image

 

பொது

1. வசதியை முன்னிட்டு, ஒவ்வொரு திருப்பலியும் அதற்கு உரிய பல்லவிகள், மன்றாட்டுகளோடு முழுமையாக இங்கே தரப்பட்டுள்ளது. ஆயினும் இவற்றில் உள்" " எல்லாப் பாடங்களுக்கும், சிறப்பாக மன்றாட்டுகளுக்கும் பதிலாக வேறு பாடங்க சூழ்நிலைக்கு ஏற்றவாறு பால், எண் முதலிய மாற்றங்களோடு பயன்படுத்தலாம்:

அடக்கம் அல்லது ஆண்டு நிறைவுக்கு ஏற்ற மன்றாட்டுகளை வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தினால், பொருத்தமற்ற சொற்களை அகற்றிவிடுக.

2. பாஸ்கா க ல் தேவைக்கு ஏற்ப விட்டுவிடலாம். பாஸ்கா காலத்தில் பல்லவிகளின் இறுதியில் உள்ள "அல்லேலூயா வை தேவைக்கேற்ப விட்டுவிடவும்

1. அடக்கச் சடங்கு

கிறிஸ்தவரின் மரணம் இறப்பதிலிருந்து உயிர்ப்புக்கு கடந்து செல்லும் பாஸ்காப் பயணமாகும். இந்தப் பாஸ்காப் பண்பை நன்கு உணர்த்தும் முறையில், திருநூல் வாசகங்களையும் சங்கீதங்களையும் கொண்டு இறந்தோர்க்கு இறையருளையும் வாழ்வோருக்கு ஆறுதலையும் பெற்றுத் தருவோம்.

இறந்தவர் இல்லத்தில்

குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே.
எல் : ஆமென்.
குரு : நம் ஆண்டவரர் இயேசுகிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று, அவரைப் போற்றுவோம்.

(தீர்த்தம் தெளித்தபின், 130-ம் திருப்பாடல்)

குரு : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 
எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

1.ஒருவர் : ஆண்டவரே, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே, என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

2.ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர், மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பவர்.

எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

3. ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன், என் நெஞ்சம் காத்திருக்கின்றது, அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

4. விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, ஆம்,விடியலுக்காய் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞசம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

5. இஸ்ரயேலே ! ஆண்டவரையே நம்பியிரு. பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலை மீட்பவர் அவரே.

எல் : ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம்மோடும் இருப்பாராக.

குரு : செபிப்போமாக.

ஆண்டவரே, உமது இரக்கத்தை கெஞ்சி மன்றாடும் எங்களுக்குச் செவிசாய்த்தருளும். உமது கட்டளைப்படி இவ்வுலகை விட்டகன்ற உம் அடியார் (பெயர்) உடைய ஆன்மாவை அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் வரவேற்று, உம் புனிதருடைய தோழமையில் சேர்த்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

குரு: செபிப்போமாக.

இரக்கம் மிகுந்த தந்தையே, ஆறுதல் அளிக்கும் இறைவா, நீர் எம்மீது முடிவில்லா அன்பு கூர்ந்து, சாவின் நிழலையே வாழ்வின் வைகறையாக மாற்றுகின்றீர். இன்னலில் உழன்று ஏங்கும் உம் அடியாரைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். (ஆண்டவரே எங்கள் அடைக்கலமும் ஆற்றலும் நீரே, இருளும் துயரும் நிறைந்த எங்கள் அழுகையை மாற்றி, நாங்கள் ஒளியும் அமைதியும் பெறும் வண்ணம் எங்களோடு இருந்தருள்வீராக.)

எங்கள் ஆண்டவராகிய உம் திருமகன் எங்கள் மரணத்தைக் தம் மரணத்தால் அழித்து, தம் உயிர்ப்பினால் மீண்டும் எங்களுக்கு வாழ்வு அளித்தார். ஆதலால் எங்கள் கண்ணீரெல்லாம் துடைக்கபபெற்று, நாங்கள் இவ்வுலக வாழ்வின் இறுதியில் எங்கள் உறவினரோடு வானகம் வந்து சேருவதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

 

ஆலயத்துக்குப் பவனி

இறைவா உமது அடியார் இவர்க்கு 
இரங்கி அமைதி அளித் தருளும்,
மண்ணக கோயிலில் ஏற்பது போல,
விண்ணக கோயிலில் இடம் அருள்வீர்.

சரணங்கள்

திருநீராடி புனிதம் அரடந்து,
திருஅருட் சாதனம் பலவும் பெற்று
அழியா வாழ்வை பெற்ற தளத்தில், 
அழியும் உடலைச் சுமந்து வந்தோம்!

நித்திய வாழ்வின் உணவை உண்டு,
நித்தம் உமது வார்த்தையைக் கேட்டு
இனிவரும் வாழ்வில் நம்பிக்கை தந்த
இல்லத்தில் இவரை கொண்டு வந்தோம்.

பாவப் பொறுத்தல் பல்முறை தந்து, 
பரமன் அன்பை இவருக்கு அருளிய
தலமாம் கோயில் நோக்கியே வந்தோம்
தயவாய் இவர் பிழை பொறுத் தருள்வீர்.

கிறிஸ்துவின் மறைஉடல் அங்கம் இவரை,
திருச்சபை மக்கள் பரிவுடன் கொணர்ந்தோம்
என்றும் அழியா கிறிஸ்து உடல் போல் 
இன்றும் இவர் மகிமை பெறவே !

வானவர் கூடி வரவேற்றிவரை
ஆபிரகாமின் மடியில் வளர்த்தி, 
ஏழை லாசர் அடைந்த பேற்றை,
எம்மவர் இவரும் அடைந்திடவே !

எரியும் தீபம் கரத்தில் ஏந்தி,
ஏனத்தில் எண்ணெய் நிறையத் தங்கி
நினையா நேரம் வந்திடும் தலைவரை
அணையா விளக்குடன் சந்திக்கச் செல்வோம் !

இறந்தவர் கிறிஸ்தவ விசுவாசியாக இருந்தால் இறந்தவரின் தலைப்பகுதி ஆலயத்தி தலைவாசலை நோக்கி இருக்கவேண்டும், இறந்தவர் ஆயர் அல்லது திருநிலைப்படுத்தப்பட்ட குரு அல்லது திருத்தொண்டராக இருந்தால் தலைப்பகுதி பீடத்தை நோக்கி இருக்கவேண்டும்.

திருப்பலி நடைபெற்றால்:

தொடக்கப் பாடல்

நிறைமிகு அமைதியில் சேர்ந்திடுவாய் 
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்!

இறைவனில் இறப்போர் பேறுபெற்றோர் - இனி
இவருக்கு மீண்டும் உழைப்பி (ல்) லையோ !
ஆற்றிய நன்மைகள் பின்தொடர - இளைப்
பாற்றியை இவர்கள் கண்டிடுவர்!

சாவே , உனது கொடுக்கெங்கே? எனச்
சாற்றும் பறைகள் அதிர்ந்திடுமே !
உயிர்ப்பின் எக்காளம் ஒலித்தங்கே - இவ்
உலகோர் தம்மை எழுப்பிடுமே !

விண்ணக விருந்தின் முன்சுவையை - இங்கு
மண்ணிலே நுகர்ந்திட விரைந்திடுவோம் !
எண்ணில்லா புனிதர் கூட்டத்திலே அங்கு
கண்ணீரும் சாவும் மறைந்திடுமே !

 

தியானப் பாடல் :

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் 
தீமையான தெதற்கும் அஞ்சேன்

1. என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு 
பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார் 
என் களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு 
என்னை அழைத்துச் செல்கின்றார் 
எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார் 
தம் திருப்பெயரின் பொருட்டு என்னை 
தம் நேரிய வழியில் செலுத்துகின்றார்

2. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் 
தீமையானதெதற்கும் அஞ்சேன் 
ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர் 
உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன

3. என் எதிரிகள் காண நீர் எனக்கு 
விருந்தொன்றைத் தயாரிக்கின்றீர் 
என் தலைக்கு எண்ணெய் பூசினீர் 
என் கிண்ணம் நிரம்பி வழிகின்றது

4. கருணையும் அருளும் என்னைத் தொடரும் 
என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும் 
ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன் 
ஊழி ஊழிக் காலமும் குடியிருப்பேன்

 

 

காணிக்கைப் பாடல் :

வாழ்வோர் இறந்தோர் நலம் பெற இறைவா,
வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை !

சரணங்கள்

நிலத்தில் விழுந்த கோதுமை மணி,
நிறைந்த பலனை தந்திடவே,
மடிந்து மண்ணில் மடிந்தால்தான்
மக்கள் பலரின் உணவாகும்!

மண்ணில் புதைந்த இறைமகனும்,
மகிமை கொண்N;ட உயிர்த்து வந்தார் !
இறந்த அவரின் அடியாரும்,
இனிதே மகிமை அடைந்திடுவார்!

திருவிருந்துப் பாடல்:

சகா வரம் தரும் உணவு நல்
தேவாமிர்த உணவு !

சரணங்கள்

பாலை நிலத்தில் அன்று,
பரமன் தந்தார் உணவு!
போதிய உணவும் உண்டு,
போனார் மக்கள் மாண்டு!

வானம் பொழிந்த உணவு,
வாழ்வு நல்கும் உணவு!
இறைவன் அன்றோ உணவு,
இதனால் அங்கு நிறைவு!

உடலே உண்மை உணவு,
உதிரம் உண்மைப் பானம்
அருந்தி அவரில் நிலைத்தால்
அழியா உயிர்ப்பு உண்டு!

ஆண்டவர் வருகையை நினைத்து
அருந்தும் ஆயத்த விருந்து
போகும் வழியின் உணவு
சேரும் வீட்டின் முன்சுனையே!

இனிவரும் விருந்தில் நாமும்,
இறைவனை என்றும் புகழ்ந்து
இனிமேல் சாவே இல்லா
இல்லம் வாழ்வோம் இனிது !

(இத்திருப்பலியில் பங்கேற்பவர், ஏற்கெனவே வேறொரு திருப்பலியில் நன்மை வாங்கிருப்பினும், மறுமுறையும் இத்திருப்பலியில் நன்மை உட்கொள்ளலாம். நன்றி மன்றாட்டு முடிந்ததும், தொடர்ந்து குருவும் பணியாளரும் சவப் பெட்டி அருகே சென்று மக்களை நோக்கி நிற்கின்றனர்.)

