும் அவரது தந்தையு மானவருக்கு நம்மை ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்கே மாட்சியும் ஆட்சியும் என்றென்றும் உரியன. ஆமென்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவந்த திரு அவையை உலகெங்கும் உள்ள தலத் திரு அவைகளில் வெளிப்படச் செய்கின்றீர்; உம் மக்கள் தங்கள் ஆயருடன் ஒருமனப்பட்டிருக்கவும் நற்செய்தி, நற்கருணை ஆகியவை வழியாகத் தூய ஆவியாரில் ஒன்றித்திருக்கவும் கனிவுடன் அருள்கூர்ந்தருளும்: அதனால் அவர்கள் உலகளாவிய உம் மக்களுக்குத் தகுதியுள்ள பதிலாளிகளாகவும் கிறிஸ்து உலகில் உடன் இருக்கின்றார் என்பதற்கு அடையாள கருவியாகவும் திகழ்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய மாபெரும் அன்பின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் உமது திரு அவையின் பணி வழியாக அவருடைய மீட்பு அளிக்கும் செயலின் பயன் உலகம் அனைத்தையும் மீட்பு நோக்கி வழிநடத்துவதாக. எங்கள். பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை VII (பக். 543).

திருவிருந்துப் பல்லவி

திவெ 3:20 இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்துவேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இந்த உமது திரு அவையில் நம்பிக்கையின் முழுமை, ஒழுக்கத்தின் புனிதம், சகோதர அன்பு, தூய நெறி ஆகியவை இறுதிவரை நிலைத்திருக்கச் செய்தருளும்; உம் திருமகனின் உடலாலும் உமது வார்த்தையாலும் நீர் தவறாது ஊட்டி வளர்க்கும் மக்கள் எங்களை என்றும் பராமரித்து ஆண்டு நடத்துவீராக. எங்கள்.

==============14^ 9212 ^-----------

2. திருத்தந்தைக்காக

சிறப்பாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு விழாவில்
திருவருகைக் காலம், தவக காலம், பாஸ்கர் காலம் ஆகியவற்றில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகள், ஆண்டின் பெருவிழாக்கள், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகியவற்றுக்குப் புறம்பே, திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு விழாத் திருப்பலி வெண்ணிறத் திருவுடை அணிந்து நிறைவேற்றப்படும்.

வருகைப் பல்லவி

மத் 16:18-19 நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ள பா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.
2018

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது பராமரிப்பின் திட்டத்தால் திருத்தூதர்களின் தலைவரான புனித பேதுருவின் மீது உமது திரு அவையைக் கட்டியெழுப்பத் திருவுளமானீர்; பேதுருவின் வழித்தோன்றலாக நீர் நியமித்திருக்கும் எங்கள் திருத்தந்தை (பெயர்) ... ஐக் கனிவுடன் கண்ணோக்கியருளும்: இவ்வாறு அவர் உம் மக்களுடைய நம்பிக்கையின் ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றிப்புக்கும் காணக்கூடிய ஊற்றாகவும் உறுதியான அடித்தளமாகவும் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, நம்பிக்கையாளர் அனைவரின் ஆயரும் ஆள்பவருமானவரே, உமது திருவுளத்தால் திரு அவையை ஆண்டுவரும் உம் அடியார் (பெயர்) . . . ஐக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவர் தலைமை ஏற்றுப் பணி புரியும் தம் மக்களுக்குப் படிப்பினையாலும் எடுத்துக்காட்டாலும் உதவிபுரியவும் இவ்வாறு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையுடன் நிலைவாழ்வுக்கு வந்து சேரவும் அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, திருத்தூதரான பேதுருவைத் தொடர்ந்து, உமது மந்தை அனைத்துக்கும் ஆயராக உம் அடியார் (பெயர்) . . . ஐத் தேர்ந்து கொண்டீர்; கிறிஸ்துவின் பெயரால் இவ்வுலகில் பணியாற்றும் அவர், தம் சகோதரர் சகோதரிகளை உறுதிப்படுத்த வேண்டும் என இரந்து மன்றாடும் உம் மக்கள் எங்களுக்குச் செவிசாய்த்தருளும்: இவ்வாறு திரு அவை முழுவதும் ஒருமைப்பாடு, அன்பு, அமைதி ஆகிய பிணைப்புகளால் அவரோடு ஒன்றித்திருக்கவும் மக்களின் நல்ல ஆயராகிய உம்மில் அனைவரும் உண்மையையும் நிலைவாழ்வையும் அடையவும் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமக்கு மன நிறைவு அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உமது புனிதத் திரு அவையையும் அத்திரு அவையோடு இணைந்தவராய் உம்மால் நியமிக்கப்பட்ட ஆயராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . ஐயும் இடையறாது காத்து வழிநடத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 21:15,17 "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என் மீது அன்பு செலுத்துகிறாயா?" "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே; ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தில் பங்குகொண்ட நாங்கள் உம்மைத் தாள்பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் இம்மறைநிகழ்வின் ஆற்றலால் உமது திரு அவையை ஒற்றுமையிலும் அன்பிலும் உறுதிப்படுத்துவீராக; நா உமது அருள்பணியை உம் அடியார் பெயர்) ... க்கு ஒப்படைத்துள்ளதால், அவருக்கும் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்கும் உமது அருளையும் பாதுகாப்பையும் என்றும் வழங்குவீராக. எங்கள்.

==============16^ 9214 ^-----------

3. மறை ஆயருக்காக

சிறப்பாக அவரின் திருநிலைப்பாட்டு ஆண்டு நாளில்
எங்கெல்லாம் ஆயரின் திருநிலைப்பாட்டு நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றதோ, அங்கே திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றிலுள்ள நாயிற்றுக்கிழமைகள், ஆண்டின் பெருவிழாக்கள், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகியவற்றுக்குப் புறம்பே, இத்திருப்பலி கொண்டாடப்படும்.

வருகைப் பல்லவி

காண். எசே 34:11,23,24, ஆண்டவர் கூறுகின்றார்: நானே என் மந்தையைத் தேடிச் செல்வேன்; அவற்றை மேய்க்கும்படி நான் ஒர் ஆயனை அமர்த்துவேன்; ஆண்டவராகிய நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் என்றுமுள்ள ஆயரே, உமது திரு அவையை நீர் பற்பல வகைகளில் 'அன்புடன் பேணிக் காத்து ஆண்டு வருகின்றீர்; அதனால் உம் மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆயராகிய உம் அடியார் (பெயர்) .... தமது மந்தைக்குக் கிறிஸ்துவின் பெயரால் தலைமைதாங்கி, போதனைகளின் உண்மையுள்ள ஆசிரியராகவும் புனித வழிபாட்டின் குருவாகவும் ஆண்டு நடத்தும் பணியாளராகவும் விளங்கிட அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, நம்பிக்கையாளர் அனைவரின் ஆயரும் ஆள்பவருமானவரே, உமது திருவுளத்தால் (பெயர்) . . . திரு அவையை ஆண்டுவரும் உம் அடியார் (பெயர்) . . . ஐக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு அவர் தலைமை ஏற்றுப் பணி புரியும் தம் மக்களுக்குப் படிப்பினையாலும் எடுத்துக்காட்டாலும் உதவிபுரியவும் இவ்வாறு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையுடன் நிலைவாழ்வுக்கு வந்து சேரவும் அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, திருத்தூதர்களின் வழிமரபின்படி உமது மந்தையை வழிநடத்திட உம் அடியார் (பெயர்) ... ஐ ஆயராக ஏற்படுத்தினீர்; அதனால் ஞானமும் துணிவும் தரும் ஆவியை, அறிவும் பற்றுணர்வும் தரும் ஆவியை அவருக்கு அளித்து அவர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மநதையை உண்மையுடன் வழிநடத்தி திரு அவையை அருளடையாளமாக இவ்வுலகில் கட்டியெழுப்புவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . க்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக; உம் மக்களுக்காகத் தலைமைக் குருவாக நீர் ஏற்படுத்திய அவரை மந்தையின் வளர்ச்சிக்காகத் திருத்தூதர்களின் நற்பண்புகளால் அணிசெய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 20:28 மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இம்மறைநிகழ்வுகளின் ஆற்றலால் ஆயரான உம் அடியார் (பெயர்) ... இல் உம் அருள்கொடைகள் பெருகச் செய்வீராக; அதனால் அவர் உமக்கு ஏற்றவாறு அருள்பணியை நிறைவேற்றி நம்பிக்கையுள்ள ஊழியருக்கு உரிய நிலையான பரிசைப் பெற்றுக்கொள்வாராக. எங்கள்.

==============18^ 9216 ^-----------

4. திருத்தந்தை அல்லது ஆயரைத் தேர்ந்தெடுக்க

வருகைப் பல்லவி

என் இதயத்துக்கும் ஆன்மாவுக்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்கு உரிய ஒரு குருவை நான் எனக்கு எழுப்புவேன், அ வ ருக்கு ஓர் உண்மையான வீட்டைக் கட்டுவேன். அவர்
எந்நாளும் என் திருமுன் நடப்பார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, என்றுமுள்ள ஆயரே, மிகவும் விழிப்போடு உமது மந்தையைப் பராமரிப்பவர் நீரே; மிகுந்த பக்தி உள்ளவராகவும் தமது தூய வாழ்க்கையால் உமக்கு உகந்தவராகவும் எங்கள் நலனில் என்றும் அக்கறை கொண்டவராகவும் விளங்கும் ஆயர் ஒருவரைத் திரு அவைக்குத் தந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

'ஆண்டவரே, உம்மேல் கொண்ட பக்தியின் வளமையால் எங்களுக்கு நிறைவு அளித்தருளும்; இவ்வாறு நாங்கள் வணக்கத்துடன் உமக்கு அளிக்கும் புனித காணிக்கைகள் வழியாக உமது மாண்புக்கு உகந்த ஆயரைப் புனிதத் திரு அவையின் தலைவராகப் பெற்று மகிழ எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:16 நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் ஒரே திருமகனின் திரு உடல், திரு இரத்தம் எனும் மாட்சிமிகு அருளடையாளத்தால் நாங்கள் புதுப்பிக்கப்பெற்றுள்ளோம்; மக்களுக்கு நற்பண்புகளைப் பயிற்றுவித்து, நற்செய்தியின் உண்மையால் நம்பிக்கையாளரின் உள்ளங்களை நிரப்பும் தகுந்ததோர் ஆயரை உமது வியப்புக்கு உரிய மாட்சியின் அருளால் நாங்கள் பெற்று மகிழச் செய்வீராக. எங்கள்.

==============19^ 9217 ^-----------


மாமன்றத்துக்காக

வருகைப் பல்லவி

காண். கொலோ 3:14-15அனைத்துக்கும் மேலாக அன்பையே கொண்டி ருங் க.. நிறைவின் பிணைப்பு. கிறிஸ்து வின் அமைதி உங்கள் உள்ள
அக்களிக்கச் செய்வதாக.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவையை ஆள்பவரும் காப்பவருமானவரே, உம் அடியார்களுக்கு அறிவு, உண்மை , அமைதி ஆகியவற்றின் மீது ஆர்வத்தைப் பொழிந்தருளும்; அதனால் அவர்கள் உமக்கு உகந்தவற்றை முழு இதயத்துடன் அறிந்துணர்ந்து. முழு ஆற்றலுடன் கடைப்பிடிப்பார்களாக. உம்மோடு.

அல்லது

உம் மக்களை இரக்கத்துடன் கண்காணித்து அன்புடன் ஆண்டு வரும் இறைவா, நீர் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்போருக்கு ஞானத்தின் ஆவியை அளித்தருளும்; அதனால் உம் மக்கள் உண்மையின் நிறை அறிவுக்கும், உமக்கு உகந்த புனித நிலைக்கும் மேன்மேலும் அழைத்துச் செல்லப்படுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, உம் ஊழியர்களின் காணிக்கையைக் கண்ணோக்கி உம்முடைய ஒளியின் அருளை அவர்களுக்கு வழங்குவீராக; அதனால் உமக்குச் சரியானவற்றை அவர்கள் கண்டுணர்ந்து பற்றுறுதியுடன் அவற்றை நிறைவேற்றுவார்களாக. எங்கள். தூய ஆவியாரின் தொடக்கவுரை 1 (பக். 1167-1168).

திருவிருந்துப் பல்லவி

- மையான அன்பு எங்குள்ளதோ, அங்கே கடவுள் இருக்கின்றார்:
கிறிஸ்துவின் அன்பு நம்மை ஒன்றாய்ச் சேர்த்துள்ளது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உம் புனிதக் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்கள் உண்மையில் உறுதிப்படுத்தப்பட்டு, உமது பெயரின் மேன்மையை நாடத் தூண்டப்படுவார்!
ன மையை நாடத் தூண்டப்படுவார்களாக. எங்கள்.

==============20^ 9218 ^-----------

6. அருள்பணியாளர்களுக்காக

வருகைப் பல்லவி

காண். லூக் 4:18 ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ள து; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், நொறுங்குண்ட உள்ளத்தை நலமாக்கவும், உள்ளம்
உடைந்தோருக்கு மன்னிப்பு அளிக்கவும் அவர் என்னை அனுப்பினார். திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகனை என்றென்றும் தலைமைக் குருவாக ஏற்படுத்தினீரே; அதனால் தம்முடைய பணியாளராகவும் மறைபொருள்களின் கண்காணிப்பாளராகவும் அவர் தேர்ந்து கொண்ட அருள்பணியாளர்கள், தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றுவதில் உண்மையுள்ள ஊழியர்களாய் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே எங்கள் இறைவா, உம் மக்களை வழிநடத்த அருள்பணியாளர்களின் பணியைப் பயன்படுத்துகின்றீர்; அவர்கள் உமது திருவுளத்துக்கு ஏற்றவாறு பணி புரிவதில் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு அவர்கள் தங்கள் பணியாலும் வாழ்வாலும் கிறிஸ்துவில் உமக்கு மாட்சி அளிக்கும் ஆற்றல் பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உம் அருள்பணியாளர்கள் புனிதப் பீடத்தில் திருப்பணி ஆற்றவும் உம் மக்களுக்குத் தொண்டு ஆற்றவும் விரும்பினீரே; அதனால் அவர்களது ஊழியம் உமக்கு எப்பொழுதும் ஏற்புடையதாக இருக்கவும் என்றும் நிலைத்திருக்கும் கனிகளை உமது திரு அவைக்குக் கொடுக்கவும் இப்பலியின் ஆற்றலால் கனிவுடன் வரம் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:17-18காய தந்தையே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பண மாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல், நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உட்கொண்ட இத்திரு உணவு உம் அருள்பணியாளர்களுக்கும் உம் அடியார்கள் அனைவருக்கும் புது வாழ்வு அளிப்பதாக; அதனால் அவர்கள் உமது முடிவில்லா அன்பில் இணைந்திருந்து, உமது மாண்புக்கு உகந்த பணி புரிய அருள்வீராக. எங்கள்.

