image

 

பொது

பெங்கல் திருநாள்

நிலத்தின் விளைச்சலைச் சேகரித்த பிறகு

வருகைப் பல்லவி

திபா 66:7நானிலம் தன் பலனை ஈந்தது: கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நல்ல தந்தையே, உமது பராமரிப்பினால் மனிதரிடம் நிலத்தை ஒப்படைத்தீரே; நாங்கள் நிலத்திலிருந்து பெற்ற விளைச்சல் வழியாக எங்கள் வாழ்வைப் பேணிக் காக்கச் செய்தருளும். உம்முடைய புகழ்ச்சிக்காகவும் அனைவருடைய நலனுக்காகவும் உமது உதவியால் நாங்கள் என்றும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, மனிதருக்கு நன்மை பயக்கும் நிலத்தின் விளைச்சலுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; இவ்வுலகில் உமது மேலான பராமரிப்பினால் நீர் எங்களுக்குப் போது மான விளைச்சலை அளித்தது போல, எங்கள் உள்ளமாகிய நிலத்தில் நீதி தளிர்விட்டு, அன்பின் நற்கனிகளை விளையச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, வளமான நிலத்தில் விளைந்த இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; நிலத்தின் விளைச்சலை இவ்வுலகப் பயன்பாட்டுக்காக வழங்கியது போல் எங்கள் உள்ளங்கள் விண்ணக நலன்களால் வளம் பெறச் செய்வீராக. எங்கள். ஆண்டின் பொதுக் கால ஞாயிறின் தொடக்கவுரை V (பக். 540).

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 103:13-15
69-வ ரே, உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடை கின்றது; அதனால் பூவுலகினின்று உணவு அளிக்கின இரசம் மனித இதயத்தை மகிழ்விக்கின்றது.
கனன்று உணவு அளிக்கின்றீர்; திராட்சை

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலத்தின் கனிகளில் இருந்து சேகரித்தவற்றை உம் திருமுன் கொண்டு வந்து நலம் தரும் இம்மறைநிகழ்வில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; அதனால் எங்களில் செயல்படும் இம்மறைபொருளின் ஆற்றலால் இன்னும் மிகுதியாக நலன்களைப் பெற்றுக்கொள்ளும் தகுதி பெற அருள்புரிவீராக. எங்கள்.

 

21. குடியரசு நாள் (ஜனவரி 26)

வருகைப் பல்லவி

காண். திவெ 21:3_ - கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பா கடவுள்தாமே அவர்களோடு எப்போதும் இருப்பார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது வியத்தகு திட்டத்துக்கு ஏற்ப எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் நீர் எங்கள் நாட்டுக்காக உம்மிடம் கொண்டு வரும் எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் ஏற்றருளும்; இவ்வாறு எம் நாட்டுத் தலைவர்களின் ஞானத்தாலும் குடிமக்களின் ஒருமைப்பாட்டாலும் நல்லிணக்கமும் நீதியும் உறுதிப்படுத்தப்பட்டு மனித வாழ்வு அனைத்தின் மேன்மை காக்கப்படுவதாக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தங்கள் அர்ப்பணத்தின் அடையாளமாக உம் மக்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றருளும்; எங்களது இறைப்பற்றுள்ள காணிக்கை உம் திருமகனின் நிலையான பலியோடு ஏற்றுக்கொள்ளப்பட அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 13:13-14
'நீங்கள் என்னைப் போதகர்' என்றும் 'ஆண்டவர் என அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறை
படும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் " °றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டுள்ளோம்; பணியில் அவர் காட்டிய எடுத்துக்காட்டை நாங்கள் பின்பற்றவும் விண்ணரசில் நுழைந்திடத் தகுதி பெறவும் அருள்வீராக. எங்கள்.

சிறப்பு ஆசி

ஒரே குடும்பமாக இணைக்கப்பெற்ற நாடாகத் திகழ நம்மை அழைத்த தந்தையாகிய கடவுள், நீங்கள் நம்பிக்கையில் உறுதியும், எதிர்நோக்கில் மகிழ்ச்சியும் அன்புச் செயலில் ஈடுபாடும் கொண்டிருக்கச் செய்வாராக.

பதில்: ஆமென்.

