image

 

பொது



குறிப்பிடத்தக்க அருள்பணிப் பயன்பாடு கருதி, தல் ஆயரின் அறிவுரையின்படி அல்லது அனுமதியுடன் பெருவிழாக்கள், திருவருகைக் கால, தவக் கால், பாஸ்கா கால் ஞாயிற்றுக்கிழமைகள், பாஸ்கா எண்கிழமை நாள்கள், இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவுக்கொண்டாட்டம், திருநீற்றுப் புதன், புனித வார நாள்கள் ஆகிய நாள்கள் தவிர, பிற நாள்களில் பொருத்தமான நேர்ச்சித் திருப்பலி பயன்படுத்தப்படும்.

கட்டாய நினைவு, திருவருகைக் காலத்தில் டிசம்பர் 16-ஆம் நாள் வரை, ஜனவரி 2-ஆம் நாளிலிருந்து கிறிஸ்து பிறப்புக் கால வாரநாள்கள், பாஸ்கா எண்கிழமைக்குப் பிறகு பாஸ்கர் காலத்தின் வார நாள் ஆகிய நாள்களில் நேர்ச்சித் திருப்பலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அருள்பணிப் பயன்பாடு கருதிக் கோவில் அதிபரின்அல்லது திருப்பலி முதல்வரின் முடிவின்படி மக்களோடு கொண்டாடப்படும் திருப்பலியில் பொருத்தமான நேர்ச்சித் திருப்பலிகளைப் பயன்படுத்தலாம்.

ஆண்டின் பொதுக் கால வார நாள்களில், விருப்ப நினைவு நாளிலும்கூட, நம்பிக்கையாளரின் இறைப்பற்றை முன்னிட்டுத் திருப்பலி முதல்வரால் நோச்சித் திருப்பல் தேர்ந்தெடுக்கப்படலாம்.

==============1^ 9289 ^-----------

1. தூய்மைமிகு மூவொரு கடவுள்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.
(

வருகைப் பல்லவி

20
தந்தையாகிய கடவுளும் கடவுளுடைய ஒரே திருமகனும் தூப ஆவியாரும் வாழ்த்தப்பெறுவாராக; ஏனெனில் அவர் நம்மீது தமது
இரக்கத்தைப் பொழிந்தருளினார். திருக்குழும் மன்றாட்டு தந்தையே இறைவா, உண்மையின் வார்த்தையையும் புனிதப்படுத்தும் தூய ஆவியாரையும் உலகுக்கு அனுப்பி உமது வியத்தகு மறைபொருளை மானிடருக்கு வெளிப்படுத்தினீர்; நாங்கள் உண்மையான நம்பிக்கையை அறிக்கையிடுவதன் வழியாக என்றுமுள்ள மூவொரு கடவுளின் மாட்சியை அறிந்து கொள்ளவும் உமது மாண்பின் பேராற்றலில் நீர் ஒருவராக இருக்கின்றீர் என ஏற்று வழிபடவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உமது பெயரை மன்றாடி நாங்கள் ஒப்புக்கொடுக்கும் எங்கள் பணியின் இக்காணிக்கைகளைத் தூய்மைப்படுத்தியருளும்; இதன் வழியாக எங்களையே உமக்கு உகந்த, நிலையான காணிக்கையாக மாற்றுவீராக. எங்கள்.

தொடக்கவுரை: தூய்மைமிகு மூவொரு கடவுளின் மறைபொருள்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

 

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

உம்முடைய ஒரே பேறான மகனோடும் தூய ஆவியாரோடும்
ஆள்வகையில் ஒருவராய் இராமல் மூவராய் இருந்தாலும்
இறைத்தன்மையில் ஒரே கடவுளாகவும் ஒரே ஆண்டவராகவும் நீர் இருக்கின்றீர்.

ஏனெனில் நீரே வெளிப்படுத்தியதால்
உமது மாட்சியைப் பற்றி நாங்கள் நம்புவதையே
உம் மகனைக் குறித்தும் தூய ஆவியாரைக் குறித்தும்
எத்தகைய வேறுபாடுமின்றி நம்புகின்றோம்.

இவ்வாறு உண்மையான, நிலையான
கடவுள்தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது
ஆள்வகையில் தனித்தன்மையையும்
இறை இயல்பில் ஒருமையையும்
மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்.

ஆகவே வானதூதர்களும் முதன்மை வானதூதர்களும்
கெருபீன்களும் சேராபீன்களும்
உம்மைப் புகழ்ந்து நாள்தோறும் முடிவின்றி ஆர்ப்பரித்து
ஒரே குரலாய்ச் சொல்வதாவது:

தூயவர்.

திருவிருந்துப் பல்லவி

கலா 4:6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளர்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே' எனக் கூப்பிடுகிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் நிலையான தூய மூவொரு கடவுள்தன்மையையும் பாகுபாடற்ற ஒருமையையும் அறிக்கையிடுகின்றோம்; அதனால் நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவு எங்களுக்கு உடல், உள்ள நலனை அளிப்பதாக. எங்கள்.

2. கடவுளின் இரக்கம்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும். பாஸ்கர் காலத்தில் 2-ஆம் ஞாயிறு அன்று இத்திருப்பலியைப் பயன்படுத்துவது இல்லை .

வருகைப் பல்லவி

கடவுள் நம்மீது முடிவில்லாத அன்பு காட்டியு
காண். எரே 31:3; 1 யோவா 2:2 பாவங்களுக்காக மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்காக
வல்லாத அன்பு காட்டியுள்ளார். நம் கழுவாயாக அவர் தம் ஒரே திருமகனை அனுப்பினார்.

அல்லது

திபா 88:2 ஆண்டவரின் இரக்கங்களை நான் என்றும் பாடுவேன்; உமது
உண்மையைத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது இரக்கத்துக்கு அளவே இல்லை; உமது நன்மையின் கருவூலமும் எல்லையற்றது; உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைக் கனிவுடன் அதிகரிக்கச் செய்தருளும்: இவ்வாறு உமது பேரன்பால் நாங்கள் படைக்கப்பட்டுள்ளதையும், இரத்தத்தால் மீட்கப்பட்டுள்ளதையும், தூய ஆவியாரால் புதுப் பிறப்பு அடைந்துள்ளதையும் நாங்கள் சரியான முறையில் அறிந்து, புரிந்து கொள்ளச் செய்வீராக. உம்மோடு. '

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்று, அவற்றை மீட்பின் அருளடையாளமாகவும் உம் திருமகனின் இறப்பு, உயிர்ப்பின் நினைவாகவும் மாற்றியருளும்; இவ்வாறு இத்திருப்பலியின் ஆற்றலால் கிறிஸ்துவில் எப்பொழுதும் நம்பிக்கை வைத்து நாங்கள் நிலைவாழ்வுக்கு வந்து சேர்வோமாக. எங்கள்.
திபா 102:17

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரது இரக்கமோ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும்.
யோவா 19:34

அல்லது

படைவீரருள் ஒருவர் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினார்.
உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உம் திருமகனின் திரு உடலாலும் திரு இரத்தத்தாலும் 'நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; இரக்கத்தின் ஊற்றுகளிலிருந்து நம்பிக்கையுடன் நாங்கள் முகந்து கொள்ள எங்கள் சகோதரர் சகோதரிகளிடத்தில் மேன்மேலும் இரக்கம் உள்ளவர்களாய் எங்களையே வெளிப்படுத்தவும் செய்வீர எங்கள்.