==============22^ 9220 ^-----------

7. அருள்பணியாளர் தமக்காக

மக்களின் அருள்பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் ஓர் அருள்பணியாளருக்காக

வருகைப் பல்லவி

காண். கொலோ 1:25, 28 கடவுள் உங்களை முன்னிட்டு எனக்களித்த பொறுப்பை ஏற்றுள்ளதால் நான் திரு அவையின் திருத்தொண்டன் ஆனேன். கிறிஸ்து இயேசுவுக்குள் ஒவ்வொருவரையும் நிறைவுள்ளவராக்கும்படி கிறிஸ்துவையே நாங்கள் அறிவிக்கின்றோம்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, என்னுடைய பேறுபயன்களை முன்னிட்டு அல்ல, சொல்லற்கரிய உமது பேரருளால் மட்டுமே அடியேன் உமது குடும்பத்தின் தலைவனாய் இருக்கத் திருவுளமானீர்; நான் அருள்பணியை உமக்கு உகந்தவாறு நிறைவேற்றி, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உமது திருவுளப்படி அனைத்திலும் வழிநடத்த அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நாள்களையும் காலங்களையும் ஆற்றலுடனும் கனிவுடனும் நெறிப்படுத்து பவரே, உமது அருளால் அருள்பணியை மேற்கொண்ட என்னைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; நான் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் ஆற்றலால் மந்தையின் கீழ்ப்படிதல் ஆயர்களுக்கும் ஆயர்களின் கண்காணிப்பு மந்தைக்கும் குறைவின்றிக் கிடைக்குமாறு அருள்பணியாளராகிய என் உள்ளத்தையும் மக்களின் உள்ளங்களையும் வழிநடத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 15:9
என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள், என்கிறார் ஆண்டவர்.

==============23^ 9221 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நன்னெறிகளுக்கு எல்லாம் ஊற்றும் நிறைவும் நீரே; அதனால் இம்மறைநிகழ்வில் பங்கேற்பதன் வழியாக நான் நேர்மையானவற்றைச் செய்து, உண்மையானவற்றை அறிவித்து, நம்பிக்கையாளருக்கு உமது அருளின் படிப்பினைகளைக் கற்பிக்க எனக்கு அருள்புரிவீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

திபா 15:2,5 நீரே என் ஆண்டவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை என்று நான் ஆண்டவரிடம் சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து ; அவரே என் கிண்ணம்; எனக்கு உரிய பங்கைக் காப்பவரும் அவரே. திருக்குழும் மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, உமது பரிவிரக்கத்தால் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்து தூய ஆவியாரால் என் உள்ளத்தை ஒளிரச் செய்தருளும்; அதனால் உம்முடைய மறைநிகழ்வுகளைத் தகுந்த முறையில் கொண்டாடவும் உமது திரு அவைக்கு உண்மையுடன் ஊழியம் புரியவும் உம்மீது நிலையான அன்பு கொண்டிருக்கவும் எனக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, வணக்கத்துடன் நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருளும்; குருவும் பலிப்பொருளுமான உம் கிறிஸ்துவைக் கண்ணோக்கி அவரது குருத்துவத்தில் பங்குபெற்ற என்னை உமக்கு உகந்த உள்ளார்ந்த பலிப்பொருளாக உமக்கு அளித்திட அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 22:28-30 தான் சோதிக்கப்படும்போது தன்னோடு இருந்தவர்களை நோக்கி இ ய சு கூறினார்: நான் உங்களுக்கு ஓர் ஆட்சியுரிமை குடிப்பீர்கள்.
றேன். அப்போது என் பந்தியில் நீங் கள் உண்டு ,

==============24^ 9222 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

தாயவரான தந்தையே, விண்ணக அப்பத்தால் உறுதியும் பதிய உடன்படிக்கையின் கிண்ணத்தால் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன்; நான் உமக்கு உண்மையுடன் ஊழியம் செய்யவும் என் வாழ்வைத் துணிவுடனும் அர்ப்பணத்துடனும் மனிதரின் மீட்புக்காகக் கையளிக்கவும் எனக்கு அருள்வீராக. எங்கள்.

தமது திருநிலைப்பாட்டு ஆண்டு நாளில்

வருகைப் பல்லவி

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை, என்கிறார் ஆண்டவர். நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்: நீங்கள் சென்று கனி
தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.

திருக்குழும் மன்றாட்டு

தூயவரான தந்தையே, உம் கிறிஸ்துவின் நிலையான குருத்துவத்தில் பங்குபெறவும் உமது திரு அவையில் தொண்டு ஆற்றவும் தகுதியற்ற என்னைத் தேர்ந்தெடுத்தீரே; அதனால் நற்செய்தியைத் தளரா உறுதியுடனும் கனிவுடனும் போதிப்பவராகவும் உம்முடைய மறைபொருள்களைத் தகுந்தவாறு நம்பிக்கையாளருக்கு வழங்குபவராகவும் நான் திகழச் செய்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, 'நாங்கள் உமக்குப் புரியும் ஊழியம் வளர்ச்சி பெற இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் தகுதியற்ற எனக்கு நீர் வழங்கியதைக் கனிவுடன் நிறைவுக்குக் கொண்டுவருவீராக. எங்கள்.
காண். 1 கொரி 10:16

திருவிருந்துப் பல்லவி

கடவுளைப் போற்றித் திருக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்து வின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப் பிடுகிறோமே, அது கிறிஸ்து வின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக என் அருள்பணி திருநிலைப்பாட்டு ஆண்டு விழாவில் நம்பிக்கையின் மறைபொருளைக் கொண்டாடியுள்ளேன்; அதனால் நான் கொண்டாடியதை உண்மையாகவே வாழ்ந்துகாட்ட அருள்வீராக. எங்கள்.

==============26^ 9224 ^-----------

8. திரு அவையின் திருப்பணியாளர்களுக்காக

வருகைப் பல்லவி

காண். 1 கொரி 12:4-6 அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல் படுத்து பவர்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தொண்டு ஏற்பதற்கு அன்று, தம் சகோதரர் சகோதரிகளுக்கு தொண்டு ஆற்றவே உமது திரு அவையின் பணியாளர்களுக்குக் கற்பித்தீர்; அதனால் அவர்கள் தங்கள் செயலில் திறமையும் பணியில் கனிவும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் வரமும் கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, எங்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க உம் திருமகன் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவத் திருவுளமானார்; 'அதனால் எங்கள் பணியின் காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு எங்களையே உள்ளார்ந்த பலியாக உமக்குக் கையளித்து, பணிவும் தளரா ஊக்கமும் கொண்ட மனப்பாங்கினால் நிரப்பப்படுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 12:37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து
பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவாலும் பானத்தாலும் உம் அடியார்களுக்கு நிறைவு அளித்துள்ளீர்; அதனால் உமது மாட்சிக்காகவும் நம்பிக்கையாளரின் மீட்புக்காகவும் 'நற்செய்தியை அறிவிப்பதிலும், அருளடையாளங்களை வழங்குவதிலும் அன்புப் பணியாற்றுவதிலும் உண்மையுள்ள பணியாளர்களாக விளங்க அவர்களுக்கு அருள்வீராக. எங்கள்.

==============27^ 9225 ^-----------

9. திருப்படிநிலைகளுக்கு உரிய அழைத்தலுக்காக

வருகைப் பல்லவி

மத் 9:38 வேலை யாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்ப அறுவடையின் ஆண்டவரிடம் மன்றாடு ங் கள் என்று நம சீடரிடம் கூறு கிறார்.

திருக்குழும் மன்றாட்டு

உம் மக்களுக்கு மேய்ப்பர்களைத் தந்தருளத் திருவுளமான இறைவா, பக்தியும் துணிச்சலும் கொண்ட மனப்பாங்கை உமது திரு அவைமீது பொழிந்தருளும்; அதனால் உம் பீடங்களில் பணி புரியத் தகுந்த பணியாளர்களை ஏற்படுத்தி, உமது நற்செய்தியைத் துணிவுடனும் கனிவுடனும் அறிவிக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் வேண்டல்களையும் காணிக்கைகளையும் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உம்முடைய மறைபொருள்களை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அவர்கள் என்றும் உமது அன்பில் நிலைத்திருக்கவும் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

1 யோவா 3:16 இதில் கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம்; ஏனெனில் அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நம் சகோதரர்
சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
விண்ணக உணவினால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: உமது திரு அவையாகிய வயலில் பெருமளவில் தூவப்பட்ட விதைகள் அன்பின் அருளடையாளத்தால் முளைத்து வளரச் செய்தருளும்; அதனால் தம் சகோதர சகோதரிகளில் உமக்குப் பணி புரியும் பங்கைப் பலரும் தேர்ந்து கொள்ளச் செய்வீராக. எங்கள்.

==============28^ 9226 ^-----------

10. பொதுநிலையினருக்காக

வருகைப் பல்லவி

மத் 13:33 பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது நற்செய்தி புளிப்பு மாவு போல மலடன் உலகில் செயல்படச் செய்தீரே; உலகின் நடுவில், உலகிய ஈடுபாடுகளுடன் வாழ்க்கை நடத்த நீர் அழைத்துள்ள உம் நம்பிக்கையாளருக்குச் செவிசாய்த்தருளும்: இவ்வாறு அவர்கள் இவ்வுலகு சார்ந்த தங்கள் கடமைகளை ஆர்வமிக்க கிறிஸ்தவ மனப்பாங்குடன் நிறைவேற்றி என்றும் உமது ஆட்சியை நிலைநாட்ட அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உம் திருமகனின் பலியால் உலகு அனைத்தையும் மீட்கத் திருவுளமானவரே, பொது நிலையில் உள்ள உம் அடியார்களையும் திருத்தூதுப் பணிக்குத் தவறாது அழைக்கின்றீர்; அதனால் அவர்கள் கிறிஸ்தவ மனப்பான்மையால் இவ்வுலகில் ஊடுருவி அதன் அர்ச்சிப்புக்குப் புளிப்பு மாவு போல் விளங்கிட இத்திருப்பலியின் ஆற்றலால் அருள்வீராக. எங்கள்.
திபா 99:2

திருவிருந்துப் பல்லவி

அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் நுழையுங்கள்! அல்லேலூயா.
யோவா 15:8

அல்லது

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது, என்கிறார் ஆண்டவர்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது நிறைவிலிருந்து அருள் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம் உலகியச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என நீர் திருவுளம் கொண்ட உம் நம்பிக்கையாளர்கள் இந்த நற்கருணை விருந்திலிருந்து மன வலிமை பெறுவார்களாக. இவ்வாறு அவர்கள் நற்செய்தியின் உண்மைக்கு வலுவான சாட்சிகளாய் விளங்கவும், இவ்வுலகக் காரியங்களில் உமது திரு அவை எப்போதும் உயிர்த் துடிப்புடன் என்றும் உடனிருக்கவும் அருள்வீராக. எங்கள்.
HILUE

==============30^ 9228 ^-----------

11. திருமண ஆண்டு விழாக்கள்


முக்கியமான திருமண ஆண்டுகளில், எடுத்துக்காட்டாக, 25, 50 அல்லது 60-ஆம் ஆண்டில், எப்பொழுதெல்லாம் பல்வேறு தேவைகளுக்கான திருப்பலிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனவோ, அப்பொழுதெல்லாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள மன்றாட்டுகளோடு 'கடவுளுக்கு நன்றி செலுத்த என்னும் திருப்பலியும் (பக். 1147 - 1148) பயன்படுத்தப்படலாம்.

தேவைக்கு ஏற்ப, பொதுக் காலத்தின் வார நாள் திருப்பலியில் அதே மன்றாட்டுகள் பயன்படுத்தப்படலாம். இக்கொண்டாட்டங்களில் உரோமைத் திருச்சடங்கு நூலில் கொடுக்கப்பட்டுள்ள வாய்பாடுகளைப் பயன்படுத்தி (திருமணக் கொண்டாட்ட முறை, எண். 272 - 286) திருமண அருளடையாளக் கொண்டாட்டத்தை உரிய முறையில் நினைவுகூரலாம்.
ஆண்டின் நிறைவில்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அனைத்தையும் படைத்தவரே, திருமணப் பிணைப்பை ஏற்படுத்தத் தொடக்கத்திலே ஆணையும் பெண்ணையும் உருவாக்கினீரே; உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) ... இவர்களின் திருமண ஒன்றிப்பைப் புனிதப்படுத்தி உறுதிப்படுத்தியருளும்: அதனால் திரு அவையுடன் கிறிஸ்து கொண்டுள்ள ஒன்றிப்பின் சாயலை இவர்கள் என்றும் மேன்மேலும் வெளிப்படுத்துவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, மனிதப் புதுப் பிறப்பின் மறைபொருளைக் குறித்துக்காட்டக் கிறிஸ்துவின் திருவிலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடச் செய்தீரே; உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) . . . இவர்களுக்காக நாங்கள் நன்றி செலுத்தி ஒப்புக்கொடுக்கும் எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றுக்கொண்டு, இவர்களின் திருமண உறவை உம்முடைய எல்லாக் கொடைகளாலும் நிரப்புவீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தால் புதுப்பிக்கப்பெற்ற உம் அடியார்கள் இவர்களின் இதயங்கள் மகிழ்விலும் பிறரன்பிலும் நிறைந்திருக்கச் செய்தருளும்; அதனால் இவர்களது வீடு நேர்மையும் அமைதியும் நிறைந்து, அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் அன்பு இல்லமாய் விளங்கச் செய்வீராக. எங்கள்.

==============1^ 9229 ^-----------


25-ஆம் ஆண்டின் நிறைவில்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, முறிவுபடா மண உறவினால் (பெயர்) . . . , (பெயர்) ... இவர்களை இணைத்துள்ளீர்; உம் அடியார்கள் இவர்களது உள்ளத்து ஒன்றிப்பு உழைப்பு, மகிழ்ச்சி இவற்றின் நடுவில் நிலைத்திருக்கச் செய்தருளும்; இவர்களது அன்பைப் பெருக்கி, தூய்மைப்படுத்தி, (தம் பிள்ளைகளோடு) இவர்கள் ஒருவர் மற்றவரைப் புனிதப்படுத்தித் துணையாய் இருந்து பேரின்பம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா,
உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) . . . இவர்களுக்காக நன்றி செலுத்தி நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் இவற்றிலிருந்து அமைதியையும் மகிழ்ச்சியையும் இவர்கள் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, உம் அடியார்கள் (பெயர்) . . . , (பெயர்) . . . என்னும் இத்தம்பதியரைத் (தம் பிள்ளைகளோடும் நண்பர்களோடும்) உமது குடும்பத்தின் திருவிருந்தில் அமரச் செய்தீரே; அதனால் ஒருவர் மற்றவரோடு கொண்டுள்ள ஒன்றிப்பில் இவர்கள் அதிக உறுதியும் ஆர்வமும் கொண்டு விண்ணக விருந்துக்கு வந்து சேரும்வரை உமது அருள்கொடையால் ஒன்றித்திருப்பார்களாக. எங்கள்.

