குருத்து ஞாயிறு புனித வியாழன் புனித வெள்ளி பாஸ்கா திருவிழிப்பு

படல்கள் மட்டும்

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா திருவிழிப்பு

(சனிக்கிழமை இரவு)

as

புனித சனியன்று திருச்சபை ஆண்டவருடைய கல்லறையருகில் அவருடைய பாடுகளையும் மரணத்தையும் சிந்தித்துக்கொண்டு இருக்கின்றது. பீடம் வெறுமையாயிருக்கிறது. திருப்பலி ஒப்புக்கொடுப்பதில்லை. திருவிழிப்புக்குப்பின் பாஸ்கா மகிழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இம்மகிழ்ச்சி ஐம்பது நாள்கள் தொடரும். திருப்பயண உணவாக மட்டுமே இன்று நற்கருணை வழங்கலாம்.

தொன்றுதொட்டே இவ்விரவு ஆண்டவருடைய வருகைக்காகத் திருவிழிப்புக் காக்கும் இரவாக இருந்து வந்துள்ளது (யாத் 12:42): அன்று இறைமக்கள் நற்செய்தியின் அறிவுரைப்படி (லூக் 12:35 முதல் காண்க) எரியும் விளக்குளுடன் ஆண்டவர் எப்பொழுது வருவார் எனக் காத்திருப்போரைப் போன்றிருப்பார்கள். இவ்வாறு, அவர் வந்ததும், அவர்கள் விழித்திருக்கக் கண்டு அவர்களைத் தம் பந்தியில் அமர்ந்துவார்.

இத்திருவிழிப்பைக் கொண்டாடும் முறையாவது:

(அ) திருஒளி வழிபாடு (முதற்பகுதி)

(ஆ) இறைவாக்கு வழிபாடு (இரண்டாம் பகுதி): இறைவன் தொடக்கத்திலிருந்தே தம் மக்களிடையில் புரிந்துள்ள ஆற்றல்மிகு செயல்களைத் திருச்சபை சிந்தித்து. அவர் தந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ள முனைகிறது.

(இ) திருமுழுக்கு வழிபாடு (மூன்றாம் பகுதி): உயிர்ப்பு விழா இதற்குள் நெருங்கி வர, திருச்சபையின் புது உறுப்பினர் திருமுழுக்கால் புதுப் பிறப்பு அடைவர்.

(ஈ) நற்கருணை வழிபாடு (நானகாம் பகுதி): இறுதியாக, ஆண்டவர் தம் இறப்பாலும் உயிர்ப்பாலும் முன்னேற்பாடு செய்த திருவிருந்துக்குத் திருச்சபை அழைக்கப்;;படுகின்றது.

பாஸ்காத் திருவிழிப்பு விழா முழுவதும் இரவில் கொண்டாடப்படும்: எனவே, அதை இரவுக்குமுன் தொடங்கக் கூடாது, ஞாயிறு விடியுமுன் முடிக்க வேண்டும். இவ்விரவுத் திருப்பலியை நள்ளிரவுக்கு முன்னரே ஒப்புக்கொடுத்தாலும். ஆது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் பாஸ்கா ஞாயிறு திருப்பலியாகும். இவ்விரவுத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள், இரண்டாவது பாஸ்காத் திருப்பலியிலும் நற்கருணை உட்கொள்ளலாம். தனியாகவோ கூட்டுத்திருப்பலியாகவோ இவ்விரவுத் திருப்பலியை நிறைவேற்றிய குரு மீண்டும் தனித்தோ கூட்டுத்திருப்பலியாகவோ இரண்டாவது பாஸ்காத் திருப்பலியை நிறைவேற்றலாம். குருவும் திருத்தொண்டரும் வெண்ணிறத் திருப்பலி உடைகளை அணிவர். திருவிழிப்பில் பங்கெடுக்கும் அனைவரும் மெழுகுதிரிகளை வைத்திருக்க வேண்டும்.

முதற் பகுதி -திருவிழிப்பின் ஆடம்பரத் தொடக்கம் : திருஒளி வழிபாடு

தீயையும் திரியையும் மந்திரித்தல்

கோயில் விளக்குகள் எல்லாம் அனைக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு வெளியே வசதியான இடத்தில் தீ தயாராயிருக்கும். இறைமக்கள் அங்கே கூடியிருப்பார். குரு பணியாளர்களோடு அங்கு வருவார். பணியாளர் ஒருவர் பாஸ்காத் திரியைக் கொண்டுவருவார். கோயிலுக்கு வெளியே தீயைப் பற்றவைக்க முடியாதெனில், கீழே எண் 13இல் உள்ளப்படி சடங்கை நடத்தலாம்.

குரு வழக்கம்போல் இறைமக்களை வாழ்த்தி, கீழுள்ளவாறு அல்லது அதுப்போன்று சுருக்கமாகத் திருவிழிப்பைப்பற்றி அறிவுரை கூறுவார்.

அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாவிலிருந்து உயிர்த்தெழுந்து மிகவும் புனிதமான இந்த இரவில் திருச்சபை உலகெங்கும் பரந்து வாழும் தன் மக்களை ஒன்றுகூடிவந்து விழித்திருந்து மன்றாட அழைக்கின்றது. இவ்வாறு நாம் ஆண்டவருடைய பாஸ்காவை நினைவு கூர்த்து, இறைவாக்கைக் கேட்டு, அவர் இறந்து உயிர்த் பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடி, அவர் சாவின்மீது கொண்ட வெற்றியில் நாமும் பங்கு கொண்டு, அவரோடு இறைவனில் வாழ்வோம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றோம்.

பின் தீயை ஆசீர்வதிக்கிறார்:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, உலகின் ஒளியாகிய உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக,
நாங்கள் உமது மகிமையின் ஒளியில் பங்கு பெறுகின்றோம்.
இப்புதிய நெருப்பைப் ரு புனிதப்படுத்தியருளும்.
இப்பாஸ்காத் திருவிழிப்புக் கொண்டாட்டத்தின் வழியாக
எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திபுதிய நம்பிக்கையால் பற்றியெரியச் செய்தருளும்.
இவ்வாறு நாங்கள் முடிவில்லாப் பேரொளியின் விழாவிற்கு வந்துசேர அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

பாஸ்காத் திரி பற்றவைக்கப்படுகிறது.

பாஸ்காத் திரியின் மாண்பையும் உட்பொருளையும் சில வெளி அடையாளங்களால் விளக்குவது மக்களின் அறிவுத் திறனுக்குப் பொருத்தமாயிருக்கும் எனக் கண்டால் சடங்கை இவ்வாறு நடத்தலாம்:

தீயை மந்திரித்தபின் பீடத்துணைவர் அல்லது பணியாளரில் ஒருவர் பாஸ்காத் திரியைக் குருவிடம் கொண்டுவர, குரு அதில் எழுத்தாணிகொண்டு சிலுவை அடையாளத்தை வரைவார்: பின் சிலுவைக்குமேல் "அ" என்னும் எழுத்தையும், சிலுவைக்குக்கீழே "ன" என்னும் எழுத்தையும், சிலுவையின் நான்கு கோணங்களில், நிகழும் ஆண்டின் நான்கு எண்களையும் எழுதுவார். அப்பொழுது அவர் சொல்வதாவது:

1. கிறிஸ்து நேற்றும் இன்றும் (சிலுவையின் நேர்கோட்டை வரைகிறார்);

2. முதலும் முடிவும் (குறுக்குக் கோட்டை வரைகிறார்);

3. அகரமும் (நேர்கோட்டிற்குமேல் "அ" என்ற எழுத்தை எழுதுகிறார்);

4. னகரமும் (நேர்க்கோட்டிற்குக்கீழே "ன" என்ற எழுத்தை எழுதுகிறார்);

5. காலங்கள் அவருடையன (நிகழ் ஆண்டின் முதல் எண்ணைச் சிலுவையின் இடப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்);

6. யுகங்களும் அவருடையன (இரண்டாம் எண்ணைச் சிலுவையின் வலப்புற மேற்கோணத்தில் எழுதுகிறார்);

7. மாட்சியும் ஆட்சியும் அவருக்கே (மூன்றாம் எண்ணைச் சிலுவையின் இடப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்);

8. என்றென்றும் எக்காலமுமே, ஆமென் (நான்காம் எண்ணைச் சிலுவையின் வலப்புறக் கீழ்க்கோணத்தில் எழுதுகிறார்).

as

சிலுவை அடையாளத்தையும் குறிகளையும் இவ்வாறு திரியின்மீது வரைந்தபின் அதில் ஐந்து சாம்பிரானி மணிகளைச் சிலுவை வடிவில் பதிக்கலாம். அப்பொழுது அவர் சொல்வதாவது:

 

1. தம்முடைய தூய

2. மகிமையான காயங்கால்

3. ஆண்டவராகிய கிறிஸ்து

4. நம்மைக் கண்காணித்து

5. பேணிக்காப்பாராக. ஆமென்

குரு புதுத் தீயிலிருந்து திரியைப் பற்றவைத்துச் சொல்வதாவது:

மகிமையுடன் உயிர்த்தெழும் கிறிஸ்துவின் ஒளி, அக இருளகற்றி, அருளொளி தருவதாக.