==============4^ 9292 ^-----------

3. தலைமைக் குருவும் என்றென்றும் குருவுமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.
திபா 109:4,

வருகைப் பல்லவி

'மெல்கிசேதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே - ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். அவர் தம் |
மாற்றிக்கொள்ளார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உமது மாட்சிக்காகவும் மனித இனத்தின் மீட்புக்காகவும் கிறிஸ்துவைத் தலைமைக் குருவாகவும் | என்றென்றும் குருவாகவும் ஏற்படுத்தத் திருவுளமானீரே; இவ்வாறு அவரது திரு இரத்தத்தால் உமக்குச் சொந்தமாக்கப்பட்ட மக்கள் அவரது நினைவாக ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலியில் பங்கேற்பதால் அவருடைய சிலுவை, உயிர்ப்பு இவற்றின் ஆற்றலைப் பெறச் செய்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்புச் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள். தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை (பக். 544 - 545).

திருவிருந்துப் பல்லவி

1கொரி 11:24-25 இவ்வுடல் உடன் படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்
=வகளுக்காகக் கையளிக்கப்படும்; புதிய படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம்
நினைவாக இதைச் செய்யுங்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
உமது நினைவாக ஒப்புக்கொடுக்கும்படி, உம் திருமகன் கட்டளையிட்ட இப்பலியில் நாங்கள் பங்கேற்று, உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்களையும் அவரோடு இணைத்து என்றென்றும் எங்களையே காணிக்கையாக்க அருள்வீராக. 'என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==============5^ 9293 ^-----------

4. திருச்சிலுவையின் மறைபொருள்

திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

காண். கலா 6:14
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை பாராட்ட வேண்டும். அவரிலேதான் நமக்கு மீட்பும் வாழ்வும் உயிர்த்தெழுதலும் உண்டு. அவர் வழியாகவே நாம் மீட்கப் பெற்றோம், விடுதலை அடைந்தோம்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மனிதர் அனைவரின் மீட்புக்காக உம் ஒரே திருமகன் சிலுவையை ஏற்கத் திருவுளமானீரே; இவ்வாறு அச்சிலுவையின் மறைபொருளை இவ்வுலகில் அறிந்திருக்கின்ற நாங்கள் அதன் மீட்பின் பயனை விண்ணுலகில் பரிசாகப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெற அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, சிலுவைப் பீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கை அனைத்துலகப் பாவங்களையும் போக்கியது; இப்பீடத்தில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை குற்றங்கள் அனைத்திலிருந்தும் எங்களைக் கழுவித் தூய்மைப்படுத்த அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

யோவா 12:32
நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, உமது புனித உணவால் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் வாழ்வு தரும் சிலுவை மரத்தால் நீர் மீட்டருளிய எங்களை உயிர்ப்பின் மாட்சிக்கு அழைத்துச் செல்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகின்றோம்:


5. தூய்மைமிகு நற்கருணை

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

திபா 77:23-25
உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்னணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார்; அவர்கள் உணவை மனிதன் உண்டான்.
"கு வானத்து உணவை வழங் கினார்; வானதூதரின்
க வானத்து " மழை ெபறந்துவிட்ட

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகனின் பாஸ்கா மறைநிகழ்வு வழியாக மனித இனத்தின் மீட்பினை நிறைவேற்றினீரே; இவ்வாறு கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் அருளடையாளங்களின் வழியாக நம்பிக்கையுடன் அறிக்கையிடும் நாங்கள் உமது மீட்பு தொடர்ந்து வளர்ச்சியுறுவதைக் கண்டுணரும் வரத்தை எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மீட்பின் நினைவைக் கொண்டாடும் நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் இந்த பரிவிரக்கத்தின் அருளடையாளம் எங்களுக்கு ஒற்றுமையின் அடையாளமாகவும் பிறரன்பின் பிணைப்பாகவும் அமைவதாக. எங்கள்.
தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை (பக். 544 - 545).

திருவிருந்துப் பல்லவி

யோவா 6:51-52 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே, என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது உண்டால், அவர் என்றுமே வாழ்வார்; நான் அளிக்கும் உணவு உலகு வாழ்வதற்கான எனது சதை.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உட்கொண்ட இவ்விண்ணக விருந்து எங்களைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத்தின் வழியாக சகோதரர் சகோதரிகள் ஒரே குழுமமாக இணைக்கப்படுவார்களாக. எங்கள்.
"மமிகு நற்கருணைக்கான நேர்ச்சித் திருப்பலியை ஒப்புக்கொடுப்பதற்குப் பதிலாக மேல் குருவும் என்றென்றும் குருவுமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நேர்ச்சித் உருப்பல்/யோ (பக். 1154) கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் பெருவிழாத் திருப்பலியோ (பக். 487 - 490) கொண்டாடப்படலாம்.

==============8^ 9296 ^-----------

6. இயேசுவின் தூய்மைமிகு பெயர்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.
பிலி 2:10-11

வருகைப் பல்லவி

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர். அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சி: 'இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையின்
2018

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, இயேசுவின் தூய்மைமிகு பெயரை வணங்கும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் அவரது பெயரின் இனிமையை இவ்வுலக வாழ்வில் துய்த்துணர்ந்தபின், என்றென்றுமுள்ள மகிழ்ச்சியை எம் தாயகமாம் வான்வீட்டில் பெற்று மகிழ்வோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல தந்தையே, உம் திருமகன் மிகுந்த கனிவிரக்கத்துடன் எங்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு அவரது பெயரால் உம்மிடம் கேட்பதை எல்லாம் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என உறுதியாக நம்புகின்றோம்; ஆகவே அவரது பெயரை முன்னிட்டு எங்கள் காணிக்கைகளை ஏற்றருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

திப 4:12
நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இயேசுவின் பெயருக்கு மனிதர் அனைவரும் மண்டியிட்டு மனித இனம் அனைத்தும் மீட்பைக் கண்டடைய வேண்டும் எனத் திருவுளமானீரே; ஆகவே நாங்கள் தூய மறைநிகழ்வு வழியாக அவரைத் தகுதியுடன் பணிந்து வணங்க இரக்கத்துடன் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.