==============2^ 9230 ^-----------

50-ஆம் ஆண்டின் நிறைவில்

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல தந்தையே இறைவா, (வாழ்வுக்கும் நம்பிக்கைக்கும் பெற்றெடுத்த தங்கள் பிள்ளைகளோடு ) இங்கு வந்திருக்கும் (பெயர்) . . . , (பெயர்) . . . என்னும் இத்தம்பதியர் தங்கள் நீடிய வாழ்வில் செய்த நற்செயல்களை முன்னிட்டு இவர்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவர்களுடைய அன்பின் தொடக்கத்தை 50 ஆண்டுகளுக்குமுன் நீர் திருமண அருளடையாளத்தால் உறுதிப்படுத்தியது போல, நற்கனி நிறைந்த முதுமையிலும் இவர்களுக்கு ஆசி வழங்குவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இத்தனை ஆண்டுகளாக நேர்மையான நம்பிக்கையுடன் ஒருமித்து வாழ்ந்த (பெயர்) . . . , (பெயர்) .... என்னும் உம் அடியார்களுக்காக நாங்கள் நன்றியோடு உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை உளம் கனிந்து ஏற்றருளும்; இவர்கள் உம்மிடம் விரும்பிக் கேட்கும் ஒற்றுமை, அமைதி போன்ற நலன்கள் அனைத்தையும் இவர்களுக்குத் தாராளமாக தந்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது விருந்தின் இனிமையைச் சுவைத்து நாங்கள் உம்மைக் கெஞ்சி வேண்டுகின்றோம்: (பெயர்) . . . , (பெயர்) . . . இவ்விருவரையும் நீர் விண்ணக விருந்துக்கு இட்டுச் செல்லும்வரை புனிதத்திலும் முதுமையிலும் காத்தருள்வீராக. எங்கள்.

==============3^ 9231 ^-----------

12. குடும்பத்திற்காக

வருகைப் பல்லவி

"உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்பதே வாக் உள்ளடக்கிய முதலாவது கட்டளை. இதனால் நீ நலம் ெ மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்" என்பதே அவ்வாக்குறுதி
எபே >> என்பதே வாக்குறுதியை 6:2-3 நலம் பெறுவாய்;

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது திட்டத்தில் மனித சமுதாயத்துக்குக் குடும்பமே அடித்தளமாய் இருப்பதால் உம் மக்களின் வேண்டல்களைக் கனிவாய்க் கேட்டருளும்; இவ்வாறு உம் ஒரே திருமகனின் திருக்குடும்பத்தில் விளங்கிய குடும்பப் பண்புகள், அன்பு ஆகியவற்றின் எடுத்துக்காட்டை நாங்கள் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்ச்சி அளிக்கும் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

எசா 49:15 தன் மகவைத் தாய் மறக்க முடியுமா? அவள் மறந்திடினும், நாம்
உன்னை மறக்கவே மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் உம் ஒரே திருமகனுடைய திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும்; அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அவரது நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.

==============4^ 9232 ^-----------

13. துறவியருக்காக

வருகைப் பல்லவி

திபா 36:3 - 1
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிருப்பாய்; நம்பத்தக்கவராய் வாழ்வாய். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொ. oil , உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நல்ல எண்ணங்கள் அனைத்தையும் தூண்டியெழுப்புகின்றவரும் அவற்றை நிறைவு செய்கின்றவருமானவரே, உம் அடியாரை நிலையான மீட்பின் பாதையில் வழிநடத்தியருளும்; இவ்வாறு அனைத்தையும் துறந்து உமக்குத் தங்களை முற்றும் கையளித்த துறவியர், 'கிறிஸ்துவைப் பின்பற்றி உலகம் காட்டும் வழிகளை விலக்கிவிட்டு, எளிய மனப்பான்மையுடனும் தாழ்மையான இதயத்துடனும் உமக்கும் சகோதரர் சகோதரிகளுக்கும் உண்மையுடன் பணி புரியச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகள் வழியாக உமது பெயரால் கூடியிருக்கும் உம் அடியார்களைப் புனிதப்படுத்தியருளும்; அதனால் அவர்கள் உமக்கு அளித்த வார்த்தைப்பாடுகளில் பற்றுறுதியுடன் வாழ்ந்து, உமது மாட்சிக்காகவே நேர்மையான இதயத்துடன் பணி புரிவார்களாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

1 அர 19:7ஆண்டவரின் தூதர் எலியாவிடம், ''எழுந்து சாப்பிடு; ஏனெனில், நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்", என்றார்.
திவெ 22:17,20

அல்லது

தூய ஆவியாரும் மண மகளும் சேர்ந்து, வருக' என்கின்றனர். ஆமென், ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.

==============5^ 9233 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பினால் ஒன்று சேர்க்கப்பட்டவர்களாகவும் ஒரே அப்பத்தில் பங்குபெற்றவர்களாகவும் உள்ள உம் ஊழியர்கள் அன்பு செய்வதிலும் நற்செயல்கள் புரிவதிலும் ஒருவர் மற்றவரைத் தூண்டியெழுப்புவதிலும் ஒருமனப்பட்டிருக்கச் செய்தருளும்; இவ்வாறு அவர்கள் தூயோராய் வாழ்ந்து, கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாய் எங்கும் விளங்கிடச் செய்வீரா என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
22

==============6^ 9234 ^-----------


துறவு வார்த்தைப்பாட்டின் 25-ஆம் அல்லது 50-ஆம் ஆண்டின் நிறைவில்

வருகைப் பல்லவி

- காண். திபா 39:8-9 ஆண்டவரே, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ! நான் வருகிறேன். உமது திருச்சட்டம் என் இதயத்தின் நடுவே இருக்க
விரும்புகிறேன்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நம்பிக்கைக்கு உரிய இறைவா, உம்மிடம் இருந்து பெற்றுக்கொண்ட கொடையைப் புதுப்பிக்க இன்று ஆவல் கொண்டுள்ள எங்கள் சகோதரர் (பெயர்) .... / சகோதரி (பெயர்) .... மீது நீர் காட்டிய கனிவிரக்கத்துக்காக நாங்கள் நன்றி செலுத்த அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அவரில் நிறைவான அன்பின் ஆவியை உறுதிப்படுத்தியருளும்; இவ்வாறு அவர் ஒவ்வொரு நாளும் உமது மாட்சிக்கும் மீட்பின் செயலுக்கும் மிகுந்த ஆர்வமுடன் பணி புரிய அருள்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் சகோதரர் (பெயர்) . . . / சகோதரி (பெயர்) . . . இன்று புதுப்பித்து, உறுதிப்படுத்த விரும்பும் தம் அர்ப்பணத்தை எங்கள் காணிக்கைகளோடு ஏற்றருளும்; தூய ஆவியாரின் ஆற்றலால் உம் அன்புத் திருமகனின் சாயலுக்கு அவர் மேன்மேலும் ஒத்திருக்கக் கனிவுடன் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக 'உம்மை மன்றாடுகின்றோம்.
திபா 41:2

திருவிருந்துப் பல்லவி

கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல, கடவுளே! என் ஆன்மா உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்ச்சிக்கு உரிய இந்த ஆண்டு நாளில் நீர் எங்களுக்கு அளித்த உம் திருமகனின் உடலிலும் இரத்தத்திலும் நாங்கள் பங்குபெற்றுள்? இவ்வாறு விண்ணக உணவாலும் பானத்தாலும் புதுப்பிக்கப். எங்கள் சகோதரர் (பெயர்) . . . / சகோதரி (பெயர்) ... ஏற்கெனவே உம்மை நோக்கித் தொடங்கியுள்ள பயணத்தை மகிழ்வுடன் தொடர் அருள்வீராக. எங்கள்.

==============8^ 9236 ^-----------

14. துறவு வாழ்வுக்கான அழைத்தலுக்காக

வருகைப் பல்லவி

மத் 19:21 நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். பின்பு வந்து என்னைப் பின்பற்றும், என்கிறார் ஆண்டவர்.
திருக்குழும் மன்றாட்டு தூயவரான தந்தையே, நீர் நம்பிக்கையாளர் அனைவரையும் அன்பின் நிறைவுக்கு அழைப்பதுடன் உம் திருமகனின் அடிச்சுவடுகளை மேலும் நெருங்கிப் பின்பற்றுவதற்குப் பலரைத் தூண்டியெழுப்பத் தவறுவது இல்லை; அதனால் இத்தகைய சிறப்பான வாழ்வுக்கு உம்மால் தேர்ந்து கொள்ளப்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையால் திரு அவைக்கும் உலகுக்கும் உமது ஆட்சியின் சிறந்த அடையாளமாய் விளங்கச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

, துறவு அருள்பணியாளர் சொல்வதற்கு: ஆண்டவரே, உமது குடும்பத்தைக் கனிவுடன் கண்ணோக்கி, அது புதிய மக்களை என்றும் பெற்று வளரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அது தன் பிள்ளைகளை அவர்கள் அழைக்கப்பட்டுள்ள அன்பின் நிறைவுக்கு இட்டுச்செல்லவும் பயனுள்ள வகையில் எல்லாருடைய மீட்புக்காக உழைக்க ஆற்றல் பெறவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, நாங்கள் உமக்கு அளிக்கும் காணிக்கைகளை மனம் இரங்கி ஏற்றருளும்; உம் திருமகனை ஒடுக்கமான வழியில் பின்பற்ற மகிழ்ச்சியோடு தங்களை அர்ப்பணித்துள்ள அனைவருக்கும் சகோதர ஒன்றிப்பையும் உள்ளார்ந்த தன்னுரிமையையும் அளித்தருள்வீராக. எங்கள்.
காண். மத் 19:27-29

திருவிருந்துப் பல்லவி

நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னைப் பின்பற்றிய நீங்கள் நூறு மடங்காகப் பெறுவீர்கள்; நிலைவாழ்வையும் உரிமைப் பேறாக அடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஆன்மீக உணவாலும் பானத்தாலும் உம் ஊழியர்களை உறுதிப்படுத்தியருளும்; அதனால் அவர்கள் நற்செய்தி விடுக்கும் அழைப்புக்கு எப்போதும் உண்மையுடன் இருந்து உம் திருமகனின் உயிருள்ள சாயல்களாக எங்கும் விளங்கச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
2018 |

அல்லது துறவற அருள்பணியாளர் சொல்வதற்கு:

ஆண்டவரே, இவ்வருளடையாளத்தின் ஆற்றலால், நாங்கள் உமது திருவுளப்படி பணி புரிவதில் நிலைத்திருக்கச் செய்தருளும்; இவ்வாறு உமது அன்பின் சாட்சிகளாய் உலகில் நாங்கள் துலங்கி அழியா நலன்களையே உறுதியுடன் தேட ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.

==============10^ 9238 ^-----------

15. நல்லிணக்கத்தை வளர்க்க

வருகைப் பல்லவி

திப 4:32-33 நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ள மும் ஒரே ஆன்மாவுமாக இருந்தனர். திருத்தூதர் அனைவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர், அல்லேலூயா.
|

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நிறைவான ஒருமைப்பாடும் உண்மையான அன்புமானவரே, உம்முடைய நம்பிக்கையாளர் ஒரே இதயமும் ஒரே ஆன்மாவும் கொண்டிருக்கச் செய்தருளும்; அதனால் உண்மையை அறிக்கையிடுவதைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ள உடலாகிய உமது திரு அவை நல்லிணக்கத்தில் வளர்ந்து நிலையான ஒற்றுமையில் உறுதி பெறச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, உம்மையும் அயலாரையும் அன்பு செய்வதன் வழியாக விண்ணகப் படிப்பினைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க உமது திரு அவைக்குக் கற்பித்தீர்; இவ்வாறு அன்பு, அருள் இவற்றின் ஆவியை எங்களுக்கு வழங்குவதால் உமது குடும்பம் முழுவதும் உமக்கு முழு உள்ளத்துடன் அர்ப்பணிக்கப்படவும் உள்ளத் தூய்மையுடன் ஒன்றுபடவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உம் அருளடையாளங்களினாலும் கட்டளைகளினாலும் எங்களைப் புதுப்பித்து உமது சாயலாக மாற்றுகின்றீர்; நிறைவாக மனம் இரங்கி உமது பாதையில் எங்கள் காலடிகளை வழிநடத்தியருளும்: இவ்வாறு நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலியால் நா வாக்களித்த அன்பின் கொடையைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. எங்கள்.

கிறிஸ்தவர்களின் ஒற்றுமையின் தொடக்கவுரை (பக். 1104:).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:20-21 தந்தையே! என்னிடம் நம்பிக்கை வேண்டுகிறேன். அதனால் அவர்கள் நம்முள் -
" ஒன்றாட இருப்பார்களாக; அதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று நம்புவதாக, என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஒற்றுமையின் அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது இல்லத்தில் புனித ஒன்றிப்பில் வாழ்ந்து நாங்கள் பிறருக்கு வழங்குகின்ற அமைதியை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளவும் பிறரிடமிருந்து பெறுகின்ற அமைதியை நாங்கள் பாதுகாத்துக் கொள்ளவும் அருள்வீராக. எங்கள்.

==============12^ 9240 ^-----------

16. ஒப்புரவுக்காக

இத்திருப்பலியில் பிறைக்கோட்டிற்குள் உள்ளவற்றைத் தனித்தன்மை வாய்ந்த தவ முயற்சி நேரங்களில் சொல்லலாம்.

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பர் நாமே; எத்தகைய இடுக்கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றென்றும் அவர்களுடைய ஆண்டவராய் இருப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.

திருக்கும மன்றாட்டு

கனிவுடன் ஒப்புரவாக்கும் இறைவா, நீர் அனைத்தையும் படைத்தவர், அனைவருக்கும் தந்தை என நாங்கள் முற்றிலும் அறிந்துகொள்ள மீட்பின் சிறப்பான நாள்களை எங்களுக்குத் தருகின்றீர்; ஏற்புடைய இக்காலம் முழுவதும் அமைதி அளிக்கும் உமது வார்த்தையை நாங்கள் தாராள உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டு, அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றுசேர்க்க வேண்டும் எனும் உமது திருவுளத்துக்குப் பணிந்து வாழக் கனிவாய் எங்களுக்குத் துணைபுரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது குறிப்பாக பாஸ்கா காலத்தில்:

இறைவா, உண்மையான விடுதலையின் காரணரே, மக்கள் அனைவரும் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று ஒரே குடும்பமாய் உருவாக விரும்புகின்றீர்; (உமது அருளையும் ஆசியையும் எங்களுக்கு நிறைவாக அளிக்க, இக்காலத்தைத் தேர்ந்துள்ளீர்) : அதனால் உமது திரு அவை மேன்மேலும் தன்னுரிமை பெற்று, அனைவருக்கும் மீட்பு அளிக்கும் அருளடையாளமாக இவ்வுலகில் தெளிவுறத் திகழவும், அன்பின் மறைபொருளை மக்களுக்கு வெளிப்படுத்திச் செயலாக்கவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் அமைதியும் ஒப்புரவுமாகிய உம் திருமகன் உலகின் பாவத்தைத் தம் இரத்தத்தால் அழித்தார் என்பதை நினைவுகூர்ந்தருளும்; இவ்வாறு உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கி, (அருள் பொழியும் இக்காலத்தை மகிழ்வுடன் கொண்டாடும்) நாங்கள் கிறிஸ்து தரும் விடுதலையை அனைவருக்கும் வழங்கிட ஆற்றலைத் தந்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் பயன்படுத்தப்படலாம் (பக். 651, பக்.)