இடத்தின் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு. மேற்சொன்ன சடங்குகளில் அனைத்தையும் அல்லது சிலவற்றை மட்டும் பயன்படுத்தலாம். மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ற வேறு சடங்குகளைப் பயன்படுத்த ஆயர்குழு பணிக்கலாம்.
இடையூறுகளால் தீ வளர்க்கவில்லையென்றால், தீ மந்திரிக்கும் சடங்கைச் சூழ்நிலைக்கேற்ப அமைத்துக்கௌ;ளலாம், வழக்கம்போல மக்கள் கோயிலில் கூடியிருக்க, குருவும் பணியாளரும் பாஸ்காத் திரியுடன் கோயிலின் வாயிலுக்கு வருவர். மக்கள் கூடுமானமட்டும் குரவை நோக்கித் திரும்பி நிற்பர்.
குரு வாழ்த்தி, அறிவுரை கூறுவார். பின் நீ மந்திரிக்கப்படும்.

பவனி

பின் திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குரு, பாஸ்காத் திரியை எடுத்து உயர்த்திப் பிடித்துக்கொண்டு, பாடுவார்:

பாஸ்கா புகழுரை:

கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்லாரும் பதிலுரைப்பர்: இறைவா, உமக்கே நன்றி.

ஆயர் குழு இதைவிடப் பொருள்மிக்க ஆர்ப்பரிப்பைக் குறிப்பிடலாம்.
பாஸ்காத் திரி தாங்கும் திருத்தொண்டர் முன்செல்ல, அனைவரும் கோயிலுக்குள் நுழைகின்றனர். தூபத்தைப் பயன்படுத்தினால், புகையும் தூபக்கலம் தாங்கும் பணியாளர் திருத்தொண்டருக்குமுன் செல்வார். கோயில் வாயிலில் திருத்தொண்டர் நின்று. திரியை உயர்த்தி முன்போலப் பாடுவார்:

கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்லாரும் பதிலுரைப்பர்: இறைவா, உமக்கே நன்றி.

அனைவரும் தத்தம் திரிகளைப் பாஸ்காத் திரியிலிருந்து பற்றவைத்துக்கொண்டு, பவனியாகச் செல்வர்.
திருத்தொண்டர் பீடத்தின்முன் வந்ததும், மக்கள் பக்கமாகத் திரும்பி நின்று, மூன்றாம் முறையாகப் பாடுவார்:

கிறிஸ்துவின் ஒளி இதோ!
எல்லாரும் பதிலுரைப்பர்: இறைவா, உமக்கே நன்றி.

கோயில் விளக்குள் ஏற்றப்படுகின்றன.

பாஸ்காப் புகழுரை

பீடத்தை அடைந்ததும் குரு தம் இருக்கைக்குச் செல்வார். திருத்தொண்டர் பீடமுற்றத்தின் நடுவில் அல்லது வாசகமேடை அருகில் அமைக்கப்பட்ட தண்டின்மீது பாஸ்காத் திரியைவைப்பார்; பின்பு, தூபத்தைப் பயன்படுத்தினால், திருப்பலியில் நற்செய்திக்குமுன் நடப்பதுபோல, தூபக்கலத்தில் சாம்பராணி இடப்பட்டபின், அவர் குருவிடம் ஆசி பெறுவார்; குரு அமைந்த குரலில் பின்வருமாறு சொல்லி ஆசியளிப்பார்:

ஆண்டவர் உமது உள்ளத்திலும் நாவிலும் இருப்பாராக: இவ்வாறு நீர் அவரது பாஸ்காப் புகழுரையைத் தகுந்தவகையில் எடுத்துரைப்பீராக: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
திருத்தொண்டர்: ஆமென்.

திருத்தொண்டர் அல்லாதவர் பாஸ்காப் புகழுரையைப் பாடினால் இந்த ஆசியுரை விடப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லாதபோது குரு, வசதிபோலப் புத்தகத்திற்கும் திரிக்கும் தூபம்காட்டி, வாசகமேடையில் நின்றுகொண்டு பாஸ்காப் புகழுரையைப் பாடுவார். அப்பொழுது அனைவரும் எரியும் திரி பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பர். தேவையானால், திருத்தொண்;டர் பட்டம் பெறாத பாடகர் ஒருவர் பாஸ்காப் புகழுரையைப் பாடலாம்: அப்படியானால் "எனவே, இத்திருவிளக்கின்" என்னும் சொற்களிலிருந்து ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்னும் இத்திருவிளக்கின்" என்னும் வாழ்த்துரை உட்பட்ட பகுதியை விட்டுவிடவேண்டும். பாஸ்காப் புகழுரையின் குறகிய பாடத்தையும் பாடலாம், பாஸ்காப் புகழுரையில் இடையிடையே மக்களின் ஆர்ப்பரிப்பு சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள ஆயர்குழு ஏற்பாடு செய்யலாம்.

பாஸ்காப் புகழுரை:

வானகத் தூதர் அணி மகிழ்வதாக் இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக
மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.
இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக
முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த
இருளனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.

திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக.
இறைமக்கள் அனைவரது பேரொலியால் இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.

(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,
உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.
தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே
திருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).

முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில்: உம்மோடு இருப்பாராக.

முன். இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
பதில்: ஆண்டவரிடம் எழுப்பிள்ளோம்.

முன். நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.
பதில்: அது தகுதியும் நீதியுமானதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,
அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்
இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.

கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,
பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.
ஏனெனில், பாஸ்கா விழா இதுவே இதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்
இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.


முற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்து
அவர்கள் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.
நெருப்புத் தூணின் வெளிச்சத்தால் பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.
பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை
உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,
அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.
சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,
கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.
இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில் பிறந்ததால் எப்பயனும் இல்லையே.
நீர் எம்மீது தறைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது!
அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!
ஓ ஆதாமின் பாவமே! உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால் பாக்கியமான குற்றமே!
ஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!
பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தகாலமும் நேரமும் அறிய நீ மட்டுமே பேறுபெற்றாய்!
இரவு பகல்போல் ஒளிபெறும். நான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.
எனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி அக்கிரமங்களை ஒழிக்கின்றது,
குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது
தவறினோர்க்கு மாசின்மையையும் துயருற்றோர்க்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது
பகைiமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே, தூய தந்தையே, இப்புனிதமான இரவில் நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்
தேனிக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்
பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.
இறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும் இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.
இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற, தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.
ஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால் இத் தீ வளர்க்கப்படுகின்றது.
விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடும் கடவுளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது
மெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்! ஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்.
உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி, இவ்வுரவின் இருளை ஒழிக்குமாறு,
குறைவுபடாமல் நின்று எரிவதாக.
இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு, விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.
விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.
ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி உம் திருமகன் கிறிஸ்துவேதான்.
பாதாளத்திலிருந்து திரும்பி வந்து, மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.

எல். ஆமென்

இரண்டாம் பகுதி - இறைவாக்கு வழிபாடு

திருவிழிப்புகளுக்கெல்லாம் அன்னையாகிய இத்திருவிழிப்பில் பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும், புதிய ஏற்பாட்டிலிருந்து (திருமுகம், நற்செய்தி என) இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் இடம் பெறுகின்றன.