=============9^ 9297 ^-----------


7. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
உயர்மதிப்புள்ள திரு இரத்தம்

இத்திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

'காண். திவெ 5:9-10 ஆண்டவரே, உமது இரத்தத்தால் குலம், மொழி, மக்களினம், நாடு ஆகிய அனைத்தினின்றும் எங்களை மீட்டுக்கொண்டீர்; ஆட்சியுரிமை பெற்றவர்களாக எங்களைக் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்.
2018 11

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகனின் உயர்மதிப்புள்ள திரு இரத்தத்தால் மனித இனம் அனைத்தையும் மீட்டருளினீரே; உமது இரக்கச் செயலை எங்களுள் நிலைத்திருக்கச் செய்தருளும்: இவ்வாறு எங்கள் மீட்பின் மறைபொருளை நாங்கள் இடையறாது நினைவில் கொண்டு, அதன் பயனை அடையத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உமது திருமுன் எங்கள் காணிக்கைகளைப் படைத்துள்ளோம்; புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவிடம் நாங்கள் இம்மறைநிகழ்வுகள் வழியாக வந்தடையவும் எம்மீது தெளிக்கப்பட்ட அவருடைய மீட்பு அளிக்கும் இரத்தத்தால் புதுப்பிக்கப்பெறவும் அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டவருடைய பாடுகளின் தொடக்கவுரை 1 (பக். 527).
காண். 1 கொரி 10:16

திருவிருந்துப் பல்லவி

நாம் போற்றும் திருக்கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் ஆகும். நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலில்
பங்குகொள்ளுதல் ஆகும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நட்பு அளிக்கும் உணவாலும் பானத்தாலும் ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் வகள் மீட்பரின் திரு இரத்தத்தால் தோய்க்கப்பட உம்மை வேண்டுகின்றோம்: அது எங்களுக்கு நிலைவாழ்வு அளிக்கப் பெருக்கெடுக்கும் நீரூற்றாய் இருப்பதாக. எங்கள்.

அல்லது

எல்லாம் வல்ல இறைவா, விண்ணக உணவை உண்டு
வெளட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: திருப் பானத்தைப் பருகி ஊட்டம் பெற்றுள்ள நாங்கள் உம்மை .ே உம் திருமகனின் உயர்மதிப்புள்ள திரு இரத்தத்தால் மீட்கப்பெற்ற எங்களைப் பகைவரின் அச்சத்திலிருந்து காத்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


8. இயேசுவின் தூய்மைமிகு இதயம்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

திபா 32:11,19 அவருடைய இதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் உள்ளன; அதனால் அவர்களது உயிரைச் சாவினின்று விடுவித்து, அவர்களுக்குப் பஞ்சத்திலும் உணவு அளிக்கின்றார்.
திருக்குழும் மன்றாட்டு ஆண்டவரே இறைவா, உம்முடைய திருமகனின் இதயத்தில் விளங்கிய நற்பண்புகளால் நாங்கள் அணிசெய்யப்பெற்று, அவரது உணர்வுகளால் பற்றியெரியச் செய்தருளும்; இவ்வாறு நாங்கள் அவருடைய உருவுக்கு ஒத்திருக்கச் செய்து நிலையான மீட்பில் பங்குகொள்ளத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, இரக்கம் நிறைந்த தந்தையே, நீர் எங்கள் மீது பொழிந்த அளவில்லா அன்பினால் உம் ஒரே திருமகனைச் சொல்லற்கரிய இரக்கத்துடன் எங்களுக்குத் தந்தீரே; அதனால் அவரோடு எங்களுக்கு உள்ள ஒன்றிப்பில் நிறைவு அடைந்து நாங்கள் உமக்கு ஏற்ற காணிக்கை ஆகுமாறு அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவர் கூறுகிறார்: யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், பருகட்டும். என்னிடம் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஒடும்.
யோவா 19:34

அல்லது

படைவீரருள் ஒருவர் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினார்.
உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் அருளடையாளத்தில் நாங்கள் பங்குபெற்று, உமது கனிவைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் இவ்வுலகில் கிறிஸ்துவுக்கு ஒத்தவராகி விண்ணுலகில் அவருடைய மாட்சியில் பங்கேற்பாளர்களாகும் தகுதி பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

இந்த நேர்ச்சித் திருப்பலிக்குப் பதிலாக இயேசுவின் தூய்மைமிகு இதயப் பெருவிழாத திருப்பலியையும் பயன்படுத்தலாம் (பக். 491 - 494).

==============12^ 9300 ^-----------

8.1 கிறிஸ்து, உலகின் ஒளி

வருகைப் பல்லவி

எசா 60:13
எழு, ஒளிவீசு, உன் ஒளி தோன்றியுள்ளது, ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர், மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்.
20 -

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் வார்த்தையால் நம்பிக்கையாளரின் இதயங்களை ஒளிர்விக்கின்றீர்; இவ்வுலகில் உம் திருமகனுடைய உடனிருப்பின் அடையாளங்களாக நாங்கள் திகழும் பொருட்டு, அவர் வாக்களித்ததைப் போன்று எங்கள் உள்ளங்களைப் புதுப்பித்து நிறையுண்மையை நோக்கி எங்களை வழிநடத்த வேண்டுகின்றோம். உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, அன்புடனும் இறைப்பற்றுடனும் பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள காணிக்கைகளைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்; இப்பலியின் ஆற்றலால், உமது ஒளியின் சுடர் உலகை நிரப்பச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

எபே 5:8-9 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள்; ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்; ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்விண்ணகக் கொடைகளால் நீர் ஊட்டம் அளித்தவர்களுக்கு நம்பிக்கை ஒளியை வழங்கியருளும்; அதனால் நிலைவாழ்வின் மங்கா ஒளியைப் பகிர்ந்துகொள்ள எரியும் விளக்குகளோடு நாங்கள் தயாராய் இருப்போமாக. எங்கள்.

வாசகங்கள்
வாசகம் 1 பதிலுரைத் திருப்பாடல் பதிலுரை (திபா 27:14) அல்லேலூயா (யோவா 8:12) :
எசா 9:1- 2 (அ) எபே 5:8-14 திபா 104 (103):1-2. 24. 27-32 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு. அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. யோவா 9:9-17
நற்செய்தி

==============14^ 9302 ^-----------

கிறிஸ்து, இறை ஞானம்

வருகைப் பல்லவி

காண். சாஞா 7:25-26 ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி.
அவரது நன்மையின் சாயல்.