நம் வாழ்வில் பங்கேற்க வந்த இறைமகன், உங்கள் உதட்டாலும், உள்ளத்தாலும், வாழ்வாலும் நீங்கள் அவரைப் போற்றும் பொருட்டு விண்ணக அருளை நிறைவாகப் பொழிவாராக.

பதில்: ஆமென்.

தந்தை, மகன் ஆகியோரின் அன்பின் பிணைப்பான தூய ஆவியார் தமது அன்பில் எல்லாக் குடிமக்களையும் ஒன்றுபடுத்தி தங்கள் ஏக்கங்களின் உண்மையான நிறைவை அவர்களுக்கு வழங்குவாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், X தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக. பதில் : ஆமென்.

வாசகங்கள்
வாசகம் 1 1 திமொ 2:1-6
பதிலுரைத்திருப்பாடல் பதிலுரை (91:2ஆ)
திபா 91 (90):1-6. 9-10 நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்.
அல்லேலூயா, அல்லேலூயா!
பேசி, தலையாகிய அன்பின் அடிப்படையில் உண்மை கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அல்லேலூயா.
அல்லேலூயா (எபே 4:15) :
நற்செய்தி யோவா 8:31-36

==============27^ 9255 ^-----------

22. தாய் நாட்டுக்காக அல்லது மாநிலத்துக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வியத்தகு திட்டத்தால் அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் எங்கள் தாய் நாட்டுக்காக நாங்கள் உம்மிடம் புரியும் வேண்டல் கனிவுடன் ஏற்றருளும்; இவ்வாறு ஆள்வோரின் ஞானத்தாலும் குடிமக்களின் நேர்மையாலம் ஒற்றுமையும் நீதியும் உறுதிபெற்று முடிவில்லா அமைதியோடு வளமையும் நிலவச் செய்வீராக, உம்மோ

23. பொதுப் பணியில் ஈடுபட்டிருப்போருக்காக

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, மனிதரின் இதயங்களும் அவர்களின் உரிமைகளும் 'உம் கைகளில் உள்ளன; உலகெங்கும் மக்களின் வளமான வாழ்வும் அமைதியின் உறுதிப்பாடும் சமய உரிமையும் உமது கொடையால் நிலைபெறுமாறு எங்களை ஆள்வோரைக் கனிவுடன் கண்ணோக்குவீராக. உம்மோடு.

24. நாடுகளை ஆள்வோரின் குழுமத்துக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, அனைத்தையும் நீர் வியத்தகு முறையில் அமைத்துச் சொல்லற்கரிய வகையில் ஆண்டு வருகின்றீர்; நாடுகளை ஆள்வோரின் குழுமத்தைக் கனிவாய்க் கண்ணோக்குவீராக; இவ்வாறு அவர்கள் பொது நலனையும் அமைதியையும் கருதி அனைத்தையும் அமைக்கவும் உமது விருப்பத்துக்கு மாறாக என்றுமே செயல்படாதிருக்கவும் உமது ஞானத்தின் ஆவியை அவர்களுக்கு அளிப்பீராக. உம்மோடு .

25. நாட்டின் தலைமை ஆட்சியாளருக்காக அல்லது அரசருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா,
மனித அதிகாரங்கள் உமக்கு அடி பணிகின்றன; - ம் அடியார் (எங்கள் அரசர் / தலைவர்) (பெயர்) ... 2.மலான தம் பொறுப்பினை நன்முறையில் நிறைவேற்ற அருள்புரியும்; அவர் உமக்கு என்றும் அஞ்சி, உமது திருவுளத்துக்கு உகந்தவாறு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்லொழுங்கினால் விளையும் அமைதியை எப்பொழுதும் ஏற்படுத்திப் பாதுகாப்பாராக. உம்மோடு.


26. நாட்டின் ஆண்டுத் தொடக்கம்

கடவுளின் தாய் புனித மரியாவின் பெருவிழாவான ஜனவரி முதல் நாளில் இத்திருப்பலியை நிறைவேற்றலாகாது.

வருகைப் பல்லவி

காண். திபா 64:12ஆண்டு முழுவதும் முடி சூடலுக்கு உமது கனிவிரக்கத்தால் ஆசி வழங்கியுள்ளீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.

