குருத்து ஞாயிறு புனித வியாழன் புனித வெள்ளி பாஸ்கா திருவிழிப்பு

படல்கள் மட்டும்

புனித வியாழன் - ஆண்டவரின் இராவுணவு

as

மாலைத் திருப்பலி

திருச்சபையின் மிகப் பழமையான வழக்கப்படி, இறைமக்கள் பங்குபெறாத திருப்பலிகள் எல்லாம் இன்று தடை செய்யப்படும். மாலை வேளையில், வசதியான நேரத்தில், ஆண்டவருடைய இராவுணவுத் திருப்பலி இறைமக்கள் அனைவரும் முழுப் பங்கேற்க, கொண்டாடப்படும். அதில் குருக்கள், திருப்பணியாளர்கள் எல்லாரும் தத்தம் பணிபுரிவார்கள். திருத்தைலத் திருப்பலி அல்லது மக்கள் நலனுக்காக வேறு திருப்பலி ஒப்புக்கொடுத்த குருக்கள் மீண்டும் மாலையில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம். இறைமக்களின் நலனைக் கருதி, கோயிலிலோ சிற்றாலயங்களிலோ, மாலையில் அல்லது மிகமிகத் தேவையானால் காலையில், மற்றொரு திருப்பலி ஒப்புக்கொடுக்க ஆயர் அனுமதி வழங்கலாம். மாலைத் திருப்பலியில் பங்கேற்க யாதொரு வழியும் அற்றவர்களுக்கமட்டும் காலைத் திருப்பலிக்கு அனுமதி தரலாம்: இத்தகைய அனுமதி ஒருசிலரின் தனி வசதிக்காக அளிக்கக்கூடாது. மேலும், மாலையில் நடக்கும் முக்கியமான திருப்பலிக்கு இது ஊறுவிளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

திருப்பலியில் மட்டும் இறைமக்களுக்கு நற்கருணை வழங்கலாம்: நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் திருவுணவு வழங்கலாம்.

தொடக்கச் சடங்கும் இறைவாக்கு வழிபாடும்

திருப்பலி தொடங்குமுன் நற்கருணைப் பேழை வெறுமையாயிருக்கவேண்டும். இன்றும் மறுநாளும் மக்களுக்குத் திருவுணவு வழங்கப் போதுமான திரு அப்பத்தை இத்திருப்பலியில் வசீகரிக்க வேண்டும்.

வருகைப் பல்லவி கலா 6:14 காண்: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில்தான் நாம் பெருமை கொள்ள வேண்டும்: அவரிலேதான் நமக்கு மீட்பும் உயிரும் உயிர்ப்பும் உண்டு; அவராலேதான் நாம் ஈடேற்றமும் விடுதலையும் அடைந்தோம்.

உன்னதங்களிலே என்னும் கீதம் சொல்லப்படும்: அப்போது மணிகள் ஒலிக்கும். இதுமுதல் பாஸ்காத் திருவிழிப்புவரை மணி ஒலிக்காது: ஆனால் ஆயர் குழுவோ தல ஆளுநரோ தேவைக்கேற்ப, இவ்வழக்கத்தை மாற்றலாம்.

(குரு பீடத்திற்கு வந்து வணக்கம் செய்யும் போது, அனைவரும் எழுந்து நின்று வருகைப் பாடலைப் பாடுவோம்)

வருகைப் பாடல்:

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
அறம் வளர்ப்போமே !

ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள் ஒளி வீசும் ஒரு வழி போவோம் - 2
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் -2
பரிவுள்ள இறைவன் திருவுளம் ஏற்போம் - அன்பினில்

பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனித பேரன்பை - 2
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறனையும் நம்மைப் போல் நினைத்திடவேண்டும் - அன்பினில்

குரு : பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே.
மக் : ஆமென்.
குரு : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.

மன்னிப்பு வழிபாடு:

குரு : சகோதர சகோதரிகளே திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.
( சிறிது மௌனத்துக்குப் பிறகு )
எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

குரு : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக!
மக் : ஆமென்.




குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

அல்லது
குரு : சகோதரரே,திருப்பலி ஒப்புக் கொடுக்க நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோம்.
(சிறிது மெனத்திற்கு பிறகு)
உள்ளம் நொறுங்கி வருந்துவோரைக் குணமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.
குரு : பாவிகளைத் தேடி மீட்க வந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
மக் : கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
குரு : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து எங்களுக்காக பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
மக் : ஆண்டவரே, இரக்கமாயிரும்.

வானவர் கீதம்:

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக! பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம். உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவராகிய சர்வேசுரா வானுலக அரசரே, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரா.

ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே ஆண்டவராகிய சர்வேசுரா, சர்வேசுரனின் செம்மறியே, பிதாவின் சுதனே, உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும், உலகின் பாவங்களைப் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருளும், பிதாவின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே எங்கள் மேல் இரக்கமாயிரும், ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர். நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்

பரிசுத்த ஆவியோடு, பிதாவாகிய சர்வேசுரனின் மாட்சிமையில் இருப்பவர் நீரே. - ஆமென்.

(பாடல் திருப்பலியில்)


உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக.
உலகினிலே நன் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக.
புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே.
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப் படுத்துகின்றோம் யாம்.
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்.
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே.
ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே.
ஏகமகனாகச் செனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே.
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே.
தந்தையினின்று நித்தியமாகச் செனித்த இறைவன் மகனே நீர்.
உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்.
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே -ஆமென்.

சபை மன்றாட்டு

இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்குமுன் உலகம் கண்டறியாத புதிய பலிலையயும் தம் அன்பின் விருந்தையும் இம்மாபெரும் இராவுணவில் திருச்சபைக்குத் தந்தருளினார். இத்திருவுணவில் பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்ச்சியிலிருந்து நிறைவான அன்பையும் அருள்வாழ்வையும் பெற்றுக்கொள்ளச் செய்தருளும்.

உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

 

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 12:1-8, 11-14

விடுதலைப் பயண லூலிலிருந்து வாசகம்:

1 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்;

2 உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!

3 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

4 ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

5 ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.

6 இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.

7 இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.

8 இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

11 நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா ".

12 ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!

13 இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.

14 இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

இது ஆண்டவரின் அருள் வாக்கு -இறைவா உமக்கு நன்றி.

 

தியானப்பாடல் பல்லவp: சங் 116 12-13, 15-16, 17-18

நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்ததில் பங்குகொள்ளல் அன்றோ!

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்?
மீட்புக்காக நன்றிகூறி கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவருடைய திருப் பெயரைச் சொல்லி கூப்பிடுவேன்.

ஆண்டவர் தம் அடியாரின் மரணம் அவருடைய பார்வையில் மிக மதிப்புக்குரியது
நான் உம் அடியேன் உம் அடியாளின் மகன் என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்துவேன் ஆண்டவருடைய திருப்பெயரை கூவி அழைப்பேன்
ஆண்டவருடைய மக்கள் அனைவரிடை யேயும் அவருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்

 

இரண்டாம் வாசகம் : 1கொரிந் 11:23-26

அப்போஸ்தலரான தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்.

23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,

24 கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.

25 அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.

26 ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

இது ஆண்டவரின் அருள் வாக்கு -இறைவா உமக்கு நன்றி.

 

நற்செய்திக்குமுன் வசனம் யோவான் 13:34

புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.

 

நற்செய்தி வாசகம்: யோவான் 13:1-15

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக - உம்மோடும் இருப்பாராக
தூய யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் - ஆண்டவரே உமக்கு மகிமை

1 பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

2 இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில்,

3 தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,

4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.

5 பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

6 சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.

7 இயேசு மறுமொழியாக, "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்" என்றார்.

8 பேதுரு அவரிடம், "நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்N;டன்" என்றார். இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

9 அப்போது சீமோன் பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.

10 இயேசு அவரிடம், "குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

12 அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது; "நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?

13 நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.