திருக்குழும மன்றாட்டு

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் ஒரே திருமகன் வழியாக உலகுக்கு உம் ஞானத்தின் சுடரைக் கனிவுடன் வெளிப்படுத்தினீர்; கிறிஸ்துவின் இறை இயல்பில் நாங்கள் பங்குபெறவும் விண்ணக ஞானத்தைக் கற்றுக்கொள்வதால் நிலைவாழ்வுக்குத் தகுதியுடையோராய்த் திகழவும் எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வழிபாட்டின் பலியை ஏற்றருளும்; அதனால் நாங்கள் கையளிக்கும் பலிப்பொருள்கள் எங்களுக்கு ஞானத்தையும் ஆற்றலையும் தந்து பாவக் கறையிலிருந்து எங்களைத் தூய்மைப்படுத்துவனவாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

சீஞா 24:20-21
என்னைப் பற்றிய நினைவு தேனினும் இனியது; என் உரிமைச் சொத்து தேனடையினும் மேலானது. என்னை கொள்வார்கள்; என்னைக் குடிப்பவர்கள், மேலும் தாகம்
உண்பவர்கள், மேலும் பசி கொள்வார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
மீட்பு அளிக்கும் உணவா லும் பானத்தாலும் எங்கள் புத்துணர்வு பெற்றுள்ளோம்; என்றுமுள்ள உமது ஞானத்தால் மீட்கப்பெற்றவர்கள் இவ்வுலக வாழ்வில் உமது உதவியைப் பெற்று நிலையான மகிழ்ச்சி அடைய அருள்வீராக. எங்கள்.


வாசகங்கள்

வாசகம் 1 சீஞா 24:1-8 அ, 19- 22 (அ) 1 கொரி 2:7-16

பதிலுரைத் திருப்பாடல் : திபா 119 (118):97-98. 101-106

பதிலுரை (111:10அ)) : ஆண்டவர் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்.

அல்லேலூயா (சாஞா 9:4) :

அல்லேலூயா, அல்லேலூயா! உமது அரியணை அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்; உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர். அல்லேலூயா.
நற்செய்தி : மத் 11:25-30


9. தூய ஆவியார்


திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.


உரோ 5:5; காண். 8:11

வருகைப் பல்லவி

அவருடைய ஆவி நம்முள் குடிகொண்டிருப்பதன் வழியாகக் கடவுளின் அன்பு நம் இதயங்களில் பொழியப்பட்டுள்ளது.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தூய ஆவியாரின் ஒளியால் நம்பிக்கையாளரின் இதயங்களுக்கு அறிவூட்டு கின்றீரே; அதே ஆவியாரால் நாங்கள் சரியானவற்றை உணரவும் அவர் அளிக்கும் ஆறுதலால் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த உம்மை வேண்டுகின்றோம்: தூய ஆவியாரின் ஒளியால் எங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 67:29-30 எருசலேமில் உள்ள உமது தூய கோவிலிலிருந்து எங்கள் சார்பாகச்
செயலாற்றிய கடவுளே! உம் வல்லமையைக் காட்டியருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, தூய ஆவியாரின் பொழிவு எங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதாக; பனி பொழிவது போல அவர் எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இறங்கி எங்களை வளம் பெறச் செய்வாராக. எங்கள்.

==============17^ 9305 ^-----------
02

வருகைப் பல்லவி

-காண், யோவா 14:26; 15:26 உண்மையின் ஆவியார் வரும்பொழுது, உண்மை அனைத்தையும்
உங்களுக்குக் கற்றுத்தருவார், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம்மிடமிருந்து புறப்படும் துணையாளர் எங்கள் மனங்களை ஒளிரச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் வாக்களித்தவாறு நிறையுண்மையை நோக்கி அவர் எங்களை வழிநடத்துவாராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, அனைத்து இதயங்களும் உமக்குத் திறந்திருக்கின்றன; எல்லா விருப்பங்களும் உம்மையே நோக்கிக் கூப்பிடுகின்றன; உமக்கு மறைவாய் இருப்பது எதுவுமில்லை : ஆகவே உம் தூய ஆவியாரைப் பொழிந்து, எங்கள் இதய எண்ணங்களைத் தூய்மைப்படுத்தியருளும்; அதனால் நாங்கள் உம்மை அன்பு செய்யவும் உம்மைப் போற்றிப் புகழவும் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது திருப்பீடத்தின்மீது அன்புடனும் இறைப்பற்றுடனும் நாங்கள் படைக்கும் ஆன்மீகப் பலிப்பொருளைக் கனிவுடன் கண்ணோக்கவும் உம் அடியாருக்கு நேரிய இதயத்தைத் தரவும் உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவர்களின் நம்பிக்கை இக்காணிக்கைகளை உமக்கு உகந்ததாக்குவதாக; அவர்களது மனத்தாழ்மை இவற்றை உமக்கு ஏற்புடையதாக்குவதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

தந்தையிடமிருந்து புறப்படும் ஆவியார் என்னை
யோவா 15:26; 16:14 என்கிறார் ஆண்டவர்.
மாட்சிப்படுத்துவார்,

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, விண்ணக உணவால் நீர் எங்களுக்கு ஊட்டம் அளித்துள்ளீர்; உம் ஆவியாரின் இனிமையை எங்கள் இதய ஆழத்தில் பொழிந்தருளும்: அதனால் இன்று நாங்கள் இறைப்பற்றுடன் உட்கொண்ட உணவை விண்ணக வீட்டில் என்றென்றுமுள்ள கொடையாகப் பெறுவோமாக.
எங்கள்.

==============19^ 9307 ^-----------

வருகைப் பல்லவி

காண். லூக் 4:18 ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை
அறிவிக்க என்னை அனுப்பினார், என்கிறார் ஆண்டவர்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எல்லா மக்களிலும் நாடுகளிலும் உள்ள உமது அனைத்துலகத் திரு அவையைப் புனிதப்படுத்துகின்றீர்; உலகின் எத்திக்கிலும் தாய ஆவியாரின் கொடைகளைப் பொழிந்தருளும்: அதனால் திரு அவையின் தொடக்கக் காலத்தில் நற்செய்தி அறிவிக்கப்பட்டபோது செயலாற்றிய உமது அருள் இக்காலத்திலும் நம்பிக்கையாளரின் இதயங்களில் பரவச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, ஆவியாரால் எங்களை வழிநடத்தி அவரது அருள்காவலினால் நாங்கள் ஊழியம் புரியச் செய்கின்றீர்; எம்மீது இரங்கி, உமக்கு உகந்த வேண்டலுக்குச் செவிசாய்த்தருளும்: அதனால் உம்மையே நம்பி இருக்கும் எங்கள் நம்பிக்கை உம்முடைய கொடைகளால் நிலைத்திருப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, ஆவியார் உம் திருமகனுடைய சீடர்களின் இதயங்களில் தம் அன்புத் தீயை மூட்டியருளினார்; நாங்கள் உம் திருமுன் படைக்கும் காணிக்கையை அவரே புனிதப்படுத்துவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காண்.

