image

 

பொது


முன்னுரை

1. பெரியோருக்காகக் கொண்டாடப்படுகின்ற திருப்பலிகளில் இன்னும் - பங்கேற்றுப் பயனுறுகின்ற விதத்திலே (சிறுவருக்காகத் தழுவியமைக்கப்பட்ட மன்றாட்டுப் பாடங்கள்) அவர்களுக்கு உதவிட வேண்டும்.

சிறுவரோடு திருப்பலிக்கும் பெரியோரோடு திருப்பலிக்கும் இடையே வேறுஅதிகம் தெரியாதிருக்கும்படி சிறுவரோடு திருப்பலியில் உள்ள சில பாடங்கள் வருமோ தழுவியமைக்கப்படக்கூடாது எனச் சிறுவரோடு திருப்பலிக்கான விதிமுறை எடு கட்டளையிடுகின்றது. இவற்றில் சில: ஆர்ப்பரிப்புகளும் அருள்பணியாள வாழ்த்துரைக்கு உரிய பதிலுரைகளும். எனவே, கீழ்க்காணும் எண் 12 சொல்லப்பட்டது தவிர, நற்கருணை மன்றாட்டுகளின் தொடக்கவுரையின் உரையாட, தூயவர் ஆகியவை பெரியோரோடு திருப்பலியில் உள்ளவாறே எப்பொழுதும் அமைய

2. "உரோமைத் திருப்பலி நூல் அமைப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப, நற்கருணை மன்றாட் ஒவ்வொரு வாய்பாட்டிலும் ஆண்டவரின் வார்த்தைகள் ஒன்று போலவே இருக்கும்.

3. "'இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்ற வார்த்தைகளுக்குமுன், ஒரு வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது: "பின்பு இயேசு அவர்களிடம் கூறியதாவது. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகக் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பதற்காகவுமே இவ்வாறு உள்ளது.

4. சில விதிவிலக்குகளுடன், உரோமைத் திருப்பலி நூல் பொதுப் படிப்பினை எண் 79-க்கு ஏற்றவாறு சிறுவருக்கான நற்கருணை மன்றாட்டு ஒவ்வொன்றும் நற்கருணை மன்றாட்டின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி உள்ளன.

5. தேவையான கூறுகள் மட்டுமல்ல, மரபுகளுக்கு ஏற்றவாறு எப்பொழுதும் சொல்லப்பட்டுள்ளவை, உதாரணமாக, நினைவுகூர்தல் அல்லது தூய ஆவியின் பொழிதலுக்கான வேண்டல், சிறுவரின் புரிதலுக்கு ஏற்ற வகையில் எளிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

6. மொழியின் எளிய நடை பின்பற்றப்பட்டாலும்கூட, இதை வடிவமைத்தவர்கள், குறிப்பாகத் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரால் சொல்லப்படும் வார்த்தைகளில் திருப்பலிக் கொண்டாட்டத்தின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறு பிள்ளைத்தனமான மொழியைத் தவிர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.

7. செயல்முறை பங்கேற்புக்கான வழிமுறைகள் குழந்தைகளுக்கு மிக முக்கியமானவை என்பதால், இத்தகைய பங்கேற்பை அதிகரிக்கும்படியும் மிகப் பயனுள்ளதாக்கும்படியும் சிறுவரோடு திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுகளில் ஆர்ப்பரிப்புகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளது. நற்கருணை மன்றாட்டு திருவழிபாட்டு முதல்வருக்கு உரிய மன்றாட்டு எனும் முறையில் இதன் இயல்பு சிதைவுபடாமல் காக்கப்பட்டுள்ளது.

8. அந்தந்த இடத்தின் பண்பாட்டுக்கு ஏற்றவாறு, சிறுவரால் பாடப்படக்கூடிய மன்றாட்டுப் பகுதிகள் புதிய இசை அமைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆயர் பேரவை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இம்மன்றாட்டுகளின் திருவழிபாட்டுப் பயன்பாடு

9. இந்த நற்கருணை மன்றாட்டுகள் சிறுவருக்காகவும் இளம் வயதில்
-யாதோருக்காகவும், திருப்பலியில் பங்கேற்பாளர்களில் அதிகமானோர் சிறுவராக இருக்கும்போதும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், சிறுவ ?'பபலகளின் வழிகாட்டியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது போல ஆயருக்கு முழு உ உண்டு .

சிறுவரோடு திருப்பலிகளின் வழிகாட்டி, எண் 39: A.A.S. 66 (1974), 41-42. 2 A.A.S. 61 (1969) 219.
சிறுவரோடு திருப்பலிகளின் வழிகாட்டி, எண் 2 2: A.A.S. 66 (1974), 36. * அதே , எண் 19: A.A.S. 66 (1974), 35.

10. ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்கு உரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும் தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக்கொள்ள முடியாது.

11. முதல் நற்கருணை மன்றாட்டில், அர்ச்சிப்பின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு, வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங்களுக்காக இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு "இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளுக்கும் அருள்பணியாளரால் சொல்லப்படும் நினைவுகூர்தல், நினைவுகூர்தலுக்குப்பின் வரும் ஆர்ப்பரிப்பு - நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு - ஆகியவற்றுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சிறுவர் தெளிவாகப் புரிந்துகொள்வர்.

12. சிறுவரின் பங்கேற்பை உற்சாகப்படுத்துவதற்காக, சிறுவரோடு திருப்பலிகளின் விதிமுறைக்கு ஏற்றவாறு தொடக்கவுரையின் உரையாடலுக்கு முன்பு நன்றி செலுத்துவதற்கான காரணங்களைச் சொல்ல அனுமதி உண்டு. மேற்கூறிய விதிமுறை எண் 33-இன் ஒழுங்குமுறைகள் சைகைகள், உடலின் நிலைகள் வழியாகப் பங்கேற்பதையும் சுட்டிக்காட்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளார்ந்த பங்கேற்பு பற்றி எண் 23-இல் சொல்லப்பட்டுள்ளது போல நற்கருணை மன்றாட்டின் சிறப்பாகிய மகிழ்ச்சி நிறைந்த, சகோதரத்துவம் கொண்ட தியான உணர்வைத் தருகின்ற கொண்டாட்டத்தின் இயல்பு வலியுறுத்தப்பட வேண்டும்.

13. சிறுவருடைய அருள்நெறியாளர்களின் ஆழமான ஏக்கமாகிய உள்ளார்ந்த பங்கேற்பை உற்சாகப்படுத்தக் கொண்டாட்டத்துக்கு முன்பும் பின்பும் சிறப்பான மறைக்கல்விப் படிப்பினை அவசியம். சிறுவருக்குத் தெளிவான மறைக்கல்வி வழங்கப்படும் அனைத்துப் பாடங்களிலும் கொண்டாட்டங்களின் உயர்ந்த இடமாகக் கருதப்படும் நற்கருணை மன்றாட்டுகள் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளன.

அ) நற்கருணை மன்றாட்டு

1 14. "தூயவர்" பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு, முதல் நற்கருணை மன்றாட்டைச் சிறு பகுதிகளாகப் பிரிப்பதோடு "உன்னதங்களிலே ஒசன்னா" ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழி நடத்தும் ஒருவரால் பாடப்படலாம் அல்லது சொல்லப்படலாம். மூன்றாம் முறை இப்பகுதி முழுமையும் பாடப்படலாம் அல்லது சொல்லப்படலாம்.

ஆ) நற்கருணை மன்றாட்டு 2

15. இரண்டாம் நற்கருணை மன்றாட்டில், "தூயவர்" பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் உரிய இடத்தில் தரப்பட்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைகளுக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருளைத் தியானிக்கும் வகையில் பாடப்படலாம்.