குரு : விசுவாசிகளின் வழக்கப்படி, இறந்தோரை நல்லடக்கம் செய்யும் கடமையை நிறைவேற்றக் கூடியிருக்கும் நாம், இறைவனைப் பக்தியுடன் மன்றாடுவோம். அனைத்தும் அவருக்கென்றே, உயிர் வாழ்கின்றன. நம் சகோதரரின் (சகோதரியின்) உடலை நலுவுற்ற நிலையில் நாம் அடக்கம் செய்வதாலும், புனிதரின் வரிசையில் இது வல்லமையுள்ளதாக உயிர்த்தெழச்செய்வாராக. இவரது ஆன்ம புனிதரின் கூட்டத்திலே இடம்பெறக் கட்டளையிடுவாராக. தீர்ப்பிடும்போது இறைவன் இவருக்கு இரக்கம் காட்டுவதால் சாவே இவருக்கு மீட்பு அளிப்பதாகி, பாவக்கடன் ஒழிவதாக. பிதாவிடம் இவர் அன்புறவு கொள்ள நல்லாயன் இவரை அழைத்துச் செல்வாராக. இவர் என்றென்றும் வாழும் மன்னரின் பரிவாரத்தில் முடிவற்ற இன்பமும் புனிதரின் தோழமையும் பெற்று மகிழ்வாராக.

பிரியாவிடை எதிர் பாடல் :

இறைவனின் புனிதரே, துணை நிற்க வருவீர்,
தேவனின் தூதரே, எதிர் கொண்டு வருவீர்!

குரு : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

எல் :உம்மைத் தம்மிடம் அழைத்த கிறிஸ்து
உம்மை ஏற்றுக் கொள்வாராக.
தூதரும் உம்மை ஆபிரகாமின்
மடியில் கொண்டு சேர்ப்பாராக!

குரு : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

எல் : நித்திய இளைப்பாற்றியை ஆண்டவரே,
இவருக் கின்று அளித்திடுவீரே,
முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிர்க.

குரு : இவர் ஆன்மாவை ஏற்றுக் கொண்டு
உன்னதர் திருமுன் ஒப்புக் கொடுங்கள்.

(அல்லது கீழ்கண்ட பாடல்)

சென்று வா கிறிஸ்தவனே உலகை
வென்றுவிட்டாய் நீ விசுவாசத்தால்!

சரணங்கள்

உற்றார் உறவினர் நண்பரெல்லாம்
சுற்றி நின்று வழியனுப்ப,
உற்ற துன்பத்தில் ஆறுதலாய்,
உதவும் திருச்சபை அருகிருக்க!

இறைவனின் புனிதரே துணைவருவீர்!
தேவனின் தூதரே வந்தழைப்பீர்!
அடியார் ஆன்மா ஏற்றிடுவீர்!
ஆண்டவர் திருமுன் சேர்த்திடுவீர்!

படைத்த தந்தை உனை ஏற்பார்!
மீட்ட திருமகன் உனைக் காப்பார்!
அர்ச்சித்த ஆவியும் உனைச் சூழ்வார்!
அனைத்து புனிதரும் உனைச் சேர்வார்!

(பாடல் முடிந்ததும் குரு தொடர்ந்து செபிப்பார்.)

குரு : கிறிஸ்துவுக்குள் இறந்த அனைவரோடும் இவரும் இறுதி நாளில் உயிர்த் தெழுவார் என்னும் உறுதியான நம்பிக்கையுடன், இரக்கம் மிகுந்த தந்தையே, உம்முடைய கைகளில் எம் சகோதரரின் (சகோதரியின்) ஆன்மாவை ஒப்படைக்கிறோம்.

எனவே, ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்குத் தயவாய் செவி சாய்த்து, உம் அடியாருக்குப் பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்தருளும். மேலும், இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் கிறிஸ்துவை சந்தித்து, உம்மோடும் உம் சகோதரரோடும் (சகோதரியோடும்) எந்நாளும் ஒன்று சேர்ந்திருக்குமட்டும் விசுவாசம் நிறைந்த சொற்களால் ஒருவரையொருவர் தேற்றிக் கொள்ளச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

(பிரியாவிடைச் சடங்கு முடித்து இறந்தவர் உடலைக் கல்லறைத் தோட்டத்திற்குத் தூக்கி செல்கையில் கீழ்வரும் பாடல் இடம்பெறலாம்.)

கல்லறைத் தோட்டத்திற்குப் பவனி

இறைவா இவரது திருப்பயணம் 
இனிதே அமைந்திட இறைஞ்சுகிறோம்!

சரணங்கள்

பாஸ்காப் பயணம் இதுவே தான்.
கிறிஸ்தவர் செல்லும் வழி இது தான்,
இறப்பைக் கடந்து உயிர்ப்பிற்கு,
இசைந்து செல்லும் வழி இது தான்.

அடிமைத் தலையை அறுத்தெரிந்து,
ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள்,
உரிமை நாடு கடந்து சென்றார்,
உண்மை இங்கு நடப்பது தான்!

சிலுவை சுமந்த வழியினிலே,
சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே!
சிலுவை பதித்த சுவடுகளில்
சீடர் இருவரும் செல்கின்றார்!

துன்பத்தின் வழியாய் திருச்சபையும்,
தூரப் பயணம் போவது போல்,
பயணத்தின் முடிவில் இவ்வடியார்
பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம்!

விண்ணக விருந்து உண்டிடவே,
விரைந்து செல்லும் இவ்வடியார்,
திருமகன் வந்து பார்க்கையிலே,
திருமண உடையுடன் திகழ்ந்திடவே!

ஆண்டவர் அழைத்த நேரத்திலே,
அணையா விளக்குடன் ஆயத்தமாய்,
உடனே செல்லும் ஊழியராம்,
உண்மையில் பேறுபெற்றவரே!

அந்நிய நாட்டின் எல்லைதனை,
அடியார் இவரும் கடந்துவிட்டார்.
தாயகம் திரும்பும் பயணியிவர்,
தவறாது தன்வீடு சேர்ந்திடவே!

எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான்!
என்றும் அவரோ டிருப்பதுதான்!
இழப்பு அனைத்தும் அவரின்றி
இறப்பு ஆதலின் ஆதாயம்!

கல்லறைத் தோட்டத்தில்

குரு : செபிப்போமாக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் கல்லறையில் மூன்று நாள் துயில் கொண்டதால், உம்மீது விசுவாசம் கொண்ட அனைவரின் கல்லறைகளையும் அர்ச்சிக்கின்றீர். எனவே, உடல் அடக்கத்திற்குப் பயன்படும் இக்கல்லறைகள் உயிர்த்தெழும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. நீர் உம் அடியாரை உயிர்ப்பித்து இவருக்குப் பேரொளி தரும் அந்த நாள் மட்டும் இவர் கல்றையில் அமைதியுடன் துயில் கொண்டு இளைப்பாறச் செய்தருள்வீராக. உயிர்ப்பும் உயிரும் நீரேயாதலால் இவர் உயிர்த்தெழுந்த பின் உம் திருமுக ஒளியில் விண்ணகத்தின் நித்திய ஒளியைக் காண்பாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரே. உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

(குரு : கல்லறைக் குழியின் மீது தீர்த்தம் தெளித்து, தூபம்காட்டுவார்)

குரு : நம் சகோதரரை (சகோதரியை) இவ்வுலக வாழ்வினின்றும் தம்மிடம் அழைத்துக் கொள்ள எல்லாம் வல்ல இறைவன் திருவுளம் கொண்டதால், இவர் உருவான மண்ணிற்கே திரும்பிச் செல்லும் படி இவர் உடலை நிலத்திற்கு கையளிக்கிறோம். ஆவியினும், இறந்தோரிடமிருந்து தலைப்பேறாக உயிர்த்தெழுந்த கிறிஸ்து, தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார். ஆதலால் நம் சகோதரரை (சகோதரியை) ஆண்டவரிடம் ஒப்படைப்போம். ஆண்டவர் இவரைத் தம் அமைதியினுள் ஏற்றுக்கொள்வாராக, இவரது உடலையும் இறுதி நாளில் மகிமையுடன் உயிர்த்தெழச் செய்வாராக.

விசுவாசிகள் மன்றாட்டு :

உயிர்ப்பும் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான். உயிர் வாழ்க்கையில் விசுவாசம் கொள்பவன் எவனும் ஒருபோதும் சாகான் என்று உரைத்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம் சகோதரருக்காக (சகோதரிக்காக) மன்றாடுகிறோம்.

- இறந்து போன லாசருக்காக கண்ணீர் சிந்தினீரே, எங்கள் கண்ணீரையும் துடைக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

- இறந்தோர் உயிர் பெற்றெழச் செய்தீரே, எங்கள் சகோதரருக்கு (சகோதரிக்கு) நித்திய வாழ்வளிக்க உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

- மனந்திரும்பிய கள்ளனுக்கு நீர் வானகம் தருவதாய் உறுதியளித்தீரே, எங்கள் சகோதரரையும் (சகோதரியையும்) வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

- எங்கள் சகோதர ( சகோதரியை ) ஞானஸ்நான நீரினால் கழுவி, திருப்பூசுதலால் முத்திரையிட்டீரே, இவரை வானகம் சேர்த்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

- எம் சகோதரருக்கு (சகோதரிக்கு) உம் உடலையும் இரத்தத்தையும் திரு விருந்தாக அளித்தீரே, வானரவின் விருந்திலும் இவரை அமரச் செய்தருள உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

- எம் சகோதரரின் (சகோதரியின்) பிரிவாற்றமையால் துயருரும் நாங்கள் விசுவாசத்திலும், நித்திய வாழ்வின் நம்பிக்கையினாலும் ஆறுதல் பெற உம்மை மன்றாடுகிறோம்.
எல் : ஆண்டவரே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

(அனைவரும் சேர்ந்து கர்த்தர் கற்பித்த செபம் சொல்ல, குரு இறந்தவரின் உடல்மீது தீர்த்தம் தெளித்து, தூபம் காட்டுகிறார்.)

செபிப்போமாக:
ஆண்டவரே, உமது திருவுளப்படி வாழ்ந்து இறந்த உம் அடியார் தம் தீய செயல்களுக்குத் தண்டனை பெறாதபடி இரக்கம் காட்டியருளும். இவரது மெய்யான விசுவாசம் இவ்வுலகில் இவருக்கு விசுவாசிகளின் கூட்டத்தில் இடம் அளித்தது போல், உமது இரக்கம் இவரை மறுவுலகில் வானதூதரின் கூட்டத்திலும் சேர்க்க வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல் : ஆமென்.

முதல் : ஆண்டவரே, நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும்.
துணை : முடிவில்லாத ஒளி இவர்மேல் ஒளிர்வதாக.

(இறந்தவரின் உடலை கல்லறையில் வைக்கும் போது அல்லது குழியை மூடும் போது கீழ்வரும் பாடல் பாடலாம்)

இறுதிப் பாடல் :

கல்லறை மேட்டினில் மனுக்குலம்,
கண்ணீர் சிந்தும் காட்சியினை,
கருணை கண்ணால் நோக்கினார்,
கவலையை கர்த்தர் போக்கினார்.