அல்லது

மத் 28:20 இதோ, உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

முதலும் முடிவும் அற்ற இறைவா, அனைத்தையும் படைத்தவர் நீரே; இவ்வாண்டின் தொடக்கத்தை உமக்கு அர்ப்பணிக்கின்றோம்; இவ்வாறு இப்புத்தாண்டு முழுவதும் எங்களுக்குத் தேவையானவற்றை மிகுதியாகப் பெற்று புனிதமிக்க செயல்களால் நாங்கள் ஒளிர்ந்து, என்றும் வாழ்ந்திட எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பனிப்பொருள்கள் உமக்கு ஏற்றவையாய் அமைவனவாக; இவ்வாறு இந்த ஆண்டின் தொடக்கத்தை அக்களிப்புடன் கொண்டாடும் நாங்கள் அனைவரும், தொடர்ந்து பின்வரும் நாள்களிலும்
எபி 13:8 உமது அன்பில் நிலைத்து வாழத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இத்தாய மறைநிகழ்வில் பங்குபெற்றுள்ள உம் மக்களோடு 6 உமது அருள்காவலில் எப்போதும் நம்பிக்கை .ெ இந்த ஆண்டு முழுவதும்
சுள உம் மக்களோடு இருந்தருளும்; பாதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நாங்கள்
எல்லா இடர்களினின்றும் காக்கப்பெறுவோமாக. எங்கள்.

ஆகஸ்ட் 15

கன்னி மரியாவின் விண்ணேற்பு, இந்தியாவின் பாதுகாவலி;
இந்தியாவின் சுதந்திர நாள்
பெருவிழா

திருக்குழும மன்றாட்டு, சிறப்பு ஆசி தவிர மற்றவை திருவிழிப்புத் திருப்பலிக்கும் நாள் திருப்பலிக்கும் உரோமைத்திருப்பலி நூலிலிருந்து பயன்படுத்தப்படும் (பக்.789-793). கீழே கொடுக்கப்பட்டுள்ள திருக்குழும மன்றாட்டு பயன்படுத்தப்படாத பொழுது, இம்மன்றாட்டு பொது மன்றாட்டின் முடிவுரையாகப் பயன்படுத்தப்படலாம்.

திருக்குழும மன்றாட்டு

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, மாசற்ற கன்னி மரியாவினுடைய மாட்சியின் மாபெரும் அடையாளமாக இந்தியா ஒரு சுதந்திர நாடாக உமது பராமரிப்பினால் உருவாகச் செய்தீரே; நாங்கள் அவருடைய மாட்சியில் பங்குகொள்ளும் பொருட்டு தீமை அனைத்திலிருந்தும் விடுதலை பெறவும், மேலுலகில் உள்ளவற்றின் மீது நாட்டம் கொள்ளவும் கனிவுடன் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு.

சிறப்பு ஆசி

தந்தையாகிய கடவுள், உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
நம் பாதுகாவலராகிய நம் அன்னையின் பரிந்துரையால்,
நம் மக்கள் அனைவருக்கும் அமைதியும் வளமையும் வழங்குவாராக.

பதில்: ஆமென்.

இறைமகன், உங்களைக் கனிவுடன் கண்ணோக்குவாராக.
உயர்ந்த இலக்குகளைத் துணிவுடன் தேடும்
ஞானமுள்ள தலைவர்களைத் தந்து
உங்களுக்கு ஆசி வழங்குவாராக.

பதில்: ஆமென்.

தூய ஆவியார், கடவுளுடைய கட்டளைகளின் பாதையில் நீங்கள் நடக்கவும்
விண்ணவரோடு நீங்கள் உரிமைப் பேறு பெறவும் உங்களுக்கு அருள் புரிவாராக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், * தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.



புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு
பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி

இத்திருப்பலி ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலையில் மாலைத் திருப்புகழ் 1-க்கு முன்போ பின்போ பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