இ) நற்கருணை மன்றாட்டு 3

16. மூன்றாம் நற்கருணை மன்றாட்டில் பாஸ்கா காலத்துக்கான மாற்றுப் பாடம் தரப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சிப்புக்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் அதே போன்று நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

• காண். அதே, எண் 22:A.A.S. 66 (1974), 37. 6 காண். அதே, எண் 12:A.A.S. 66 (1974), 33.

==============24^ 9371 ^-----------


கூட்டுத்திருப்பலியில்

சிறுவரோடு திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டு1
சொல்லப்படும் முறை


சிறுவரோடு திருப்பலி கொண்டாடும்பொழுது அவர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு கூட்டுத்திருப்பலியைத் தவிர்ப்பது சிறந்தது. இருப்பினும், குறிப்பிட்ட காரணங்களுக்காகக் கூட்டுத்திருப்பலி நடைபெற்றால் பின்வரும் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

"எங்கள் தந்தையே இறைவா, நீர் எங்களை ... முதல் "நாங்கள் மகிழ்ச்சியுடன் பாடுகின்றோம் வரை உள்ள பகுதிகள் அனைத்தும் திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரால் மட்டும் கைகளை விரித்துச் சொல்லப்படும்.

"எங்கள் தந்தையே இறைவா, உலகம் எங்கும் . . . முதல் "வணங்கிப் பாடுவதாவது வரை உள்ள பகுதிகள் கூட்டுத்திருப்பலியாளருள் ஒருவரால் சொல்லப்படும். அவர் தம் கைகளை விரித்து, தனியாக உரத்த குரலில் சொல்வார்.

"எங்கள் தந்தையே இறைவா, நீர் தூய்மைமிக்கவர் ... முதல் "அனுப்பியருள் உம்மை வேண்டுகின்றோம்" வரை கூட்டுத்திருப்பலியாளர்கள் அனைவரும் இணைந்து பின்வருமாறு சொல்கின்றனர்.

அ) எங்கள் தந்தையே இறைவா, நீர் தூய்மைமிக்கவர் ... முதல் அனுப்பியருள் உமமை வேண்டுகின்றோம் வரை பலிப்பொருள்களை நோக்கித் தம் கைகளை விரித்து

ஆ) "இவ்வாறு, நீர் எங்களுக்கு ...." மற்றும் "இயேசு தாம் இறப்பதற்கு முந்திய ... - இப்பகுதிகளில் தம் கைகளைக் குவித்து;

இ) தேவைக்கு ஏற்ப, ஆண்டவருடைய வார்த்தைகளின்போது, ஒவ்வெ" " 2' அபபததையும் திருக்கிண்ணத்தையும் நோக்கித் தம் வலக் கைகளை நீட்டி ' எழுந்தேற்றத்தின்போது அவற்றை நோக்கி, பின் பணிந்து வணங்கி,

'ஈ) இயேசு எங்களுக்கு கட்டளையிட்டவற்றை . . ." மற்றும் தந்தையே எங்களை அன்பு செய்வதால் ....." பகுதிகளில் தம் கைகளை விரித்து

விண்ணப்பங்கள்: "ஆண்டவரே, உம் பிள்ளைகளில் யாரையும் ... முதல் நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம்" வரை திருப்பலியாளம் வழங்கப்படலாம். அவர் தம் கைகளை விரித்து, உரத்த குரலில் சொல்வார்.

=============↑ பக்கம் 1233


சிறுவரோடு திருப்பலிகள்

நற்கருணை மன்றாட்டு1

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

 

 

 

 

 

 

C: எங்கள் தந்தையே இறைவா,
நீர் எங்களை இங்கு ஒன்றாகக் கூட்டிச் சேர்த்திருக்கின்றீர்.
எனவே நீர் செய்துள்ள வியத்தகு செயல்களுக்காக
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உம்மைப் புகழ்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள எல்லா அழகான அமைப்புக்காகவும்
நீர் எங்களுக்கு அளித்திருக்கின்ற மகிழ்ச்சிக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம்.

பகலை ஒளிர்விக்கும் ஒளிக்காகவும் எங்கள் உள்ளங்களை ஒளிரச் செய்யும் உமது வார்த்தைக்காகவும் உம்மைப் புகழ்கின்றோம். இம்மண்ணுலகுக்காகவும் இதில் வாழும் மக்கள் அனைவருக்காகவும் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள வாழ்வுக்காகவும் உம்மை வாழ்த்துகின்றோம்.
நீர் நல்லவர் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எங்கள்மேல் அன்புகூர்ந்து, எங்களுக்காக அரும்பெரும் செயல்கள் பல புரிந்துள்ளீர். ஆகவே நாங்கள் ஒன்றிணைந்து பாடுவதாவது:

தூயவர், தூயவர், தூயவர். வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
==============26^ 9373 ^-----------


2. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

C: தந்தையே, நீர் உம் மக்களை எப்பொழுதும் நினைவில் கொண்டிருக்கின்றீர். எங்களை நீர் ஒருபோதும் மறப்பதில்லை உம்முடைய அன்பான் திருமகன் இயேசுவை எங்களிடம் அனுப்பினீர். அவர் எங்களுக்காகத் தம் வாழ்வைத் தந்தார். அவர் எங்களை மீட்க வந்தார். அவர் நோயாளிகளைக் குணமாக்கினார். ஏழைகள்மேல் அக்கறை கொண்டார்; துயருற்றோரோடு அழுதார். பாவிகளுக்கு மன்னிப்பு அளித்தார். ஒருவர் மற்றவரை மன்னிக்கக் கற்றுக்கொடுத்தார். ஒவ்வொருவரையும் அவர் அன்பு செய்தார். எவ்வாறு அன்பு செய்வது என்பதையும் எங்களுக்குக் காட்டினார். சிறுவரை அரவணைத்து அவர்களுக்கு ஆசி வழங்கினார். ஆகவே நாங்கள் மகிழ்ச்சியுடன் பாடுகின்றோம் (சொல்கின்றோம்.

எல்லாரும் சொல்கின்றனர்:

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஒசன்னா!


3. அருள்பணியாளர் தம் கைகளை விரித்துத் தொடர்கின்றார்:

C1: எங்கள் தந்தையே இறைவா, உலகம் எங்கும் உள்ள உம் மக்கள் உம்மைப் புகழ்கின்றனர். ஆகவே நாங்கள் இப்போது முழுத் திரு அவையோடும், சிறப்பாக எங்கள் திருத்தந்தை (பெயர்) . . . எங்கள் ஆயர் (பெயர்)*... இவர்களோடும் சேர்ந்து உம்மை வேண்டுகின்றோம். விண்ணகத்தில் புனித கன்னி மரியாவும் திருத்தூதர்களும் புனிதர் அனைவரும் உமது புகழை எப்பொழுதும் பாடுகின்றனர். அவர்களோடும் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து நாங்கள் உம்மைப் பணிந்து வணங்கிப் பாடுவதாவது சொல்வதாவது: எல்லாரும் சொல்கின்றனர்:

உரோமைத் திருப்பலி பொதுப் படிப்பினை எண் 149-இல் உள்ளவாறு, இலை 4?" ஆயா் அல்லது துணை ஆயர் பெயர் இங்கு சொல்லப்படலாம்.
==============27^ 9374 ^-----------

தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!

அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: எங்கள் தந்தையே இறைவா,
நீர் தூய்மைமிக்கவர். நாங்கள் உமக்கு நன்றி செலுத்த விரும்புகின்றோம். எனவே இதோ அப்பமும் இரசமும் கொண்டு வந்திருக்கின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்து, பின் பலிப்பொருள்கள் மீது விரித்துச் சொல்கின்றார்:

உம் அன்பார்ந்த மகன் இயேசு கிறிஸ்துவின்

அவர் தம் கைகளைக் குவிக்கின்றார். பலிப்பொருள்கள் மீது ஒரு முறை சிலுவை அடையாளமிட்டுச் சொல்கின்றார்:

உடலும் இரத்தமுமாக இக்கொடைகளை மாற்ற உமது தூய ஆவியாரை அனுப்பியருள உம்மை வேண்டுகின்றோம்.