மக்களின் பொது நன்மைக்குத் தேவையானால், பழைய ஏற்பாட்டு வாசகங்களைக் குறைக்கலாம்; ஆனால் இறைவாக்கு வாசகம் இத்திருவிழிப்பின் மிக முக்கியமான பகுதி என்பதை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று வாசகங்களாவது வாசிக்கவேண்டும்: மிகவும் முக்கியமான காரணங்களுக்காக இதை இரண்டாக்கலாம். ஆனால் யாத்திராகமம் 14ஆம் அதிகாரத்தை ஒருபோதும் விட்டுவிடலாகாது.

அனைவரும் திரிகளை அணைத்துவிட்டு அமர்ந்திருப்பர். வாசகங்களைத் தொடங்குமுன் குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று மக்களுக்கு அறிவுரை கூறுவார்:

அன்புச் சகோதரர்களே சகோதரிகளே, இத்திருவிழிப்பைச் சிறப்புடன் தொடங்கிய நாம், அமைந்த உள்ளத்தோடு இறைவாக்கினைக் கேட்போமாக: கடந்த காலங்களில் கடவுள் தம் மக்களை எவ்வாறு வழிநடத்திக் காத்து வந்தார் என்றும், இறுதியாகத் தம் திருமகனை நம் மீட்பராக அனுப்பினார் என்றும் சிந்திப்போமாக. மேலும், இறைவன் பாஸ்கா வழியாக ஆற்றிய மீட்புப் பணியை முழுமையாக்கிட வேண்டுவோமாக.

பின்னர் வாசகங்கள் தொடரும் வாசகர் வாசகமேடைக்குச் சென்று முதல் வாசகத்தை அறிக்கையிடுவார். அடுத்து சங்கீத முதல்வர் அல்லது பாடகர் ஒருவர் சங்கீத அடிகளைப் பாட, இறைமக்கள் பதிலுரையைப் பாடுவார்கள். அது முடிந்தபின் எல்லாரும் எழுந்து நிற்க, குரு செபிப்போமாக (மன்றாடுவோமாக) என்று சொல்லி அழைப்பார்: அனைவரும் சிறிது நேரம் மௌனமாகச் செபித்தபின், குரு சபை மன்றாட்டைச் சொல்லுவார்.

பதிலுரைச் சங்கீதத்திற்குப் பதிலாக மௌன செபம் இடம் பெறலாம். அப்படியானால் செபிப்போமாக என்னும் அழைப்புக்குப்பின் மௌனம் தேவையில்லை.

முதல் வாசகம்: படைப்பு: தொடக்க நூல் 1:1-2:2

தொடக்க நூலிலிருந்து வாசகம்:

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

 

தியானப் பாடல்: திருப்பாடல் 104:1-2, 5-6, 10, 12, 13-14, 24-25

பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும்; அசைவுறாது.
அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;
நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.
கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்;
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!
பல்லவி : உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

 

வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய படைப்புகளையெல்லாம்
நீர் வியப்புக்குரிய வகையில் செம்மைப்படுத்துகின்றீர்.
தொடக்கத்தில் நீர் உலகத்தைப் படைத்தது மாபெரும் செயலே.
ஆனால் காலம் நிறைவுற்றபோது எங்கள் பாஸ்காவாகிய கிறிஸ்துவின் பலியால்
இந்த உலகை மீட்டுப் புதியதொரு படைப்பாக உருவாக்கினீர் என்பது
அதைவிட மாபெரும் செயலாகும். இவற்றை உம் மக்கள் நாங்கள் உய்த்துணரச் செய்தருளும்.
என்றென்றும் வாழ்த்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

அல்லது (மனித படைப்பைக் குறித்து)

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, மனிதரை வியத்தகு முறையில் படைத்து, அதிலும் வயித்தகு முறையில் மீட்டருளினீர்:
நாங்கள் மெய்யறிவுடன் பாவ நாட்டங்களை உறுதியாய் எதிர்த்து நின்று,
முடிவில்லாப் பேரின்பத்தை அடையுமாறு அருள்புரிவீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

எல். ஆமென்

--------------------------------------

இரண்டாம் வாசகம்: ஆபிரகாமின் பலி: தொடக்க நூல் 22:1-18

தொடக்க நூலிலிருந்து வாசகம்:

இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன்" என்றார். அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, "நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார். பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, "அப்பா!" என, அவர், "என்ன? மகனே!" என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான். அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" "என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர். ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம்" என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன்" என்றார். அவர், "பையன்மேல் கை வைக்காதே; அவனுக்கு எதுவும் செய்யாதே; உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே" என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ";ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

 

தியானப் பாடல்: திருப்பாடல் 16:5,8 9-10, 11
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.
பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, விசுவாசிகளின் உன்னத தந்தையே,
எல்லா நாட்டு மக்களுக்கும் தந்தையாவீர் என்று உம் ஊழியர் ஆபிரகாமுக்கு வாக்களித்தீர்.
பாஸ்கா நிகழ்ச்சியாகிய கிறிஸ்துவின் இறப்பு, உயிர்ப்பு வழியாக அவ்வாக்குறதியை நிறைவேற்றினீர்.
இவ்வாறு உலகெங்கும் உமது அருளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் தொகையைப் பெருகச் செய்கின்றீர்.
இந்த உமது அருட்செயலை இன்று நினைவுகூரும் நாங்கள்,
அருள்வாழ்வில் முன்னேற நீர் விடுக்கும் அழைப்பினை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் துணைபுரியும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

----------------------------------

மூன்றாம் வாசகம்: செங்கடலைக் கடந்து செல்லல்: யாத் 14:15-15:1

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம்:

ஆண்டவர் மோசேயை நோக்கி, "ஏன் என்னை நோக்கி அழவேண்டும்? முன்னோக்கிச் செல்லும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல். கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன் கையைக் கடல்மேல் நீட்டி அதனைப் பிரித்துவிடு. இஸ்ரயேல் மக்கள் கடல் நடுவே உலர்ந்த தரையில் நடந்து செல்வார்கள். நான் எகிப்தியரின் மனத்தைக் கடினப்படுத்துவேன். அவர்கள் இஸ்ரயேலரைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது பார்வோனையும் அவனுடைய படைகள், தேர்கள், குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறுவேன். பார்வோனையும் அவன் தேர்களையும் குதிiவீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, "நானே ஆண்டவர்" என்று எகிப்தியர் உணர்ந்து கொள்வர்" என்றார். இஸ்ரயேல் அணிவகுப்புக்கு முன் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர் இடம்பெயர்ந்து அவர்களுக்குப் பின்வந்து நின்றார். மேகத்தூணும் இடம்பெயர்ந்து முன் பக்கத்திலிருந்து அவர்களுக்குப் பின்பக்கம் வந்து நின்று கொண்டது. அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை. மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர். எகிப்தியர் அவர்களைத் துரத்திச் சென்றனர். பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர்கள் அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நடுக்கடல்வரை சென்றனர். பொழுது புலரும் முன், நெருப்பும் மேகமுமான தூணிலிருந்து ஆண்டவர் எகிப்தியரின் அணிவகுப்புகளைப் பார்த்து அந்த எகிப்திய அணிவகுப்புகளை நிலைகுலையச் செய்தார். அவர்களுடைய தேர்களின் சக்கரங்களை அவர் புதைந்து போகச் செய்ததால், தேரோட்டுவது அவர்களுக்குக் கடினமாயிற்று. அப்போது எகிப்தியர், "இஸ்ரயேலரிடமிருந்து நாம் ஓடிச் சென்று விடுவோம். ஏனெனில், ஆண்டவர்தாமே அவர்கள் சார்பாக நின்று எகிப்தியராகிய நமக்கு எதிராகப் போரிடுகிறார்" என்றனர். ஆண்டவர் மோசேயை நோக்கி, "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" என்றார். மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, காலையில் விடியும் நேரத்தில் கடல் தன் முன்னைய நிலைக்குத் திரும்பிவந்தது. அதற்குஎதிர்ப்பட அஞ்சி, எகிப்தியர்கள் விரைந்தோடுகையில் ஆண்டவர் எகிப்தியரை நடுக்கடலில் அமிழ்த்தினார். திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது. இவ்வாறு ஆண்டவர் அந்நாளில் எகிப்தியர் பிடியினின்று இஸ்ரயேலருக்கு விடுதலையளித்தார். கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும் அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர். அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்தேத்திப் பாடிய பாடல் வருமாறு; ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