திருவிருந்துப் பல்லவி

மத் 11:28 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.

அல்லது

யோவா 16:24 கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும்
நிறைவடையும், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட உம் திருமகனின் அருளடையாளம் எங்களின் ஆற்றல்களைப் பெருகச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு ஒருமைப்பாட்டின் மறைபொருளான இப்பலியிலிருந்து நாங்கள் உண்மையான அன்பை முகந்து எங்கும் உம் அமைதியின் தூதர்களாய்ப் பணி புரிவோமாக. எங்கள்.

==============14^ 9242 ^-----------

17. கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்காக

திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் ஞாயிற்றுக் கிழமைகளும் சில பெருவிழாக்களும் தவிர ஏனைய நாள்களில் கிறிஸ்தவர்களின் வற்றுமைக்காகச் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றால் இத்திருப்பலியைப் பயன்படுத்தலாம்.

வருகைப் பல்லவி

யோவா 10:14-15நல்ல ஆயன் நானே. நான் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என் கிறார் ஆண்டவர். தந்தை என்னை அறிந்திருப்பது போல நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். என் ஆடுகளுக்காக எனது உயிரைக்
கொடுக்கிறேன்.

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, சிதறுண்டவர்களை ஒன்றுசேர்ப்பவரும் ஒருங்கிணைந்தவற்றைப் பேணிக் காப்பவரும் நீரே; உம் திருமகனின் மந்தையைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்: இவ்வாறு ஒரே திருமுழுக்கினால் தூய்மைப்படுத்திய அவர்களை நம்பிக்கையின் முழுமையால் இணைத்து, அன்பின் பிணைப்பால் ஒன்றுசேர்ப்பீராக. உம்மோடு.

அல்லது

மனிதர் அனைவரையும் அன்பு செய்யும் ஆண்டவரே, நீர் எங்களுக்குத் தந்த அழைப்புக்கு ஏற்ப வாழுமாறு, உம்முடைய ஆவியாரின் நிறைவான அருளை எங்கள் மீது கனிவுடன் பொழிந்தருள உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் மக்கள் முன்னிலையில் உண்மைக்குச் சான்று பகரவும் நம்பிக்கையாளர் அனைவரின் ஒற்றுமையை அமைதியின் பிணைப்பால் நம்பிக்கையோடு தேடவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரே பலியினால் உமக்கென மக்களைச் சொந்தமாக்கிக் கொண்டீர்; உமது திரு அவையில் ஒற்றுமை, அமைதி ஆகிய கொடைகளை எங்களுக்குக் கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண்.1 கொரி 10:17
அப்பம் ஒன்றே; நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒY)
கிண்ணத்திலும் பங்குகொள்கிறோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட உமது இத்திரு உணவு நம்பிக்கையாளர் உம்மில் ஒன்றித்திருப்பதைக் குறித்துக்காஅது போல் உமது திரு அவையிலும் ஒற்றுமையை அது விளைவிப்பதாக. எங்கள்.

==============16^ 9244 ^-----------


வருகைப் பல்லவி

திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.


திருக்குழும மன்றாட்டு

இறைவா, உமது பெயரை அறிக்கையிடுவதில் பல மக்களினங்களை ஒன்றுசேர்த்தருளினீரே; இவ்வாறு உமது ஆட்சிக்கு அழைக்கப்பட்ட இம்மக்கள் நீர் கட்டளையிடுவதையே விரும்பவும் நிறைவேற்றவும் தங்கள் மனங்களில் ஒரே நம்பிக்கையும், செயல்களில் பரிவிரக்கமும் உடையவர்களாய்த் திகழவும் அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, உம் மக்களின் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: நம்பிக்கையாளர் அனைவரின் இதயங்கள் உம்மைப் புகழ்வதிலும் மனத்துயர் அடைவதிலும் இணைந்திருக்கச் செய்தருளும்; இவ்வாறு கிறிஸ்தவர்களிடையே உள்ள பிளவுகள் நீக்கப்பட்டு நாங்கள் திரு அவையின் நிறைவான ஒன்றிப்பில் உமது நிலையான ஆட்சியை நோக்கி மகிழ்வுடன் முன்னேறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மீட்பின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் இந்தப் பரிவிரக்கத்தின் அருளடையாளம் எங்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாகவும் பிறரன்பின் பிணைப்பாகவும் அமைவதாக. எங்கள்.

இதற்கு உரிய தொடக்கவுரை (பக். 1104).

திருவிருந்துப் பல்லவி

-கொலோ 3:14-15அனைத்திற்கும் மேலாக அன்பைக் கொண்டி ருங் கள் : அது? நிறைவின் பிணைப்பு. கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ள அக்களிக்கச் செய்வதாக. இவ்வமைதிக்கென்றே நீங்கள் உடலின் உறுப்புகளாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
உங்கள் உள்ளங்களை கன்றே நீங்கள் ஒரே

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள்மீது பொழிந்தருளும்; இவ்வாறு இப்பலியின் ஆற்றலால் உம்மில் நம்பிக்கை கொண்டவர்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

எபே 4:4-6 நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல், உடலும் ஒன்றே; ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கி அவர்கள் மீது உம்முடைய தூய ஆவியாரின் கொடைகளைக் கனிவாய்ப் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் உண்மையான அன்பில் மேன்மேலும் வளர்ந்து கிறிஸ்தவர்களின் நிறைவான ஒற்றுமைக்கான ஆர்வமும் செயல்பாடும் கொண்டிருக்கச் செய்வீராக. உம்மோடு .

==============18^ 9246 ^-----------

ஆண்டவரே, உமது அளவிடமுடியாத இரக்கத்தை எங்களுக்கு வெளிப்படுத்தி, கிறிஸ்தவர்களிடையே உள்ள பிளவுகளை உம் தூய ஆவியாரின் ஆற்றலால் போக்கியருளும்; இவ்வாறு உமது திரு அவை எல்லா நாடுகளுக்கும் தெளிவான ஒர் அடையாளமாக விளங்குவதைக் கண்டு, உம்முடைய தூய ஆவியார் தரும் ஒளியால் நீர் அனுப்பிய கிறிஸ்துவில் உலகம் நம்பிக்கை கொள்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருள் எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; ஒரே திருமுழுக்கினால் இணைக்கப்பெற்ற அனைவரையும் இம்மறைநிகழ்வுகளின் கொண்டாட்டத்தின் பங்கேற்பாளர்களாக 'அது மாற்றுவதாக. எங்கள். இதற்கு உரிய தொடக்கவுரை (பக். 1104).

திருவிருந்துப் பல்லவி

யோவா 17:21,23 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருப்பார்களாக! நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும்
இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் கிறிஸ்துவின் திருவிருந்தை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நீர் வழங்கிய புனிதமாக்கும் அருளை உமது திரு அவையில் மீண்டும் புதுப்பித்து, கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் பெருமை கொள்ளும் அனைவரும் நம்பிக்கையின் ஒன்றிப்பில் உமக்கு ஊழியம் புரியத் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==============19^ 9247 ^-----------

| 18. மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க

திருவருகைக் காலம், தவக் காலம், பாஸ்கா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆண்டின் பெருவிழாக்களிலும் தவிர ஏனைய - நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான கொண்டாட்டங்கள் பயன்படுத்தலாம்.

வருகைப் பல்லவி

காண். திபா 66:2-2 கடவுள் நம்மீது இரங்குவாராக; நமக்கு ஆசி வழங்குவாராக! அ முகம் நம்மீது ஒளி வீசுவதாக நம்மீது இரங்குவதாக அகன இவ்வுலகில் நாங்கள் உமது வழியையும் பிற இனக்க: அனைவரிடையே நீர் அருளும் மீட்பையும் கண்டுணர்வோமாக.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மக்கள் அனைவரும் மீட்பு அடையவும் உண்மையை அறிந்துகொள்ளவும் வேண்டுமென்று திருவுளமானீரே; மிகுதியான உமது அறுவடையைக் கண்ணோக்கி, படைப்பு அனைத்துக்கும் நற்செய்தியை அறிவிக்க வேலையாள்களைக் கனிவுடன் அனுப்பியருளும்; இவ்வாறு வாழ்வு தரும் வார்த்தையால் ஒன்றுசேர்க்கப்பட்டு, அருளடையாளங்களால் ஆற்றல் பெற்று, மீட்பின் பாதையிலும் அன்பின் நெறியிலும் உம் மக்கள் முன்னேறச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, உம் திருமகனை உண்மையான ஒளியாக உலகுக்கு அனுப்பினரே; மனிதரின் இதயத்தில் உண்மையின் விதையை எப்பொழுதும் ஊன்றவும் அவர்களில் நம்பிக்கையின் கீழ்ப்படிதலைத் தூண்டியெழுப்பவும் வாக்களிக்கப்பட்ட தூய ஆவியாரைப் பொழிந்தருளும்; அதனால் திருமுழுக்கின் வழியாக புதுப் பிறப்பு அடைந்த அனைவரும் உம் ஒரே மக்களாக ஒன்றாய்ச் சேரும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு.

==============20^ 9248 ^-----------

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அனைவரின் மீட்புக்காகத் தம்மையே கையளித்த உம்முடைய கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களைக் கண்ணோக்கியருளும்; இவ்வாறு கதிரவன் தோன்றுவது முதல் மறையும்வரை உலக மக்களிடையே அவர் வழியாக உமது பெயர் புகழ்பெறவும் மாண்புக்கு உரிய உமக்கு எல்லா இடங்களிலும் ஒரே காணிக்கை ஒப்புக்கொடுக்கப்படவும் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். மத் 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படிக் கற்பியுங்கள்! உலக முடிவுவரை எந்நாளும்
நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் உம் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எங்கள்.

வருகைப் பல்லவி

திபா 95:3-4
பிற இனத்தாருக்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்: ஏனெனில் ஆண்டவர் மாட்சிமிக்கவர், பெரிதும் போற்றத்தக்கவர்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, கிறிஸ்துவின் மீட்புப் பணி உலக முடிவுவரை நீடிக்க உமது திரு அவை மக்கள் அனைவருக்கும் மீட்பின் அருளடையாளமாக விளங்கச் செய்யத் திருவுளமானமே படைப்புக்கெல்லாம் மீட்பினை அளிக்கும் பணியில் உடனடியாக ஈடுபட அழைக்கப்பெறுகின்றோம் என உணர்ந்து, உம் நம்பிக்கையாளரின் உள்ளங்களைத் தூண்டியெழுப்பியருளும். இவ்வாறு மக்கள் அனைவரிடமிருந்தும் உமக்குச் சொந்தமான ஒரே குடும்பமும் ஒரே திருக்கூட்டமும் உருவா. வளர்ச்சி பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் மாட்சிக்கு உரிய பாடுகளால் உலகம் முழுவதும் மீட்பு அடையத் திருவுளமானீரே; உம்மை இறைஞ்சி மன்றாடும் திரு அவை உமது மாட்சியின் திருமுன் ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளை ஏற்றருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

திபா 116:1-2
மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! எல்லா மக்களுமே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில் நம் மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது; ஆண்டவரின் உண்மை என்றென்றும் உள்ளது.

அல்லது

மாற் 16:15
உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருவிருந்தில் பங்குகொண்ட எங்களை இத்திரு உணவு புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்; அதனால் உம் ஒரே திருமகன் சிலுவையில் நிறைவேற்றிய மஎல்லா இனத்தவரும் உமது திரு அவையா மகிழ்வுடன் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.
ஊறவரும் உமது திரு அவையின் அருளடையாளம் வழியாக

==============22^ 9250 ^-----------

19. சமயத் துன்புறுத்தலால் இன்னலுறும் கிறிஸ்தவர்களுக்காக

வருகைப் பல்லவி

காண். திபா 73:20,19,22,23 ஆண்டவரே உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! உம் ஏழையரின் ஆன்மாக்களை ஒருபோதும் கைவிடாதேயும்! ஆண்டவரே! எழுந்து வாரும்: உமது வழக்கை நீரே நடத்தும்; உம்மை நாடும் குரலை மறவாதேயும்.

அல்லது

திப 12:5 பேது ரு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்; அப்போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் தொடர்ந்து உருக்கமாக வேண்டிய து.
LOTU 11

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அறிவுக்கு எட்டாத உமது அருள் திட்டத்தால் உம் திருமகனின் பாடுகளில் திரு அவையும் பங்குபெற விரும்புகின்றீர்; உமது பெயருக்காகத் துன்பத்தில் உழலும் உம் நம்பிக்கையாளருக்குப் பொறுமை, அன்பு இவற்றின் உளப்பாங்கை வழங்கியருளும்: அதனால் அவர்கள் உம் வாக்குறுதிகளுக்கு நம்பிக்கையும் உண்மையும் உள்ள சாட்சிகளாய் விளங்குவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தாழ்மையான எங்கள் வேண்டல்களையும் பலிப்பொருள்களையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: உண்மையுடன் உமக்கு ஊழியம் செய்து மனிதரின் துன்புறுத்தலால் இன்னலுறுகின்றவர்கள் உம்முடைய திருமகன் கிறிஸ்துவின் சிலுவைப் பலியில் பங்குகொள்வதில் மகிழ்ந்து, தேர்ந்துகொள்ளப்பெற்றவர்களோடு தங்கள் பெயர்களும் விண்ணகத்தில் எழுதப்பெற்றிருப்பதையும் உணர்வார்களாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:11-12என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை, பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்கள் கைம்மாறு மிகுதியாக உள்ளது, என்கிறார் ஆண்டவர்.

மத் 10:32 கள் முன்னிலை யி ல் எ ன் னை ஏற்று க் கொள் ப. விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் ஏற்றுக்கொள் வேன், என் கிறார் ஆண்டவர்,
மக்கொள் பவரை மன்னிலையில் நானும்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் உம் அடியார்களை உண்மையில் உறுதிப்படுத்தியருளும்; இவ்வாறு துன்பத்துக்குள்ளாகும் உம் நம்பிக்கையாளர் உம் திருமகனைப் பின்பற்றி, தம் சிலுவையைச் சுமந்துகொள்ளவும் துன்பங்கள் நடுவிலும் கிறிஸ்தவர் எனும் பெயரில் என்றும் பெருமைகொள்ளவும் ஊக்கம் பெறுவார்களாக. எங்கள்.

20. அருள்வாழ்வு அல்லது அருள்பணி சார்ந்த கருத்தரங்குக்காக

வருகைப் பல்லவி

காண். மத் 18:19,20
ஆண்டவர் கூறுகிறார்: "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்."