அவர் தம் கைகளைக் குவித்துச் சொல்கின்றார்:

இவ்வாறு நீர் எங்களுக்கு வழங்கியவற்றையே
நாங்கள் உமக்குக் காணிக்கையாக்குகின்றோம்.

5. பின்வரும் வாய்பாடுகளில் ஆண்டவரின் வார்த்தைகளை அவற்றின் பொருளுக்கு ஏற்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டும்.

இயேசு தாம் இறப்பதற்கு முந்திய இரவில் தம் திருத்தூதர்களோடு இரவு விருந்தை அருந்தியபோது,

அவர் அப்பத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு தொடர்கின்றார்:

மேசையிலிருந்து அப்பத்தை எடுத்தார். உமக்கு நன்றி கூறி வாழ்த்துரைத்தார். பின்பு அதைப் பிட்டு, தம் நண்பர்களுக்கு அளித்துக் கூறியதாவது:

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.

அவர் அர்ச்சிக்கப்பட்ட அப்பத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டிய பின், அதைத் திரு அப்பத் தட்டின் மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

அதன்பின் அவர் தொடர்கின்றார்:

இரவு விருந்தை அருந்தியபின்,

அவர் திருக்கிண்ணத்தை எடுத்து, பீடத்துக்குமேல் சற்று உயர்த்திப் பிடித்துக்கொ தொடர்கின்றார்:

இயேசு திராட்சை இரசம் நிறைந்த கிண்ணத்தை எடுத்தார்; உம் நன்றி செலுத்தி, அதைத் தம் நண்பர்களுக்குக் கொடுத்துக் கூறியதாவது :

அவர் சிறிது குனிந்து சொல்கின்றார்:

அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய
என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.

பின்பு இயேசு அவர்களிடம் கூறியதாவது:

இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அவர் திருக்கிண்ணத்தை உயர்த்தி மக்களுக்குக் காட்டியபின், அதைத் திருமேனித்
துகில்மீது வைத்துவிட்டு, முழங்காலிட்டு வணங்குகின்றார்.

7. பின்பு அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: இயேசு எங்களுக்குக் கட்டளையிட்டவற்றை நாங்கள் இப்பொழுது நிறைவேற்றுகின்றோம்; தந்தையே, வாழ்வு தரும் அப்பத்தையும் மீட்பு அளிக்கும் திருக்கிண்ணத்தையும் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இவ்வாறு அவருடைய இறப்பையும் உயிர்ப்பையும் நினைவுகூருகின்றோம். இவரே எங்களை உம்மிடம் அழைத்து வருகின்றார். நீர் இவரை ஏற்றுக்கொள்வது போல எங்களையும் ஏற்றுக்கொள்வீராக.

நம்பிக்கையின் மறைபொருள்.

எல்லாரும் ஆர்ப்பரித்துத் தொடர்கின்றார்கள்:


ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.

அல்லது

ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அல்லது

உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும். உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களுக்கு விடுதலை அளித்தவர் நீரே.

அதன்பின் அருள்பணியாளர் தம் கைகளை விரித்துச் சொல்கின்றார்:

CC: தந்தையே,
நீர் எங்களை அன்பு செய்வதால், உமது பந்தியில் அமர எங்களை அழைக்கின்றீர். உம் திருமகனின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் நாங்கள் உட்கொள்வதால் தூய ஆவியாரின் மகிழ்ச்சியால் எங்களை நிரப்பியருளும்.

C2: ஆண்டவரே,
உம் பிள்ளைகளில் யாரையும் நீர் மறப்பதில்லை. நாங்கள் அன்பு செய்யும் அனைவரையும் சிறப்பாக (பெயர்) . . . , (பெயர்) ... ஆகியோரையும் காத்தருள உம்மை வேண்டுகின்றோம். இறந்துபோனவருக்காகவும் உம்மை வேண்டுகின்றோம். துன்பத்தில் மூழ்கித் துயரப்படுவோர் அனைவரையும் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களையும் மற்ற மக்களையும் நினைவுகூர்ந்தருளும். உம் திருமகன் இயேசு வழியாக நீர் எங்களுக்குப் புரிந்துவரும் அரும்பெரும் செயல்களைக் கண்டு, வியந்து நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம்.

9. அருள்பணியாளர் தம் கைகளைக் குவிக்கின்றார். பின்பு திருக்கிண்ணத்தையும் திரு அப்பம் உள்ள தட்டையும் எடுத்து, இரண்டையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சொல்கின்றார்:

இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே. எல்லாரும் ஆர்ப்பரிக்கின்றார்கள்: ஆமென். பின்பு திருவிருந்துச் சடங்கு தொடர்கின்றது (பக். 609).
==============30^ 9377 ^-----------

பிற்சேர்க்கை 3


தண்ணீரைப் புனிதப்படுத்தித் தெளிக்கும் சடங்குமுறை -

1. எல்லாக் கோவில்களிலும் சிற்றாலயங்களிலும் திருமுழுக்கின் நினைவாகத் தண்ணீரைப் புனிதப்படுத்தித் தெளிக்கும் சடங்கு இடம் பெறலாம். இது ஞாயிறு திருப்பலிகளிலும் சிறப்பாக, பாஸ்கர் காலத்தில் வரும் ஞாயிறு திருப்பலிகளிலும் சனிக்கிழமை மாலையில் நடைபெறும் ஞாயிறு திருப்பலியிலும் இடம் பெறலாம்.

இச்சடங்கு திருப்பலியில் இடம் பெற்றால், திருப்பலி தொடக்கத்தில் வரும் பாவத்துயர்ச் செயலுக்குப் பதிலாக நிகழ்த்தப்படும்.

2. அருள்பணியாளர் மக்களுக்கு வாழ்த்துக் கூறியபின், தமது இருக்கைமுன் நின்று மக்களைப் பார்த்துப் புனிதப்படுத்தப்பட வேண்டிய தண்ணீர் நிறைந்த கலத்தை தம்முன் வைத்துக்கொண்டு கீழ்வரும் சொற்களில் அல்லது இது போன்ற சொற்களில் மன்றாட மக்களை அழைக்கின்றார்:

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நம் திருமுழுக்கின் நினைவாக நம்மீது தெளிக்கப்படும் தமது படைப்பாகிய இத்தண்ணீரைப் புனிதப்படுத்தி அருளுமாறு நம் கடவுளாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோமாக. அவரே நமக்கு உதவி அளித்து நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவிக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க அருள்வாராக.

சிறிது நேரம் அமைதிக்குப் பின் அருள் பணியாளர் தம் கைகளைக் குவித்துப் பின்வருமாறு மன்றாடுகின்றார்:

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, வாழ்வின் ஊற்றும், தூய்மையின் தொடக்கமுமான தண்ணீரின் வழியாக மக்கள் புனிதம் அடைந்து நிலைவாழ்வின் கொடையைப் பெறவேண்டுமென்று திருவுள மானீர்; இத்தண்ணீரைப் X புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: ஆண்டவரே, உமது நாளாகிய இன்று உமது அருள்காவலைப் பெற விரும்புகின்றோம். வாழ்வு அளிக்கும் உமது அருளின் ஊற்றினை எம்மில் புதுப்பித்தருளும். இத்தண்ணீரினால் எங்கள் உள்ளத்தையும் உடலையும் தீமை அனைத்திலிருந்தும் காத்தருள்வீராக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்துடன் உம்மை அணுகிவரவும் உமது மீட்பைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக. எங்கள்.