மரியே! மாட்சி மிகு உம் புகழ் சாற்றப்பட்டிருக்கிறது; இன்று நீர் வானதூதர் அணிகளுக்கு மேலாக உயர்த்தப்பெற்றுள்ளீர்;
என்றென்றும் கிறிஸ்துவோடு வெற்றிப் புகழ் அடைகின்றீர். "உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித கன்னி மரியாவின் தாழ்நிலையைக் கண்ணோக்கி, உம் ஒரே திருமகன் மரியாவிடமிருந்து ஊனியல்பில் பிறக்கும் அருளை அவருக்கே அளித்து, இன்று அந்த அன்னைக்கு ஈடு இணையற்ற மாட்சியால் முடி சூட்டினீரே; அவரின் வேண்டலால், நாங்களும் உமது மீட்பின் மறைநிகழ்வால் காக்கப்பெற்று உம்மால் உயர்த்தப்பெறத் தகுதி பெறுவோமாக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, கடவுளுடைய புனித தாயின் விண்ணேற்புப் பெருவிழாவில் மகிழ்வு, புகழ்ச்சி இவற்றின் பலிப்பொருளை ஏற்றருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் உம்முடைய மன்னிப்பைப் பெற்று நன்றிச் செயலில் இடைவிடாது நிலைத்திருக்க அருள்வீராக. எங்கள்.

தொடக்கவுரை : அடுத்து வரும் திருப்பலியில் உள்ளபடி (பக். 790 - 793).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 11:27 என்றுமுள்ள தந்தையின் மகனைத் தாங்கிய கன்னி மரியாவின்
திருவயிறு பேறுபெற்றதே.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, இறை அன்னையின் விண்ணேற்பைக் கொண்டாடும் நாங்கள் விண்ணக விருந்தில் பங்குகொண்டு உமது கனிவை இறைஞ்சுகின்றோம்: உமை அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருள்வீராக. எங்கள். சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 6 29).

பகல் திருப்பலி

வருகைப் பல்லவி

காண். திவெ 12:1 பொனில் பெரியதோர் அடையாளம் தோன்றியது. பெண் ஒருவர் கதிரவனை ஆடையாக அணிந்து,
வடையாக அணிந்திருந்தார். நிலா அவருடைய --வடியில் இருந்தது. அவர் பன்னிரு விண் மீன்களைத் தலை மீது முடி யாகச் சூடியிருந்தார்.
அல்லது கன்னி மரியாவைப் பெருமைப்படுத்தி, விழா எடுக்கும் நாம் அனைவரும் ஆண்டவரில் அகமகிழ்வோமாக. அவரது விண்ணேற்பில் வானதூதர் மகிழ்கின்றனர். இறைமகனைப் போற்றிப் புகழ்கின்றனர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் அன்னையாகிய மாசற்ற கன்னி மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மாட்சிக்கு எடுத்துக்கொண்டீரே; நாங்கள் விண்ணகத்துக்கு உரியவற்றை என்றும் நாடி அவரது மாட்சியில் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இறைப்பற்றுடன் நாங்கள் அளிக்கும் காணிக்கை உம்மிடம் வந்து சேர்வதாக; விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால், எங்கள் இதயங்கள் அன்புத் தீயால் பற்றியெரிந்து என்றென்றும் உம்மை நாடுவனவாக. எங்கள்.

தொடக்கவுரை: மரியாவினுடைய விண்ணேற்பின் மாட்சி.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

எனெனில் கடவுளின் தாயாகிய கன்னி மரியா
இன்று விண்ணகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
உமது திரு அவை அடைய இருக்கின்ற நிறைவின்
தொடக்கமும் சாயலு மாக இந்த விண்ணேற்புத் திகழ்கின்றது;
இவ்வுலகில் பயணம் செய்யும் மக்களுக்கு
உறுதியான நம்பிக்கையையும் ஆறுதலையும் வழங்கும்
முன்னடையாளமாகவும் அது விளங்குகின்றது.

ஏனெனில் உயிர்களுக்கெல்லாம் ஊற்றாகிய உம் திருமகனுக்குச்
சொல்லற்கரிய முறையில் மனித உடல் கொடுத்து
அவரைப் பெற்றெடுத்த அப்புனித அன்னையை
நீர் கல்லறையில் அழிவுறாமல் காத்தது மிகப் பொருத்தமே.

ஆகவே வானதூதர் திரளோடு ஒன்றுசேர்ந்து,
நாங்களும் உம்மைப் புகழ்ந்தேத்தி,
மகிழ்ச்சியுடன் அறிக்கையிட்டுச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 1:48-49 எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறு பெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவர் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் அருளடையாளங்களில் பங்குபெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: விண்ணேற்பு அடைந்த புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் நாங்கள் உயிர்ப்பின் மாட்சிக்கு வந்து சேர்வோமாக. எங்கள்.