அல்லது

கொலோ 3:14-15 அனைத்துக்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள்: அது வே நிறைவின் பிணைப்பு; கிறிஸ்துவின் அமைதி உங்கள் உள்ளங்களை அக்களிக்கச் செய்வதாக. இவ்வமைதிக்கு என்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாய் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, அறிவு, உண்மை , அமைதி ஆகியவற்றின் உளப்பாங்கினை எங்களுள் பொழிந்தருளும்; அதனால் நாங்கள் உமக்கு உகந்தவற்றை முழு இதயத்தோடு அறிந்து கொள்ளவும் அறிந்ததை ஒரே மனதாக விருப்பமுடன் நிறைவேற்றவும் அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, தம் பெயரில் கூடி வந்துள்ள அனைவரின் நடுவில் தாம் இருப்பதாக உம் திருமகன் உறுதி அளித்துள்ளார்; இவ்வாறு அவர் எங்களோடு உடனிருப்பதை நாங்கள் உணரவும் நன்றி, இரக்கம், அமைதி ஆகியவை எங்கள் இதயங்களில் பெருகுவதை உண்மையிலும் அன்பிலும் உய்த்துணரவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களாகிய நாங்கள் அளிக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் கண்களுக்கு நலமானவற்றையும் நேரியவற்றையும் சரியாக உணர்ந்து, அவற்றை உண்மையுடன் எடுத்துரைக்க அருள்வீராக. எங்கள்.

தூய ஆவியாரின் தொடக்கவுரை II (பக். 1167-1168).

'திருவிருந்துப் பல்லவி

உண்மையான அன்பு எங்குள்ளதோ, அங்கே கடவுள் இருக்கின்றார். கிறிஸ்துவின் அன்பு நம்மை ஒன்றாய்ச் சேர்த்துள்ளது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் எங்களை உறுதிப்படுத்துவதாக; இவ்வாறு உண்மைக்கு நாங்கள் என்றும் சான்று பகரச் செய்வதாக. எங்கள்.

==============25^ 9253 ^-----------

II. பொதுத் தேவைகளுக்காக

21. குடியரசு நாள் (ஜனவரி 26)

வருகைப் பல்லவி

காண். திவெ 21:3_ - கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பா கடவுள்தாமே அவர்களோடு எப்போதும் இருப்பார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது வியத்தகு திட்டத்துக்கு ஏற்ப எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் நீர் எங்கள் நாட்டுக்காக உம்மிடம் கொண்டு வரும் எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் ஏற்றருளும்; இவ்வாறு எம் நாட்டுத் தலைவர்களின் ஞானத்தாலும் குடிமக்களின் ஒருமைப்பாட்டாலும் நல்லிணக்கமும் நீதியும் உறுதிப்படுத்தப்பட்டு மனித வாழ்வு அனைத்தின் மேன்மை காக்கப்படுவதாக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தங்கள் அர்ப்பணத்தின் அடையாளமாக உம் மக்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; எங்களது இறைப்பற்றுள்ள காணிக்கை உம் திருமகனின் நிலையான பலியோடு ஏற்றுக்கொள்ளப்பட அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 13:13-14
'நீங்கள் என்னைப் போதகர்' என்றும் 'ஆண்டவர் என அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறை
படும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் " °றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டுள்ளோம்; பணியில் அவர் காட்டிய எடுத்துக்காட்டை நாங்கள் பின்பற்றவும் விண்ணரசில் நுழைந்திடத் தகுதி பெறவும் அருள்வீராக. எங்கள்.

சிறப்பு ஆசி

ஒரே குடும்பமாக இணைக்கப்பெற்ற நாடாகத் திகழ நம்மை அழைத்த தந்தையாகிய கடவுள், நீங்கள் நம்பிக்கையில் உறுதியும், எதிர்நோக்கில் மகிழ்ச்சியும் அன்புச் செயலில் ஈடுபாடும் கொண்டிருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

நம் வாழ்வில் பங்கேற்க வந்த இறைமகன், உங்கள் உதட்டாலும், உள்ளத்தாலும், வாழ்வாலும் நீங்கள் அவரைப் போற்றும் பொருட்டு விண்ணக அருளை நிறைவாகப் பொழிவாராக.

பதில்: ஆமென்.

தந்தை, மகன் ஆகியோரின் அன்பின் பிணைப்பான தூய ஆவியார் தமது அன்பில் எல்லாக் குடிமக்களையும் ஒன்றுபடுத்தி தங்கள் ஏக்கங்களின் உண்மையான நிறைவை அவர்களுக்கு வழங்குவாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், X தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக. பதில் : ஆமென்.

வாசகங்கள்
வாசகம் 1 1 திமொ 2:1-6
பதிலுரைத்திருப்பாடல் பதிலுரை (91:2ஆ)
திபா 91 (90):1-6. 9-10 நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்.
அல்லேலூயா, அல்லேலூயா!
பேசி, தலையாகிய அன்பின் அடிப்படையில் உண்மை கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அல்லேலூயா.
அல்லேலூயா (எபே 4:15) :
நற்செய்தி யோவா 8:31-36

==============27^ 9255 ^-----------

22. தாய் நாட்டுக்காக அல்லது மாநிலத்துக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வியத்தகு திட்டத்தால் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் எங்கள் தாய் நாட்டுக்காக நாங்கள் உம்மிடம் புரியும் வேண்டல் கனிவுடன் ஏற்றருளும்; இவ்வாறு ஆள்வோரின் ஞானத்தாலும் குடிமக்களின் நேர்மையாலம் ஒற்றுமையும் நீதியும் உறுதிபெற்று முடிவில்லா அமைதியோடு வளமையும் நிலவச் செய்வீராக, உம்மோ

23. பொதுப் பணியில் ஈடுபட்டிருப்போருக்காக

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதரின் இதயங்களும் அவர்களின் உரிமைகளும் 'உம் கைகளில் உள்ளன; உலகெங்கும் மக்களின் வளமான வாழ்வும் அமைதியின் உறுதிப்பாடும் சமய உரிமையும் உமது கொடையால் நிலைபெறுமாறு எங்களை ஆள்வோரைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. உம்மோடு.

24. நாடுகளை ஆள்வோரின் குழுமத்துக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அனைத்தையும் நீர் வியத்தகு முறையில் அமைத்துச் சொல்லற்கரிய வகையில் ஆண்டு வருகின்றீர்; நாடுகளை ஆள்வோரின் குழுமத்தைக் கனிவாய்க் கண்ணோக்குவீராக; இவ்வாறு அவர்கள் பொது நலனையும் அமைதியையும் கருதி அனைத்தையும் அமைக்கவும் உமது விருப்பத்துக்கு மாறாக என்றுமே செயல்படாதிருக்கவும் உமது ஞானத்தின் ஆவியை அவர்களுக்கு அளிப்பீராக. உம்மோடு .

25. நாட்டின் தலைமை ஆட்சியாளருக்காக அல்லது அரசருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா,
மனித அதிகாரங்கள் உமக்கு அடி பணிகின்றன; - ம் அடியார் (எங்கள் அரசர் / தலைவர்) (பெயர்) ... 2.மலான தம் பொறுப்பினை நன்முறையில் நிறைவேற்ற அருள்புரியும்; அவர் உமக்கு என்றும் அஞ்சி, உமது திருவுளத்துக்கு உகந்தவாறு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்லொழுங்கினால் விளையும் அமைதியை எப்பொழுதும் ஏற்படுத்திப் பாதுகாப்பாராக. உம்மோடு.


26. நாட்டின் ஆண்டுத் தொடக்கம்

கடவுளின் தாய் புனித மரியாவின் பெருவிழாவான ஜனவரி முதல் நாளில் இத்திருப்பலியை நிறைவேற்றலாகாது.

வருகைப் பல்லவி

காண். திபா 64:12ஆண்டு முழுவதும் முடி சூடலுக்கு உமது கனிவிரக்கத்தால் ஆசி வழங்கியுள்ளீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.

அல்லது

மத் 28:20 இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

முதலும் முடிவும் அற்ற இறைவா, அனைத்தையும் படைத்தவர் நீரே; இவ்வாண்டின் தொடக்கத்தை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்; இவ்வாறு இப்புத்தாண்டு முழுவதும் எங்களுக்குத் தேவையானவற்றை மிகுதியாகப் பெற்று புனிதமிக்க செயல்களால் நாங்கள் ஒளிர்ந்து, என்றும் வாழ்ந்திட எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பனிப்பொருள்கள் உமக்கு ஏற்றவையாய் அமைவனவாக; இவ்வாறு இந்த ஆண்டின் தொடக்கத்தை அக்களிப்புடன் கொண்டாடும் நாங்கள் அனைவரும், தொடர்ந்து பின்வரும் நாள்களிலும்
எபி 13:8 உமது அன்பில் நிலைத்து வாழத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.

==============29^ 9257 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்தாய மறைநிகழ்வில் பங்குபெற்றுள்ள உம் மக்களோடு 6 உமது அருள்காவலில் எப்போதும் நம்பிக்கை .ெ இந்த ஆண்டு முழுவதும்
சுள உம் மக்களோடு இருந்தருளும்; பாதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நாங்கள்
எல்லா இடர்களினின்றும் காக்கப்பெறுவோமாக. எங்கள்.

27. மனித உழைப்பை அர்ச்சிக்க

வருகைப் பல்லவி

தொநூ 1:1,27,21
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார்; அவை மிகவும் நன்றாய் இருந்தன.

அல்லது

காண். திபா 89:17
ஆண்டவரே, உமது இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!

திருக்குழும் மன்றாட்டு

அனைத்தையும் உருவாக்கிய இறைவா, உழைப்பின் சுமையை மனிதர் தாங்க வேண்டுமென்று பணித்தீரே; அதனால் நாங்கள் தொடங்கும் இவ்வேலை எம் வாழ்வு வளம்பெறவும், உம் கிறிஸ்துவின் அரசு பரவவும் உதவிடக் கனிவிரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, உம்முடைய மாபெரும் படைப்புப் பணியை மனித உழைப்பால் என்றும் நிறைவு செய்து ஆண்டு வருகின்றீர்; உம்மைத் தாழ்மையுடன் மன்றாடும் மக்களின் வேண்டல்களைக் கேட்டருளும்: இவ்வாறு அவரவர் தங்கள் வாழ்க்கை நேர்மையுடன் செயல்பட்டு, நிலைக்கு ஏற்ப தங்கள் சகோதரர் சகோதரிகளுடன் இன்னும் மிகுதியாக ஒன்றித்து, அவர்களுக்குப் பணிவிடை புரிய ஆற்றல் பெறச் செய்வீராக. உம்மோடு.

வேறு மன்றாட்டுகள் (பக். 1119 - 1120).

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா,
மக்களினம் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் எங்களுக்கு ஊட்டம் அளிக்கும் உணவாகவும் களைப் புதுப்பிக்கும் அருளடையாளமாகவும் மாறச் செய்கின்றீர்; எவ்வாறு இவற்றின் அருளுதவி எங்கள் உடலுக்கும் மனதுக்கும் எப்போதும் குறைவுபடாமல் கிடைக்க அருள்புரிவீராக. எங்கள்.

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக்.540).

திருவிருந்துப் பல்லவி

கொலோ 3:17 எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் செய்து, அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஒற்றுமையையும் அன்பையும் தருகின்ற இத்திருவிருந்தில் பங்குபெற்ற நாங்கள் உமது கனிவை இறைஞ்சி வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நீர் எங்களிடம் ஒப்படைத்த பணிகள் வழியாக இவ்வுலக வாழ்வைப் பேணிக் காக்கவும் உமது அரசை உண்மையுடன் கட்டியெழுப்பவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இயற்கையின் ஆற்றல்கள் மனித உழைப்புக்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டுமென்று விரும்பிய நீர் எங்கள் மன்றாட்டைக் கனிவாய்க் கேட்டருளும்: அதனால் நாங்கள் கிறிஸ்தவ உளப்பாங்கோடு 'எங்கள் உழைப்பில் கருத்தூன்றியவர்களாய் இருக்கச் செய்தருளும். 'எங்கள் சகோதரர் சகோதரிகளோடு உண்மையான அன்பு கொண்டிருக்கவும் உமது புனிதப் படைப்புப் பணியை நிறைவாக்க இணைந்து செயல்படவும் ' தகுதி பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மைப் பணிந்து வேண்டும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றருளும்; இவ்வாறு நாங்கள் உமக்கு அளிக்கும் மனித உழைப்பால் கிறிஸ்துவின் மீட்புப் பணியில் பங்குபெறத் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: நிலையான மறைபொருள்களால் புதுப் படைப்பாகும் தகுதிபெற்ற மக்களை மண்ணக உதவிகளால் ஆண்டு நடத்துவீராக. எங்கள்.
28. நிலத்தில் விதைக்கும்பொழுது

வருகைப் பல்லவி

காண். திபா 89:17
ஆண்டவரே, உமது இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நிலத்தில் நாங்கள் தூவும் விதைகள் உமது ஆற்றலால் பலுகிப் பெருகுகின்றன; விளைச்சலைத் தருகின்ற நீரே எங்கள் உழைப்பில் நாங்கள் காணும் குறைகளை நிறைவு செய்வீராக. உம்மோடு .
வேறு மன்றாட்டுகள்: பக். (1121).

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நிலத்தின் கனிகளுக்கு உண்மையான காரணரும் அருள்வாழ்வை விளைவிக்கும் உன்னதரும் நீரே;
களுடைய வேலைகள் நிறைபயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: உமது பராமரிப்பு மட்டுமே விளைவிக்கக்கூடிய நிலத்தின் கனிகளை 'நாங்கள் மிகுதியாகப் பெறவும், அவை யாவும் உமது மாட்சிக்காக எப்பொழுதும் இணைந்து செயல்படவும் அருள்வீராக. எங்கள்.

ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).

திருவிருந்துப் பல்லவி

திபா 84:13 ஆண்டவர் இரக்கம் அருள்வார்: நமது நிலமும் தனது பலனைத் தரும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

உம் அருளடையாளங்களால் எங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் ஆண்டவரே, எங்கள் கைகளின் உழைப்புக்குத் துணை நிற்பீராக; நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலே ஆதலால், நிலத்தில் தெளிக்கப்பட்ட விதைகளுக்கு நீர் கனிவுடன் ஆசி வழங்கி மிகுதியான விளைச்சலால் நாங்கள் ஊட்டம் பெறச் செய்வீராக. எங்கள்.
கள் வாழ்வதும் அமைப்புக்குத் துப் புத்துயிர் அ.
வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, உம் மக்கள் மீது உமது ஆசியை நிறைவாகப் பொழிந்து, உமது கனிவிரக்கத்தால் கிடைக்கப்பெற்ற எங்கள் நிலம் தன் கனிகளைக் கொடுக்கச் செய்தருள வேண்டுகின்றோம்: அதனால் உமது திருப்பெயரை மாட்சிப்படுத்த நாங்கள் என்றும் நன்றியுணர்வுடன் அவற்றைப் பயன்படுத்தச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் உடலாக மாற வேண்டும் என கோதுமை மணியிலிருந்து உருவான அப்பத்தை உம் திருமுன் கொண்டுவந்துள்ளோம்; அதனால் எங்கள் காணிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி நாங்கள் நிலத்தில் விதைத்த விதைகளின்மீது நீர் வழங்கும் ஆசியினால் மகிழ்ந்திருக்க அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு நிலத்தின் கனிகளை மிகுதியாகத் தந்தருளும்; இவற்றால் இவ்வுலகில் வளம் பெறும் நாங்கள், அருள்வாழ்விலும் வளர்ச்சி பெறுவோமாக: இவ்வாறு இந்த அருளடையாளத்தில் நிலையான நன்மைகளின் பிணையைப் பெற்ற நாங்கள் அவற்றை நோக்கித் தொடர்ந்து பின்செல்வோமாக. எங்கள்.