அன்று கல்லறை அருகினில் 
அவரும் கண்ணீர் விட்டழுதார்.
துன்புறு மனிதர் கண்ணீரை,
துடைக்க அன்றே முன்வந்தார்.

நானே உயிரும் உயிர்ப்பாவேன்,
நம்புவோர் இதனை இழந்திடார்,
என்றே உரைத்து இறந்தவரை
எழுப்பி உண்மை அறிவித்தார்.

மூன்று நாட்கள் கல்லறையை
மூடிக் கிடந்த இருளகற்றி
முன்பே உரைத்த வாக்கிக்படி
மூவுல காள்பரன் உயிர்த்து வந்தார்.

 


கடன் திருநாளாகிய பெருவிழா நாள்கள், புனித வாரத்தின் பெரிய வியாழன், பாஸ்காவின் மன்று நாள்கள், திருவருகைக் கால, தவக் கால, பாஸ்கா கால ஞாயிற்றுக்கிழமைகள் ஆகியவை தவிர, பிற எல்லா நாள்களிலும் இந்த அடக்கத் திருப்பலி பயன்படுத்தப்படலாம். -

அ. பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

வருகைப் பல்லவி


காண். 4 எஸ் 2:34-35 நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும்,
ஆண்டவரே. முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எல்லாம் வல்ல தந்தையே, உம் திருமகன் இறந்து உயிர்த்தெழுந்தார் என நாங்கள் நம்பி அறிக்கையிடுகின்றோம்; அதனால் அவரில் துயில் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . இம்மறைநிகழ்வு வழியாக அவரோடு உயிர்த்தெழும் பேரின்பம் அடைய இரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அல்லது

இறைவா, எப்பொழுதும் இரக்கம் காட்டுவதும், மன்னிப்பு அளிப்பதும் உமக்கு இயல்பாகும்; (இன்று) நீர் உம்மிடம் அழைத்துக்கொண்ட உம் அடியார் (பெயர்) . . . க்காக உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர் உம்மை எதிர்நோக்கி நம்பிக்கையோடு வாழ்ந்ததால் இவரைத் தம்முடைய உண்மையான தாயகத்துக்கு அழைத்துச் சென்று என்றென்றுமுள்ள மகிழ்ச்சியைத் துய்த்திடச் செய்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்)... இன் மீட்புக்காக உம்மைக் கனிவுடன் கெஞ்சி மன்றாடி இக்காணிக்கைகளை உமக்குப் பணிந்து அளிக்கின்றோம்; இவர் உம்முடைய திருமகனைத் தம் அன்பான மீட்பராகத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொண்டதால் அவரையே தம் இரக்கமுள்ள நடுவராக எதிர்கொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

நிலையான ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக. ஆண்டவரே, என்றும் உம் புனிதரோடு ஒளிர்வதாக. ஏனெனில் நீர் இரக்கம் உள்ளவ - நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும். அண்டவரே, முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக. என்றும் உம் புனிதரோடு ஒளிர்வதாக. ஏனெனில் நீர் இரக்கம் உள்ளவர்.
-

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, உம்முடைய திருமகன் தமது திரு உடலின் அருளடையாளத்தில் எங்களுக்கு இறுதிப் பயண உணவை விட்டுச் சென்றார்; அதன் பயனாக எங்கள் சகோதரர் / சகோதரி (பெயர்)... கிறிஸ்து அளிக்கும் அதே விண்ணக விருந்துக்கு வந்து சேரக் கனிவுடன் அருள்புரிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆ. பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

வருகைப் பல்லவி

ஆண்டவர் விண்ணகத்தின் கதவை அவருக்குத் திறந்து விடுவாராக. அவர் தம் தாய் நாட்டுக்கே திரும்பிச் செல்வாராக. அங்கே சாவு
இல்லை, முடிவில்லாத மகிழ்ச்சி நிலைகொண்டிருக்கும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, பாவிகளுக்கு இரக்கமும் உம் புனிதர்களின் பேறுமானவரே, (இன்று) உம் அடியார் (பெயர்) .... ஐ அடக்கம் செய்யும் அன்புக் கடமையை நிறைவேற்றி இவருக்காக உம்மை இறைஞ்சி வேண்டுகின்றோம்: அதனால் இவர் சாவின் தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேர்ந்து கொள்ளப்பெற்ற உம் புனிதரின் மாட்சியில் பங்குபெறவும் உயிர்ப்பு நாளில் உமது திருமுன் நிற்கும் பேறு பெறவும் அருள்புரிவீராக. உம்மோடு.

அல்லது

இறைவா, நிலைவாழ்வில் நுழைவதற்காக இம்மை வாழ்வுக்கு முடிவைத் தந்துள்ளீரே; உம் அடியார் (பெயர்) . . . க்காக உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் இவரது பெயர் உமது இரக்கத்தின் அருள் துணையால் வாழ்வின் நூலில் எழுதப்படப் பணித்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) ... இன் அடக்க நாளில் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் ஒப்புரவுப் பலியைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவர்மேல் படிந்திருந்த பாவக் கறைகளையும் இவரைப் பீடித்திருந்த குறைபாடுகளையும் உமது பரிவிரக்கத்தின் கொடையால் கழுவி இவரைத் தூய்மைப்படுத்துவீராக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

பிலி 3:20-21 தாழ்வுக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் நம் ஆண்டவருமான இயேசு
கிறிஸ்துவை எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, (இன்று) இவ்வுலகை விட்டுப் பிரிந்த உம் அடியார் (பெயர்) ... ஐக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்பலியின் பயனாக இவர் தம் பாவங்களிலிருந்து விடுபட்டு, தூய்மை அடைந்து உயிர்ப்பின் என்றென்றுமுள்ள மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. எங்கள்.


இ. பாஸ்கா காலத்தில்

வருகைப் பல்லவி


1 தெச 4:14; 1 கொரி 15:22 உயிர்த்தெழுந்தது போல், இயேசுவோடு இணைந்த - இயேசு இறந்து உயிர்த்தெழுந்தது போல, 8ெ
மயில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்கு உள்ளானது கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர், அவன்
பால,
|

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகன் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் எனும் எங்களது நம்பிக்கை எழுச்சியுறுவது போல உம் அடியார் (பெயர்) . . . உயிர்த்தெழுவார் எனக் காத்திருக்கும் எங்களது எதிர்நோக்கும் உறுதி பெறுவதாக. உம்மோடு.

அல்லது

இறைவா, இவ்வுலக வாழ்வின் முடிவு மறுவுலக வாழ்வின் தொடக்கமாக அமையச் செய்தீரே; இவ்வாறு உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவை, மீட்பு அடைந்தோரின் நிலையான தோழமைக்கு நீரே அழைத்துச் செல்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே,
எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் உம் திருமகனுடைய பரிவிரக்கத்தின் மாபெரும் அருளடையாளத்தில் ஒன்றுபடும் உம் அடியார் (பெயர்) . . . உம் திருமகனோடு மாட்சிக்கு உயர்த்தப்பெறுவாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்கிறார் ஆண்டவர். என் பி நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ள
"பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு சாகமாட்டார், அல்லேலூயா.
2 என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே
யோவா 11:25-26

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார் (பெயர்) . . . நாங்கள் கொண்டாடும் இப்பாஸ்கா மறைநிகழ்வினால் ஒளியும் அமைதியும் நிறைந்த விண்ணக வீட்டுக்கு வந்து சேர்வாராக. எங்கள்.

ஈ. அடக்கத் திருப்பலிக்கான வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நீர் ஒருவரே சாவுக்குப்பின் வாழ்வு அளிக்கும் ஆற்றல் பெற்றவர்; அதனால் உம் திருமகன் கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டிருந்த உம் அடியார் (பெயர்) ... ஐப் பாவம் அனைத்திலிருந்து விடுவித்து, உயிர்ப்பின் நாளில் இவர் மாட்சி பெற்று உம்மோடு ஒன்றித்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் அடியார் (பெயர்) ... ஐ இப்பலியின் வழியாக கிறிஸ்துவின் இரத்தத்தால் அவருடைய பாவங்களிலிருந்து கழுவிப் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெற்ற இவரை நீர் பரிவிரக்கத்துடன் மன்னித்து முழுமையாகத் தூய்மைப்படுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்காகப் பலியாகி மாட்சியுடன் உயிர்த்தெழுந்த உம் ஒரே திருமகனின் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம் அடியார் (பெயர்) ... க்காக உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளால் இவர் தூய்மை பெற்று வரவிருக்கும் உயிர்ப்பின் கொடையால் மாட்சியுறுவாராக. எங்கள்.

==============16^ 9333 ^-----------


உ. திருமுழுக்குப் பெற்ற சிறுவரின் அடக்கச் சடங்கு
மத் 25:34

வருகைப் பல்லவி


அண்டவர் கூறுகிறார்: என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே. வாருங்கள். உலகம் தோன்றியது முதல் உங் களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருக்குழும் மன்றாட்டு

கனிவுமிக்க இறைவா, உமது ஞானத்தின் திட்டத்துக்கு ஏற்ப இச்சிறுவர் (சிறுமி) ... ஐ வாழ்வின் வைகறையிலேயே உம்மிடம் அழைத்துக்கொண்டீரே; திருமுழுக்கின் அருளினால் உம்முடைய சொந்தப் பிள்ளையாக நீர் ஏற்றுக்கொண்ட இவர் ஏற்கெனவே உமது அரசில் உம்மோடு வாழ்கின்றார் என நம்பும் எங்கள் மன்றாட்டுகளைக் கனிவுடன் கேட்டருளும்; நாங்களும் ஒரு நாள் இவரோடு நிலைவாழ்வில் தோழமை கொள்ள அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்தியருளும்; உம்மிடமிருந்து இச்சிறுவர் (சிறுமி) ... ஐக் கொடையாகப் பெற்று மீண்டும் உம்மிடமே ஒப்படைக்கும் இவரின் பெற்றோர்கள் உமது அரசில் ஒரு நாள் இவரை மகிழ்ச்சியோடு தழுவிக்கொள்ளும் தகுதி பெறுவார்களாக. எங்கள்.
இறந்தோரின் தொடக்கவுரை (பக். 56 2 - 566).

திருவிருந்துப் பல்லவி

காண். உரோ 6:4,8
நாம் திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்துவோடு இறந்து அடக்க - செய்யப்பட்டோம். அவரோடு வாழ்வோம் என்பதே ?" கொண்டுள்ள நம்பிக்கை (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா).