14 ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

15 நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

இது கிறிஸ்துவின் நற்செய்தி - கிறிஸ்துவே உமக்குப் புகழ்

மறையுரை:

பாதம் கழுவுதல்

இத்திருப்பலியில் நினைவுகூரும் மாண்புமிகு மறையுண்மைகளை, அதாவது, நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தியது, ஆண்டவர் தந்த சகோதர அன்புக் கட்டளை ஆகியவற்றை விளக்கி மறையுரை ஆற்றியப்பின், மக்களுக்குப் பயன் அளிக்குமானால், பாதம் கழுவும் சடங்கை நடத்தலாம்.

வசதியான இடத்தில் தயார் செய்யப்பட்ட இருக்கைகளுக்குத் தேர்ந்தெடுத்த ஆண்களைப் பணியாளர் கூட்டிச்செல்வார். குரு (தேவையானால், திருப்பலி மேலுடைய அகற்றிவிட்டு) ஒவ்வொருவரிடமும் சென்று, பணியாளர் துணையோடு அவர்கள் பாதத்தில் தண்ணீர் ஊற்றித் துடைப்பார்.

அப்போது கீழுள்ள பாடல்களில் சில அல்லது வேறு பொருத்தமான பாடல்கள் பாடப் படும்.

as

புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்
உங்களுகு நான் அன்பு செய்ததுபோலவே
நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்
என்றுரைக்கிறார் எம் பெருமான் இயேசு

பல்லவி 1 அரு 13:4,5,15 காண்

ஆண்டவர் பந்திவிட்டெழுந்த பின்னர்

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி,

சீடரின் பாதம் கழுவத் தொடங்கினார்:

இந்த முன்மாதிரியைச் சீடர்க்குத் தந்தார்.

 

பல்லவி 2 அரு 13:6-8

"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

சீமோன் இராயப்பரிடம் அவர் வரவே
இராயப்பர் அவரை நோக்கிச் சொன்னது:
-"ஆண்டவரே, நீரோ என் பாதகங்களைக் கழுவவது?"

அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
"நான் செய்வது இன்னதென்று உனக்கு
இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்."

-"ஆண்டவரே, நீரோ என் பாதங்களைக் கழுவுவது?"
அதற்கு இயேசு: "நான் உன் பாதங்களைக் கழுவாவிடில்
உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

 

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் -2

கிறிஸ்துவின் அன்பு நம்மை எல்லாம் ஒன்றாய் கூட்டி சேர்த்ததுவே
அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்சி கொள்வோமே
ஜீவிய தேவனுக்கு அஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம்
நேரிய உள்ளத்துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்

எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே
மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே
தீய சச்சரவுகள் ஒளிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக
நமது மத்தியில் நம் இறைவன்கிறிஸ்து நாதர் இருந்திடுக

முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய் சேர்ந்து மனம்
மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே
முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும்
அளவில்லாக மாண்புடைய பேரானந்தம் இதுவே யாம்

 

பல்லவி 6 1 கொரி 13:13

உங்களிடம் விசுவாசம், நம்பிக்கை, பேரன்பு

இம்மூன்றும் உறுதியாக நிலைத்திடக்கடவன:

ஆயினும் இவற்றுள்ளே சிறந்தது பேரன்பே.

முன்மொழி: இப்போது விசுவாசம், நம்பிக்கை, பேரன்பு

இம்மூன்றும் உறுதியாக நிலைத்திருக்கின்றன:

இவற்றுள் பேரன்பே மிகச் சிறந்ததாம்.

-உங்களிடம் விசுவாசம்...

 

இச்சடங்கு முடிந்தவுடன் அல்லது அது நடைபெறாவிடில், மறையுரைக்குப்பின் விசுவாசிகளின் மன்றாட்டு நடைபெறும். இத்திருப்பலியில் விசுவாச அறிக்கை சொல்லவதில்லை.


நற்கருணை வழிபாடு

நற்கருணை வழிபாட்டின் தொடக்கத்தில் ஏழை மக்களுக்குப் பயன்படும் காணிக்கைகளைக் கொண்டுவரும் இறைமக்களின் பவனியை ஏற்பாடு செய்யலாம்.