திபா 103:30

திருவிருந்துப் பல்லவி

உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடை எங்களுக்குப் பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருத்தூதர்கள்மீது நீர் வியத்தகு முறையில் பொமி அதே தூய ஆவியால் நாங்கள் என்றும் பற்றியெரியச் செய்வீராக. -


10. புனித கன்னி மரியா

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.ஆண்டின் பல்வேறு காலங்களுக்கு ஏற்றவாறு புனித கன்னி மரியாவின் பொதுவிலிருந்து எத்திருப்பலியும் பயன்படுத்தப்படும் (பக். 886).

புனித மரியா, திரு அவையின் அன்னை

வருகைப் பல்லவி

காண். திப 1:14
இயேசுவின் தாய் மரியாவோடு சீடர்கள் ஒரே மனத்தோடு
வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இரக்கம் நிறைந்த தந்தையே, உம் ஒரே திருமகன் சிலுவையில் தொங்கியபோது தம் அன்னையாம் புனித கன்னி மரியாவை எங்களுக்கும் அன்னையாகத் தந்தருளினார்; இவ்வாறு அந்த அன்னையின் அன்பு எங்களுக்குத் துணை நிற்பதால், உமது திரு அவை மேன்மேலும் வளம் பெற்று, தன் மக்களின் புனிதத்தைக் கண்டுகளிக்கவும் மக்களின் குடும்பங்கள் அனைத்தையும் தன் அரவணைப்பில் ஈர்த்துக்கொள்ளவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை ஏற்று, மீட்பு அளிக்கும் அருளடையாளமாக மாற்றியருளும்; அதன் ஆற்றலாலும் திரு அவையின் அன்னையாம் கன்னி மரியாவின் அன்பாலும் நாங்கள் பற்றியெரிந்து, மீட்புப் பணியில் இன்னும் மிகுந்த ஆர்வத்துடன் அவரோடு ஒன்றித்து உழைக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பெற்றுக்கொண்ட கொடை எங்களுக்குப் பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருத்தூதர்கள்மீது நீர் வியத்தகு முறையில் பொழிந்தருளி அதே தூய ஆவியால் நாங்கள் என்றும் பற்றியெரியச் செய்வீரா
பற்றியெரியச் செய்வீராக. எங்கள்.

10. புனித கன்னி மரியா


இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.
ஆண்டின் பல்வேறு காலங்களுக்கு ஏற்றவாறு புனித கன்னி மரியாவின் பொதுவிலிருந்து எத்திருப்பலியும் பயன்படுத்தப்படும் (பக். 886).
புனித மரியா, திரு அவையின் அன்னை

வருகைப் பல்லவி

காண். திப 1:14 இயேசுவின் தாய் மரியாவோடு சீடர்கள் ஒரே மனத்தோடு
வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இரக்கம் நிறைந்த தந்தையே, உம் ஒரே திருமகன் சிலுவையில் தொங்கியபோது தம் அன்னையாம் புனித கன்னி மரியாவை எங்களுக்கும் அன்னையாகத் தந்தருளினார்; இவ்வாறு அந்த அன்னையின் அன்பு எங்களுக்குத் துணை நிற்பதால், உமது திரு அவை மேன்மேலும் வளம் பெற்று, தன் மக்களின் புனிதத்தைக் கண்டுகளிக்கவும் மக்களின் குடும்பங்கள் அனைத்தையும் தன் அரவணைப்பில் ஈர்த்துக்கொள்ளவும் அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளை ஏற்று, மீட்பு அளிக்கும் அருளடையாளமாக மாற்றியருளும்; அதன் ஆற்றலாலும் திரு அவையின் அன்னையாம் கன்னி மரியாவின் அன்பாலும் நாங்கள் பற்றியெரிந்து, மீட்புப் பணியில் இன்னும் மிகுந்த ஆர்வத்துடன் அவரோடு ஒன்றித்து உழைக்கத் தகுதி பெறுவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

'காண். யோவா 2:1,11 கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்; அப்போதுதான் இயேசு தமது முதலாவது அரும் அடையாளத்தைச் செய்து தமது மாட்சியை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடரும் அவரில் நம்பிக்கை கொண்டனர்.

அல்லது

'காண். யோவா 19:26-27) இயேசு சிலுவையில் தொங்கும்போது, தாம் அன்பு செய்த சீடரிடம் 'இவரே உம் தாய்' என்றார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்புக்கும் வாழ்வுக்கும் பிணையாகிய திரு உணவை உண்டு நாங்கள் உம்மை இரந்து கேட்கின்றோம்: உமது திரு அவை கன்னித் தாயின் உதவியைப் பெற்றுக்கொள்வதாக: இவ்வாறு இத்திரு அவை நற்செய்திப் பறைசாற்றலால் எல்லா மக்களினங்களுக்கும் கற்பிக்கவும் உலகெல்லாம் ஆவியாரின் பொழிவால் நிரப்பப்படவும் செய்வீராக. எங்கள்.


மரியாவின் தூய்மைமிகு பெயர்

வருகைப் பல்லவி

காண். யூதி 13:18-19 கன்னி மரியே, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும்விட நீர் ஆண்டவராகிய உன்னத கடவுளின் ஆசி பெற்றவர்; ஏனெனில் உமது புகழ் மாந்தரின் வாயிலிருந்து ஒருபோதும் நீங்கா வண்ணம் அவர்
உமது பெயரைப் பெரிதும் உயர்த்தியுள்ளார்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, பெண்களுள் உமது அருளால் நிரப்பப்பெற்ற புனித கன்னி மரியாவை எங்கள் மீட்பராகிய உம் திருமகனின் அன்னையாகத் தேர்ந்தெடுத்தீரே; இவ்வாறு அவருடைய திருப்பெயரை வணங்கும் நாங்கள் இம்மைத் தீமைகளிலிருந்து விடுதலை பெறவும் அவரோடு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் அருள்வீராக. உம்மோடு.