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
உம் திருமகனுடைய திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொண்ட நாங்கள் நம்பிக்கையோடு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உம்முடைய தூய மறைநிகழ்வுகளால் நிலைவாழ்வின் எதிர்நோக்கில் எங்களை வளரச் செய்யத் திருவுளம் கொண்ட நீர் இவ்வுலக வாழ்க்கையின் துன்ப துயரங்களிடையே எங்களுக்கு ஆறுதல் அளிப்பீராக. எங்கள்.

2
வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இக்குழந்தையின் பிரிவால் எங்கள் இதயங்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளன என்பதை நீர் அறிவீரே; இக்குழந்தை உமது திருவுளப்படி இவ்வாழ்வினின்று பிரிந்து சென்றதை நினைத்து நாங்கள் வருந்தி அழுதாலும் இது தன் தந்தையின் வீட்டில் நிலைவாழ்வில் இடம் பெற்றுவிட்டது என நம்புவோமாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை எங்கள் இறைப்பற்றின் அடையாளமாகக் கனிவுடன் ஏற்றருளும்; உமது பராமரிப்பின் திட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பணிந்து வாழும் நாங்கள் உமது பரிவிரக்கத்தின் இனிமையை உணர்ந்து மன எழுச்சி பெறச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது விண்ணகக் கொடையால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இக்குழந்தையை விண்ணக அரசின் விருந்தில் அமரச் செய்தது போல, நாங்களும் அதே விருந்தில் பங்குபெற நீர் அருள்வீராக. எங்கள்.

==============18^ 9335 ^-----------



பெற்றோர் விரும்பியும் ஒரு குழந்தைத் திருமுழு மக்களின் அருள்பணி நலனைக் கருத்தில் கொண்டு அதன் அடக்கச் சடங்கு அதன் நடைபெற மறைமாவட்ட ஆயர் அனுமதிக்கலாம்


- அடக்கச் சடங்கில் உரோமைச் சடங்கு நூலில் குறித்துள்ளவாறு
ல வேளைகளில் திருப்பலி நிகழ்த்துவது நன்றெனக் இறைவார்த்தை வழிபாடு நடைபெறும். சில வேளைகளில் திருப்பலி நிகழ்த்துவது ந கருதினால், கீழ் உள்ள பாடங்களைப் பயன்படுத்தலாம்.
திருமுழுக்கின் இன்றியமையாத் தன்மை நம்பிக்கையாளரின் மனதில் ஆழமாக வண்ணம் மறைக்கல்வி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வருகைப் பல்லவி

திவெ 21:4 இறைவன் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராக
துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் வேண்டல்களை ஏற்றருளும்; அவர்களின் அன்புக் குழந்தையை உம்மிடம் அழைத்துக்கொண்டதால் துயருறுகின்ற பெற்றோர்கள் உமது பரிவிரக்கத்தின் மீது நம்பிக்கைகொண்டு தங்கள் எதிர்நோக்கினால் ஆறுதல் அடைவார்களாக. உம்மோடு.

அல்லது


இறைவா, இதயங்களை ஆய்ந்து அறிபவரும், மிகுந்த பரிவுடன் ஆறுதல் அளிப்பவருமானவரே, இப்பெற்றோர்களின் நம்பிக்கையை நீர் அறிந்திருக்கின்றீரே; இவ்வுலகை விட்டுப் பிரிந்த தங்கள் குழந்தைக்காகத் துயருறும் இவர்கள் இக்குழந்தை உமது இரக்கத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதை உணரச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கையை எங்கள் இறைப்பற்றின் அடையாளமாகக் கனிவுடன் ஏற்றருளும்; உமது பராமரிப்பின் திட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பணிந்து வாழும் நாங்கள் உமது பரிவிரக்கத்தின் இனிமையை உணர்ந்து மன எழுச்சி பெறச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

எசா 25:8 என்றுமே இல்லாதவாறு ஆண்டவர் சாவை ஒழித்து விடுவார்.
கடவுள் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனுடைய திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொண்ட நாங்கள் நம்பிக்கையோடு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உம்முடைய தூய மறைநிகழ்வுகளால் நிலைவாழ்வின் எதிர்நோக்கில் எங்களை வளரச் செய்யத் திருவுளம் கொண்ட நீர் இவ்வுலக வாழ்க்கையின் துன்ப துயரங்களிடையே எங்களுக்கு ஆறுதல் அளிப்பீராக. எங்கள்.

==============20^ 9337 ^-----------


I. ஆண்டு நினைவு நாளில்


திருநீற்றுப் புதன், புனித வாரம் தவிர கிறிஸ்து பிறப்பு ரய நினைவு நாள்களிலும்கூட இத்திருப்பலி
முதல் ஆண்டு நினைவு நாளிலும் திருநீற்றுப் புதன், புனித வாரம் தவிர விழாவின் எண் கிழமைகளிலும், கட்டாய நினைவு நாள்களிலும், நிறைவேற்றப்படலாம்.
இத்திருப்பலி, பிற ஆண்டு நினைவு நாள்களிலும் பொது வாரநாள்களிலும் நேர் திருப்பலி நாள்களிலும் நிறைவேற்றப்படலாம்.
அ. பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

வருகைப் பல்லவி


திவெ 21:4 இறைவன் அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது, துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளரின் மாட்சியும் நேர்மையாளரின் வாழ்வுமானவரே. உம் திருமகனின் இறப்பினாலும் உயிர்ப்பினாலும் நாங்கள் மீட்கப்பெற்றுள்ளோம்; எமது உயிர்ப்பின் மறைபொருளை அறிந்து கொண்ட உம் அடியார் (பெயர்)... உமது இரக்கத்தால் நிலையான பேற்றின் மகிழ்ச்சியைச் சுவைக்கத் தகுதி பெறுவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இறந்த உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு அவர் விண்ணக உதவிகளால் தூய்மை பெற்று உமது மாட்சியில் என்றும் வாழும் பேறு பெறுவாராக. எங்கள்: இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

யோவா 11:25; 3:36; 5:24 ஆனடவா கூறுகிறார்: உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. ஏனெனில் நம்பிக்கை கொள்பவர் நிலைவாழ்வைப் பெறு அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்" கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
காய மறைநிகழ்வுகளால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் அடியார் (பெயர்) . . . குற்றங்கள் அனைத்திலிருந்தும் கழுவப்பெற்று உயிர்ப்பின் முடிவில்லாக் கொடையினால் வளம் பெற அருள்வீராக. எங்கள்.
ஆ. பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

வருகைப் பல்லவி

ஆண்டவராகிய இயேசுவே, நீர் யாருக்காக உமது உயர் மதிப்புள்ள இரத்தத்தைச் சிந்தினீரோ, அவர்களுக்கு நிலையான இளைப்பாறுதலை அளித்தருளும்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்)... அடக்கம் செய்யப்பட்ட ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் நாங்கள் உமமை வேண்டுகின்றோம்: அதனால் அவர் மீது உமது இரக்கத்தை என்றென்றும் பொழிந்து உம் புனிதர்களின் தோழமையில் பங்குபெறத் திருவுளம் கொள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) ... இன் ஆண்டு நினைவு நாளில் நாங்கள் செய்யும் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்; இவ்வாறு உமது புகழ்ச்சிக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பரிகாரப் பலியால் அவரை உம் புனிதர்களின் தோழமையில் சேர்த்தருளத் திருவுளம் கொள்வீராக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரே, உழைப்புக்குப்பின் இளைப்பாறுதல் நீரே. சாவுக்குப்பின் வாழ்வும் நீரே. நிலையான இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக நாங்கள் - வேண்டல்களையும் பலியையும் கனிவுடன் ஏற்றருள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் அவரில் பாவ மாசு ஏதேனும் இருப்பின் அதனைக் கனிவுடன் மன்னித்துப் போக்குவீராக. எங்கள்.

இ. பாஸ்கா காலத்தில்

வருகைப் பல்லவி


காண். உரோ 8:11 இறந்தோரிடமிருந்து இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவ நம்முள் குடி கொண்டிருக்கும் ஆவி வழியாக, சாவுக்கு உரிய நம்
உடல்களையும் உயிர்பெறச் செய்வார், அல்லேலூயா.

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் திருமகன் தமது மனித இயல்பில் எங்களுக்காக விருப்பமுடன் சாகத் திருவுளமானார்; அவரது உயிர்ப்பின் வெற்றியில் உம் அடியார் (பெயர்) . . . ம் பங்குபெற இரக்கத்துடன் அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு


எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவை இப்பலியின் வழியாகக் கிறிஸ்துவின் இரத்தத்தால் அவருடைய பாவங்களிலிருந்து கழுவிப் போக்கிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் திருமுழுக்குத் தண்ணீரால் கழுவப்பெற்ற அவரை நா பரிவிரக்கத்துடன் மன்னித்து இடையறாது தூய்மைப்படுத்துவராக எங்கள்.
இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

யோவா 6:51-52 பாணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நாம் என்கிறார் ஆண்டவர். இந்த உணவை எவராவது என்றுமே வாழ்வார்; நான் அளிக்கும் உணவு உ°
"". இந்த உணவை எவராவது உண்டால், அவர் எனது சதை. அல்லேலூயா.
"ஆவார்; நான் அளிக்கும் உணவு உலகு வாழ்வதற்கான

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்காகப் பலியாகி மாட்சியுடன் உயிர்த்தெழுந்த உம் ஒரே திருமகனின் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம் அடியார் (பெயர்) . . . க்காக உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளால் அவர் தூய்மை பெற்று வரவிருக்கும் உயிர்ப்பின் கொடையால் மாட்சியுறுவாராக. எங்கள்.

ஈ. ஆண்டு நினைவு நாளுக்கு உரிய வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் பாடுகள் வழியாக உம் அடியார் (பெயர்) . . . க்கு அவர் என்றும் விரும்பிய பாவ மன்னிப்பை அளித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை மெய்யாகவே அறிந்திருந்த அவர் உம்மைக் கண்டு மகிழும் தகுதி பெறுவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . க்காக நாங்கள் உமக்கு இப்பலியைப் பணிவுடன் ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் உமது அருள்கொடையால் உள்ளொளி பெற்று உம்மை ஏற்கெனவே அறிந்த அவர் உம்மோடு என்றும் ஒன்றித்து மகிழ்வாராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, புத்துயிரும் வாழ்வும் வழங்கும் திரு உணவால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதன் வழியாக எங்கள் சகோதரர் / சகோதரி (பெயர்) ... அதே திரு உணவால் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப்பெற்று விண்ணோரின் தோழமைக்கு வந்து சேரும் ஆற்றல் பெறுவாராக. எங்கள்.