 

தியானப் பாடல்: விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18

பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

போரில் வல்லவர் ஆண்டவர்; "ஆண்டவர்" என்பது அவர் பெயராம்.
பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன.
ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர்.
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்.
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்;

வாசகத்திற்குப் பின் மன்றாட்டு:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா,
நீர் முற்காலத்தில் செய்த அருஞ்செயல்களை
இக்காலத்திலும் தொடர்ந்து ஆற்றிவருகின்றீர் என்பதை நாங்கள் தெளிவாக உணர்கின்றோம்.
உமது வலக்கையின் வல்லமையால் எகிப்தியரின் கொடுமையிலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவித்தீர்.
இன்றும் புதுப்பிறப்பளிக்கும் நீரினால் மக்களுக்கு மீட்பு அளிக்கின்றீர்.
இவ்வாறு உலக மாந்தர் அனைவரும் உமது அருளினால் ஆபிரகாமின் உண்மை மக்களாகி,
நீர் தேர்ந்துகொண்ட மக்களுக்குரிய உரிமை வாழ்வை
முழுமையாகப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

எல். ஆமென்

அல்லது

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, புதிய உடன்படிக்கையின் ஒளியில் முற்காலத்தில் நிகழ்ந்த அருஞ்செயல்களைத் தெளிவுபடுத்துகின்றீர்.
எவ்வாறெனில், செங்கடல் திருமுழுக்குத் தண்ணீருக்கு அடையாளமாக அமைந்துள்ளது.
மேலும் அடிமைத் தளையிலிருந்து மீட்படைந்த இஸ்ராயேல் மக்கள்,
தீமை அனைத்தினின்றும் விடுவிக்கப்படும் கிறிஸ்துவ மக்களின் முன்னடையாளமாக விளங்குகின்றனர்.
விசுவாசத்தால் இஸ்ராயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த தனிச்சிறப்பை மக்கள் அனைவரும் பெற்று,
தூய ஆவியில் புதுப்பிறப்பு அடைவார்களாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

---------------

நான்காம் வாசகம்: புதிய எருசலேம். எசாயா 54:5-14

இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம்

ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர், "படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம். இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்; "உலக முழுமைக்கும் கடவுள்" என அவர் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவிபோலும், தள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை ஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள். நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்; ஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன். பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே என்முகத்தை உனக்கு மறைத்தேன்; ஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன், என்கிறார் ஆண்டவர். எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது; நோவாவின் காலத்துப் பெருவெள்ளம் இனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது என்று நான் ஆணையிட்டேன்; அவ்வாறே உம்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும், உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்;போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன். உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும் உன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். உன் குழந்தைகள் அனைவருக்கும் ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்; உன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்; ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்; நீ அஞ்சாதே! திகில் உன்னை அணுகாது.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

தியானப் பாடல்: திருப்பாடல் 30:2,4 5-6, 11-12

பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.
ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்;; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
பல்லவி: ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.

 

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் முன்னோருக்கு நீர் வாக்களித்ததுபோல நீர் தேர்ந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைப் பெருகச்செய்து,
உமது திருப்பெயர் மகிமையடையச் செய்தருளும்.
இதனால் எங்கள் முன்னோர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தவையெல்லாம்
எங்களில் நிறைவேறி வருவதை நாங்கள் கண்டுணரச் செய்தருளும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

-----------------------

ஐந்தாம் வாசகம்: அனைவருக்கும் மீட்பு இலவசமாக அருளப்படுகிறது: இசை 55:1-11

இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலிலிருந்து வாசனம்

தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன். இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார். ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

தியானப் பாடல்: எசாயா 12:2-3, 4, 4-6
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

அந்நாளில் நீங்கள் சொல்வதாவது; ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர்செயல்;களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக.
சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

 

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
உலகத்தின் ஒரே நம்பிக்கை நீரே. இக்காலத்தில் நிறைவேறிக்கொண்டிருக்கும் பாஸ்கா மறைநிகழ்ச்சியை
முற்காலத்திலேயே இறைவாக்கினர் வழியாக முன்னறிவித்திருக்கின்றீர்.
உம்முடைய ஏவுதலால் நாங்கள் இவ்வுலக நிகழ்ச்சிகள் அனைத்தையும்
இறைவாக்கினருக்குரிய மனநிலையோடு சீர்தூக்கிப் பார்க்கவும்
உம் திட்டங்களை உய்த்துணர்ந்து நிறைவேற்றவும் அருள்தாரும்.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

-------------------

ஆறாம் வாசகம்: ஞானத்தின் ஊற்று: பாரூயஅp;க் 3:9-15, 32-38, 4:1-4

பாரூயஅp;க்கு நூலிலிருந்து வாசகம்

இஸ்ரயேலே, வாழ்வுதரும் கட்டளைகளைக் கேள்; செவிசாய்த்து ஞானத்தைக் கற்றுக்கொள். இஸ்ரயேலே, நீ உன் பகைவரின் நாட்டில் இருப்பது ஏன்? வேற்று நாட்டில் நீ முதுமை அடைந்து வருவது ஏன்? இறந்தவர்களொடு உன்னையே தீட்டுப்படுத்திக் கொண்டது ஏன்? பாதாளத்திற்குச் செல்வோருடன் வைத்து நீயும் எண்ணப்படுவது ஏன்? ஞானத்தின் ஊற்றை நீ கைவிட்டாய். கடவுளின் வழியில் நீ நடந்திருந்தால், என்றென்றும் நீ அமைதியில் வாழ்ந்திருப்பாய். அறிவுத்திறன் எங்கே இருக்கிறது, ஆற்றல் எங்கே இருக்கிறது, அறிவுக்கூர்மை எங்கே இருக்கிறது எனக் கற்றுக்கொள். இதனால் நீண்ட ஆயுளும் வாழ்வும் எங்கே உள்ளன, கண்களுக்கு ஒளியும் அமைதியும் எங்கே உள்ளன எனவும் நீ அறிந்து கொள்வாய். ஞானத்தின் உறைவிடத்தைக் கண்டுபிடித்தவர் யார்? அதன் கருவூலங்களுக்குள் நுழைந்தவர் யார்? ஆனால் எல்லாம் அறிபவர் ஞானத்தை அறிகின்றார்; தம் அறிவுக்கூர்மையால் அதைக் கண்டடைந்தார்; மண்ணுலகை எக்காலத்துக்கும் நிலைநாட்டினார்; அதைக் கால்நடைகளால் நிரப்பினார். அவர் ஒளியை அனுப்பினார்; அதுவும் சென்றது. அதைத் திரும்ப அழைத்தார்; அதுவும் நடுக்கத்துடன் அவருக்குப் பணிந்தது. விண்மீன்கள் தமக்குக் குறிக்கப்பட்ட இடங்களில் நின்று ஒளிவீசி மகிழ்ந்தன. அவர் அவற்றை அழைத்தார்; அவை, "இதோ, உள்ளோம்" என்றன; தங்களைப் படைத்தவருக்காக மகிழ்ச்சியோடு ஒளிவீசின. இவரே நம் கடவுள், இவருக்கு இணையானவர் எவரும் இலர், மெய்யறிவின் வழி முழுவதும் கண்டவர் இவரே; தம் அடியார் யாக்கோபுக்கும், தாம், அன்புகூர்ந்த மகன் இஸ்ரயேலுக்கும் மெய்யறிவை ஈந்தவரும் இவரே. அதன் பின்னர் ஞானம் மண்ணுலகில் தோன்றிற்று; மனிதர் நடுவே குடிகொண்டது. ஞானமே கடவுளுடைய கட்டளைகள் அடங்கிய நூல்; என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம். அதைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வாழ்வர்; அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர். யாக்கோபே, திரும்பி வா; ஞானத்தை ஏற்றுக்கொள்; அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட, உனது மாட்சியை மற்றவருக்கு விட்டுக்கொடாதே; உன் சிறப்புரிமைகளை வேற்று மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே. இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