அல்லது

இறைவா,
புனிதமிக்க கன்னி மரியாவைத் ம் அன்னையாகத் தேர்ந்து கொண்ட உம் திருமகன், சிலுவைப் பீடத்தில் உயிர்விடும்போது
பாயை எங்களுக்கும் அன்னையாகத் தந்தருளத் திருவுளமானார்; னால் அந்த அன்னையின் பாதுகாப்பை நாடும் நாங்கள் அவரின் பெயரைக் கூவி அழைப்பதால், ஆறுதல் பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு அளிக்கும் காணிக்கைகளைக் கண்ணோக்கியருளும்; இவ்வாறு தூய ஆவியாரின் ஒளியால் நிரப்பப்பெற்ற எங்கள் இதயங்கள் என்றும் கன்னியான புனித மரியாவின் வேண்டலால், உம் திருமகன் கிறிஸ்துவை என்றும் பற்றிக்கொள்ள அருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை (பக். 546 - 547).
காண். லூக் 1:26-27

திருவிருந்துப் பல்லவி

கபிரியேல் என்னும் வானதூதர் கடவுளால் ஒரு கன்னியிடம் அனுப்பப்பட்டார். அக்கன்னியின் பெயர் மரியா.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களைத் திரு வார்த்தையாலும் திரு விருந்தாலும் உறுதிப்படுத்தியுள்ளீர்; அதனால் புனித மரியாவின் வழிகாட்டுதலாலும் பாதுகாவலாலும் கிறிஸ்தவப் பெயருக்கு எதிரான அனைத்தையும் விலக்கிவிட்டு, அப்பெயருக்கு உகந்தவற்றையே நாட எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.

==============25^ 9313 ^-----------

புனித மரியா, திருத்தூதர்களின் அரசி

காண். திப 1:14

வருகைப் பல்லவி

இயேசுவின் தாய் மரியாவோடு சீடர்கள் ஒரே மனத்தோடு வேண்டிக்கொண்டிருந்தார்கள்.

திருக்குழும் மன்றாட்டு

2018 11
இறைவா, இயேசுவின் தாய் மரியாவோடு இறைவேண்டலில் ஈடுபட்டிருந்த உம் திருத்தூதர்கள் மீது தூய ஆவியைப் பொழிந்தீர்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு, அந்த அன்னையின் பரிந்துரையால் நாங்கள் உண்மையுடன் ஊழியம் புரியவும் எங்கள் சொல்லாலும் செயலாலும் உமது பெயரின் மாட்சியைப் பரவச் செய்யவும் ஆற்றல் பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது இரக்கத்தாலும் என்றும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையாலும் நாங்கள் உமக்கு நேர்ந்தளிக்கும் காணிக்கை உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக; அதனால் உமது திரு அவையில் நம்பிக்கையாளரின் எண்ணிக்கை பெருகவும் அவர்கள் நற்பண்புகளின் வளமையால் ஒளிரவும் அருள்வீராக. எங்கள். புனித கன்னி மரியாவின் தொடக்கவுரை (பக். 546 - 547).

திருவிருந்துப் பல்லவி

காண். லூக் 11:27-28
ஆண்டவர் கிறிஸ்துவைக் கருத்தாங் கிய உதரம் பேறு பெற்றது . ஆயினும் இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்
அதிகம் பேறு பெற்றோர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
திருத்தூதரின் அரசியான புனித கன்னி மரியாவின் நினைவாக எங்களின் மீட்புக்கான உதவிகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்முடைய மக்கள் உமது திருவுளத்தை நிறைவேற்றுவதிலும் மனித இனத்துக்குப் பணிபுரிவதிலும் நிலைத்திருந்து, மீட்பை நோக்கி எப்பொழுதும் விரைந்து செல்ல அருள்வீராக. எங்கள்.

==============26^ 9314 ^-----------


11. புனித வானதூதர்கள்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

காண். திபா 102:20 ஆண்டவரின் வானதூதர்கள் அனைவருமே அவரைப் போற்றுங்கள்; ஆண்டவரின் குரலைக் கேட்டு, அவர் சொற்படி நடக்கும்
வலிமைமிக்கோரே, அவரைப் போற்றுங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வானதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் அவர்களின் பணிகளை வியத்தகு முறையில் அமைத்துள்ளீரே; இவ்வாறு அவர்கள் விண்ணகத்தில் உமக்கு என்றும் பணி புரிவது போல், மண்ணகத்தில் எங்கள் வாழ்வைப் பாதுகாக்கக் கனிவுடன் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: வானதூதர்களின் பணியால் மாண்புக்கு உரிய உமது திருமுன் கொண்டு வரப்பட்ட இக்காணிக்கை உமக்கு ஏற்புடையதாகவும் எங்கள் மீட்புக்குப் பயன் உள்ளதாகவும் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

திபா 137:1 என் இறைவா, வானதூதர் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் இந்த உணவின் ஆற்றலால் வலிமை பெற்ற நாங்கள் வானதூதர்களின் உண்மையான பாதுகாப்பால் மீட்பின் பாதையில் துணிவுடன் முன்னேறிச் செல்வோமாக. எங்கள். அக்டோபர் 2-ஆம் நாளுக்கு உரிய புனித காவல் தூதர்கள் திருப்பலி நேர்ச்சித் திருப்பலியாகவும் பயன்படுத்தப்படலாம் (பக். 825 - 826).

12. புனிதத் திருமுழுக்கு யோவான்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

லூக் 1:15,14
அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப் படுவார். அவரது பிறப்பில் பலரும் மகிழ்ச்சியடைவர்.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உமது குடும்பம் மீட்புப் பாதையில் முன்னேறிச் செல்ல நீர் அருள்புரிய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: முன்னோடியான புனிதத் திருமுழுக்கு யோவானின் அறிவுரைகளைப் பின்பற்றி, அவர் முன்னறிவித்த எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பாதுகாப்புடன் அது வந்து சேர்வதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதத் திருமுழுக்கு யோவானின் நினைவுக்கொண்டாட்டத்தில் உம் மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; அதனால் நாங்கள் மறைபொருளாகக் கொண்டாடுவதை ஆர்வமிக்க ஊழியத்தால் செயல்படுத்துவோமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

:
லூக் 1:68 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றப்பெறுவாராக:
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புனிதமிக்க இத்திருவிருந்தால் நிறைவு பெற்றுள்ள எங்களுக்குப் புனிதத் திருமுழுக்கு யோவானின் சிறப்பான வேண்டல் துணை நிற்பதாக: எங்கள் பாவங்களைப் போக்கவிருக்கும் செம்மறி உம் திருமகனே என்று முன்னறிவித்த அவர் தமது வேண்டலால் உம் திருமகனின் அருள் துணையை எங்களுக்குப் பெற்றுத் தருவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