==============24^ 9341 ^-----------


உ. ஆண்டு நினைவு நாளுக்கு உரிய வேறு மன்றாட்டுகள்
-
||

திருக்குழும் மன்றாட்டு

மன்னிப்பு அருளும் இறைவா, உம் அடியார் (பெயர்) . . . இன் உடலை அடக்கம் செய்த ஆண்டு நினைவு நாளை நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்; அவரின் ஆன்மாவுக்கு இளைப்பாறுதலின் இடத்தையும் அமைதியின் பேற்றினையும் மாட்சியின் ஒளியையும் தந்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் வேண்டல்களும் காணிக்கைகளும் உமக்கு உகந்தவையாய் இருப்பனவாக; இவ்வாறு உம் அடியார் (பெயர்) . . . இன் மீட்புக்காக நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளின் வழியாக அவர் உமது மீட்பின் முழுமையை அடைவாராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக மாண்புக்கு உரிய உம் திருமுன் இப்பலியை ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் அவர் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப்பெற்று உமது இரக்கத்தால் முடிவில்லா ஒளியின் பேற்றினைப் பெற்றுக்கொள்வாராக. எங்கள்.

==============25^ 9342 ^-----------


III. இறந்தோருக்கான பல்வேறு நினைவுக்கொண்டாட்டங்கள்

இறந்த செய்தியைப் பெற்றபின் அல்லது இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின், திருநீற்றுப் புதன், புனித வாரம் தவிர, கிறிஸ்து பிறப்பு எண்கிழமைகளிலும் கட்டாய நினைவு நாள்களிலும் பொது வார நாள்களிலும் இத்திருப்பலி நிறைவேற்றப்படலாம்.
ஆண்டின் பொது வார நாள்களில் விருப்ப நினைவுத் திருப்பலி இடம்பெற்றாலும் இறந்தோருக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டின் இறந்தோருக்கான அன்றாடத் 'திருப்பலியை நிகழ்த்தலாம்.


அ. இறந்த ஒருவருக்காக

வருகைப் பல்லவி

ஆண்டவர் அவருக்குப் பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்து விடு வாராக. அதனால் அவர் தம் தாயகத்துக்குத் திரும்புவாராக.
அங்கே சாவு இல்லை. அங்கே நிலையான மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, எல்லாம் வல்ல தந்தையே, நீர் சிலுவையின் மறைபொருளால் எங்களை உறுதிப்படுத்தி உம் திருமகனின் உயிர்ப்பின் அருளடையாளத்தால் முத்திரையிட்டீரே; அதனால் உம் அடியார் (பெயர்) ... மீது கனிவுடன் இரக்கம் கொண்டு நீர் தேர்ந்து கொண்டவர்களின் தோழமையில் அவரைச் சேர்த்தருள்வீராக. உம்மோடு.

அல்லது

ஆண்டவரே, உமது இரக்கத்தைத் தாழ்மையுடன் மன்றாடும் எங்கள் வேண்டல்களுக்குக் கனிவுடன் செவிசாய்க்க உம்மை வேண்டுகின்றோம்: உம் அடியார் (பெயர்) . . .ஐ இவ்வுலகில் உம் மக்கள் கூட்டத்தில் ஒருவராக இரக்கமுடன் சேர்த்துக்கொண்ட நீர், அமைதியும் ஒளியும் நிறைந்த இடத்தில் அவர் உம் புனிதர்களுடன் தோழமை கொண்டிருக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . .க்காக இப்புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுத்து உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் எங்களது இறைப்பற்றுள்ள பரிகார முயற்சியை முன்னிட்டு அவர் வாழ்வுக்கு உயிர்த்தெழும் பேறு பெறுவாராக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

யோவா 6:37 தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உயிர் அளிக்கும் அருளடையாளத்தால் வளம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் சகோதரர் சகோதரி (பெயர்) ... இன் ஆன்மா உமது உடன்படிக்கையில் பங்கேற்க அருள்கூர்ந்த நீர் அவர் இத்திருப்பலியின் ஆற்றலால் தூய்மை பெற்று, கிறிஸ்துவின் அமைதியில் முடிவின்றிப் பேரின்பம் கொள்ளச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வருகைப் பல்லவி

யோபு 19:25,26 என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதி நாளில் மண்ணிலிருந்து நான் எழுப்பப்படுவேன் என்றும் நான் அறிவேன். நான்
சதையோடு என் கடவுளைக் காண்பேன்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . ஐப் பாவத் தளைகள் அனைத்திலிருந்தும் விடுவித்தருளும்; அவர் இவ்வுலகில் கிறிஸ்துவின் சாயலைத் தாங்கும் பேறுபெற உயிர்ப்பின் மாட்சியை அடைந்து உம் புனிதர்களோடு என்றென்றும் புது வாழ்வு பெறுவார் உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இத்திருப்பலியின் வழியாக அனைத்துலகின் பாவங்களை மன்னிக்கத் திருவுளம் கொண்ட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இக்காணிக்கை உம் அடியார் (பெயர்) . . . க்குப் பயன் அளிக்கச் செய்வீராக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

காண். யோவா 6:50 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தது இந்த உணவே, என்கிறார் ஆண்டவர். இதை உண்பவர் என்றுமே இறக்கமாட்டார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது திரு அவை நிறைவேற்றிய இப்பலி உம் அடியார் (பெயர்) . . . க்கு நிறை பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு கிறிஸ்துவின் இரக்கத்தை அளிக்கும் இவ்வருளடையாளத்தை அவர் பெற்றுக்கொண்டதால் உம் புனிதர்களோடு கிறிஸ்துவின் தோழமையையும் கண்டடைவாராக. எங்கள்.

3
வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, இறந்தோர் உம் திருமுன் வாழ்கின்றனர்; உம் புனிதர்கள் உம்மில் நிறைமகிழ்ச்சி அடைந்து பேரின்பம் கொள்கின்றனர்; உம் அடியார் (பெயர்) . . . க்காக நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: நிலையற்ற ஒளியை இவ்வுலகில் இப்போது இழந்துவிட்ட அவர் உமது நிலையான ஒளியின் ஆறுதலைச் சுவைத்து மகிழ்வாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலி உமக்கு ஏற்புடையதாய் இருப்பதாக; அதனால் உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மா தாம் தேடிய பாவ மன்னிப்பைக் கண்டடைய இரக்கம் கொண்ட உம் புனிதர்களோடு அவர் என்றும் அக்களித்து உமது மாட்சியை என்றென்றும் புகழச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகக் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்கு நன்றி கூறி, உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: உம் அடியார் (பெயர்) ... இன் ஆன்மா உம் திருமகனின் பாடுகளால் பாவத் தளைகளிலிருந்து விடுபட்டு பேரின்பத்துடன் உம்மிடம் வந்து சேரும் ஆற்றல் பெறுவதாக. எங்கள்.


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகள் உம்மை நோக்கி எழுவனவாக; உமது சாயலாக நீர் படைத்து உம் சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளத் திருவுளம் கொண்ட உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மா நிலையான மகிழ்ச்சியைப் பெறுவதாக; இவ்வாறு அது உமது உரிமைப் பேற்றில் தோழமை கொள்ளவும் பணித்தருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக நம்பிக்கையோடு நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் காணிககையை மனம் இரங்கி ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அனைவருக்கும் அருமருந்தான இப்பலி வழியாக அவருக்கு என்றுமுள்ள மீட்பை அளித்தருள்வீராக. எங்கள் :

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே,
மனிதப் பலியின் உணவால் புதுப்பிக்கப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் சகோதரர் சகோதரி (பெயர்) . . சாவின் தளையிலிருந்து விடுபட்டு உம் திருமகனின் உயிர்ப்பில் பங்கேற்றுப் பேரின்பம் கொள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் எழுப்பும் மன்றாட்டுகளுக்குப் பரிவிரக்கத்துடன் நீர் செவிசாய்த்து உம் அடியார் (பெயர்) . . . க்குப் பாவங்கள் அனைத்திலிருந்தும் மன்னிப்பு வழங்கியருளும்; அதனால் உயிர்ப்பின் நாளில் அவரும் உயிர்பெற்று, உமது ஒளியில் மகிழ்வுடன் இளைப்பாறுவாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் தம்மையே எங்களுக்கு வாழ்வு தரும் உணவாகத் தந்து, தமது இரத்தத்தை மீட்பு அளிக்கும் பானமாகச் சிந்தினார்; இவ்வாறு நாங்கள் உமக்கு அளிக்கும் இக்காணிக்கை உம் அடியார் (பெயர்) ...க்கு மீட்பு அளிக்கும் காரணியாய் அமைவதாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலைவாழ்வின் பிணையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம் அடியார் (பெயர்) ... இன் ஆன்மாவுக்காகத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: அதனால் அது சாவின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று 2-4 அடைந்தோரின் தோழமையில் இணைவதாக. எங்கள்.

==============30^ 9347 ^-----------

ஆ. இறந்த பலருக்காக அல்லது அனைவருக்காக

வருகைப் பல்லவி

ஆண்டவரே, என்றென்றும் உள்ள இளைப்பாறுதலை அவர்களுக்கு அளித்தருளும். அவர்களின் ஆன்மாக்களைப் பேரொளியால் நிரப்பும்

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் ஒரே திருமகன் சாவை வென்று விண்ணுலகுக்குக் கடந்து செல்லச் செய்தீரே; அதனால் உம் அடியார்கள் (பெயர்கள்) ..., ... இம்மை வாழ்வுக்கு உரிய இறக்கும் தன்மையின் மீது வெற்றி கொண்டு தம்மைப் படைத்தவர் எனவும் மீட்பவர் எனவும் உம்மை முடிவின்றிக் கண்டு களித்திட அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களின் ஆன்மாக்களுக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருள்களை இரக்கத்துடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: கிறிஸ்தவ நம்பிக்கை என்னும் பேற்றினை அவர்களுக்கு அளித்த நீர் அதன் பரிசையும் அவர்களுக்கு அளிப்பீராக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

1யோவா 4:9 அவர் வழியாக நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலியை ஏற்றுக்கொண்டு, இறந்த உம் அடியார்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிவீராக; நீர் திருமுழுக்கின் அருளை வழங்கியுள்ள அவர்களுக்கு நிலையான மகிழ்ச்சியின் முழுநிறைவையும் அளிப்பீராக. எங்கள் .