தியானப் பாடல்: திருப்பாடல் 19:7, 8, 9, 10

பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.
பல்லவி : ஆண்டவரே நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

 

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, பல்வேறு இனத்தாரை அழைத்துச் சேர்ப்பதால் உமது திருச்சபை எப்பொழுதும் வளரச் செய்கின்றீர்:
திருமுழுக்குத் தண்ணீரில் கழுவப்பெறும் மக்களை ஆதரித்து, இடையறாது காத்தருளத் தயைபுரிவீராக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

------------------

ஏழாம் வாசகம்: புதிய உள்ளம், புதிய மனப்பாங்கு: எசேக் 36:16-28

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம்

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டடது; மானிடா! இஸ்ரயேல் மக்கள் தங்கள் நாட்டில் வாழ்கையில் அவர்கள் தங்கள் நடத்தையாலும் செயல்களாலும் அதைத் தீட்டுப்படுத்தினார்கள். அவர்களின் நடத்தை ஒரு பெண்ணின் மாதவிலக்கின் தீட்டுப்போல என் கண்முன் இருந்தது. எனவே, நான் என் சினத்தை அவர்கள்மேல் கொட்டினேன். ஏனெனில் அவர்கள் அந்த நாட்டில் இரத்தம் சிந்தி, அதனைத் தெய்வச் சிலைகளால் தீட்டுப்படுத்தினர். நான் அவர்களை வேற்றினத்தாரிடையே சிதறடித்தேன். அவர்கள் நாடுகளெங்கும் சிதறுண்டு போயினர். அவர்களின் நடத்தைக்கேற்பவும், செயல்களுக்கேற்பவும் அவர்களுகு;குத் தீர்ப்பிட்டேன். வேற்றினத்தாரிடையே அவர்கள் எங்குச் சென்றாலும் என் திருப்பெயரைத் தீட்டுப்படுத்தினர். ஏனெனில் அவர்களைக் குறித்து "இவர்கள் ஆண்டவரின் மக்களாக இருப்பினும், அவரின் நாட்டைவிட்டுப் போகவேண்டியதாயிற்று" என்று கூறப்பட்டது. இஸ்ரயேல் வீட்டார் சென்ற வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரைக் குறித்து நான் கவலை கொண்டேன். எனவே இஸ்ரயேல் வீட்டாருக்குச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே! இஸ்ரயேல் வீட்டாரே, நான் இவ்விதம் செயலாற்றுவது உங்களை முன்னிட்டு அல்ல. மாறாக, நீங்கள் சென்ற இடங்களில் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் திருப்பெயரை முன்னிட்டே இவ்விதம் செயலாற்றுகிறேன். நீங்கள் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்திய என் மாபெரும் பெயரை நான் புனிதப்படுத்துவேன். அப்போது உங்கள் வழியாய் அவர்கள் கண்முன்னே என் தூய்மையை நிலைநாட்டும்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் துய்மையாவீர்கள்; உங்கள் எல்லாச் சிலைவழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். என் நியமங்களைப் கடைப்பிடிக்கவும் என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன். நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள். அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

தியானப் பாடல்: திருப்பாடல் 42:3, 5

பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!
ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே!
இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
பல்லவி: கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே!என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.

 

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் குன்றா ஒளியும் ஆற்றலுமாகிய இறiவா,
உமது திருவருட்சாதனமாகிய திருச்சபையைத் தயவாய்க் கண்ணோக்கியருளும்.
உம்முடைய முடிவில்லா ஏற்பாட்டின்படிமனிதரை மீட்கும் அதன் பணிமிகுந்த அமைதியுடன் நிறைவேறச் செய்தருளும்:
அத்திருச்சபை விழுந்தவற்றை எழச் செய்வதாகவும், பழைமையானவற்றைப் புதுப்பிப்பதாகவும்,
கிறிஸ்துவில் தொடங்கியதனைத்தும் அவரிடமே முழமை காணச் செய்வதாகவும் உலகமெல்லாம் கண்டுணர்வதாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

அல்லது

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, பாஸ்கா மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டுமென்று
பழைய, புதிய ஆகமங்கள் வழியாக அறிவுறுத்துகின்றீர்.
இந்த மறைநிகழ்ச்சிகளைக் கொண்டாடும் நாங்கள் உமது அளவற்ற அன்பைக் கண்டுணரச் செய்தருளும்.
இவ்வாறு உம் அருட்கொடைகளை நாளும் வளமாகப் பெற்று
நாங்கள் மீட்படைவோம் என்னும் நம்பிக்கையில் உறுதிபெறுவோமாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்

------------------------

பழைய ஏற்பாட்டிலிருந்து இறுதி வாசகமும் அதற்க்குரிய பதிலுரைப்பாடலும் செபமும் முடிந்தபின், பீடத்தில் திரிகள் பற்றவைக்கப்படும் குரு உன்னதங்களிலே என்னும் கீதத்தை தொடங்க, எல்லாரும் தொடர்ந்து பாடுவர். அப்பொழுது அந்தந்த இடத்தின் வழக்கப்படி மணிகள் ஒலிக்கும். கீதம் முடிந்தபின் குரு வழக்கம்போல சபை மன்றாட்டைச் சொல்வார்:


உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இறைவா, புனிதமிக்க இந்த இரவை எங்கள் ஆண்டவருடைய உயிர்த்தெழுதலின் மகிமையால் ஒளிபெறச் செய்கின்றீர்.
அவர் சாவின்மீதும் தீமைகள் அனைத்தின்மீதும் அடைந்த வெற்றி விழாவினைக் கொண்டாடக் குழமியிருக்கும் நாங்கள்
சுவிகார மக்களின் உரிமைப் பேற்றினை உணர்ந்து, உள்ளத்திலும் உடலிலும் புதுப்பிக்கப்பெற்று,
உயிர்ப்பின் நம்பிக்கையில் நாளும் வளரச் செய்தருளும்.
உம்மோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும்
உம் திருமகனுமாகிய இயேசு கிறில்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

பின்பு வாசகர் திருமுகத்திலிருந்து வாசிப்பார்

உரோமையர் 6:3-13

அப்போஸ்தலரான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுதக்திலிருந்து வாசகம்

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழைய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ? கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு - இறைவா உமக்கு நன்றி.

அதன்பின் அனைவரும் எழுந்து நிற்க, குரு ஆடம்பரமாக அல்லேலூயா எனப் பாடுவார்; மக்கள் எல்லாரும் அதை எடுத்துப்பாடுவார்கள். பின் சங்கீத முதல்வர் அல்லது ஒரு பாடகர் சங்கீதத்தின் அடிகளைப் பாட, எல்லாரும் அல்லேலூயா எனப் பல்லவி பாடுவர், தேவையானால் சங்கீத முதல்வரே அல்லேலூயா எனத் தொடங்கலாம். நற்செய்திக்கு எரியும் திரிகளைப் பயன்படுத்துவதில்லை. தூபம் காட்டலாம்.பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
பல்லவி : அல்லேலுயா! அல்லேலுயா! அல்லேலுயா!

நற்செய்தி : மத்தேயு 28:1-10

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் - ஆண்டவரே உமக்கு மகிமை

ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி - கிறிஸ்துவே உம்மை புகழ்கின்றோம்

நற்செய்திக்குப்பின் மறையுரை ஆற்றப்படும். பின் திருமுழுக்கு வழிபாடு தொடரும்.