13. புனித யோசேப்பு

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி


காண். லூக் 12:42 இதோ! நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான ஊழியரை
ஆண்டவர் தம் வீட்டுக்குத் தலைவராக ஏற்படுத்தினார்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, சொல்லற்கரிய உமது பராமரிப்பினால் புனித யோசேப்பை உம் திருமகனின் புனிதமிக்க அன்னைக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கத் திருவுளமானீரே; பாதுகாவலராக இம்மண்ணில் அவரை வணங்கும் நாங்கள் அவரையே விண்ணகப் பரிந்துரையாளராகப் பெற்றிடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

தூயவரான தந்தையே, உமது புகழ்ச்சிப் பலியைச் செலுத்த வந்திருக்கும் நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: இவ்வுலகில் தந்தையாக இருந்து உம் ஒரே திருமகனைப் பேணிக் காக்க நீர் தந்த புனித யோசேப்பின் மன்றாட்டினால் எங்கள் பணிகளில் நாங்கள் ஊக்கம் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

பிக்கைக்கு உரிய நல்ல பணியாளரே, உம் தலைவரின் மகிழ்ச்சியில் பங்குகொள்ளும்.
511 5

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது மாண்புக்கு உரிய மறை நிகழ்வுகளை நிறைவேற்றுவதில் நேர்மையாளரும் உமக்குக் கீழ்ப்படிதல் உள்ளவருமான புனித யோசேப்பு பணி புரிந்தார்; உயிர் அளிக்கும் இவ்வருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்றுள்ள நாங்கள் அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் உதவி பெற்று நீதியிலும் புனிதத்திலும் என்றும் உமக்கென வாழ்வோமாக. எங்கள்.

தேவைக்கு ஏற்ப மார்ச் 19 (பக். 714)

அல்லது மே முதல் நாளில் உள்ள புனித யோசேப்பு - தொழிலாளர் திருப்பலியையும் பயன்படுத்தலாம் (பக். 7 29).
14. புனித திருத்தூதர் அனைவரும்
இத்திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி


யோவா 15:16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நீங்கள் சென்று கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன், என்கிறார் ஆண்டவர் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா ).

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே,
புனிதர்களான திருத்தூதர்களை இடையறாது மாட்சிப்படுத்துவதில் உமது திரு அவை என்றும் பெருமகிழ்வு கொள்வதாக; இவ்வாறு அது அவர்களுடைய போதனையாலும் பேறுபயன்களாலும் மகிழ்வடைவது போல, அவர்களுடைய தலைமையின்கீழ் வழிநடத்தப்படுவதாக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய ஆவியை
திருத்தூதர்கள் மீது மிகுதியாகப் பொழிந்தது போல எங்கள் மீதும் பொழிந்தருளும்; அதனால் அவர்கள் வழியாக எங்களுக்குத் தந்தவற்றை எல்லாம் நாங்கள் நன்கு அறிந்து, இப்புகழ்ச்சிப் பலியை உமது மாட்சிக்காகத் தக்க விதத்தில் ஒப்புக்கொடுப்போமாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

மத் 19:28 என்னைப் பின்பற்றிய நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் நடுவர்களாய் அரியணைகளில் வீற்றிருப்பீர்கள்,
என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, திருத்தூதரின் போதனையிலும் அப்பம் பிடுதலிலும் இறைவேண்டலிலும் அக்களிப்புடனும் எளிமையான இதயத்துடனும் நாங்கள் நிலைத்திருக்கச் செய்வீராக. எங்கள்.

15. புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி


ஆண்டவரே, திருத்தூதரான பேதுருவும், பிற இனத்தாரின் மறை வல்லு நரான பவுலும் உமது திருச்சட்டத்தை எங்களுக்குக் கற்றுத் தந்தனர்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, திருத்தூதர்களான பேதுரு, பவுல் எனும் புனிதர்களின் பரிந்துரைகளால் நாங்கள் உதவி பெற்றிட உம்மை வேண்டுகின்றோம்: அவர்கள் வழியாக விண்ணகக் கொடைகளைத் தொடக்கத்தில் உமது திரு அவைமீது பொழிந்தீரே; அதனால் அவர்கள் வழியாகவே முடிவில்லா மீட்பின் உதவிகளை உமது திரு அவைக்கு வழங்குவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களான பேதுரு, பவுல் எனும் புனிதர்களின் நினைவுக்கொண்டாட்டத்தில் பெருமை கொள்ளும் நாங்கள் இக்காணிக்கைகளை உமது திருப்பீடத்துக்குக் கொண்டு வருகின்றோம். மீட்பு அடைய எங்களுக்கு உள்ள தகுதியைக் குறித்து அச்சமுறும் நாங்கள் உமது கனிவிரக்கத்தால் மீட்பு அடைவோம் என்பதில் மகிழ்ச்சி அடைவோமாக. எங்கள்.

==============5^ 9322 ^-----------

புனித பேதுரு, திருத்தூதர்


காண். யோவா 21:15,17

திருவிருந்துப் பல்லவி

யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என் மீது அன்பு செலுத்துகிறாயா? ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே; ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மை அன்பு
செய்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர்களின் படிப்பினையால் உம் நம்பிக்கையாளரை ஒளிர்வித்தீரே; இவ்வாறு நாங்கள் விண்ணக அருளடையாளங்களால் ஆற்றல் பெற அருள்புரிவீராக. எங்கள்.

16. புனித பேதுரு, திருத்தூதர் இத்திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி

லூக் 22:32
சீமோன் பேதுருவிடம் ஆண்டவர் கூறினார்: "நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்; நீ மனந்திரும்பியபின் உன்
சகோதரர்களை உறுதிப்படுத்து."

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் திருத்தூதரான புனித பேதுருவுக்கு விண்ணரசின் திறவுகோல்களைக் கொடுத்து, கட்டவும் அவிழ்க்கவும் தேவையான தலைமைப் பதவியின் அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தீரே; அதனால் நாங்கள் அவருடைய பரிந்துரையின் உதவியால், எங்களுடைய பாவத் தளைகளிலிருந்து விடுதலை பெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித பேதுரு உயிருள்ள கடவுளாகிய உம்மையும் உம் திருமகனையும் ஏற்று அறிக்கையிட, அவருடைய உள்ளுணர்வுகளுக்கு ஒளி தந்து கற்பித்தீரே; தம்முடைய மாட்சிக்கு உரிய பாடுகளால் தம் தலைவருக்குச் சான்று பகரவும் செய்தீரே; அவர் நினைவாக உம் மக்களாகிய நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையைக் கனிவாய் ஏற்றிட அருள்புரிவீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். மத் 16:16,18 பதுரு இயேசுவிடம், "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, "நீ பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் , என்று மறுமொழி கூறினார்

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதரான புனித பேதுருவை நாங்கள் வணக்கத்துடன் நினைவுகூருகின்றோம்; மீட்பு அளிக்கும் திருவிருந்தில் பங்குபெற்ற நாங்கள் மகிழ்ச்சியுடன் உம்மை வேண்டுகின்றோம்: உம் திருமகன் மட்டுமே வாழ்வுதரும் வார்த்தைகளைக் கொண்டிருப்பதால், நாங்கள் அவரை என்றும் உறுதியாகப் பற்றிக்கொள்வோமாக; இவ்வாறு நிலையான பேரின்ப மேய்ச்சல் நிலத்துக்கு உமது மந்தையின் ஆடுகளாகிய நம்பிக்கையாளரை நீர் கொண்டு சேர்ப்பீராக. எங்கள்.