==============1^ 9348 ^-----------

வருகைப் பல்லவி


யோவா 3:16 தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். திருக்குழும் மன்றாட்டு என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, சாவுக்கு உரிய மனிதரின் வாழ்வும், புனிதரின் பெருமகிழ்வும் நீரே; உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்காக உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் சாவின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று உமது அரசின் என்றென்றுமுள்ள மாட்சியில் பங்குபெறுவார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்காகவும் கிறிஸ்துவில் துயில்கொள்ளும் அனைவருக்காகவும் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் பலிப்பொருளைக் கனிவுடன் ஏற்றருளும்; அதனால் ஒப்பற்ற இப்பலியின் வழியாக அவர்கள் சாவின் தளைகளிலிருந்து விடுபட்டு நிலைவாழ்வு பெறத் தகுதி பெறுவார்களாக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

பிலி 3:20-21 தாழ்வுக்கு உரிய நம் உடலை மாட்சிக்கு உரிய தமது உடலின் சாயலாக உருமாற்றும் மீட்பரும் நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை நாம் எதிர்நோக்குவோம்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, தூய மறை நிகழ்வுகளில் பங்குபெறுகின்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: இவை எங்கள் மீட்புக்குப் பயன்படுவது போல், நாங்கள் யாருக்காக உமது கனிவை வேண்டுகின்றோமோ அவர்களின் ஆன்மாக்களுக்கு மன்னிப்பு அளிப்பனவாக. எங்கள்.

வருகைப் பல்லவி

ஆண்டவரில் இறப்போர் பேறுபெற்றோர். இனி அவர்கள் , உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள். ஏனெனில் அது செயல்கள் அவர்களைப் பின்தொடரும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா,
வன்மாக்கள் இளைப்பாறுகின்றன; உமது இரக்கத்தால் நம்பிக்கையாளரின் ஆன்மாக்கள் இளைப்பா உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்கும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவருக்கும் பாவ மன்னிப்பை இரக்கமுடன் வழங்கியருளும்; இவ்வாறு அவர்கள் குற்றம் அனைத்திலிருந்தும் கழுவப்பெற்று உம் திருமகன் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்களுடைய ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மனிதருக்கு மீட்பு அளிக்கும் இவ்வுதவிகளால் அவர்கள் மீட்பு அடைந்தோரின் கூட்டத்தில் என்றும் இடம் பெறுவார்களாக. எங்கள்.

இறந்தோரின் தொடக்கவுரை (பக். 56 2 - 566).

திருவிருந்துப் பல்லவி

ஆண்டவரே, நாங்கள் எவருடைய நினைவாக கிறிஸ்து வின் திரு - உடலையும் திரு இரத்தத்தையும் உட்கொண்டோமோ, அவர்களுக்கு என்றென்றுமுள்ள இளைப்பாறுதலை அளித்தருளும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மீட்பு அளிக்கும் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உமது கனிவை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலகில் வாழும் எங்களுக்கு அது உமது இரக்கத்தால் அருள்காவலையும் எங்களுள் இறந்தோருக்குப் பாவ மன்னிப்பையும் என்றென்றும் பெற்றுத்தருவதாக. எங்கள்.

==============3^ 9350 ^-----------

வருகைப் பல்லவி

காண். திபா 30:2 ஆண்டவரே, உம்மில் நான் நம்பிக்கை கொண்டேன். நான் ஒருபோதும் வெட்கமடைய மாட்டேன்; உமது நீதிக்கு ஏற்ப என்னை விடுவித்தருளும்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, நம்பிக்கையாளர் அனைவரையும் உருவாக்குபவரும் மீட்பவருமானவரே, உம் அடியார்களின் பாவங்களை எல்லாம் மன்னித்தருளும்; அதனால் அவர்கள் என்றும் விரும்பிய உமது மன்னிப்பை எங்கள் இறைப்பற்று மிக்க மன்றாட்டுகளால் பெற்றுக்கொள்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு


ஆண்டவரே, நாங்கள் இப்பரிகாரப் பலியை உமக்கு ஒப்புக்கொடுத்து, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்கு இரக்கம் காட்டியருள உம்மை வேண்டுகின்றோம்: அவர்கள் இம்மையில் கத்தோலிக்க நம்பிக்கையின் ஒளியில் வாழ்ந்ததால் மறுமையில் அதற்கான பரிசைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக்
கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுடைய தாழ்மையான மன்றாட்டுகள் உம் அடியார்களின் ஆன்மாக்களுக்குப் பயன் அளிக்க உம்மை வேண்டுகின்றோம்: இப்பலியின் பயனால் அவர்களிடமிருந்து பாவங்கள் அனைத்தையும் நீக்கி, அவர்களை நிலையான மீட்பில் பங்குபெறச் செய்வீராக. எங்கள்.

==============4^ 9351 ^-----------

வருகைப் பல்லவி

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக அண்ட தேடுங்கள், உறுதிபெறுவீர்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, வாழ்வோரையும் இறந்தோரையும் ஆள்பவரும் அனைவருக்கும் இரக்கம் காட்டுபவருமான உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: நாங்கள் யாருக்காக மன்றாட்டுகளை எழுப்புகின்றோமோ அவர்கள் உமது பரிவிரக்கத்தின் கனிவால் தங்களுடைய குற்றங்களிலிருந்து விடுதலை அடைந்து பேறுபெற்றவர்களாய் உம் திருமுன் கூடி மகிழ்ந்து உம்மை முடிவின்றிப் போற்றிப் புகழ்வார்களாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருளை ஏற்று, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்குக் கிறிஸ்துவின் அருள் செல்வத்தில் நிறைவாய்ப் பங்களித்தருளும்; அதனால் அவர்கள் உம் திருமகனோடு உயிர்த்தெழுந்து அவரது வலப் பக்கம் அமரும் பேறு பெறுவார்களாக. எங்கள். இறந்தோரின் தொடக்கவுரை (பக். 562 - 566).

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 30:17-18 உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக. உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா,
மீட்பின் அருளடையாளத்தால் வளம் பெற்ற உம் பிள்ளைகளின் மன்றாட்டைக் கேட்டருளும்; உம் ஒரே திருமகன் கிறிஸ்துவைத் தூய ஆவியாரால் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழச் செய்த நீர் உம் நம்பிக்கையாளர் (பெயர்கள்) . . . , . . . க்கு அழியாப் பெருவாழ்வின் மகிழ்ச்சியைத் தந்தருள்வீராக. எ 12

==============5^ 9352 ^-----------

வருகைப் பல்லவி

திபா 83:10-11 கடவுளே, நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! வேற்றிடங் களில் வாழும் ஆயிரம் நாள் களினும் உம்
கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது. திருக்குழும் மன்றாட்டு ஆண்டவரே, றெந்த உம் அடியார்களுக்கு முடிவில்லா இரக்கத்தை அளித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் உம்மிடம் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்த இரக்கம் அவர்களுக்கு நிலையான காலத்துக்கும் பயன் அளிப்பதாக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, தம்மையே பலியாக்கி உலகம் அனைத்தின் பாவங்களைப் போக்கிய மாசில்லாத உம் திருமகனின் இப்பலியை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; இப்பலி உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . ஐத் தீமை அனைத்திலிருந்தும் விடுவிப்பதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி

கலைமான் நீரோடைகளுக்காக ஏங்குவது போல, கடவுளே! என் ஆன்மா உமக்காக ஏங்குகின்றது. வல்லவரான வாழும் கடவுள் மீது என் ஆன்மா தாகம் கொண்டுள்ளது.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, இவ்வுலகில் வாழ்ந்தபோது உமது அருளடையாளத்தைப் பெற்றுக்கொண்ட உம் அடியார்களும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவரும் நிலையான ஒளியைக் கண்டடைய அருள்புரிவீராக. எங்கள்.


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் (பெயர்கள்) - . . , . . . மீது இரக்கம் கொள்ளும்; இவ்வாறு மறு பிறப்பின் ஊற்றில் நீர் கழுவிய அவர்கள் விண்ணக வாழ்வின் பேற்றுக்கு வந்து சேர அருள்வீராக. உம்மோடு

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்காக உமக்குப் பலி ஒப்புக்கொடுத்து, உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் எங்கள் மன்றாட்டுகளை நீர் விரும்பி ஏற்று, அவர்களுக்கு உமது இரக்கத்தை என்றும் அருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகத் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உமது கனிவைப் பணிந்து வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்கள் அவர்கள் இப்பலியின் பயனாக உமது பாவ மன்னிப்பைப் பெற்றவர்களாய், உமது விண்ணரசில் நுழைந்து உம்மோடு நிலையான காலத்துக்கும் புகழும் தகுதி பெறுவார்களாக. எங்கள்.

==============7^ 9354 ^-----------


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , ... ஐ உம்மிடம் ஒப்படைக்கின்றோம்; அவர்கள் இவ்வுலகத்துக்கு இறந்தவராயினும், உமக்கென வாழ்வார்களாக; அதனால் இவ்வுலக வாழ்வில் வலுக்குறைந்த தம் மனித இயல்பில் அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து அவற்றை உமது பரிவிரக்கத்தின் பேரன்பினால் போக்குவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் இப்பரிகாரப் பலியை உமக்கு ஒப்புக்கொடுத்து, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . க்கு இரக்கம் காட்டியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வுலக வாழ்வில் உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்த அவர்கள் உம் திருமுன் அதற்கான பரிசைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, எங்கள் வேண்டலைக் கனிவுடன் கேட்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் அடியார்கள் இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் நேர்மையாளரின் கூட்டத்தில் சேர்ந்து நிலையான பேற்றினை அடையப் பணித்தருள்வீராக. எங்கள்.

==============8^ 9355 ^-----------


வேறு மன்றாட்டுகள்

திருக்குழும் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உமது இரக்கத்தை எதிர்நோக்கியே நாங்கள் எப்போதும் உம்மை வேண்டுகின்றோம்: உமது பெயரை அறிக்கையிட்டு இவ்வுலக வாழ்வை விட்டுப் பிரிந்த உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . அவர்கள் உம் புனிதர்களின் கூட்டத்தில் எண்ணப்பட அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே இறைவா, உம் திருமகன் தம்மையே உயிருள்ள பலிப்பொருளாக ஒப்புக்கொடுத்தார்; உமது திரு அவையின் பலியை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . இன் பாவங்கள் அனைத்தையும் போக்கி, அவர்கள் சாகாத்தன்மையின் கொடையைப் பெற்றுக்கொள்ளத் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, நாங்கள் உட்கொண்ட இத்திரு உணவால் எங்களைத் தூய்மைப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்பலி எங்களுக்குப் பாவ மன்னிப்புக்கான வேண்டலாகவும் வலுவின்மையில் உறுதியாகவும் ஆபத்துக்களில் அரணாகவும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் பாவங்கள் அனைத்தின் மன்னிப்பாகவும் நிலையான மீட்பின் பிணையாகவும் அமைந்திட அருள்வீராக. எங்கள்.