சிறப்பு ஆசிக்கான வாய்பாடு பயன்படுத்தப்படலாம் (பக். 629).

=======================----------------

தீபாவளி திருநாள்

8.1 கிறிஸ்து, உலகின் ஒளி

வருகைப் பல்லவி

எசா 60:13
எழு, ஒளிவீசு, உன் ஒளி தோன்றியுள்ளது, ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர், மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்.
20 -

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் வார்த்தையால் நம்பிக்கையாளரின் இதயங்களை ஒளிர்விக்கின்றீர்; இவ்வுலகில் உம் திருமகனுடைய உடனிருப்பின் அடையாளங்களாக நாங்கள் திகழும் பொருட்டு, அவர் வாக்களித்ததைப் போன்று எங்கள் உள்ளங்களைப் புதுப்பித்து நிறையுண்மையை நோக்கி எங்களை வழிநடத்த வேண்டுகின்றோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அன்புடனும் இறைப்பற்றுடனும் பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள காணிக்கைகளைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்; இப்பலியின் ஆற்றலால், உமது ஒளியின் சுடர் உலகை நிரப்பச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

எபே 5:8-9 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள்; ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்; ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விண்ணகக் கொடைகளால் நீர் ஊட்டம் அளித்தவர்களுக்கு நம்பிக்கை ஒளியை வழங்கியருளும்; அதனால் நிலைவாழ்வின் மங்கா ஒளியைப் பகிர்ந்துகொள்ள எரியும் விளக்குகளோடு நாங்கள் தயாராய் இருப்போமாக. எங்கள்.

வாசகங்கள்
வாசகம் 1 பதிலுரைத் திருப்பாடல் பதிலுரை (திபா 27:14) அல்லேலூயா (யோவா 8:12) :
எசா 9:1- 2 (அ) எபே 5:8-14 திபா 104 (103):1-2. 24. 27-32 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. யோவா 9:9-17
நற்செய்தி

==============14^ 9302 ^-----------

கிறிஸ்து, இறை ஞானம்

வருகைப் பல்லவி

காண். சாஞா 7:25-26 ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி.
அவரது நன்மையின் சாயல்.

திருக்குழும மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக உலகுக்கு உம் ஞானத்தின் சுடரைக் கனிவுடன் வெளிப்படுத்தினீர்; கிறிஸ்துவின் இறை இயல்பில் நாங்கள் பங்குபெறவும் விண்ணக ஞானத்தைக் கற்றுக்கொள்வதால் நிலைவாழ்வுக்குத் தகுதியுடையோராய்த் திகழவும் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வழிபாட்டின் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் கையளிக்கும் பலிப்பொருள்கள் எங்களுக்கு ஞானத்தையும் ஆற்றலையும் தந்து பாவக் கறையிலிருந்து எங்களைத் தூய்மைப்படுத்துவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

சீஞா 24:20-21
என்னைப் பற்றிய நினைவு தேனினும் இனியது; என் உரிமைச் சொத்து தேனடையினும் மேலானது. என்னை கொள்வார்கள்; என்னைக் குடிப்பவர்கள், மேலும் தாகம்
உண்பவர்கள், மேலும் பசி கொள்வார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
மீட்பு அளிக்கும் உணவா லும் பானத்தாலும் எங்கள் புத்துணர்வு பெற்றுள்ளோம்; என்றுமுள்ள உமது ஞானத்தால் மீட்கப்பெற்றவர்கள் இவ்வுலக வாழ்வில் உமது உதவியைப் பெற்று நிலையான மகிழ்ச்சி அடைய அருள்வீராக. எங்கள்.


வாசகங்கள்

வாசகம் 1 சீஞா 24:1-8 அ, 19- 22 (அ) 1 கொரி 2:7-16

பதிலுரைத் திருப்பாடல் : திபா 119 (118):97-98. 101-106

பதிலுரை (111:10அ)) : ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்.

அல்லேலூயா (சாஞா 9:4) :

அல்லேலூயா, அல்லேலூயா! உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்; உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர். அல்லேலூயா.
நற்செய்தி : மத் 11:25-30

=============↑ பக்கம் 1148

image