அல்லது

ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உடல், ஆன்ம வாழ்வு அனைத்துக்கும் ஊற்றும் தொடக்கமும் நீரே. இத்தண்ணீரைப் புனிதப்படுத்தியருள உம்மை வேண்டுகின்றோம்: எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டவும் எல்லா நோய்களையும் மாற்றானின் சூழ்ச்சிகளையும் எதிர்த்து உமது அருளின் பாதுகாப்பை அடையவும் நாங்கள் இத்தண்ணீரை நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றோம். ஆண்டவரே, உமது இரக்கத்தின் உதவியால் உயிருள்ள தண்ணீர் எங்களில் பொங்கி எழுந்து மீட்பு அளிப்பதாக. இவ்வாறு நாங்கள் தூய இதயத்தோடு உம்மை அணுகிவந்து எங்கள் உடலுக்கும் ஆன்மாவுக்கும் வரும் இடர்கள் அனைத்தையும் விலக்குவோமாக. எங்கள்.

அல்லது, பாஸ்கா காலத்தில்:

ஆண்டவரே எல்லாம் வல்ல இறைவா, உம் மக்களின் வேண்டல்களைக் கனிவாய்க் கேட்டருளும். வியத்தகு முறையில் எங்களைப் படைத்தீர் என்றும் அதிலும் வியத்தகு முறையில் எங்களை மீட்டருளினீர் என்றும் நினைவுகூரும் எங்களுக்காக இத்தண்ணீர்மீது உமது X ஆசியைக் கனிவுடன் பொழிந்தருளும். ஏனெனில் நிலத்தை வளப்படுத்தவும் எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் இத்தண்ணீரைப் படைத்தீர்; உமது இரக்கத்தின் கருவியாகவும் இத்தண்ணீரை அமைத்தீர்; எவ்வாறெனில், தண்ணீரின் வழியாக உம் மக்களின் அடிமைத்தளையை அகற்றினீர்; பாலைநிலத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர். அதன் வழியாக மனித இனத்தோடு நீர் செய்ய இருந்த புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்; இறுதியாக, யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாகப் பாவக் கறை படிந்த எங்கள் மனித இயல்பைப் புதுப் பிறப்பு அளிக்கும் திருமுழுக்கினால் கழுவிப் புதுப்பித்தீர். ஆகவே நாங்கள் பெற்றுக்கொண்ட திருமுழுக்கின் நினைவாக இத்தண்ணீர் இருப்பதாக. பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற எங்கள் சகோதரர் சகோதரிகளோடு நாங்களும் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.

==============21^ 9398 ^-----------

3. தண்ணீருடன் உப்புக் கலப்பது இடத்தின் சூழ்நிலைக்கோ மக்களின் வழக்கத்திற்கோ
கஇருப்பின் அருள்பணியாளர் உப்பைப் பின்வருமாறு கூறிப் புனிதப்படுத்தலாம்.

எல்லாம் வல்ல இறைவா, தண்ணீர் வளம் பெற அதில் உப்பிட வேண்டுமென்று இறைவாக்கினர் எலிசா வழியாகக் கற்பித்தீர். உமது படைப்புப் பொருளாகிய இந்த உப்பைப் பரிவிரக்கத்துடன் X புனிதப்படுத்தியருள உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்: ஆண்டவரே, உப்புக் கலந்த தண்ணீர் தெளிக்கப்படும் இடம் எல்லாம் தீயோனின் தாக்குதல் அனைத்தும் தோல்வியுறச் செய்வீராக. உம் தூய ஆவியார் உடனிருந்து எங்களை இடையறாது காத்தருள்வார எங்கள்.

பின்னர் அருள்பணியாளர் உப்பைத் தண்ணீரில் போடுகின்றார்.

4. புனித நீர்ச் செம்பைப் பெற்று தம்மீதும் பணியாளர்கள், திருநிலையினர் ஆகியோர் மீதும் தெளிக்கின்றார். தேவைக்கு ஏற்ப, கோவிலின் நடுவே சென்று மக்கள் மீதும் தெளிக்கின்றார்.

அப்போது பின்வரும் பாடல்களில் ஒன்றை அல்லது வேறு பொருத்தமான பாடலை மக்கள் பாடுகின்றனர்.

பாஸ்கா காலத்துக்குப் புறம்பே

பல்லவி 1

திபா 50:9 ஆண்டவரே, ஈசோப்பினால் என்மேல் தெளித்தருளும். நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும். நான் உறைபனியிலும் வெண்மையாவேன்.


பல்லவி 2

எசேக் 36:25-26 நான் தூய நீரை உங்கள் மேல் தெளிப்பேன்; நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருளுவேன், என்கிறார் ஆண்டவர்.


காண். 1 பேது. 1:3-5 பாடல்

கடவுளும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து வழியாக, நாம் உயிருள்ள தொல் நாக்குடன் வாழ நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இறுதிக் காலத்தில் மீட்பு வெளிப்படும்வரை அழியாத உரிமைப் பேறு நமக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.


பாஸ்கா காலத்தில்

பல்லவி 1
காண். எசே 47:1- 2,9 பல்லவி 1 கோவிலின் வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன். அல்லேலூயா. அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ, அவர்கள் யாவரும் மீட்பினைப் பெற்றுக் கூறுவர்: அல்லேலூயா. அல்லேலூயா.

பல்லவி 2
காண். செப் 3:8; எசே 36:25 ஆண்டவர் கூறுகிறார்: எனது உயிர்ப்பின் நாளில் வேற்றினத்தாரை ஒன்றுசேர்த்து அரசுகளையும் ஒன்று திரட்டு வேன், அல்லேலூயா; நான் தூய நீரை உங்கள் மீது தெளிப்பேன், அல்லேலூயா.

பல்லவி 3
காண். தானி 3:77,79 நீரூற்றுகளே, நீர்வாழ் உயிரினங்களே, நீங்கள் எல்லாம் கடவுளைப் போற்றிப் பாடுங்கள், அல்லேலூயா.

பல்லவி 4
1 பேது 2:9 நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர். உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி, அல்லேலூயா.

பல்லவி 5
கிறிஸ்துவே, உமது விலாவிலிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து ஒடியது. அதனால் உலகின் அழுக்கு அனைத்தும் கழுவப்பட்டது; புத்துயிர் புலர்ந்தது, அல்லேலூயா.

5. பாடல் முடிந்தபின், அருள்பணியாளர் தமது இருக்கைக்குத் திரும்பி வந்து, மக்களைப் பார்த்துத் தம் கைகளைக் குவித்துப் பின்வருமாறு மன்றாடுகின்றார்:

எல்லாம் வல்ல இறைவன், நம் பாவங்களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவாராக. இந்த நற்கருணைக் கொண்டாட்டத்தின் வழியாக அவர் தம்முடைய ஆட்சியின் விருந்தில் பங்குகொள்ள நம்மைத் தகுதி பெறச் செய்வாராக.

பதில் : ஆமென்.

பின்பு, குறிப்பிடப்பட்டிருந்தால், "உன்னதங்களிலே" எனும் பாடல் -- அல்லது சொல்லப்படும்.

==============23^ 9400 ^-----------

பிற்சேர்க்கை IV

தூய நற்கருணை வழங்கப் பணியாளருக்கு உரிமை அளிக்கும் சடங்கு

1 திருப்பணியாற்றும் அருள்பணியாளர்கள் உண்மையான தேவை ஏற்படும்போது அந்நேரத்தில் மக்களுக்குத் தம்மோடு சேர்ந்து நற்கருணை வழங்கும் உரிமையைத் தகுதியான ஆள் ஒருவருக்கு அளிக்கலாம் என அனு மதிக்கும் அதிகாரத்தைத் தல ஆயர்கள் பெற்றுள்ளனர்.

2. நற்கருணை வழங்க உரிமை பெறும் ஆள் அந்நேரத்திற்கெனக் கீழுள்ள சடங்கின்படி நியமனம் பெறுவது முறை.

3. திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் வழக்கம் போல நற்கருணை அருந்திய பின், மக்களுக்கு நற்கருணை வழங்கத் தெரிவு செய்யப்பட்ட நற்கருணையின் தனியுரிமைத் திருப்பணியாளர் பீடத்தை அணுகி அருள் பணியாளர்முன் நிற்பார். அருள்பணியாளர் பின்வருமாறு கூறி அவருக்கு ஆசி வழங்குவார்:


உம்முடைய சகோதரர், சகோதரிகளுக்கு
இப்பொழுது கிறிஸ்துவின் திரு உடலை வழங்குமாறு
ஆண்டவர் உமக்கு X ஆசி வழங்குவாராக.

அவர் பதிலுரைக்கின்றார்:

பதில் : ஆமென்.

4. நற்கருணை வழங்க அனுமதி பெற்ற திருப்பணியாளர் நற்கருணை உட்கொள்ள விரும்பினால், அருள் பணியாளர் தாம் நற்கருணை அருந்திய பின் அவருக்கு வழங்குகின்றார். பின்பு நற்கருணைச் சிமிழை அல்லது நற்கருணைக் கலத்தை அல்லது திருக்கிண்ணத்தை அவருக்குக் கொடுத்து, தம்மோடு மக்களுக்கு நன்மை வழங்கச் செய்வார்.

பிற்சேர்க்கை V

திருப்பலியின்போது திருக்கிண்ணத்தையும் அப்பத் தட்டையும்
புனிதப்படுத்தும் சடங்கு

1 அப்பத்தையும் இரசத்தையும் ஒப்புக்கொடுக்கவும் அர்ச்சிப்பு செய்யவும் உட்கொள்ளவும் பயன்படும் அப்பத் தட்டும் திருக்கிண்ணமும் நற்கருனைய கொண்டாட்டத்திற்கென்றே நிலையாகக் குறிக்கப்பட்டவையாதலால் இவை திருக்கலங்
ஆகும்.
2 இக்கலங்கள் நற்கருணைக் கொண்டாட்டத்திற்கென்றே குறிக்கப்பட்டவை என்பன நம்பிக்கையாளரின் கூட்டத்துக்கு எடுத்துரைக்கும் நோக்கத்தோடு அவை திருப்பலியின்போது தனிப்பட்ட முறையில் அர்ச்சிக்கப்படுவது போற்றத்தக்கது.
3. திருக்கிண்ணத்தையும் அப்பத் தட்டையும் புனிதப்படுத்தும் அருள்பணியாளர் உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினையில் காணப்படும் பொது விதிகளில் (எண் 327-332) கூறப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றுவார்.
4. திருக்கிண்ணம், அப்பத் தட்டு இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே புனிதப்படுத்தினால், அதற்கு ஏற்ற பாடத்தைப் பயன்படுத்துவார்.
5. வார்த்தை வழிபாட்டுக்குப்பின் மறையுரை நிகழ்த்தப்படும். அதில் அருள்பணியாளர் திருவிவிலிய வாசகங்களின் அடிப்படையில் திருப்பலியின்போது பயன்படுத்தப்படும் திருக் கிண்ணம், அப்பத் தட்டு இவற்றைப் புனிதப்படுத்தும் சடங்கின் பொருளை விளக்கிக் கூறுவார்.
6: பொது மன்றாட்டுக்குப் பிறகு பணியாளரோ மக்களின் பிரதிநிதியோ திருக் கிண்ணத்தையும் அப்பத் தட்டையும் காணிக்கையாகக் கொண்டு வந்து பீடத்தின்மேல் வைக்கின்றார். பின்னர் அருள்பணியாளர் பீடத்துக்குச் செல்கின்றார். அப்பொழுது இப்பல்லவி பாடப்படும்:

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரது பெயரை நான் கூவி அழைப்பேன்.
அல்லது வேறு பொருத்தமான பாடல்.

7. பாடலின் இறுதியில் அருள்பணியாளர் சொல்கின்றார்:

மன்றாடுவோமாக.

அனைவரும் சிறிது நேரம் அமைதியாக மன்றாடுவர். பின்னர் அருள்பணியாளர் தொடர்கின்றார்:

ஆண்டவரே இறைவா, பதிய உடன்படிக்கையின் பலியைக் கொண்டாடுவதற்கென்று இத்திருக்கிண்ணத்தையும் அப்பத் தட்டையும் மகிழ்ச்சியோடு உமது பீடத்தின்மேல் வைக்கின்றோம்; இக்கலங்களில் நாங்கள் ஒப்புக்கொடுத்து உட்கொள்ளும் உம் திருமகனின் உடலும் இரத்தமும் இவற்றைப் புனிதப்படுத்துவனவாக. ஆண்டவரே, மாசற்ற பலியை ஒப்புக்கொடுத்து உம் அருளடையாளங்களால் இம்மண்ணுலகில் நாங்கள் புத்துயிர் பெறவும் விண்ணரசில் புனிதர்களோடு உமது பந்தியில் அமரும்வரை உமது தூய ஆவியால் நிரப்பப்படவும் எங்களுக்கு அருள்புரிவீராக. மாட்சியும் புகழும் என்றென்றும் உமதே.

எல்லாரும் பதிலுரைக்கின்றனர்:

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.

8. பின்பு பணியாளர்கள் பீடத்தின் மீது திருமேனித் துகிலை விரிக்கின்றனர். நம்பிக்கையாளருள் சிலர் ஆண்டவரின் திருப்பலிக்கான அப்பம், இரசம், தண்ணீரைக் கொண்டு வருகின்றனர். அருள்பணியாளர் புனிதப்படுத்தப்பட்ட கிண்ணத்திலும் தட்டிலும் காணிக்கைகளை வைத்து வழக்கமான முறையில் ஒப்புக்கொடுக்கின்றார். அப்போது கீழ்வரும் பல்லவியை 115 -ஆம் திருப்பாடலோடு பாடலாம்.

மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து புகழ்ச்சிப் பலியை நான் ஒப்புக்கொடுப்பேன் (பாஸ்கா காலத்தில், அல்லேலூயா) -
பல்லவி


திருப்பாடல் 115

மிகவும் துன்புறுகிறேன் என்று சொன்னபோதும் கூட நான் நம்பிக்கையோடு இருந்தேன். எந்த மனிதரும் நம்பத் தக்கவரல்லர்' என்று என் கலக்கத்தில் நான் சொன்னேன். - பல்லவி

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரது பெயரை நான் கூவியழைப்பேன். - பல்லவி

ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையிலும் அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். ஆண்டவர்தம் புனிதர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. -பல்லவி

ஆண்டவரே, நான் உம் ஊழியன்; உம் பணியாளன், உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்; நான் உமக்குப் புகழ்ச்சிப் பலி செலுத்துவேன்; . -பல்லவி

ஆண்டவராகிய உம் பெயரைக் கூவியழைப்பேன். ஆண்டவரே, உம் மக்கள் அனைவர் முன்னிலையிலும் உமது இல்லத்தின் முற்றங்களிலும் எருசலேமின் நடுவிலும், உமக்கு என் பொருத்தனைகளை நான் செலுத்திடுவேன். . -பல்லவி

அல்லது வேறு பொருத்தமான பாடல்.

வரே. தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் என்னும் மன்றாட்டைச் சொன்ன பிறகு அருள்பணியாளர் காணிக்கைப் பொருள்களுக்கும் பலி 'பீடத்துக்கும் தூபம் காட்டலாம்.
10. தொடரும் திருப்பலியில், தேவைக்கு ஏற்ப, இறைமக்கள் புதிதாகப் புனிதப்படுத்தப்பட்ட திருக்கிண்ணத்திலிருந்து கிறிஸ்துவின் இரத்தத்தை உட்கொள்ளலாம்.


பிற்சேர்க்கை VI

பொது மன்றாட்டுக்கான மாதிரிப் பாடங்கள்

1. பொது 1

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, எல்லாம் வல்ல தந்தையாம் இறைவன், மக்கள் அனைவரும் மீட்பு அடையவும் உண்மையின் நிறை அறிவைப் பெறவும் விரும்புகின்றார். முழு மனதுடன் அவரை நோக்கி மன்றாடுவோம்.