==============9^ 9356 ^-----------


IV. இறந்தோருக்கான பல்வேறு மன்றாட்டுகள்
1. திருத்தந்தைக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, ஆன்மாக்களுக்கு உண்மையாகக் கைம்மாறு அளிப்பவரே, இறந்த உம் அடியாரான திருத்தந்தை (பெயர்) ... ஐப் புனித பேதுருவின் வழிவந்தவராகவும் உமது திரு அவையின் ஆயராகவும் ஏற்படுத்தினீரே; அருளையும் இரக்கத்தையும் வழங்கும் உம் மறைபொருள்களை அவர் இவ்வுலகில் உண்மையுடன் பகிர்ந்து அளித்தது போல விண்ணுலகில் உம் திருமுன் அவற்றின் பயனை முடிவின்றிப் பெற்றுப் பேரின்பம் கொள்ளச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பக்தியுடன் அளிக்கும் உமக்கு உகந்த இப்பலி வழியாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . இன் ஆன்மா விண்ணகக் கொடையால் சூழப்பட உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறே உமது இரக்கம் எங்களுக்கும் அருள்கொடைகளை வழங்குவதாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு


ஆண்டவரே, உம்மோடு உறவை ஏற்படுத்தும் இத்திரு உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . இவ்வுலகில் உமது திரு அவைக்கு ஒற்றுமையின் அடித்தளமாக விளங்கத் திருவுளமானீரே; அதனால் அவர் உமது மந்தையின் பேற்றினில் மகிழ்வுடன் சேர்த்துக்கொள்ளப்படுவாராக. எங்கள்.

==============10^ 9357 ^-----------


20

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, வியப்புக்கு உரிய உமது ஏற்பாட்டினால் உம் அடியாராகிய திருத்தந்தை (பெயர்) . . . உமது திரு அவைக்குத் தலைமை ஏற்கத் திருவுளமானீரே; இவ்வாறு இவ்வுலகில் உம் திருமகனின் பதிலாளியாகப் பணியாற்
'யாற்றிய அவர் உம் திருமகனாலேயே நிலையான மாட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, பணிந்து மன்றாடும் திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும்: உம் அடியாராகிய திருத்தந்தை (பெயர்) ... ஐ உமது மந்தைக்கு தலைமைக் குருவாக ஏற்படுத்தினீரே; இவ்வாறு இப்பலியின் ஆற்றலினால் நீர் தேர்ந்துகொண்ட அருள்பணியாளர்களின் கூட்டத்தில் அவரையும் சேர்த்துக்கொள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது அன்பின் திருவிருந்தை அருந்திய நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்:
இவ்வுலகில் உம் மறைபொருள்களைத் தவறாது வழங்கி வந்த உம் அடியாராகிய திருத்தந்தை (பெயர்) . . புனிதர்களின் மாட்சியில் உமது இரக்கத்தை முடிவின்றிப் புகழ்வாராக. எங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, ஆன்மாக்களின் சாகாத்தன்மையுள்ள ஆயரே, உம்மை மன்றாடும் மக்களைக் கண்ணோக்கியருளும்; உமது திரு அவைக்கு அன்புடன் தலைமைப் பொறுப்பேற்றிருந்த உம் அடியாராகிய திருத்தந்தை (பெயர்) ... தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையோடு சோந்து உண்மையான கண்காணிப்பாளருக்கு உரிய பா' இரக்கமுடன் அருள்கூர்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் ஒப்புரவுப் பலியைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்த உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . இன் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கின்றோம்; உமது அன்பு, அமைதி இவற்றின் கருவியாக மாந்தரிடையே வாழ்ந்து வந்த அவர் இவற்றின் பயனாக உம் புனிதர்களோடு மடிவின்றிப் பேரின்பம் கொள்ளத் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் திருவிருந்தில் பங்குபெற்ற நாங்கள் உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக உமது இரக்கத்தைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் மக்கள் உண்மை நெறியில் வாழ உதவி செய்த அவர் இறுதியில் உண்மையின் பேரின்பத்தை | உடைமையாகப் பெற்று மகிழ்வாராக. எங்கள்.

2. ஆயருக்காக அ. மறைமாவட்ட ஆயருக்காக

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் அடியாராகிய ஆயர் (பெயர்) . . . இடம் உமது குடும்பத்தின் பொறுப்பினை ஒப்படைத்தீரே; அவர்தம் பல்வேறு பணிகளின் பயனாக, அவரது ஆன்மா தம் ஆண்டவரின் நிலையான மகிழ்ச்சியில் சேர்ந்திட அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது அளவில்லாக் கனிவைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் அடியாராகிய ஆயர் (பெயர்) ... இவ்வுலகில் வாழ்ந்தபோது இத்திருப்பலியை நம்பிக்கையாளரின் மீட்புக்காக மாண்புக்கு உரிய உம் திருமுன் ஒப்புக்கொடுத்து வந்தார்; அதே பலி இப்பொழுது அவருக்குப் பாவ மன்னிப்பையும் அளிப்பதாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய ஆயர் (பெயர்) . - - இன் ஆன்மாவுக்காக நாங்கள் பணிந்து கேட்கும் மன்றாட்டு உமது இரக்கத்தின் கனிவால் பயன் அளிப்பதாக; இவ்வாறு எதிர்நோக்குடன் கிறிஸ்துவைப் போதித்து வந்த அவர் இப்பலியின் பயனாகக் கிறிஸ்துவோடு முடிவில்லாத் தோழமை கொள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆ. பிற ஆயருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, உம் அடியாராகிய ஆயர் (கர்தினால்) (பெயர்) . . . ஐத் திருத்தூது மறைப்பணியாளர் நடுவில் ஆயராக்கி மேன்மையுறச் செய்தீரே; அதனால் அவர்களோடு முடிவில்லாக் காலமும் அவர் தோழமை கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய ஆயர் (கர்தினால்) (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருள்களை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவரை இவ்வுலகில் மேன்மையுறச் செய்த நீர் விண்ணரசில் உம் புனிதர்களோடு அவர் தோழமை கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு


எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் அடியார் ஆயர் (கர்தினால்) (பெயர்) . . . க்காக உம்மை வேண்டுகின்றோம்: அவர் இவ்வுலகில் கிறிஸ்துவின் தூதுவராகப் பணி புரிய அருள்புரிந்த 2' இப்பலியின் பயனாகத் தூய்மை பெற்று விண்ணுலகில் அவரோடு வீற்றிருக்கச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

==============13^ 9360 ^-----------


3. அருள்பணியாளருக்காக
-

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக உம்மை வேண்டுகின்றோம்: அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது திருப்பணிகளால் அவரை அணிசெய்த நீர் அவர் விண்ணக மாட்சியில் பங்குபெற்று என்றும் அக்களிக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு


எல்லாம் வல்ல இறைவா, தூய மறைநிகழ்வுகளை இம்மையில் பற்றுறுதியுடன் நிறைவேற்றிய உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) ... க்காக உம்மை வேண்டுகின்றோம்: இவற்றின் பயனாக அவர் உம்மை என்றும் நேரில் காணும் பேறு பெறுவாராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, மீட்பு அளிக்கும் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மைக் கனிவுடன் கெஞ்சி வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) ... ஐ இவ்வுலகில் உம்முடைய அருளடையாளங்களை வழங்குபவராக ஏற்படுத்திய நீர் விண்ணகத்தில் அவை வெளிப்படுத்தும் உண்மையால் ஊட்டம் பெறச் செய்வீராக. எங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) ... இன் ஆன்ம மீட்புக்காக நாங்கள் தாழ்மையுடன் ஒப்புக்கொடுக்கும் எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் உமது பெயருக்காக உண்மையுடன் ஊழியம் புரிந்த அவர் உம் புனிதர்களின் தோழமையில் முடிவின்றிப் பங்குபெற்றுப் பேரின்பம் கொள்வாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் மக்களின் ஒப்புரவுப் பலியைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: உமது இரக்கத்தில் நம்பிக்கை வைத்திருந்த உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . இன் ஆன்மாவை உம்மிடம் ஒப்படைக்கின்றோம்; உமது அன்பு, அமைதி இவற்றின் கருவியாக மாந்தரிடையே வாழ்ந்து வந்த அவர் இவற்றின் பயனாக உம் புனிதர்களோடு முடிவின்றிப் பேரின்பம் கொள்ளத் தகுதி பெறச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் திருவிருந்தில் பங்குபெற்ற நாங்கள் | உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை (பெயர்) ... இன் ஆன்மாவுக்காக உமது இரக்கத்தைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் மக்கள் உண்மை நெறியில் வாழ உதவி செய்த அவர் இறுதியில் உண்மையின் பேரின்பத்தை உடைமையாகப் பெற்று மகிழ்வாராக. எங்கள்.

2. ஆயருக்காக

அ. மறைமாவட்ட ஆயருக்காக

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் அடியாராகிய ஆயர் (பெயர்) ... இடம் உமது குடும்பத்தின் பொறுப்பினை ஒப்படைத்தீரே; அவர்தம் பல்வேறு பணிகளின் பயனாக, அவரது ஆன்மா தம் ஆண்டவரின் நிலையான மகிழ்ச்சியில் சேர்ந்திட அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது அளவில்லாக் கனிவைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் அடியாராகிய ஆயர் (பெயர்) ... இவவுலகில் வாழ்ந்தபோது இத்திருப்பலியை நம்பிக்கையாளரின் மீட்புக்காக மாண்புக்கு உரிய உம் திருமுன் ஒப்புக்கொடுத்து வந்தார்; அதே பலி இப்பொழுது அவருக்குப் பாவ மன்னிப்பையும் அளிப்பதாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய ஆயர் (பெயர்) . . - இன் ஆன்மாவுக்காக நாங்கள் பணிந்து கேட்கும் மன்றாட்டு உமது இரக்கத்தின் கனிவால் பயன் அளிப்பதாக; இவ்வாறு எதிர்நோக்குடன் கிறிஸ்துவைப் போதித்து வந்த அவர் இப்பலியின் பயனாகக் கிறிஸ்துவோடு முடிவில்லாத் தோழமை கொள்வாராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

ஆ. பிற ஆயருக்காக

திருக்குழும் மன்றாட்டு இறைவா, உம் அடியாராகிய ஆயர் (கர்தினால்) (பெயர்) . . . ஐத் திருத்தூது மறைப்பணியாளர் நடுவில் ஆயராக்கி மேன்மையுறச் செய்தீரே; அதனால் அவர்களோடு முடிவில்லாக் காலமும் அவர் தோழமை கொண்டிருக்க அருள்புரிவீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய ஆயர் (கர்தினால்) (பெயர்) ... இன் ஆன்மாவுக்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலிப்பொருள்களை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவரை இவ்வுலகில் மேன்மையுறச் செய்த நீர் விண்ணரசில் உம் புனிதர்களோடு அவர் தோழமை கொண்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உம் அடியார் ஆயர் (கர்தினால்) (பெயர்) . . . க்காக உம்மை வேண்டுகின்றோம்: அவர் இவ்வுலகில் கிறிஸ்துவின் தூதுவராகப் பணி புரிய அருள்புரிந்த நா இப்பலியின் பயனாகத் தூய்மை விண்ணுலகில் அவரோடு வீற்றிருக்கச் செய்வீராக.
பெற்று என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


திருக்கும் மன்றாட்டு

ஆண்டவரே,
அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக உம்மை வேண்டுகின்றோம்: அவர் இவ்வுலகில் வாழ்ந்தபோது திருப்பணிகளால் அவரை அணிசெய்த நீர் அவர் விண்ணக மாட்சியில் பங்குபெற்று என்றும் அக்களிக்கச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, தாய மறைநிகழ்வுகளை இம்மையில் பற்றுறுதியுடன் நிறைவேற்றிய உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . க்காக உம்மை வேண்டுகின்றோம்: இவற்றின் பயனாக அவர் உம்மை என்றும் நேரில் காணும் பேறு பெறுவாராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

இறைவா, மீட்பு அளிக்கும் திரு உணவை உட்கொண்ட நாங்கள் உம்மைக் கனிவுடன் கெஞ்சி வேண்டுகின்றோம்: அதனால் உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) ... ஐ இவ்வுலகில் உம்முடைய அருளடையாளங்களை வழங்குபவராக ஏற்படுத்திய நீர் விண்ணகத்தில் அவை வெளிப்படுத்தும் உண்மையால் ஊட்டம் பெறச் செய்வீராக. எங்கள்.