==============3^ 9261 ^-----------

29. நிலத்தின் விளைச்சலைச் சேகரித்த பிறகு

வருகைப் பல்லவி

திபா 66:7நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நல்ல தந்தையே, உமது பராமரிப்பினால் மனிதரிடம் நிலத்தை ஒப்படைத்தீரே; நாங்கள் நிலத்திலிருந்து பெற்ற விளைச்சல் வழியாக எங்கள் வாழ்வைப் பேணிக் காக்கச் செய்தருளும். உம்முடைய புகழ்ச்சிக்காகவும் அனைவருடைய நலனுக்காகவும் உமது உதவியால் நாங்கள் என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, மனிதருக்கு நன்மை பயக்கும் நிலத்தின் விளைச்சலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; இவ்வுலகில் உமது மேலான பராமரிப்பினால் நீர் எங்களுக்குப் போது மான விளைச்சலை அளித்தது போல, எங்கள் உள்ளமாகிய நிலத்தில் நீதி தளிர்விட்டு, அன்பின் நற்கனிகளை விளையச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, வளமான நிலத்தில் விளைந்த இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; நிலத்தின் விளைச்சலை இவ்வுலகப் பயன்பாட்டுக்காக வழங்கியது போல் எங்கள் உள்ளங்கள் விண்ணக நலன்களால் வளம் பெறச் செய்வீராக. எங்கள். ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15
69-வ ரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.
கனன்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலத்தின் கனிகளில் இருந்து சேகரித்தவற்றை உம் திருமுன் கொண்டு வந்து நலம் தரும் இம்மறைநிகழ்வில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; அதனால் எங்களில் செயல்படும் இம்மறைபொருளின் ஆற்றலால் இன்னும் மிகுதியாக நலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.

30. மக்களின் முன்னேற்றத்துக்காக

வருகைப் பல்லவி

1 யோவா 3:17உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவுகாட்டவில்லையென்றால்
அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்? திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மக்கள் அனைவரையும் ஒரே ஊற்றிலிருந்து உருவாக்கி அவர்களை உம்மில் ஒரே குடும்பமாக ஒன்றுகூட்டினீரே; உமது அன்புப் பெருக்கை அனைவரின் உள்ளங்களிலும் நிறைத்து, தங்கள் சகோதரர் சகோதரிகளின் நேர்மையான முன்னேற்றத்தின் மீது அவர்களின் ஆவலைத் தூண்டியெழுப்பியருளும்: அதனால் எல்லாருக்கும் என நீர் ஏராளமாக வழங்கும் நலன்களால் ஒவ்வொரு தனி மனிதரும் நிறைவு பெறவும் மக்களிடையே பிளவுகள் அகன்று, மனித சமுதாயத்தில் சமத்துவமும் நீதியும் நிலைநிற்கவும் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூக்குரலிடும் எங்கள் வேண்டலைக் கேட்டு, உமது திரு அவையின் காணிக்கையை ஏற்றருளும்; இவ்வாறு மனிதர் அனைவரும் இறைவனின் பிள்ளைகளுக்கு உரிய மனப்பான்மையால் நிரப்பப்பெற்று, ஏற்றத் தாழ்வுகளை அன்பால் வென்று, உமது அமைதியில் ஒரே குடும்பமாக மாறிடச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரே, உம் செயல்களின் பணியால் பவள
அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின்றீர்; சி, இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.

அல்லது

லூக் 11:9 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடு கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திற. என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஒரே உணவால் ஊட்டம் அளித்து, எங்களை ஒரே குடும்பமாக என்றும் புதுப்பித்தருள உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: ஒற்றுமையின் அருளடையாளத்தில் பங்குபெற்றதால் நாங்கள் உறுதியும் தூய்மையுமான அன்பை அள்ளிப் பருகுவோமாக; அதனால் மக்கள் முன்னேற்றம் அடைய நாங்கள் துணைபுரிந்து, அன்பால் தூண்டப்பெற்று நீதிச் செயலை நிறைவேற்றுவோமாக. எங்கள்.

31. அமைதியும் நீதியும் நிலவச் செய்ய

கடவுளின் தாய் புனித மரியாவின் பெருவிழாவான ஜனவரி முதல் நாளில் இத்திருப்பலியை நிறைவேற்றலாகாது.

வருகைப் பல்லவி

காண். சீஞா 36:18-19 ஆண்டவரே, உமக்காகக் காத்திருப்போருக்கு அமைதி அளித்தருளும்; உம் ஊழியர்களின் மன்றாட்டுகளுக்குச் செவிசாயும்; நீதியின்
வழியில் எங்களை நடத்தியருளும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அமைதி ஏற்படுத்துவோர், உம் பிள்ளைகள் என அழைக்கப்படுவர் என்று மொழிந்த உம்மை வேண்டுகின்றோம்; அதனால் உறுதியான, உண்மையான அமைதியை உருவாக்கக்கூடிய நீத எங்களிடையே நிலவுமாறு நாங்கள் அயராது உழைக்க எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

அல்லது

தந்தைக்கு உரிய அக்கறையுடன் அனைத்தையும் ஆதரிக்கும் இறைவா மனிதர் அனைவரும் ஒரே ஊற்றிலிருந்து தோன்றச் செய்தீர்; எனவே மக்கள் ஒரே குடும்பமாக அமைதியில் வாழவும் சகோதரர் சகோதரிகளுக்கு உரிய உளப்பாங்குடன் என்றும் ஒன்றித்திருக்கவும் அருள்வீராக. உம்மோடு.

==============6^ 9264 ^-----------

வேறு மன்றாட்டுகள் (பக். 1125 - 1126),

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அமைதியின் அரசரான உம் திருமகனின் மீட்பு அளிக்கும் பலியை அமைதியையும் ஒற்றுமையையும் குறிக்கின்ற அருளடையாளங்கள் வழியாக ஒப்புக்கொடுக்கும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் பிள்ளைகள் அனைவரிடையே நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

அல்லது

யோவா 14:27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, அன்பின் உளப்பாங்கை மிகுதியாக எங்களில் பொழிந்தருள உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகனின் உடலாலும் இரத்தத்தாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் அவர் விட்டுச் சென்ற அமைதியை அனைவரிடையிலும் செழித்தோங்கச் செய்வோமாக. எங்கள்.
அமைதிக்காக வேறு மன்றாட்டுகள்


அமைதிக்காக வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உலகை உருவாக்கியவரே, உமது திருவுளப்படி உலகம் அனைத்தும் முறையாக இயங்குகின்றது; எங்களுடைய வேண்டல்களைக் கனிவுடன் கேட்டு எங்களின் வாழ்நாளில் அமைதி நிலையை ஏற்படுத்தியருளும்: அதனால் நாங்கள் உமது இரக்கத்தைப் புகழ்ந்துரைப்பதில் இடையறாது அக்களிப்புடன் பேரின்பம் கொள்வோமாக. உம்மோடு.

அல்லது

அமைதியின் இறைவா, நீரே எங்கள் அமைதி; முரண்பட்ட உள்ளம் உம்மை அறிய முடியாது, கொடிய மனம் உம்மை அடைய முடியாது; மகனால் வருமனப்பட்டவர்கள் நல்லவற்றைத் தொடர்ந்து பற்றிக்கெ பிளவுண்டவர்கள் தீமையை வெறுத்து நலம் அடையவும் அருள்வீராக.. உம்மோடு.

'நல்லிணக்கைத்தை வளர்க்க' என்னும் திருப்பலியும் பயன்படுத்தலாம் (பக். 1099 - 1100).

32. போர் அல்லது புரட்சி காலத்தில்

வருகைப் பல்லவி

ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை .. அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் எப் நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் உங்களை அழைத்து வருவேன்.

அல்லது

' காண். திபா 17:5-7 சாவின் புலம்பல்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன; நரகத்தின் துயரங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்; தமது புனித கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்.
°ன் குரல் கூவி கொண்*மது .ெ

திருக்குழும் மன்றாட்டு

இரக்கமும் ஆற்றலும் உள்ள இறைவா, போர்களை ஒழித்துச் செருக்குற்றோரைத் தாழ்த்துகின்றீர்; நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எங்கள் கண்ணீரையும் விரைவில் அகற்றியருளும்; இவ்வாறு நாங்கள் அனைவரும் உண்மையாகவே உம் மக்கள் என அழைக்கப்படத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

அல்லது

இறைவா, அமைதியின் காரணரும் அதை விரும்புகின்றவருமானவரே, உம்மை அறிவதே முடிவில்லா வாழ்வு ஆகும், உமக்கு ஊழியம் புரிவதே ஆட்சி செய்வதாகும்; உம்மை மன்றாடுவோரை எதிரியின் தாக்குதல் அனைத்திலிருந்தும் காத்தருளும்: அதனால் உமது அருள்காவலில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் பகைவரின் படைக்கருவிகள் எதற்கும் அஞ்சாதிருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் அமைதியும் தமது இரத்தத்தால் எங்கள் பகைமை உணர்வுகளை ஒழித்தவருமான உம் திருமகனை நினைவுகூர்ந்தருளும்; அதனால் நீர் அன்பு செய்யும் மக்களுக்கு நேரிடும் தீமைகளைக் கண்ணுற்று வெப்பலிப்பொருள் வழியாக நீடித்த அமைதியை மீண்டும் அளிப்பீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 14:27 அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மக்களின் இதயத்துக்கு வலுவூட்டும் ஒரே அப்பத்தைச் சுவைத்து நிறைவு பெற்றுள்ளோம்; போரின் கொடுமைகளிலிருந்து எங்களை விடுவித்து, உமது அன்பு, நீதி சார்ந்த சட்டத்தை நாங்கள் உறுதியுடன் கடைப்பிடிக்கச் செய்வீராக. எங்கள்.

33. புலம்பெயர்ந்தோர் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக

வருகைப் பல்லவி

திபா 90:11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, கடவுள் தம் தூதர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

அல்லது

எரே 29:11-12,14 ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து மீண்டும்
உங்களை அழைத்து வருவேன்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எவரும் உம்மைச் சேராதவருமல்லர், உமது உதவிக்கு விலக்கானவருமல்லர்; புலம்பெயர்ந்தோர், நாடு கடத்தப்பட்டோர், ஒதுக்கப்பட்ட மனிதர், சிதறுண்ட சிறார்கள் ஆகியோரைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; இவ்வாறு தேவையில் உழல்வோருக்கும் அன்னியருக்கும் பரிவு காட்டிட உமது அருளை எங்களுக்குத் தந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சிதறிக் கிடக்கும் உம் பிள்ளைகளை ஒன்றாய்க் கூட்டிச் சேர்க்க உம் திருமகன் தம் உயிரைக் கையளிக்க வேண்டும் என விட அதனால் அமைதி தரும் இக்காணிக்கை உள்ளங்களின் ஒன்றிப்பையும் சகோதரர் சகோதரிகளின் அன்பையும் வளர்ப்பதாக, எங்கள்
ண்டும் என விரும்பினீரே;

திருவிருந்துப் பல்லவி

என் கடவுளே என் புகலிடம், என் அரண்: அவரில் நான் - வைப்பேன்.
காண். திபா 90:2 என் அரண்: அவரில் நான் நம்பிக்கை

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஒரே அப்பத்தாலும் ஒரே பானத்தாலும் எங்களுக்கு ஊட்டம் அளித்தீர்: அன்னியருக்கும் கைவிடப்பட்டோருக்கும் நேர்மையான இதயத்தோடு எங்கள் மனிதாபிமானத்தைக் காட்டச் செய்தருளும்: இவ்வாறு நாங்கள் அனைவரும் வாழ்வோரின் நாட்டில் இறுதியில் ஒன்றுசேரும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

34. பஞ்ச காலத்தில் அல்லது பட்டினியால் வாடுவோருக்காக

வருகைப் பல்லவி

ஆண்டவரே, உமது உடன்படிக்கையை நினைத்தருளும்: உம் திபா 73:20,19 ஏழையரின் ஆன்மாக்களை ஒருபோதும் மறவாதேயும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா,
நல்லவரும் படைப்பனைத்தையும் பராமரிக்கும் எல்லாம் வல்லவருமானவரே, உணவு இன்றி வாடும் எங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு நிறையன்பைச் செயல்கள் வழியாக நாங்கள் காட்டச் செய்தருளும்; அதனால் பஞ்சம் நீங்கி, தன்னுரிமையோடும் கலக்கமில்லா இதயத்தோடும் அவர்கள் உமக்குப் பணி புரியும் ஆற்றல் பெறுவார்களாக. உம்மோடு

பசியால் வாடுவோரே சொல்ல வேண்டிய வேறு மன்றாட்டுகள்
பல் வேண்டிய வேறு மன்றாட்டுகள் (பக். 1129 - 1130).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த மிகச் சிறந்தவற்றிலிருந்து நாங்கள் உமக்கு அளிக்கும் இக்காணிக்கையைக் கண்ணோக்கியருளும்; இது புனித வாழ்வின் நிறைவையும் அன்பில் ஒற்றுமையையும் குறிப்பதாக: அதனால் நாங்கள் பகிர்ந்து அளிக்கும் உளப்பாங்குடன் சகோதரர் சகோதரிகள் போன்று ஒருவர் மற்றவருக்கு உதவிட அது எங்களைத் தூண்டுவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 11:28 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங் களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, எல்லாம் வல்ல தந்தையே, தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; அதனால் வறுமையில் வாடும் எங்கள் சகோதரர் சகோதரிகள் வளம் பெற்று வாழ்வில் உயர்ந்திடச் செய்ய விண்ணிலிருந்து இறங்கிய உயிருள்ள உணவு எங்களுக்கு ஆற்றல் தருவதாக. எங்கள்.
வேறு மன்றாட்டுகள்: பசியால் வாடுவோரே சொல்ல வேண்டியவை

திருக்குழும் மன்றாட்டு

'எல்லா உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவா, சாவை அல்ல, வாழ்வையே நீர் தருகின்றீர்; உம் ஊழியர்களை வருத்தும் பஞ்சத்தைப் போக்கியருளும்; அதனால் எங்கள் இதயங்கள் மிக்க மகிழ்ச்சியாகவும் விரைவாகவும் உமக்கு ஊழியம் புரிய ஆற்றல் பெறுவனவாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வறுமையிலிருந்து நாங்கள் மனம் உவந்து இக்காணிக்கைகளை உமக்குக் கையளித்து 'உமது கனிவிரக்கத்தைப் பணிந்து வேண்டுகின்றோம்: 'இவ்வாறு உமது வள்ளன்மையின் மீட்பு அளிக்கும் முதற்கனிகளாக 'அவை எங்களுக்கு அமைவனவாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது வள்ளன்மையால் நீர் அளித்த விண்ணக உணவை உட்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்களுடையவும் எங்கள் சகோதரர், சகோதரிகளுடையவும் தேவைகளில் பயனுடன் உதவிடும் வகையில் உழைத்திட எதிர்நோக்கையும் உறுதியையும் தந்தருள்வீராக. எங்கள்.