மூன்றாம் பகுதி - திருமுழுக்கு வழிபாடு

திருமுழுக்கு வழிபாடு

இறைமக்கள் எல்லாரும் எளிதாகப் பார்க்கக்கூடிய இடத்தில் திருமுழுக்குத் தொட்டி இருந்தால், குரு பணியாளரோடு அங்குச் செல்வார்; இல்லையெனில் தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று பீட முற்றத்தில் வைக்கப்படும்.
திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால், அவர்கள் திருக்கூட்டத்தின்முன் வரும்படி அழைக்கப்படுவார்கள் ஞானத்தாய் தந்தையார் அவர்களைக் கூட்டிவருவார்கள்; குழந்தைகளைப் பெற்றோரும், ஞானத்தாய் தந்தையரும் எடுத்துவருவார்கள்.
பின் குரு திருக்கூட்டத்திற்குக் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அறிவுரை கூறுவார்:

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:

அன்புக்குரியவர்களே, நம் சகோதரர் (சகோதரி)களுக்கு, மகிழ்ச்சிமிக்க நம்பிக்கை உண்டாக நாம் ஒன்றிணைந்து நம் மன்றாட்டினால் துணைபுரிவோம்:
புதுப்பிறப்பளிக்கும் ஊற்றை நொக்கிச் செல்லும் இவர்களுக்கு எல்லாம் வல்ல தந்தை இரக்கத்துடன் உதவியனைத்தும் அளிப்பாராக.

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லை: ஆனால் திருமுழுக்குத் தொட்டியை மந்திரிக் வேண்டியிருந்தால்:

அன்புக்குரியவர்களே, எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனின் அருள் இத்தொட்டியின்மீது இறங்கக் கெஞ்சி மன்றாடுவோம்.
இதன் வழியாகப் புதுப்பிறப்படைவோர் கிறிஸ்துவுக்குள் உரிமைபெற்ற மக்களோடு சேர்த்துக்கொள்ளப்படுவார்களாக.

இரு பாடகர் மன்றாட்டு மாலை பாட (பாஸ்காக் காலமானதால்) அனைவரும் எழுந்துநின்று பதில் பாடுவர்.

திருமுழுக்குத் தொட்டிக்கு நீண்ட பவனியாகப் போகவேண்டுமானால். பவனியின்போது மன்றாட்டு மாலை பாடப்படும்; அப்படியானால், திருமுழுக்குப் பெறவேண்டியவர் பவனி தொடங்குமுன் அழைக்கப்படுவர். பவனியில் முதலாவது பாஸ்காத் திரி கொண்டுபோகப்படும்; பின் திருமுழுக்குப் பெறுவோர் ஞானத்தாய் தந்தையருடன் செல்வர்: இறுதியாகக் குருவும் பணியாகும் செல்வர். நீரை மந்திரிக்குமுன் அறிவுரை வழங்கப்படும்.

திருமழுக்குக் கொடுத்தவோர தொட்டி மந்திரித்தலோ இல்லையென்றால், மன்றாட்டு மாலையை விட்டுவிட்டுத் தீர்த்தம் மந்திரிக்கப்படும் (எண் 45).

புனிதர் சிலரின் பெயரை, சிறப்பாகக் கோயிலின் பாதுகாவலர், நாட்டின் பாதுகாவலர், திருமுழுக்குப் பெறுவோரின் பெயர்கொண்ட புனிதர் ஆகியோரின் பெயர்களை மன்றாட்டு மாலையில் சேர்த்துக்கொள்ளலாம்.


ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்
கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும்
ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும்

புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித கிரகோரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அகுஸ்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அத்தனாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பசிலியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித மார்த்தீனாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித ஆசீர்வாதப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்குவே, சுவாமிநாதரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித பிரான்சிஸ்கு சவேரியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித வியான்னி மரிய அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித சியன்னா கத்தரீனம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
புனித அவிலா தொரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இறைவனின் எல்லாப் புனிதர்களே, புனிதையர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

கருணைகூர்ந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தீமை அனைத்திலுமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
பாவம் அனைத்திலிமிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
நித்திய மரணத்திலிருந்து - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மனித அவதாரத்தினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
உமது மரணத்தினாலே, உயிர்ப்பினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே
தூய ஆவியின் வருகையினாலே - எங்களை மீட்டருளும் ஆண்டவரே

பாவிகளாகிய நாங்கள் உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இருந்தால்:

தேர்ந்துகொள்ளப் பெற்ற இம்மக்கள் திருமுழுக்கின் அருளினால்
புத்துயிர்பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருமுழுக்குப் பெறவேண்டியவர் இல்லையென்றால்:

உமக்குப் பிள்ளைகளாக மக்கள் மறுபிறப்பு அடையுமாறு, இந்த நீருற்றை உமது அருளினால்
புனிதமாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
உயிருள்ள கடவுளின் திருமகனாகிய இயேசுவே, உம்மை மன்றாடுகிறோம் - எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும் - கிறிஸ்துவே எங்களுக்கு செவிசாய்தரும்.
கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும் - கிறிஸ்துவே தயவாய் செவிசாய்தரும்

திருமுழுக்குப் பெறுவோர் அங்கிருந்தால், குரு கைகுவித்துப் பின்வரும் மன்றாட்டைச் சொல்வார்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
உமது இரக்கத்தின் திருவருட்சாதனங்களில் நீர் உடனிருந்து செயலாற்றுகின்றீர்.
இத்திருமுழுக்கின் ஊற்றிலிருந்து உமக்கெனப் புதிய மக்களைப் பிறப்பிக்குமாறு
உம்முடைய திருமகனின் ஆவியை அனுப்பியருளும்.
இந்த எங்கள் எளிய திருப்பணி உம்முடைய பேராற்றலால் நிறைபயன் தருவதாக.
எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

திருமுழக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குதல்:

குரு கை குவித்துப் பின்வரும் செபத்தைச் சொல்லி திருமுழுக்குத் தண்ணீருக்கு ஆசி வழங்குகிறார்:

இறைவா, கண்ணுக்குப் புலப்படாத வல்லமையால் திருவருட்சாதனங்கள் பயனளிக்க
வியத்தகுமுறையில் செயலாற்றுகின்றீர். படைப்புப் பொருளாகிய தண்ணீர் திருமுழுக்கின் அருளைக் குறித்துக்காட்ட
பல வகையில் அதைத் தயார் செய்தீர். இறைவா, உலகின் தொடக்கத்திலேயே தண்ணீருக்குப் புனிதப்படுத்தும் ஆற்றலை அளிக்குமாறு
உம்முடைய ஆவி அப்பொழுதே அதன்மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.
இறைவா, நோவா காலத்துப் பெரும் வெள்ளத்தினைப் புதுப் பிறப்பின் அடையாளமாக்கி,
அந்த ஒரே பொருளின் மறைவான செயலினால் பாவம் முடிவு காணவும் அருள்வாழ்வு தொடக்கம்பெறவும் செய்தீர்.

இறைவா, பாரவோனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்ற ஆபிரகாமின் மக்கள் செங்கடலைக் கால் நனையாமல் கடக்கச்செய்து,
திருமுழுக்குப் பெற்ற மக்களுக்கு முன்னடையாளமாக இருக்கச் செய்தீர்.
இறைவா, உம் திருமகன் யோர்தான் நீரில் யோவான் கையால் திருமுழுக்குப் பெற்று,
தூய ஆவியால் திருநிலைப்படுத்தப்பெற்றார்.சிலுவையில் தொங்கியபொழுது, தமது விலாவிலிருந்து
இரத்தத்தோடு தண்ணீரையும் வழிந்தோடச் செய்தார்.
தாம் உயிர்த்தெழுந்தபின், "நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்
அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுங்கள்" என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
ஆகவே இறைவா, உமது திருச்சபையைக் கண்ணோக்கி, அதற்குத் திருமுழுக்கின் ஊற்றினைத் திறந்தருளும்.
இவ்வாறு, உமது சாயாலாகப் படைக்கப்பட்ட மனிதன் திருமுழுக்குத் திருவட்சாதனத்தினால்
பழைய பாவ அழுக்கெல்லாம் கழுவப்பெற்று, தண்ணீரினாலும் தூய ஆவியனாலும் புதுப்பிறப்படைந்து எழுமாறு,
இந்தத் தண்ணீர் உம் ஒரே மகனின் அருளைத் தூய ஆவியினின்று பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.