1. கடவுளின் புனிதத் திரு அவைக்காக வேண்டுவோம்:
ஆண்டவர் அதனைப் பேணிக் காத்தருள வேண்டும் என ஆண்டவரைக்
கெஞ் சி மன் றாடுவோம்.

பதில்: எல்லாம் வல் ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

2. அனைத்துலக மக்களுக்காக வேண்டுவோம்:
ஆண்டவர், அவர்களிடையே ஒற்றுமை நிலவச் செய்தருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

3. பல்வேறு தேவைகளில் உழல்வோர் அனைவருக்காக:
ஆண்டவர், அனைவரையும் தேற்றியருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

4. நமக்காகவும் நம் குழுமத்துக்காகவும்: ஆண்டவர், நம் அனைவரையும் அவருக்கு உகந்த காணிக்கையாக ஏற்றருள் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அருள்பணியாளரின் மன்றாட்டு
எங்கள் அடைக்கலமும் ஆற்றலு மான இறைவா, உமது திரு அவையின் இறைப்பற்றுள்ள மன்றாட்டுகளுக்குச் செவிசாய்த்தருளும்; பரிவிரக்கத்தின் காரணரான நீர் நாங்கள் நம்பிக்கையோடு கேட்பவற்றைப் பெற்றுப் பயன் பெறச் செய்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
பதில்: ஆமென்.


2. பொது II

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நாம் இப்போது ஒன்றிணைந்து தொடங்கும் பொது மன்றாட்டுகளில் நமக்காகவும் நம் தேவைகளுக்காகவும் மட்டும் அல்லாமல், மக்கள் அனைவருக்காகவும் ஆண்டவராகிய கிறிஸ்துவை மன்றாடுவோம்.

கருத்துகள்
1அ. கிறிஸ்துவ மக்கள் அனைவரும் இறை நன்மையின் நிறைவைப் பெற வேண்டும் என மன்றாடுவோமாக:

பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும் (அல்லது)
கிறிஸ்துவே, கனிவாய்ச் செவிசாய்த்தருளும்.

1ஆ. இன்னும் நம்பிக்கை கொள்ளாத அனைவரும் அருள்கொடைகளை நிறைவாகப் பெற வேண்டும் எனக் கெஞ்சி மன்றாடுவோமாக: பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும். அ. நாட்டை நெறிப்படுத்துவோர் ஆண்டவரின் ஆற்றலைப் பெற்றிட வேண்டும் எனக் கெஞ்சி மன்றாடுவோமாக:

பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

3ஆ. மிதமான காலநிலையையும் நல்ல விளைச்சலையும் நாம் பெற
உலகை ஆளும் ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோமாக:

பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

4 அ. இத்திருக்கூட்டத்தினரோடு உடனிருக்க முடியாத நம் சகோதரர் "காதரிகளுக்காக எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோமாக:
பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்

3ஆ, இறந்த நம்பிக்கையாளருடைய ஆன்மாக்களின் இளைப்பாற்றிக்காக
மனதார் அனைவருக்கும் நடுவராக வரும் ஆண்டவரைக் கெ° மன்றாடுவோமாக:
பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

அ. முழு நம்பிக்கையோடு ஆண்டவரின் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடும் நம் அனைவருக்காகவும் மீட்பரின் கனிவைக் கெஞ்சி மன்றாடுவோமாக:
பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

1. அ. ஆண்டவரின் நன்மையை எதிர்பார்த்திருக்கும் நமக்காகவும் நம்முடைய தேவைகளுக்காகவும் ஆண்டவர் கிறிஸ்துவின் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுவோமாக: பதில்: கிறிஸ்துவே, எங்களுக்குச் செவிசாய்த்தருளும்.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுகளைப் பரிவிரக்கத்துடன் ஏற்றுக்கொண்டு நாங்கள் இறைஞ்சிக் கேட்பவற்றைக் கனிவுடன் தந்தருள வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம். எங்கள். பதில் : ஆமென்.

3. திருவருகைக் காலம்

அருள்பணியாளரின் அழைப்பு

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். அவர் எளியோருக்கு நற்செய்தி அறிவிக்கவும் உள்ளம் உடைந்தவர்களை நலமாக்கவும் இவ்வுலகுக்கு வந்தார். அவ்வாறே நம் காலத்திலும் தேவையில் உழல்வோர் அனைவருக்கும் அவர் மீட்பு அளிக்கத் திருவுளம் கொள்ளுமாறு அவரது இரக்கப் பெருக்கத்தைக் கெஞ்சி மன்றாடுவோம்.


கருத்துகள்
1அ. தமது புனிதத் திரு அவையைச் சந்தித்து அதை என்றும் காத்தருள்
வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக:
பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

1ஆ. உரோமை ஆயரையும் நம் தல ஆயரையும் அனைத்துலக
ஆயர்களையும் தம் அருள் கொடைகளால் நிரப்பியருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக: பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும். அ. நாம் வாழும் இக்காலத்தில் அவரது அருள்காவலால் அமைதி நிலவ வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக:

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

2. நம்மை ஆளும் பொறுப்பில் உள்ளோர் மக்கள் அனைவரின்
நலனைப் பேணுமாறு அவர்களுடைய உள்ளங்களைத் தமது திருவுளத்துக்கு ஏற்ப வழிநடத்த வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக:
பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

38. பிணிகளை அகற்றி, பசியைப் போக்கி, இன்னல்கள்
நீக்கிட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக:

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.


3ஆ. அடக்குமுறைகளால் அவதியுறும் அனைவரையும் கனிவுடன்
விடுவிக்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக:
பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

44. மனிதர் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரின் அன்புக்குச்
சாட்சிகளாக நாம் உண்மையில் நிலைத்திருக்க வேண்டும் என அவரை மன்றாடுவோமாக:
பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

4ஆ. ஆண்டவர் தம் வருகையின்போது நாம் விழிப்போடு இருப்பதைக் காணுமாறு அவரை மன்றாடுவோமாக:

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருள்பணியாளரின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எல்லாரையும் மீட்கின்ற நீர், எவரும் அழிவுற விரும்புவதில்லை உம் மக்களின் மன்றாட்டுகளுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும்:
; அதனால் உலகின் போக்கை எங்களுக்காக உமது அமைதியின் வழியில் நெறிப்படுத்தியருளும்; உமது திரு அவையும் அமைதியுடன் இறைப்பற்றில் பேரின்பம் கொண்டிருப்பதாக. எங்கள். பதில்: ஆமென்.


4. திருப்பிறப்புக் காலம்

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, இன்று (இவ்விரவில், இக்காலத்தில்) நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் மனிதநேயமும் தோன்றியுள்ளன. நம்முடைய நீதிச் செயல்களில் அல்லாமல், அவரின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு நம் கடவுளிடம் நம் மன்றாட்டுகளை எழுப்புவோம்.