35. நில நடுக்கக் காலத்தில்

திருக்குழும் மன்றாட்டு

உலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைபெறச் செய்துள்ள இறைவா, உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்ற எங்கள்மீது மனம் இரங்கி எங்களை அச்சத்தினின்று விடுவித்தருளும்: அதனால் நாங்கள் நில நடுக்கத்தின் இடர்கள் அனைத்திலிருந்தும் முழுவதும் விடுவிக்கப்பெற்று உமது கனிவை இடைவிடாது உணர்வோமாக; உமது பாதுகாவலால் காக்கப்பெற்று நன்றியுணர்வுடன் உமக்கு ஊழியம் புரிவோமாக. உம்மோடு.
36. மழைக்காக மன்றாட

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நாங்கள் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் உம்மிலேதான்; எங்களுக்குப் போது மான மழை பொழியச் செய்தருளும்: அதனால் நாங்கள் இவ்வுலக உதவிகளைப் போது மான அளவு பெற்று நிலையானவற்றை மிகுந்த நம்பிக்கையுடன் நாடுவோமாக. உம்மோடு.

==============12^ 9270 ^-----------

37. நல்ல காலநிலைக்காக மன்றாட

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்களைத் தண்டித்து நலமாக்கி, மன்னித்துக் காக்கின்ற உம்மைக் கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்ப்பீராக; அதனால் நாங்கள் விரும்பும் நல்ல காலநிலையைப் பெற்றுப் பேரின்பம் கொள்ளவும் நீர் பரிவிரக்கத்துடன் அருளும் கொடைகளை உமது பெயரின் மாட்சிக்காகவும் எங்களுடைய மீட்புக்காகவும் எப்பொழுதும் பயன்படுத்தவும் அருள்வீராக. உம்மோடு.

38. புயல் அடங்க

திருக்குழும் மன்றாட்டு உமது திருவுளத்துக்கு அனைத்தும் அடிபணியச் செய்யும் இறைவா, 'உம்மைத் தாழ்மையுடன் நாங்கள் வேண்டுகின்றோம்: இவ்வாறு அச்சுறுத்தும் புயல் ஒய்ந்து இயற்கையின் சீற்றம் அடங்குவதால், பேராற்றல் வாய்ந்த இப்பேரிடரே நாங்கள் உம்மைப் புகழக் காரணமாய் அமைவதாக. உம்மோடு.

39. பாவ மன்னிப்புக்காக

வருகைப் பல்லவி

காண். சாஞா 11:23,24,26ஆண்டவரே, மனிதர் அனைவர்மீதும் நீர் இரக்கம் காட்டுகின் படைத்த எதையும் வெறுப்பதில்லை; மக்கள் மனம் வருந்த அவர்களுடைய பாவங்களைப் பாராமல் இருக்கின்றீர்; நீர் அவர்.
மன்னிக்கின்றீர்; ஏனெனில் நீரே எங்கள் இறைவனாகிய ஆண்டவர்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே,
உம்மை இறைஞ்சி மன்றாடுவோரின் தாழ்மையான மன்றாட்டுகளுக்குக் கனிவுடன் செவிசாய்க்கவும் உம்மிடம் பாவ அறிக்கை செய்வோரின் பாவங்களை மன்னிக்கவும் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு எங்களுக்கு மன்னிப்பும் அமைதியும் கனிவிரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, உம் மக்கள் மீது மனம் இரங்கி, பாவங்கள் அனைத்திலிருந்தும் அவர்களை விடுவித்தருளும்; இவ்வாறு எங்கள் குற்றங்களால் விளையும் தீமைகளை உமது மன்னிப்பால் நீக்கியருள்வீராக. உம்மோடு. வேறு மன்றாட்டுகள் (பக். 1133).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்வு, புகழ்ச்சி ஆகியவற்றின் பலிப்பொருள்களை உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நீர் எங்கள் குற்றங்களைக் கனிவுடன் மன்னித்து, தடுமாறும் இதயங்களை வழிநடத்துவீராக. எங்கள்.
ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை IV (பக். 539).

திருவிருந்துப் பல்லவி

2 மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதர்களிடையே மகிழ்ச்சி உண்டாகும்.
லூக் 15:10

இரக்கமுள்ள இறைவா, இக்கொடையின் வழியாக எங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுகின்றோம்; அதனால் உமது அருளால் பாவங்களை இனி விலக்கி வாழவும் நேர்மையான இதயத்தோடு உமக்கு ஊழியம் புரியவும் வரம் அருள்வீராக. எங்கள்.


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் சாந்தம் மிக்கவருமான இறைவா, தாகமுற்ற உம் மக்களுக்கு உயிருள்ள தண்ணீரின் ஊற்றைப் பாறையிலிருந்து புறப்படச் செய்தீரே; எங்களது இதயக் கடினத்திலிருந்து மனத்துயர்க் கண்ணீரை வரவழைத்தருளும்: அதனால் எங்கள் பாவங்களுக்காக நாங்கள் மனம் வருந்தி அழவும் உமது இரக்கத்தின் உதவியால் அவற்றிற்கு மன்னிப்புப் பெறவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்காக மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதருக்கு மன்னிப்பு அளிக்கும் ஊற்று புறப்படும் இப்பலியின் வழியாக எங்களுடைய குற்றங்களுக்காக நாங்கள் கண்ணீர் சிந்தத் தூய ஆவியாரின் அருளைப் பொழிவீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருளடையாளமாகிய திருவிருந்தை வணக்கத்துடன் உட்கொண்டுள்ளோம்; ஏக்கத்துடன் கூடிய எங்கள் கண்ணீர் எங்கள் பாவ மாசுகளைக் கழுவி, உமது இரக்கத்தால் நாங்கள் விரும்பும் மன்னிப்பைப் பெற்றுத் தருவதாக. எங்கள்.

==============15^ 9273 ^-----------

40. கற்புநெறியில் வளர

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களது இதயங்களைத் தூய ஆவியாரின் விண்ணக நெருப்பினால் கனிவுடன் சுட்டெரித்தருளும்; இவ்வாறு மாசற்ற உடலுடன் நாங்கள் உமக்கு ஊழியம் புரியவும் தூய இதயத்துடன் உமக்கு உகந்தவர்களாக இருக்கவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருளால் எங்களை மீட்கத் திருவுளம் கொண்ட உமக்கு எங்களது காணிக்கை ஏற்புடையதாய் இருப்பதாக; இவ்வாறு உமது இரக்கம் எங்களுக்குத் துணை நிற்பதால் முழு விருப்பத்துடனும் தூய மனதுடனும் உமக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுக்க நாங்கள் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட அருளடையாளத் திருவிருந்து எங்களை ஆட்கொண்டு ஆற்றல் மிக்க அடக்கம் உடைமையாலும் புத்துயிர் அளிக்கும் கற்பினாலும் எங்கள் இதயமும் உடலும் செழித்து வளரச் செய்வதாக; இவ்வாறு நாங்கள் உட்கொண்டதைத் தூய மனதுடன் பற்றிக்கொள்வோமாக. எங்கள்.

==============16^ 9274 ^-----------

41. பிறரன்பில் வளர

வருகைப் பல்லவி

எசே 36:26-28 உங் கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்து விட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங் களுக்குள் புகுத்துவேன். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள், நான் உங் கள் கடவுளாய் இருப்பேன், என் சிறார்
ஆண்டவர். திருக்குழும் மன்றாட்டு ஆண்டவரே, உமது அன்பின் ஆவியாரால் எங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உமது மாண்புக்கு உரியவற்றையும் உகந்தவற்றையுமே என்றும் சிந்தித்து, எங்கள் சகோதரர் சகோதரிகளில் உம்மை உண்மையாகவே அன்பு செய்து வாழ ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இக்காணிக்கைகளைக் கனிவுடன் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: இந்த ஆன்மீகப் பலியின் காணிக்கைகளை நீர் ஏற்பதால் உமது அன்பை அனைவருக்கும் வழங்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

1 கொரி 13:13
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய்
உள்ளன; இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது ஒரே விண்ணக விருந்தை உண்டு நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் தூய ஆவியாரின் அருளைப் பொழிந்து, நிறைவான பிறரன்பின் பேருவகையினால் எங்களில் புது வாழ்வு மிகுதியாக மலரச் செய்வீராக. எங்கள்.

==============17^ 9275 ^-----------

42. உறவினர் மற்றும் நண்பர்களுக்காக

வருகைப் பல்லவி

காண். திபா 121:6,8 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டி : கொள்ளுங்கள். உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னுள்
சமாதானம் நிலவுவதாக என உன்னை வாழ்த்துகின்றேன்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, தூய ஆவியாரின் அருளால் உம்முடைய நம்பிக்கையாளரின் இதயங்களில் அன்பின் கொடைகளைப் பொழிந்துள்ளீர்; உம் அடியார்களுக்காக உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அவர்களுக்கு, உள்ள, உடல் நலம் அளித்து, அதனால் அவர்கள் முழு வலிமையோடு உம்மை அன்பு செய்யவும் உமக்கு உகந்தவற்றை முழு அன்புள்ளத்தோடு நிறைவேற்றவும் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புமிக்க உம் திருமுன் இப்புகழ்ச்சிப் பலியை உம் அடியார்களுக்காக ஒப்புக்கொடுக்கின்றோம்; அவர்கள் மீது மனம் இரங்கியருளும்: இவ்வாறு அவர்கள் உமது மேலான அருளாசியைப் பெற்று நிலையான பேற்றின் மாட்சியையும் அடைவார்களாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 12:50
விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களைப் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: 'நாங்கள் அன்பு செய்ய வேண்டிய இவ்வடியார்களுக்குப் பாவ மன்னிப்பையும் வாழ்வின் ஆறுதலையும் ' முடிவில்லா அருள்காவலையும் அளித்தருளும். 'இவ்வாறு நாங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு 'உமக்கு ஊழியம் செய்து, உம் திருமுன் ஒன்றிணைந்து வந்து நிற்கும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

==============18^ 9276 ^-----------

43. நம்மைத் துன்புறுத்துவோருக்காக

வருகைப் பல்லவி

லூக் 6:27-28 உங்கள் பகைவரிடம் அன்புகூருங்கள், உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்; உங் களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் ; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக வேண்டுங்கள், என் கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நீர் கொடுத்த கட்டளை வழியாக எங்களைத் துன்புறுத்துவோருக்கு உண்மையான அன்பைக் காட்ட வேண்டும் எனப் பணித்தீரே; இவ்வாறு இந்தப் புதிய கட்டளையை நாங்கள் கடைப்பிடித்து தீமைக்குப் பதிலாக நன்மை செய்யவும் ஒருவர் மற்றவருடைய சுமைகளை ஏற்றுக்கொள்ளவும் முனைவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அனைவரோடும் அமைதியுடன் வாழ விரும்பும் நாங்கள் எங்களுக்கு எதிராய் இருப்போருக்காக இப்பலியை ஒப்புக்கொடுக்கின்றோம்; உம் திருமகனின் இறப்பினை நினைவுகூரும் நாங்கள் பகைவர்களாய் இருப்பினும் அவர் வழியாக உம்மோடு ஒப்புரவாகச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 5:9-10 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, எங்களுக்கு அமைதி தரும் இம்மறைநிகழ்வு வழியாக நாங்கள் அனைவரும் நல்லுறவு கொண்டு வாழ அருள்புரியும்; எங்கள் பகைவர்களையும் உமக்கு உகந்தவர்களாக்கி எங்களோடு நட்புறவு கொள்ளச் செய்வீராக. எங்கள்.

==============19^ 9277 ^-----------

44. அடிமைநிலையில் இருப்போருக்காக

வருகைப் பல்லவி

திபா 87:2-3 - ஆண்டவரே, என் மீட்பின் கடவுளே, பகலிலும் இரவிலும் முன்னிலையில் கூக்குரலிடுகின்றேன். என் மன்றாட்டு உம் , வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்
|

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, பாவத்தின் அடிமைத்தளைகளிலிருந்து மனித இனத்தை விடுவிக்க, உம் திருமகன் அடிமையின் வடிவை ஏற்கத் திருவுளமானீரே; அதனால் உம் பிள்ளைகளாகிய மனிதர் அனைவருக்கும் நீர் அளிக்க விரும்பும் உரிமை நிலையினை விலங்கிடப்பட்ட உம் அடியார்களும் பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மனித மீட்பின் காலத்தில் நீர் அளிக்கும் இக்காணிக்கையை உமக்கு நேர்ந்தளிக்கின்றோம்; இதன் வழியாக உம் அடியார்கள் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலையடையவும் உள்ளார்ந்த உரிமை வாழ்வை நிலையாகப் பெற்று, என்றும் மகிழ்ந்திருக்கவும் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 68:31,34
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவரைப் புகழ்ந்து, அவரை மாட்சிப்படுத்துவேன்; ஏனெனில், ஆண்டவர் ஏழையருக்குச் செவிசாய்த்தார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணித்ததில்லை .

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் உரிமை வாழ்வுக்காகத் தரப்பட்ட விலையை நினைவுகூர்ந்து, எங்கள் சகோதரர் சகோதரிகளுக்காக உமது கனிவை இறைஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் அவர்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை அடைந்து -மது நீதியின் பணியாளர்களாக விளங்கச் செய்வீராக. எங்கள்.

==============20^ 9278 ^-----------

45. சிறைப்பட்டோருக்காக

திருக்குழும் மன்றாட்டு

ம் வல்லறைந்திருப்,கொள்பவம்
வாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, -ளங்களில் மறைந்திருப்பவற்றை அறிபவர் நீர் ஒருவரே; நேர்மையாளர்களை ஏற்றுக்கொள்பவரும் நேர்மையற்றோரை நல்லவராக்க வல்லவரும் நீரே; கனால் சிறையில் அடைபட்டிருக்கும் உம் அடியார்களுக்காக நாங்கள் எழுப்பும் வேண்டலைக் கேட்டருளும்: அவர்கள் பொறுமையுடனும் எதிர்நோக்குடனும் தங்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு தடை ஏதும் இன்றித் தங்கள் இல்லம் திரும்புவார்களாக. உம்மோடு.

துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவருக்காகப் பயன்படுத்தப்பட்ட மன்றாட்டுகள், நற்செய்தியை முன்னிட்டுச் சிறைப்பட்டோருக்காகப் பயன்படுத்தப்படலாம் (பக். 1111 - 1112).

46. நோயுற்றோருக்காக

வருகைப் பல்லவி

திபா 6:3-4 ஆண்டவரே, எனக்கு இரங்கும், ஏனெனில் நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குண மாக்கியருளும்; ஏனெனில் என் எலும்புகள் வலுவிழந்து போயின. என் உயிர் ஊசலாடுகின்றது.

அல்லது

காண். எசா 53:4 மெய்யாகவே ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகன் எங்கள் துன்பங்களைத் தாங்கி, மனித வலுக்குறைவில் பொறுமையின் ஆற்றலைக் காட்ட வேண்டும் எனத் திருவுளமானீரே; நோயுற்றிருக்கும் எங்கள் சகோதரர் சகோதரிகளுக்காக நாங்கள் செய்யும் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்: அதனால் துன்ப துயரங்களாலும் மனக் கலக்கங்களினாலும் பிற நோய்களாலும் இன்னலுறுவோர் தாங்கள் பேறுபெற்றோரின் கூட்டத்தில் சேர்ந்துள்ளதாகவும் உலக மீட்புக்காகத் துன்புற்ற கிறிஸ்துவோடு இணைந்திருப்பதாகவும் கண்டுணரச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நம்பிக்கையாளருக்கு நிலையான நலம் அளிப்பவர் நீரே: நோயுற்றிருக்கும் உம் அடியார்களுக்காக நாங்கள் புரியும் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்: அதனால் அவர்கள் மீண்டும் நலம் அடைந்து உமது திரு அவையில் நன்றி உணர்வுடன் பணி புரிவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, உமது திருவுளப்படியே எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து செல்கின்றன நோயுற்றிருக்கும் சகோதரர் சகோதரிகளுக்காக உமது இரக்கத்தை மன்றாடி, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் வேண்டல்களையும் பலிப்பொருள்களையும் கனிவாய் ஏற்றருளும்: இவ்வாறு அவர்களுடைய ஆபத்து பற்றிக் கவலையுறும் நாங்கள் அவர்கள் நலம் அடைவதைக் கண்டு மகிழச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

கொலோ 1:24 கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, நோயுற்ற மனிதருக்கு ஒரே ஆதரவானவரே, நோயுற்றிருக்கும் உம் அடியார்களுக்கு உமது உதவியின் ஆற்றலை வெளிப்படுத்தியருளும்; இவ்வாறு உமது இரக்கமிக்க உதவியால் அவர்கள் நலம் அடைந்து உமது புனிதத் திரு அவையில் மீண்டும் இடம் பெறும் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==============22^ 9280 ^-----------

| 47. இறக்குந்தறுவாயில் இருப்போருக்காக

வருகைப் பல்லவி

உரோ 14:7-8 நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை, தமக்கென்று இறப்பது மில்லை; வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்: ஆகவே வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.

அல்லது

'காண். எசா 53:4 மெய்யாகவே ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம
துன்பங்களைச் சுமந்து கொண்டார்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, சாவின் வழியாகவே மனித இனத்துக்கு நிலைவாழ்வின் கதவை இரக்கத்துடன் திறந்து விடுகின்றீர்; மிகுந்த வேதனையால் துன்புறும் உம் அடியாரைக் கனிவுடன் கண்ணோக்கும்: அதனால் இவர் உம் திருமகனுடைய பாடுகளுடன் இணைக்கப்பெற்று, அவருடைய இரத்தத்தால் முத்திரையிடப்பட்டு, தூயவராக உம் திருமுன் வந்து சேர வலிமை பெறுவாராக. உம்மோடு.

அல்லது இன்று இறப்போருக்காக:

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, படைப்பு அனைத்துக்கும் உமது அன்பினை எங்கும் காட்டுகின்றீர்; இன்று இறப்போருக்காக நாங்கள் புரியும் வேண்டலைக் கனிவுடன் கேட்டருளும்: உம் திருமகனின் உயர் மதிப்புள்ள இரத்தத்தால் மீட்பு அடைந்தோர் பாவக் கறையின்றி இவ்வுலகை விட்டுப் பிரிந்து, இரக்கம் நிறைந்த அரவணைப்பில் என்றும் இளைப்பாறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, வாழ்வின் இறுதி நேரத்தில் இருக்கும் உம் அடியாருக்காக நாங்கள் நம்பிக்கையுடன் அளிக்கும் இப்பலிப்பொருளை ஏற்றுக்கொண்டு, குற்றங்கள் அனைத்தினின்றும் அவரை விடுவித்தருளும்; இவ்வாறு உமது திருவுளப்படி இவ்வாழ்வில் மனக் கலக்கங்களினால் புடமிடப்படும் அவர் இறந்தபின் மறுவுலகில் முடிவில்லா அமைதி பெறுவாராக. எங்கள்.

கொலோ 1:24

திருவிருந்துப் பல்லவி

கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.
யோவா 6:54

அல்லது

எனது சதையை உண்டு , எனது இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், என்கிறார் ஆண்டவர். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
EITE 1

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் உம் அடியாருக்கு அருள் ஈந்து அவரைக் கனிவுடன் தாங்குவீராக; அதனால் அவர் தமது இறப்பு நேரத்தில் தீயோன் தம்மை வெற்றி கொள்வதைக் காணாதவாறு உம் வானதூதரால் வாழ்வுக்குக் கொண்டு செல்லப்படும் தகுதி பெறுவாராக. எங்கள்.
48. நல்ல மரணம் அடைய

வருகைப் பல்லவி

திபா 22:4
சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங் கிற்கும் அஞ்சிடேன். ஆண்டவரே, என் கடவுளே, உம் கோலும் நெடுங்கழியும் என்னைத்
தேற்றும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, உம்முடைய உருவில் எங்களைப் படைத்து எங்களுக்காக உம் திருமகன் | சாவுக்குத் தம்மைக் கையளிக்கத் திருவுளமானீரே; அதனால் பாவக் கறையின்றி இவ்வுலகை விட்டு விடைபெறவும் உமது இரக்கத்தின் அரவணைப்பில் அக்களிப்புடன் அமைதி காணவும் தகுதி பெறும் வகையில் எப்பொழுதும் நாங்கள் இறைவேண்டலில் விழித்திருக்கவும் அருள்வீராக.
உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே,
ம் ஒரே திருமகனின் சாவினால் எங்கள் சாவை அழித்தீர்; வருடைய அருளடையாளத்தின் ஆற்றலால் தகள் சாகும்வரை உமது விருப்பத்துக்குப் பணிந்து,
மதியோடும் நம்பிக்கையோடும் இவ்வுலகை விட்டுப் பிரியவும், . மது அருள்கொடையால் அவருடைய உயிர்ப்பில் பங்குபெறவும் தகுதி பெற அருள்வீராக. எங்கள்.

பொதுத் தொடக்கவுரை V (பக். 560)

அல்லது VI (பக். 561).
உரோ 14:7-8

திருவிருந்துப் பல்லவி

நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை, தமக்கென்று இறப்பது மில்லை; வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்: ஆகவே வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்.
லூக் 21:36

அல்லது

மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்போதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இந்த அருளடையாளங்களால் சாகாமையின் பிணையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் எங்களுடைய நன் மரணத்துக்காக பரிவிரக்கமுள்ள உமது உதவியைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் நாங்கள் பகைவனின் சூழ்ச்சிகளை முறியடித்து உமது நிலையான மாட்சியின் அரவணைப்பில் புத்துயிர் பெறுவோமாக. எங்கள்.

==============25^ 9283 ^-----------

49. எவ்வகைத் தேவைகளுக்காகவும்

வருகைப் பல்லவி

மக்களின் மீட்பர் நாமே, என்கிறார் ஆண்டவர். எத்தகைய
கண்களில் என்னைக் கூவி அழைத்தாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்ப்பேன்; நான் என்றென்றும் அவர்களுடைய ஆண்டவராக இருப்பேன்.

திருக்குழும் மன்றாட்டு

2018
இறைவா, இன்னல் இடையூறுகளில் எங்கள் புகலிடமும் நோய் நொடிகளில் எங்கள் ஆற்றலும் துன்ப துயரங்களில் எங்கள் ஆறுதலும் நீரே; இவ்வாறு உம் மக்கள் மீது மனம் இரங்கியருளும்: இன்னல்களால் நாங்கள் முறையே அல்லலுற்றாலும் உமது பேரிரக்கத்தினால் இறுதியில் ஆறுதல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது குடும்பத்தின் காணிக்கைகளை இரக்கத்தோடு ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது பாதுகாவலின் உதவியால் தான் பெற்றுக்கொண்டதை ஒருபோதும் இழந்துவிடாமல், அது நிலையான பரிசை அடைவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 11:28
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்: நான் உங்களுக்கு இளைப்பாறு தல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்டதால் எங்கள் மனதுக்கும் உடலுக்குமான உதவியைக் கண்டுணர் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனதிலும் உடலிலும் மீட்பு அடைந்து 'வண்ணக உதவியின் முழுமையால் மாட்சி அடைவோமாக. எங்கள்.

==============26^ 9284 ^-----------

வருகைப் பல்லவி

திபா 43:26 ஆண்டவரே, எழுந்து வாரும். எங்களுக்குத் துணை புரியும்; உமது
இரக்கத்தை முன்னிட்டு எங்களை மீட்டருளும்.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுடைய துயரங்களைக் கனிவாய்க் கண்ணோக்கியருளும்: உம் பிள்ளைகளின் சுமைகளைக் குறைத்து, நம்பிக்கையை உறுதிப்படுத்தும்; அதனால் தந்தைக்கு உரிய உமது பராமரிப்பில் நாங்கள் என்றும் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்போமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பற்றுறுதியுடன் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; நாங்கள் படும் துன்ப துயரத்தின் கசப்பை இனிய காணிக்கையாக மாற்றியருள்வீராக. எங்கள்.
யோவா 16:23-24

திருவிருந்துப் பல்லவி

நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம், அவர் உங் களுக்குத் தருவார்; கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள் ; அதனால் உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும், என் கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக விருந்தால் ஊட்டமும் உறுதியும் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் வரவிருக்கும் இன்னல்களை இப்பலியின் ஆற்றலால் நாங்கள் துணிவுடன் எதிர்கொள்ளவும் நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் எங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு ஆர்வமுடன் மன உறுதி அளிக்கவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

==============27^ 9285 ^-----------

வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, பல்வேறு இன்னல்களுக்கு இலக்காகியுள்ள நாங்கள் எங்களுடைய மனித வலுவின்மையின் காரணமாக எங்களால் வாழ இயலாது என்பதை அறிவீரே; எங்கள் மனதுக்கும் உடலுக்கும் நலம் அளித்தருளும்: அதனால் எங்கள் பாவங்களின் பயனாக நாங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தையும் உமது அருள்துணையால் வெற்றிகொள்வோமாக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, சாத்தானின் தாக்குதலிலிருந்து உம் மக்களுக்கு விடுதலை அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: ஒரே கடவுளாகிய உம்மை அவர்கள் தூய மனதோடு பின்பற்ற அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளையும் காணிக்கைகளையும் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு எங்கள் பாவங்களின் பயனாகத் துன்புறும் நாங்கள் உமது அருள் இரக்கத்தால் விடுதலை பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் துயரங்களை இரக்கத்துடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: நீதியின்படி எங்கள் பாவங்களுக்கு உரித்தான உமது சினத்தை உம் திருமகனுடைய பாடுகளின் பயனாகக் கனிவுடன் அகற்றுவீராக. எங்கள்.

==============28^ 9286 ^-----------

50. கடவுளுக்கு நன்றி செலுத்த

வருகைப் பல்லவி

எபே 5:19-20 - உளமார இசைபாடி ஆண்டவரைப் போற்றுங்கள்; நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
-

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இன்னலுறும் உம் அடியார்களுக்கு எப்போதும் இரக்கத்துடன் செவிசாய்த்தருளும்; இவ்வாறு உமது கனிவிரக்கத்துக்காக நன்றி கூறி உம்மைப் பணிவுடன் வேண்டும் நாங்கள் தீமை அனைத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் உமக்கு ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடு . வேறு மன்றாட்டுகள் (பக். 1148).

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சாவிலிருந்தும் தீமை அனைத்திலிருந்தும் கனிவுடன் எங்களை விடுவிக்க உம் திருமகனை எங்களுக்கு அளித்தீரே; இவ்வாறு இடர்களிலிருந்து விடுபட்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி ஒப்புக்கொடுக்கும் இப்பலியைக் கனிவாய் ஏற்றருள்வீராக. எங்கள். பொதுத் தொடக்கவுரை IV (பக். 559).
திபா 137:1

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரே! என் முழு இதயத்துடன் உம்மைப் போற்றுவேன். ஏனெனில் என் மன்றாட்டைக் கேட்டீர்.
திபா 115:12-13

அல்லது

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக்
கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைக் கூப்பிடுவேன்.

==============29^ 9287 ^-----------

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உயிர் தரும் இத்திரு உணவால் உம் அடியார்களைப் பாவத்தின் தளையிலிருந்து விடுவிக்கவும் உமது பரிவிரக்கத்தால் அவர்களின் வலிமையைப் புதுப்பிக்கவும் திருவுளம் கொண்டீரே; நாங்கள் எத்தடையுமின்றி உமது மாட்சியின் எதிர்நோக்கில் முன்னேறிச் செல்ல எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

'வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, கொடைகள் அனைத்துக்கும் தந்தையே, நாங்கள் கொண்டிருக்கின்ற அனைத்தும், நாங்கள் இருப்பதும் உம்மிடமிருந்தே வருகின்றன என ஏற்றுக்கொள்கின்றோம்; உம்முடைய அளவற்ற பரிவிரக்கத்தின் கொடைகளை நாங்கள் உய்த்துணரவும் எங்களின் நேர்மையான இதயத்தோடும் முழு வலிமையோடும் உம்மை அன்பு செய்யவும் எங்களுக்குக் கற்றுத்தருவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளுக்காக இப்புகழ்ச்சிப் பலியை உமக்குக் காணிக்கையாகப் படைத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் எங்களுடைய தகுதியின்மையைப் பாராமல், நீர் எங்களுக்கு அளித்தவற்றையே உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் மீண்டும் கையளிக்கச் செய்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, நன்றி உள்ளத்தோடு நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்த காணிக்கையை உம் திருமகனின் நலம் தரும் அருளடையாளமாக மாற்றி எங்களின் அருள்வாழ்வின் உணவாகத் தந்திருக்கின்றீர்; ஆற்றலும் மகிழ்ச்சியும் அளிக்கும் இக்கொடைகளால் உறுதிப்படுத்தப்பட்டு அதனால் நாங்கள் உமக்குப் பற்றன்புடன் ஊழியம் புரிந்து மேன்மேலும் உம் கொடைகளைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

=============↑ பக்கம் 1148

image