17. புனித பவுல், திருத்தூதர்

இத்திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி


2 திமொ 1:12; 4:8 நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன்; நேர்மையான அந்த நடுவர் என்னிடம் ஒப்படைத்ததை அந்நாள்வரை
காத்திட வல்லவர் என்னும் உறுதி எனக்கு உண்டு.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, திருத்தூதரான புனித பவுலை நற்செய்தியின் தூதராக வியத்தகு முறையில் முன்குறித்து வைத்திர அவர் அரசர்கள் முன்னிலையிலும் பிற இனத்தார் நடு விலும் கொண்டு சென்ற அதே நம்பிக்கையால் உலகம் முழுவதும் ஊக்கம் பெறவும் உமது திரு அவை இடையறாது வளர்ச்சி பெறவும் அருள்வீராக. உம்மோடு. -

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாடும் நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது மாட்சியைப் பரப்பிடத் திருத்தூதரான புனித பவுலை இடையறாது ஒளிர்வித்தது போல, ஆவியார் நம்பிக்கையின் ஒளியால் எங்களை நிரப்புவாராக. எங்கள். திருத்தூதர்களின் தொடக்கவுரை (பக். 548).

திருவிருந்துப் பல்லவி

கலா 2:20 இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் வாழ்கிறேன். அவர் என் மீது அன்புகூர்ந்தார்; எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டு நாங்கள் ஊட்டம் பெற்றுள்ளோம்; அதனால் கிறிஸ்துவே எங்கள் வாழ்வாக இருக்கவும் அவர் அன்பிலிருந்து நாங்கள் என்றும் பிரியாது, புனித திருத்தூதரின் அறிவுரையால் எங்கள் சகோதரர் சகோதரிகள் மீது அன்புகொண்டு ஒழுகவும் செய்வீராக. எங்கள்.

18. புனித திருத்தூதர் ஒருவர்

இத்திருப்பலியில் சிவப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும். அவரது விழாத் திருப்பலியைப் பயன்படுத்துக. ஆனால் அவ்விழா மற்றொரு திருத்தூதருடன் இணைந்து கொண்டாடப்பட்டால் திருப்பலிப் பாடங்கள் அவருக்கு அத்துணைப் பொருத்தமாக இல்லை எனில், கீழ்க்கண்ட திருப்பலி சொல்லப்படும்.

வருகைப் பல்லவி

திபா 95:2-3
ஆண்டவரின் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்; பிற இனத்தாரிடையே அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய திருத்தூதர் புனித (பெயர்) . . . உம் திருமகன் மீது கொண்டிருந்த உண்மையான நம்பிக்கையை எங்களில் உறுதிப்படுத்தியருளும்; மேலும் அவரது வேண்டலால் உமது திரு அவை எல்லா இனத்தவருக்கும் மட்பு அளிக்கும் அருளடையாளமாகத் திகழ்வதாக. உம்மோடு .

ஆண்டவரே, திருத்தூதர் புனித (பெயர்) . . . இன் நினைவாக இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டுவந்துள்ள நாங் உம்மை வேண்டுகின்றோம்: அவரது எடுத்துக்காட்டால் கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நம்பிக்கையின் நற்செய்திக்காக ஒருமித்து உழைக்கச் செய்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

லூக் 22:29-30 என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன்; அதனால் என் ஆட்சியில் நீங்கள்
என்னோடு அமர்ந்து உண்டு குடிப்பீர்கள், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, திருத்தூதர் புனித (பெயர்) ...... இன் நினைவைக் கொண்டாடும் நாங்கள் நிலையான மீட்பின் பிணையை உட்கொண்டுள்ளோம்; இது எங்கள் இவ்வுலக வாழ்வுக்கும் மறுவுலக வாழ்வுக்கும் ஏற்ற துணையாய் அமைந்திட அருள்புரிவீராக. எங்கள்.

19. புனிதர் அனைவரும்

இத்திருப்பலியில் வெண்ணிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.

வருகைப் பல்லவி


கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய புனிதர்களின் ஆன்மாக்கள் விண்ணகத்தில் மகிழ்வுறுகின்றன; அதனால்
கிறிஸ்துவோடு என்றென்றும் அக்களித்து மகிழ்கின்றன.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தூய்மை அனைத்துக்கும் ஊற்றே, உம் புனிதர்கள் இவ்வுலகில் பல்வேறு அருளையும் விண்ணுலகில் மாட்சிக்கு உரிய ஒரே பரிசையும் பெற்றுள்ளா" இவர்களின் பரிந்துரையால் எங்கள் அழைப்பில் நாங்கள் ஒவ்வொருவரும் தகுதியுடன் வாழச் செய்தருள்வ!'' உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, புனிதர் அனைவரின் பெருமைக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகள் உமக்கு உகந்தனவாய் இருப்பனவாக; இவ்வாறு அப்புனிதர்கள் | ஏற்கெனவே சாகாத்தன்மையைப் பெற்றுவிட்டனர் என்பதை நம்புகின்ற நாங்கள் எங்களது மீட்பில் அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதையும் உணரச் செய்வீராக. எங்கள். புனிதரின் தொடக்கவுரை (பக். 550 - 551).

திருவிருந்துப் பல்லவி

மத் 5:8-10 தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்; நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்
பேறு பெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, நீர் எங்களுக்கு ஒரே அப்பத்தினால் உணவூட்டி, ஒரே எதிர்நோக்கால் தொடர்ந்து ஊக்கம் அளிக்கின்றீர்; உமது அருளால் எங்களை உறுதிப்படுத்தியருளும்: இவ்வாறு உம் புனிதர்கள் அனைவரோடும் கிறிஸ்துவில் ஒரே உடலும் ஒரே உள்ளமும் கொண்டு, அவரோடு மாட்சிக்கு நாங்கள் உயிர்த்தெழச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


=============↑ பக்கம் 1187

====================


image