கருத்துகள்

1. கடவுளின் திரு அவைக்காக:
மாசற்ற கன்னி, வார்த்தையால் கருவுற்று வியத்தகு முறையில் பெற்றெடுத்த இயேசுவைத் திரு அவை முழு நம்பிக்கையில் நிலைத்து நின்று மனமகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக. பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும். உலகம் எங்கும் வளர்ச்சியும் அமைதியும் நிலவ: இம்மண்ணகக் கொடைகள் முடிவில்லாப் பரிசாக மாறிட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

3. பசி, பிணி, தனிமை இவற்றால் துன்புறுவோருக்காக: கிறிஸ்துவின்
திருப்பிறப்பு (திருக்காட்சி) மறைநிகழ்வினால் அவர்கள் உடல், உள்ள நலம் பெற வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக. பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும். இத்திருக் கூட்டத்தில் உள்ள நம் குடும்பங்களுக்காக: நாம் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வது போல ஏழை எளியவர்களிலும் அவரை ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

பதில்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, கடவுளும் மனிதருமானவரைத் தம் புனிதமான திருவயிற்றில் தாங்கிடப் பேறுபெற்ற அவர் நீர் உம் நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளைக் கேட்டருள் உம்மிடம் பரிந்துரைக்க வேண்டுகின்றோம். எங்கள்.
பதில்: ஆமென்.
==============2^ 9409 ^-----------


5. தவக் காலம் 1

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, எக்காலமும் ம. கடமைப்பட்டுள்ள நாம், குறிப்பாக, தவக் காலத்தின் இந்நாள்களில் கிறிஸ்துவோடு விழித்திருந்து மிகுந்த உருக்கத்துடன் நம்முடைய மன்றாட்டுகளைக் கடவுள்பால் எழுப்புவோமாக.

கருத்துகள் 1.
அனைத்து கிறிஸ்தவ மக்களும், கடவுளின் திருவாயிலிருந்து:
புறப்படும் ஒவ்வொரு வார்த்தையாலும் இப்புனிதக் காலத்தில் நிறைவளம் பெறும்படியாக, ஆண்டவரை மன்றாடுவோமாக. அனைத்துலகிலும் ஒழுங்கும் அமைதியும் நிலவச் செய்து, இந்நாள்கள் நமக்கு அருளையும் மீட்பையும் தருவற்கு ஏற்ற காலமாக
அமையும்படியாக, ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. பாவிகளும் அருள்வாழ்வில் அக்கறையற்றவர்களும் பாவப்
பரிகாரத்திற்கு ஏற்ற இக்காலத்தில் அவரிடம் திரும்பி வந்து சேர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. நமது உள்ளத்தின் ஆழத்தில் பாவத்தை வெறுக்கும் உணர்வைத் தூண்டி விட வேண்டும் என நமக்காகவும் ஆண்டவரை மன்றாடுவோமாக.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, உம் மக்கள் முழு இதயத்தோடு மனம் திரும்பி உம்மிடம் வரச் செய்தருளும்; அவர்கள் துணிவுடன் மன்றாடிக் கேட்பதெல்லாம் உமது இரக்கத்தால் பெற்றுக்கொள்வார்களாக. எங்கள். பதில்: ஆமென்.

 


6. தவக் காலம் II

அருள்பணியாளரின் அழைப்பு அன்புமிக்க சகோதர சகோதரிகளே, பாஸ்கா பெருவிழா நெருங்க வருகின்ற இவ்வேளையிலே ஆண்டவரை உருக்கமாக மன்றாடுவோம். நாமும் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அனைத்து லக மக்கள் இத்தூய மறை நிகழ்வுகளில் நிறைவாகப் பங்குபெற
(களால் நிறைவாகப் பங்குபெற வேண்டுவோமாக.

கருத்துகள்
1.நெருங்கிவரும் பாஸ்கா பெருவிழாவில் திருமுழுக்குப் பெறக் காத்திருக்கும் புகுமுகநிலையில் உள்ளவர்கள் நம்பிக்கையிலும் அறிவிலும் வளர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக..

2. எவ்வித உதவியுமின்றி வாழும் மக்கள் ஆதரவு பெறவும் உலகில் எங்கும் அமைதியும் பாதுகாப்பும் நிலைத்து உறுதி பெறவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. துன்புறுவோர், சோதனைக்கு உட்பட்டோர் அனைவரும் அவரது அருளால் திடம் பெற வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. நாம் அனைவரும் தவ முயற்சிகளின் பயனை வறியோருடன் பகிர்ந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, உம்மை இறைஞ்சி மன்றாடும் திரு அவைமீது இரக்கம் காட்டி, உம்மை நாடி வரும் இதயங்களைக் கனிவுடன் கண்ணோக்கியருளும்; அதனால் தூய மறைநிகழ்வுகளில் பங்குபெற அவர்களுக்கு அருளியது போல, உம்முடைய உதவிகள் ஒருபோதும் குறைவுபடாது கிடைப்பனவாக. எங்கள்.

பதில்: ஆமென்.

7. புனித வார நாள்கள்

அருள்பணியாளரின் அழைப்பு
கிறிஸ்து உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் தம் தந்தையிடம் ஒப்புக்கொடுத்த இப்பாடுகளின் நாள்களில் கடவுளைத் தாழ்மையுடன் மன்றாடுவோம். அவர் தம் மகனுடைய பணிவை முன்னிட்டு நம்முடைய வேண்டல்களையும் கனிவுடன் கேட்டு அருள்வாராக.

கருத்துகள்

1. கிறிஸ்துவின் மணமகளாம் திரு அவை இப்பாடுகளின் காலத்தில் அவருடைய இரத்தத்தால் முழுமையாகக் கழுவப்பட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் பயனாக உலகம் முழுவதும் மீட்பு அடைந்து அமைதி பெற வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. நோயினாலும் துன்பங்களாலும் கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்கும் அனைவருக்கும் மன உறுதியையும் பொறுமையையும் அளித்தருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. மக்கள் அனவைரும் கிறிஸ்துவின் பாடுகள், திருச்சிலுவை வழியாக உயிர்ப்பின் மாட்சிக்கு வந்து சேர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடும் மக்களுக்குத் துணையாக வாரும்; எங்கள் ஆற்றலினால் அடைய இயலாததை உம் திருமகனுடைய பாடுகளின் பயனாகப் பெற்றுக்கொள்ளச் செய்க என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். பதில்: ஆமென்.

8. பாஸ்கா காலம்

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, மகிழ்ச்சி பொங்கும் இப்பாஸ்கா காலத்தில் கடவுளை உருக்கத்துடன் மன்றாடுவோம். அதனால் தம்முடைய அன்புத் திருமகனின் வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் கனிவாய்க் கேட்டருளியது போல நம்முடைய தாழ்நிலையையும் கண்ணோக்க அருள்புரிவாராக.

கருத்துகள்

1. நம் ஆன்ம ஆயர்கள் நல்லாயனாம் கிறிஸ்து வால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைப் பேணிக் காத்து வழிநடத்த வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. உலகம் அனைத்தும் கிறிஸ்து தரும் அமைதியை உண்மையாகவே பெற்று மகிழ்ந்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. துன்புறும் நம் சகோதரர் சகோதரிகளுடைய து யரமெல்லாம் மகிழ்ச்சியாக மாறவும் அம்மகிழ்ச்சியை எவரும் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளாதபடியும் அருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. இங்குக் கூடியிருக்கும் நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் சான்று பகர வேண்டும் என ஆண்டவரை
மன்றாடுவோமாக.

அருள்பணியாளரின் மன்றாட்டு
இறைவா, இங்குள்ள மக்களின் வாழ்வு பல்வேறு தேவைகளால் ஏற்படும் கவலைகளுக்கு உள்ளாகியிருக்கிறதென நீர் அறிவீர்; நம்பிக்கையாளர் நேர்ந்தளிக்கும் மன்றாட்டுகளை ஏற்று அவர்கள் விரும்பிக் கேட்பதைத் தந்தருள்வீராக. எங்கள்.

பதில்: ஆமென்.