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . இன் ஆன்ம மீட்புக்காக நாங்கள் தாழ்மையுடன் ஒப்புக்கொடுக்கும் எங்கள் வேண்டல்களைக் கனிவுடன் கேட்டருளும்; அதனால் உமது பெயருக்காக உண்மையுடன் ஊழியம் புரிந்த அவர் உம் புனிதர்களின் தோழமையில் முடிவின்றிப் பங்குபெற்றுப் பேரின்பம் கொள்வாராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . இன் ஆன்மாவுக்காக எங்கள் பணிகளின் இப்பலியை உமக்கு ஒப்புக்கொடுத்து உமது கனிவை வேண்டுகின்றோம்: அதனால் இறைப்பற்று நிறைந்த உள்ளத்தோடு திரு அவையில் பலி ஒப்புக்கொடுத்த அவருக்கு அது மன்னிப்பைப் பெற்றுத் தருவதாக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகப் பீடத்தின் திரு உணவால் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: உமது திரு அவையில் உண்மையுடன் பணி புரிந்த உம் அடியாராகிய அருள்பணியாளர் (பெயர்) . . . இன் ஆன்மா இப்பலியின் ஆற்றலால் உம் திருமுன் என்றும் அக்களிக்கச் செய்வீராக. எங்கள்.

4. திருத்தொண்டருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உம் அடியாராகிய திருத்தொண்டர் (பெயர்) . . . க்கு உமது திரு அவையில் பணி புரியும் பேற்றினை அளித்தீரே; அவர் நிலையான பேரின்பத்திலும் பங்குபெற அருள்புரிவீராக. உம்மோடு .

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியாராகிய திருத்தொண்டர் (பெயர்) ... இன் மீட்புக்காக நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கும் இப்பலியை ஏற்றருளும்; அவர் இவ்வுலகில் உம் திருமகன் கிறிஸ்துவுக்குப் பணி புரிந்தது போல் உம் நம்பிக்கையுள்ள ஊழியர்களோடு என்றென்றும் மாட்சி பெற உயிர்த்தெழுவாராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம்முடைய புனிதக் கொடைகளால் நிறைவு பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம்: உம் அடியாராகிய திருத்தொண்டர் (பெயர்) . . .ஐ உமது திரு அவையின் பணியாளருள் ஒருவராக அழைத்தீரே; அவர் இப்பலியின் பயனாகச் சாவின் தளைகளிலிருந்து விடுவிக்கப்பெற்று, சிறந்த முறையில் பணியாற்றிய உம்முடைய ஊழியர்களோடு சேர்ந்து உமது மகிழ்ச்சியில் பங்குகொள்ள கனிவுடன் அருள்வீராக. எங்கள்.

5. துறவியருக்காக

திருக்குழும் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, கிறிஸ்து மீது கொண்ட அன்புக்காக நிறையன்பின் வழியைப் பின்பற்றிய உம் அடியார் (பெயர்) ..... இன் ஆன்மாவுக்காக வேண்டுகின்றோம்: அதனால் அவர் வரவிருக்கும் உமது மாட்சியில் இன்புற்றிருக்கவும் தம் சகோதரர் சகோதரிகளோடு உமது ஆட்சியின் என்றென்றுமுள்ள பேற்றினைப் பெற்று மகிழவும் அருள்வீராக. உம்மோடு.

6. நற்செய்திப் பணியாளருக்காக

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) . . . க்காக உமது இரக்கத்தைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: உமது நற்செய்தியைப் பரப்ப விடாமுயற்சியுடன் ஈடுபட்டு உழைத்த அவர் அதன் பரிசாக விண்ணரசில் மகிழ்வுடன் வந்து சேரும் தகுதி பெறுவாராக. உம்மோடு.

7. இளைஞருக்காக

திருக்குழும் மன்றாட்டு

மனிதர் அனைவரின் வாழ்நாள்களை நெறிப்படுத்துபவராகிய இறைவா, இளமையிலேயே இறந்த இந்த உம் அடியார் (பெயர்) .... க்காக கனணிர் சிந்தி, அவரை உம்மிடம் பணிவுடன் ஒப்படைக்கின்றோம்; இவ்வாறு அவர் உமது பேற்றின் இல்லத்தில் குன்றா இளமையுடன் திளைத்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

==============19^ 9366 ^-----------

8. நெடுநாள் நோயுற்றோருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, தமது துன்பத்திலும் நோயிலும் உமக்கு ஊழியம் புரிய அருள்கூர்ந்த உம் அடியார் (பெயர்) . . . க்காக வேண்டுகின்றோம்: உம் திருமகனுடைய பொறுமையின் எடுத்துக்காட்டைப் பின்பம் அவரது மாட்சியின் பரிசினையும் பெற்றுக்கொள்ள அருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

9. திடீரென இறந்தோருக்காக

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, திடீரென இறந்துவிட்ட எங்கள் சகோதரர் / சகோதரி (பெயர்) .... க்காகக் கண்ணீர் சிந்தும் எங்களுக்கு உமது நன்மையின் பேராற்றலைக் காட்டியருளும்; இவ்வாறு அவர் உம்மோடு தோழமை பெற வந்துள்ளார் என நாங்கள் நம்பச் செய்வீராக. உம்மோடு.
10. தம்பதியருக்காக

திருக்குழும் மன்றாட்டு

ஆண்டவரே, உம் அடியார்கள் (பெயர்கள்) . . . , . . . மீது உளம் கனிந்து அவர்களை மன்னித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இவ்வுலக வாழ்வில் இல்லற அன்பால் உண்மையுடன் இணைந்திருந்த அவர்கள், உமது அன்பின் நிறைவில் உம்முடன் என்றும் இணைந்திருக்கச் செய்வீராக. உம்மோடு.

அல்லது

, தம்பதியரில் ஒருவருக்காக: ஆண்டவரே, உம் அடியார் (பெயர்) ...... மீது இரக்கம் கொண்டு அவரை மன்னித்து, பரிவிரக்கத்துடன் தொடர்ந்து காத்தருள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இல்லற அன்பில் இணைந்து வாழ்ந்த அவர் உமது அன்பின் நிறைவில் உம்முடன் என்றும் இணைந்திருக்கச் செய்வீராக. உம்மோடு .

==============20^ 9367 ^-----------

11. பெற்றோருக்காக

திருக்குழும் மன்றாட்டு

தாய் தந்தையை மதித்து நடக்க எங்களுக்குக் கட்டளையிட்ட இறைவா, என் தாய், தந்தை மீது (எம் பெற்றோர்மீது) கனிவுடன் இரக்கம் கொண்டு அவர்களுடைய பாவங்களை மன்னித்தருளும்; அவர்கள் நிலையான ஒளியில் மகிழ்ந்திருப்பதை நானும் நாங்களும்) காண வரம் அருள்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, என்னுடைய தாய், தந்தைக்காக (எங்கள் பெற்றோருக்காக) உமக்கு ஒப்புக்கொடுக்கும் பலியை ஏற்றருளும்; 'அவர்களுக்கு வாழ்வோர் நாட்டில் என்றென்றுமுள்ள மகிழ்ச்சியை அளித்து என்னையும் (எங்களையும்) அவர்களோடு புனிதரின் பேரின்பத்தில் சேர்த்தருள்வீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் பங்கேற்ற விண்ணகத் திரு உணவு என் தாய், தந்தைக்கு (எங்கள் பெற்றோருக்கு) முடிவில்லா இளைப்பாறுதலையும் ஒளியையும் பெற்றுத் தருவதாக; இத்திருவிருந்து அவர்களோடு எனக்கும் (எங்களுக்கும்) என்றென்றுமுள்ள உமது மாட்சியால் நிறைவு அளிப்பதாக. எங்கள்.

12. உற்றார், உறவினர், கொடையாளருக்காக

திருக்குழும் மன்றாட்டு

இறைவா, மன்னிப்பு வழங்குபவரும் மனிதரின் மீட்பை விரும்புகிறவருமானவரே, இவ்வுலகைவிட்டுப் பிரிந்து சென்ற எங்கள் உற்றார், உறவினர், கொடையாளர்கள் அனைவருக்காகவும் உமது கனிவை வேண்டுகின்றோம்: அதனால் என்றும் கன்னியான புனித மரியாவின் பரிந்துரையால் உம் புனிதர் அனைவரோடும் முடிவில்லாப் பேற்றினில் அவர்கள் பங்குபெறச் செய்வீராக. உம்மோடு.

காணிக்கைமீது மன்றாட்டு

அளவில்லா இரக்கம் உள்ள இறைவா, நாங்கள் தாழ்மையுடன் உமக்கு அளிக்கும் மன்றாட்டுகளை உளம் கனிந்து ஏற்றருளும்; எங்களுக்கு மீட்பு அளிக்கும் இவ்வருளடையாளங்களால் எங்கள் உற்றார், உறவினர், கொடையாளர்கள் ஆகியோரின் பாவங்கள் அனைத்துக்கும் மன்னிப்பு அளிப்பீராக. எங்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உற்றார், உறவினர், கொடையாளர்கள் ஆகியோரின் ஆன்மாக்களுக்காக மாண்புக்கு உரிய உம் திருமுன் இப்புகழ்ச்சிப் பலியை ஒப்புக்கொடுத்து உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வருளடையாளத்தின் ஆற்றலால் அவர்கள் தங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் கழுவப்பெற்று உமது இரக்கத்தால் முடிவில்லா ஒளியின் பேற்றினைப் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள்.

==============22^ 9369 ^-----------

=============↑ பக்கம் 1228

====================


image