குரு வசதிக்கேற்ப பாஸ்காத் திரியை ஒருமுறை அல்லது மும்முறை தண்ணீரில் இறங்கிச் சொல்வதாவது:

இறைவா, இந்தத் தொட்டியிலுள்ள தண்ணீர் முழவதிம் தூய ஆவியின் வல்லமை உம் திருமகன் வழியாக இறங்குவதாக.

திரியைத் தண்ணீரில் வைத்துப் பிடித்துக்கொண்டு சொல்வதாவது:

இவ்வாறு, திருமுழுக்கினால் கிறிஸ்துவுடன் சாவுக்குள் அடக்கம் செய்யப்பட்ட அனைவரும் அவரோடு வாழ்வுக்கு உயிர்த்தெழ வேண்டுமென்று
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல். ஆமென்

பின் தண்ணீரிலிருந்து திரி அகற்றப்படும். அப்பொழுது மக்கள் கீPழுள்ளவாறு அல்லது வேறு பொருத்தமானவாறு ஆர்ப்பரிப்பர்.

நீரூயஅp;ற்றுகளே, ஆண்டவரைப் போற்றுங்கள்,

என்றென்றும் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.

திருமுழுக்குப் பெறவிருப்போர் ஒவ்வொருவராகச் சாத்தானைத் துறந்து, விசுவாச அறிக்கை செய்தபின் திருமுழுக்குப் பெறுவர்.
முதிர் வயதினர் திருமுழக்குப் பெற்றவுடன், ஆயரோ, அதிகாரம்பெற்ற குருவோ அங்கிருந்தால் உறுதிப்பூசுதல் பெறுவர்.

தண்ணீருக்கு ஆசியளித்தல் (தீர்த்தம் மந்திரிப்பு)

திருமுழுக்கு அளித்தலோ, தொட்டி மந்திரித்தலோ நடைபெறவில்லையென்றால். குரு கீழுள்ள செபத்தைச் சொல்லித் தீர்த்தத் தண்ணீருக்கு ஆசி அளிப்பார்:

அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே,
நாம் பெற்றுக்கொண்ட திருமுழக்கினை நமக்கு நினைவூட்டிட இத்தண்ணீர் நம்மீது தெளிக்கப்படும்.
எனவே இப்படைப்புப் பொருளமீது தம் ஆசி வழங்குமாறு நம் இறைவனாகிய ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
அவர் நம்மைப் புதுப்பித்து, அன்று நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவிக்கு என்றும் பற்றுறுதியுடன் இருக்கச் செய்வாராக.
சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின், குரு கைகளைக் குவித்து. எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, இப்புனிதமிக்க இரவில்
கண்விழித்துக் காத்திருக்கும் உம் மக்கள் எங்களுக்குத் தயவாய்த் துணைபுரியும்.
வியத்தகு முறையில் எங்களைப் படைத்து, அதிலும் வியத்தகு முறையில் மீட்டருளினீர் என நினைவுகூர்கின்றோம்.
எங்கள் நலனுக்காக இத்தண்ணீர்மீது உமது ஆசியை வழங்கியருளும். ஏனெனில், நிலத்தை வளப்படுத்தவும்
எங்கள் உடலுக்குப் புத்துணர்வும் தூய்மையும் தரவும் தண்ணீரைப் படைத்தீர்.
உமது இரக்கத்தின் கருவியாகவும் அதை அமைத்தீர்.
எவ்வாறெனில், தண்ணீர் வழியாக உம் மக்களின் அடிமைத் தளையை அகற்றினீர்.
பாலைவனத்தில் அவர்களது தாகத்தைத் தணித்தீர். அதன் வழியாகப் புதிய உடன்படிக்கையை இறைவாக்கினர் முன்னறிவித்தனர்:
இறுதியாக, பாவக்கறை படிந்த எங்கள் மனித இயல்பை யோர்தானில் கிறிஸ்து புனிதமாக்கிய தண்ணீரின் வழியாக
புதுப்பிற்பபளிக்கும் திருமுழுக்கினால் கழுவி வளப்படுத்தினீர். ஆகவே, இத்தண்ணீர் எங்கள் திருமுழுக்கை நினைவுபடுத்தும்
அடையாளமாய் இருப்பதாக பாஸ்காப் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற
எங்கள் சகோதரர் சகோதரிகளோடு நாங்களும் ஒன்றுசேர்ந்து பெருமகிழ்சச்சிகொள்ளச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல். ஆமென்.

திருமுழுக்கு வாக்குறதிகளைப் புதுப்பித்தல்:

திருமுழுக்கும் (உறுதிப் பூசுதலும்) முடிந்தபின் அல்லது அது இல்லையெனில் தண்ணீருக்கு ஆசி வழங்கியபின் அனைவரும் எழுந்து நின்று. எரியும் திரிகளைப் பிடித்துக்கொண்டு, தம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிப்பார். குரு கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று சிற்றுரையாற்றுவார்.

அன்புச் சகோதரர் சகோதரிகளே,
திருமுழுக்கின் வழியாய் நாம் அனைவரும் கிறிஸ்துவோடு இறந்து புதைக்கப்பட்டோம்.
கிறிஸ்து சாவினின்று வாழ்வுக்குக் கடந்து சென்ற இந்தப் பாஸ்காப் பெருவிழாவிலே அவருடைய உயிர்ப்பில் பங்குகொண்டு புது வாழ்வு வாழும்படி,
திருமுழுக்கின்போது நாம் இறைவனோடு செய்துகொண்ட உடன்படிக்கையை இப்போது நினைவுகூர்வோம்.
அந்த உடன்படிக்கையின்படி தொடர்ந்து வாழ்வோம் என்று வாக்குறுதி அளிப்போம்.

குரு: எல்லாத் தீமைகளின் மொத்த உருவாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

குரு: தீமைக்குத் துணைபோகின்ற மனநிலையையும் செயல்களையும் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

குரு: தீமையினால் விளையும் தன்னலத்தையும் ஆணவத்தையும் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

அல்லது

குரு: கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமையுடன் வாழ நீங்கள் பாவத்தை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

குரு: பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தாதிருக்க, நீங்கள் தீமையின் மாயக் கவர்ச்சிகளை விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

குரு: பாவத்திற்குக் காரணமும் ஊற்றுமான தன்னலத்தையும், சாதி உணர்வையும், மொழி, இன, மத வெறிகளையும் விட்டுவிடுகிறீர்களா?
எல். விட்டுவிடுகிறேன்.

தேவையானால் இந்த இரண்டாம் பாடத்தை ஆயர் குழு நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பின் குரு தொடர்ந்து:

குரு: வானமும் வையமும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்.

குரு: அவருடைய ஒரே மகனும், கன்னிமரியிடமிருந்து பிறந்து பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து, தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றவருமான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்.

குரு: தூய ஆவியையும், புனித கத்தோலிக்கத் திருச்சபையையும், புனிதரின் உறவையும், பாவ மன்னிப்பையும், உடலின் உயிர்த்தெழுதலையும், முடிவில்லா வாழ்வையும் விசுவசித்து ஏற்றுக்கொள்கிறீர்களா?
எல். ஏற்றுக்கொள்கிறேன்.

குரு முடிவுரையாகச் சொல்வது:

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய எல்லாம் வல்ல இறைவன் நம் பாவங்களை மன்னித்து, நீரினாலும் தூய ஆவியாலும்,
நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். அவரே தம் அருளால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில்
நம்மை என்றும் காத்து, அப்புதுவாழ்வின் நிறைவுக்கு இட்டுச்செல்வாராக.

எல். ஆமென்.

47. குரு மக்கள்மீது மந்திரித்த தண்ணீர் தெளிப்பார்: அப்போது அனைவரும் பாடுவதாவது


பல்லவி: தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன் - அல்லேலூயா
அந்தததண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர்:
அல்லேலூயா, அல்லேலூயா.

ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர்
அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே
பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்

-----

ஆண்டவரே ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்
நானும் தூய்மை ஆவேன். நீரே என்னைக் கழுவ
நானும் உறைபனி தனிலும் வெண்மையாவேன்

இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப
என் மேல் இரக்கம் கொள்ளுவீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய் பெறுக
ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்

அல்லது திருமுழுக்கைப்பற்றிய வேறு பாடல் பாடலாம். அதே வேளையில் புதுக் கிறிஸ்துவர் இறைமக்களோடு சென்று அமர்வர்.
திருமுழுக்குத் தண்ணீரைப் பீடமுற்றத்தில் மந்திரித்தால், அதைப் பணியாளர் வணக்கத்தோடு திருமுழுக்குத் தொட்டிக்கு எடுத்துச் செல்வர்.
திருமுழுக்குத் தண்ணீர் மந்திரிக்கப்படவில்லையெனில், தீர்த்தம் வசதியான இடத்தில் வைக்கப்படும்.
மந்திரித்த தண்ணீரைத் தெளித்தபின் குரு தம் இருக்கைக்குச் சென்று விசுவாசிகளின் மன்றாட்டை நடத்துவார். விசுவாச அறிக்கை சொல்வதில்லை.

நான்காம் பகுதி - நற்கருணை வழிபாடு

குரு பீடத்திற்கு வந்து வழ்க்கம்போல நற்கருணை வழிபாட்டைத் தொடங்குவார். புதுக்கிறிஸ்தவர் அப்பமும் இரசமும் காணிக்கைப் பவனியில் கொண்டுவருவது சிறப்பு.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)

(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)


குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கைமீது மன்றாட்டு:

இறைவா, உம் மக்களாகிய நாங்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களோடு எங்கள் வேண்டுதல்களையும் ஏற்றருளும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் சாவையும் ஏற்று, நீர் அவரைச் சாவினின்று உயிர்த்தெழச் செய்தீர்.
அவருடைய மகிமையின் நினனவாக நாங்கள் அளிக்கும் இப்பலி
எங்களுக்குப் பேரின்ப வாழ்வளிக்கும் அருமருந்தாக அமையச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

பாஸ்காத் தொடக்கவுரை ஐ (... இந்த இரவிலும்...),முதல் (உரோமை) நற்கருணை மன்றாட்டில், புனிதர் அனைவருடனும், ஆகவே இறைவா, உம் ஊழியராகிய என்னும் செபங்களை இவ்விழாவுக்குரிய மாற்றங்களுடன் சொல்லவும்.

நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்,
உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.
ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள்.
காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர்.
அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.
நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,
படைப்புகளை நலன்களால் நிறைத்து,
உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து,
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;.
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும்,
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா.


தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 4

குரு : தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்: ஏனெனில், நீர் மாண்புமிக்கவர். உமது ஞானமும் பேரன்பும் விளங்க, அனைத்தையும் செய்தருளினீர். மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்து, படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணிபுரியவும், படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவும், உலகம் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர். கீழ்படியாமல் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும், நீர் எங்களை சாவின் அழிவுக்கு விட்டு விட வில்லை. ஏனெனில், தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர். மேலும், எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன் வந்தீர், மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினா வழியாக எங்களுக்கு கற்பித்தீர்

தூயவரான தந்தையே, காலம் நிறைவுற்ற போது, உமது ஒரே பேறான திருமகனை மீட்பராக அனுப்பும் அளவுக்கு, நீர் எங்களை அன்பு செய்தீர். அவர் தூய ஆவியால் கன்னிமரியாளிடம் உடலெடுத்து, மனிதராகப் பிறந்து, பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார். ஏழைகளுக்கு ஈடேற்றம், சிறைப்பட்டோர்க்கு விடுதலை, துயருற்றோருக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார், உமது திட்டத்தை நிறைவேற்ற, தம்மைத் தாமே சாவுக்குக் கையளித்தார், இறந்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்து, சாவையழித்து புதுவாழ்வு தந்தார்.

தந்தையே இனிமேல் நாங்கள் எங்களுக்காக வாழாமல், எங்களுக்காக இறந்து உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு விசுவசிப்போர் எங்கள் மீது தூய ஆவியை உம்மிடமிருந்து முதற் கொடையாக அனுப்பினார்.

இவ்வாறு, அவரது அலுவலைத் தூய ஆவி இவ்வுலகில் தொடர்ந்து நடத்தி, புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார்.

ஆகவே, இறைவா, தூய ஆவி இக்காணிக்கைகளைப் புனிதப் படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இவ்வாநு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற இந்த மாண்புமிக்க திருப்பலியை நாங்கள் நிறைவேற்றுமாறு, இக்காணிக்கைகள் அவரது உடலும் இரத்தமுமாக மாறுவனவாக!

ஏனெனில், தூயவரான தந்தையே, உம்மால் அவர் மகிமை பெற வேண்டிய நேரம் வந்ததும், உலகில் இருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்து அவர், இறுதிவரையும் அன்புகூர்ந்து, அவர்களோடு உணவு அருந்துகையில், அப்பத்தை எடுத்து, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :


அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக் : ஆண்டவரே, உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும். உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே!

ஆகவே, இறைவா, எங்கள் மீட்பின் நினைவை இப்பொமுது கொண்டாடும் நாங்கள் கிறிஸ்து இறந்ததையும் பாதாளங்களில் இறங்கியதையும் நினைவு கூர்கின்றோம். அவர் உயிர்த்ததையும், உமது வலப்பக்கத்திற்கு எழுந்ததையும் அறிக்கையிடுகின்றோம். மாட்சியுடன் அவர் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள், உமக்கு உகந்ததும் உலகிற்கெல்லாம் மீட்பளிப்பதுமான பலியாக அவருடைய திருவுடலையும் இரத்தத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

இறைவா, உமது திருச்சபைக்காக நீரே ஏற்பாடு செய்த இப்பலிபொருளைக் கண்நோக்கியருளும். இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறுகின்ற எல்லாரும் தூய ஆவியால் ஒரே உடலாக இணைக்கப் பெற்று, உமது மாட்சியின் புகழுக்காக, கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருள் ஆகுமாறு தயவாய் அருள்புரியும்.

இறைவா, இன்று யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ, அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவு கூர்ந்தருளும், உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....., எங்கள் ஆயர்.... ஆண்டகை, ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்ந்தருளும். இப்பலியை ஒப்புக் கொடுப்போரையும், இங்கிருப்போர் அனைவரையும் உம் மக்கள் எல்லாரையும், நேர்மனத்தோடு உம்மைத் தேடிவரும் யாவரையும் நினைவு கூர்ந்தருளும். கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்தருளும். இறந்தவர்களில் உம்மீது விசுவாசம் கொண்டவர்கள் யாரென நீர் ஒருவரே அறிவீர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தருளும்;

இரக்கமுள்ள தந்தையே, இறைவனின் அன்னை புனிதமிக்க கன்னி மரியாள், உம் அப்போஸ்தலர், புனிதர் அனைவரோடும் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ள அருள்புரியும். பாவத்தினாலும் சாவினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமது அரசில் உம்மை புகழ்ந்தேத்துவோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.


இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

மக் : ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :


குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மக் : ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)

 

மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.

(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்துப் பல்லவி: கொரி 5:7,8

நமது பாஸ்காவாகிய கிறிஸ்து பலியாகிவிட்டார். எனவே, நேர்மை, உண்மை என்னும் புவியாத அப்பத்தை விருந்தாக உண்போம், அல்லேலூயா.

நன்றி மன்றாட்டு:

இறைவா, இம்மாபெரும் இரவில் விழித்திருந்து உம் வார்த்தைகளைக் கேட்டு,
உம் திருமகனுடைய உயிர்த்தெழுதலைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
சாவை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனின் ஆவியை எங்கள்மீது நிறைவாகப் பொழிந்தருளும்.
இதனால் நாங்கள் எங்கள் வாழ்வில் நேரிடும் அனைத்தையும் பாஸ்காவின் வெற்றிப் பூரிப்புடன் எதிர்கொள்ளத் துணிந்து செல்வோமாக.
எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக் : ஆமென்.

பிரியாவிடையாக, திருத்தொண்டர் அல்லது குரு சொல்வது: சென்று வாழுங்கள், திருப்பலி நிறைவேறிற்று, அல்லேலூயா, அல்லேலூயா.
எல். இறைவா, உமக்கு நன்றி, அல்லேலூயா, அல்லேலூயா.