9. பொதுக் காலம் 1


அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, கடவுள் நமக்குச் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்திட ஒன்றுகூடியுள்ள நாம் அவரை மன்றாடுவோம். அவரது திருவுளத்துக்கு ஏற்றபடி நம் மன்றாட்டுகள் அமைய வேண்டுவோமாக.
கருத்துகள்
1. நம் திருத்தந்தை (பெயர்) . . . க்காகவும் நம் ஆயர் (பெயர்) .... க்காகவும் திருநிலையினருக்காகவும் அவர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும் ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. பொது நலனைப் பேணிக் காக்கும் நாட்டுத் தலைவர்கள், அவர்களது உதவியாளர்கள் ஆகியோருக்காக ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. கடல்வழிப் பயணிகள், ஏனைய பயணிகள் அனைவருக்காகவும் அடிமைத்தளையில் இருப்போர், சிறைப்பட்டோர் ஆகியோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. நம்பிக்கை, இறைப்பற்று, இறையன்பு, இறை அச்சம் இவற்றால் தூண்டப்பெற்று இப்புனிதக் கோவிலில் ஒன்றுகூடியுள்ள நம் அனைவருக்காகவும் ஆண்டவரை மன்றாடுவோமாக.


அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, உம்மை இறைஞ்சி மன்றாடும் திரு அவையின் மன்றாட்டுகள் உம் திருமுன் உகந்தனவாகுக; எங்கள் தகுதியில் நம்பிக்கை கொள்ளாமல் உமது இரக்கத்தை முன்னிட்டு எங்கள் மன்றாட்டுகளைக் கேட்டருளும். எங்கள். பதில்: ஆமென்.

10. பொதுக் காலம் 11

அருள்பணியாளரின் அழைப்பு
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நமது மீட்பின் மறைநிகழ்வுகளை நினைவுகூர்ந்திட அனைவரும் இங்கு கூடிவந்துள்ளோம். வாழ்வு அளிக்கும் இவ்வூற்றுகளிலிருந்து உலகம் அனைத்துக்கும் நிறை ஆசி வழங்க வேண்டும் என எல்லாம் வல்ல கடவுளை மன்றாடுவோமாக.

கருத்துகள்
1. கடவுளுக்கு தங்களையே நேர்ந்தளித்த அனைவரும் அவரது யால் தங்களது அர்ப்பணத்தில் உண்மையுடன் நிலைத்திருக்க படும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2.மக்கள் அமைதி பெறவும் எவ்விதக் கலக்கமுமின்றி அவர்கள் ன தன்னுரிமையுடன் ஊழியம் புரியவும் தகுதி பெற வேண்டும் ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. தனிமையினாலும் நோயினாலும் வருந்தும் முதியோர்கள் நமது Tபுச் செயல்களால் ஆறுதல் பெற வேண்டும் என டவரை மன்றாடுவோமாக.

4. இங்கு கூடி யிருக்கும் நாம் கடவுள் நமக்கு இடையறாது அளிக்கும் க நலன்களைப் பயன்படுத்த அறிந்துகொள்ள, இப்பொழுதே பனவற்றில் ஈடுபட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக

அருள்பணியாளரின் மன்றாட்டு

ஆண்டவரே உம்மை இறைஞ்சி மன்றாடும் மக்களுக்கு உமது அருளிரக்கம் துணை நிற்க வேண்டும் என வேண்டுகின்றோம்.
அதனால் உமது ஏவுதலின் வழியாக நாங்கள் நம்பிக்கையோடு கேட்ட வரங்களை உமது வள்ளன்மையால் விரைவாய் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

"ஆண்டின் பொதுக் காலத்தில் மேலே உள்ள 1,2 பொதுப் பாடங்களையும் பயன்படுத்தலாம்.


11. இறந்தோருக்காக

அருள்பணியாளரின் அழைப்பு
இறந்தோரிடமிருந்து தம் திருமகன் கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுள் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் மீட்பு அளித்திட நம்பிக்கையுடன் அவரை மன்றாடுவோம்.

கருத்துகள்
1 கிறிஸ்தவ மக்கள் நம்பிக்கையிலும் ஒற்றுமையிலும் நிலைத்திருக்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2 உலகம் முழுவதையும் போர்களினால் விளையும் தீமை அனைத்திலிருந்தும் விடுவித்தருள வேண்டும் என ஆண்டவனை மன்றாடுவோமாக.

3 எவ்வித வேலை வாய்ப்பும் உணவும் உறைவிடமும் இன்றித் துன்புறும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு கடவுள்தாமே தந்தையாக விளங்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4 ஏற்கெனவே திருமுழுக்கினால் நிலைவாழ்வின் வித்தைப் பெற்றிருந்த இறந்த இந்த அடியார் (பெயர்) . . . புனிதர்களோடு என்றென்றும் தோழமைகொண்டிருக்க அருள்புரிய வேண்டும் என ஆண்டவரை
மன்றாடுவோமாக.

4ஆ. நிலைவாழவின உணவாகிய கிறிஸ்துவின் திரு உடலை உட்கொண்ட இவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

அல்லது, அருள்பணியாளருக்காக:
திரு அவையில் அருள்பணியாளராகப் பணியாற்றிய இவரை விண்ணகத் திருவழிபாட்டில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4இ. நம் சகோதரர் சகோதரிகள், உற்றார், உறவினர், கொடையாளர்கள் ஆகியோரின் ஆன்மாக்களுக்கு அவர்களது உழைப்பின் பயனை
அளித்தருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4ஈ. உயிர்த்தெழும் நம்பிக்கையுடன் தம்மில் துயில் கொண்ட அனைவரையும் தமது திருமுக ஒளியினுள் ஏற்றருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4உ. துன்பங்களில் உழலும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு உதவி புரிந்து கனிவுடன் ஆறுதல் அளிக்க வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4ஊ. நம்பிக்கையுடனும் இறைப்பற்றுடனும் இங்கு கூடியிருக்கின்ற அனைவரும் மாட்சிமிக்க தமது ஆட்சியில் வந்து சேர அருள்புரிய வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

அருள்பணியாளரின் மன்றாட்டு
ஆண்டவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடும் எங்கள் வேண்டல்கள் உம் அடியார்களின் ஆன்மாக்களுக்கு பயன் அளிக்க வேண்டும் என உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் பாவம் அனைத்திலிருந்து விடுதலை பெறவும் உமது மீட்பில் பங்குகொள்ளவும் செய்தருள்வீராக. எங்கள்.

பதில் : ஆமென்.

 

==============24^ 9401 ^-----------


புனித கன்னி மரியாவை நோக்கி மன்றாட்டு

கன்னியும் தாயுமான புனிதமிக்க மரியே, உமது மாசில்லாத் திருவயிற்றில் கருத்தரித்து, பெற்றெடுத்து, பாலூட்டி அன்புடன் அரவணைத்த உம் அன்புத் திருமகனை உட்கொண்டுள்ளேன். நீர் மகிழ்ச்சியுடன் உற்றுநோக்கிய திருமகனையே மனத் தாழ்மையுடனும் அன்புள்ளத்துடனும் உமக்கு அளிக்கின்றேன். நீர் அவரை உம் கைகளில் ஏற்று, அவருக்கு உமது இதய அன்பைப் பொழிந்து அவரை உமது மாட்சிக்காகவும் என்னுடையவும் உலக மாந்தர் அனைவருடையவும் தேவைகளுக்காகவும் தூய்மைமிகு மூவொரு கடவுளை ஒப்புயர்வற்ற விதமாக வழிபட்டு அவருக்கு ஒப்புக்கொடுப்பீராக. ஆகையால், அன்புமிக்க அன்னையே, என்னுடைய பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பையும் இனி நான் அவருக்கு உண்மையுடன் ஊழியம் செய்யும் அருளையும் அதன்பின் முடிவில் இறுதி அருளையும் பெற்றுத் தாரும். இவ்வாறு உம்மோடு சேர்ந்து முடிவில்லாக் காலமும் அவரைப் புகழ்வேனாக. ஆமென்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! |
ஆண்டவர் உம்முடனே.|
பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. |
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் |
ஆசி பெற்றவரே. |

புனித மரியே / இறைவனின் தாயே |
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக |
களக்காக/ இப்பொழுதும் |
எங்கள் இறப்பின் வேளையிலும்|
வேண்டிக்கொள்ளும். | ஆமென்.

==============18^ 9425 ^-----------

=============↑ பக்கம் 1290

====================

image