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)

(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)


குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

 

காணிக்கைமீது மன்றாட்டு

பேரிரக்கமுள்ள இறைவா,

இந்த நினைவுப்பலியை நாங்கள் கொண்டாடும்போதெல்லாம் எங்கள் மீட்பு தொடர்ந்து முன்னேறுகிறது.
எனவே நாங்கள் இன்றையத் திருப்பலியை அன்பும் பணிவும் நிறைந்த உள்ளத்துடன் நிறைவேற்றி,
மீட்பின் பயனைப் பெற்று அனுபவிக்க அருள்புரியும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

நற்கருணை மன்றாட்டு
குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.
மக் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
மக் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக
என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.
எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும்.

தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும்,
உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும்.
ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள்.
காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர்.
அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர்.
நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து,
படைப்புகளை நலன்களால் நிறைத்து,
உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர்.

ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று,
இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர்.
உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து,
உம்மை இடையறாது புகழ்கின்றனர்;.
அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும்,
உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா.

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

 

நற்கருணை மன்றாட்டு 1

இரக்கம் மிகுந்த தந்தையே, இதயம் நிறைந்த நன்றியுடன் நாங்கள் இப்புனித காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்துள்ளோம். இவற்றை உமக்கு உகந்த பலிப்பொருளாக நீர் ஏற்று ஆசீர்வதித்தருள, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

உமது தூய கத்தோலிக்கத் திருச்சபைக்காக நாங்கள் இவற்றை ஒப்புக் கொடுக்கின்றோம். அதற்கு உலகமெங்கும் அமைதியும் ஒற்றுமையும் அளித்து அதனைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....... ஆயர்........ க்காகவும், அப்போஸ்தலிக்க விசுவாசத்தைக் கடைபிடித்துப் போதிப்பவர்கள் அனைவருக்காகவும் இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.

இறைவா உம் மக்கள் எல்லாரையும், சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். (பெயர்கள்). இங்கே கூடியிருக்கும் எங்களையும் நினைவு கூர்ந்தருளும், எங்கள் விசுவாசத்தையும் அர்ப்பணத்தையும் நீர் அறிவீர். எங்களுக்காகவும் எம்மவர்க்காகவும் இப்புகழ்ச்சி பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உயிருள்ள மெய்யான என்றும் வாழும் இறைவா, எங்கள் ஈடேற்றத்திற்காகவும், நாங்கள் எதிர்ப்பார்கும் தீங்கற்ற நல்வாழ்வுக்காகவும் எங்கள் வேண்டுதலைச் செலுத்துகிறோம்.

புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாளையும், அவருடைய கணவர் புனித சூசையப்பரையும், உம்முடைய அப்போஸ்தலரும் புனிதருமான இராயப்பர், சின்னப்பர், அந்திரேயா, மற்றப் புனிதர் எல்லாரையும் வணக்கத்துடன் நினைவுகூர்கின்றோம். இவர்களுடைய பேறுபலன்களினாலும் வேண்டுதலினாலு;ம் நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியும்.

ஆகவே, இறைவா, உம் ஊழியர்களாளிய நாங்களும், உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும். வாழ்நாளெல்லாம் எங்களுக்கு உமது அமைதியைத் தந்து, முடிவில்லா அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றி , நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தருளும்.

இறைவா,இந்தக் காணிக்கையை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, ஆவியிலும் உண்மையிலும், உமக்கு உகந்ததாகச் செய்தருளும், இவ்வாறு உம்முடைய அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் திருவுடலாகவும் இரத்தமாகவும் இக்காணிக்கை மாறுவதாக.

அவர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் வணக்கத்துக்குரிய தம் திருக்கைகளில் அப்பத்தை எடுத்து, வான்நோக்கிக் கண்களை உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக் : ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம்.


ஆகவே, இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையும், மாட்சியுடன் விண்ணகம் சென்றதையும் உம் ஊழியர்களாகிய நாங்களும், உம்முடைய புனித மக்களும் நினைவு கூர்கின்றோம். நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வு தரும் புனித அப்பத்தையும், நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையும், தூய, புனித, மாசற்றப் பலியாக மாட்சிமை மிக்க உமக்கு நாங்கள் ஒப்புக் கொடுக்கின்றோம்.

இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும், நீதிமானாகிய உம்முடைய ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும், எங்கள் முதுபெரும் தந்தை ஆபிரகாமின் பலியையும், உம்முடைய உன்னதகுரு மெல்கிசெதக்கு அளித்த காணிக்கைகளையும் நீர் ஏற்றுக் கொண்டது போல், இவற்றைப் புனித பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றருளும்.

எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் இக்காணிக்கைகளை உமது விண்ணகப் பீடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். உம்முடைய மகனின் திருவுடலையும் இரத்தத்தையும் இப்பீடத்திலிருந்து பெறுகின்ற நாங்கள் அனைவரும் எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ளச் செய்தருளும்.

இறைவா விசுவாசத்தின் அடையாளத்தைப் பெற்று இறந்து போன உம் அடியார்களையும், சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். (பெயர்கள்)

இறைவா இவர்களுக்கும், கிறிஸ்துவில் இளைப்பாறும் மற்ற அனைவருக்கும் இன்பமும், ஒளியும் அமைதியும் அளித்தருளும்.

பாவிகளாகிய நாங்களும் உமது பேரிரக்கத்தை நம்பியிருக்கின்றோம். உம்முடைய புனித அப்போஸ்தலர், மறைசாட்சிகள், அருளப்பர், ஸ்தேபான், மத்தியாஸ், பர்னபா, மற்றப் புனிதர் அனைவருடனும் உம் அடியாராகிய எங்களுக்கும் பங்களித்து, அவர்களோடு நாங்கள் தோழமை கொள்ள அருள்புரியும். எங்கள் தகுதியின்மைப் பாராமல், எங்களை மன்னித்து, புனிதரின் அவையில் இடமளிக்குமாறு, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

இவர் வழியாகவே, இறைவா, நீர் எப்போதும் இவற்றையெல்லாம் நல்லவையாக்கி, புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசீர்வதித்து எங்களுக்கு அருளுகின்றீர்.


இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

மக் : ஆமென்.

 

திருவிருந்துச் சடங்கு :


குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மக் : ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

(குரு அப்பத்தைப் பிட்டு அதில் ஒரு பகுதியை கிண்ணத்தில போடும் போது)நம் ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் திருஉடலும் இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு முடிவில்லா வாழ்வளிப்பதாக.)

 

மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)


உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.

(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

குரு : கிறிஸ்துவின் திருவுடல்
நன்மை வாங்குபவர் : ஆமென்.

திருவிருந்து பாடல்:

 

நன்றி மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா,

உம் திருமகனின் இறுதி இராவுணவை நினைவுகூர்ந்து கொண்டாடிய நாங்கள் சிறப்பாகப் பணிக்குருத்துவத்தின் மேன்மையையும், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரக்கத்தினாலான புதிய உடன்படிக்கையின் மாண்பினையும். பிறர் அன்புக் கட்டளையின் முக்கியத்துவத்தையும் ஆழ்ந்து உணர்ந்தவர்களாய் உமக்கு நன்றி கூறுகின்றோம்.எங்கள் மீட்புக்காகத் தம்மையே கையளித்த உம் திருமகனைப்போல. நாங்களும் எங்கள் சகோதரர் சகோதரிகளின் நல்வாழ்வுக்காக எங்களையே தொடர்ந்து கையளித்திட அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

நற்கருணை இடமாற்றப் பவனி

நன்றி மன்றாட்டைச் சொன்னபின் குரு பீடத்திற்குமுன் நின்று தூபக்கலத்தில் சாம்பிராணியிட்டு. முழந்தாட்பணிந்து, புனிதமிகு நற்கருணைக்கு மும்முறை தூபம் காட்டுவார். பின் தோள்துகில் அணிந்து நற்கருணைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துத் தோள்துகிலால்பொதிந்து கொள்வார்.

பவனி நற்கருணை வைக்கப்படவேண்டிய இடத்திற்குக் கோயில் வழியாகச் செல்கிறது முதலில் சிலுவை தாங்குபவர். பின் தூபப் பணியாளர். நற்கருணைக்கு இருபுறமும் எரியும் திரி பிடிப்போர். மேற்சொன்ன இடம் தக்கவாறு அணிசெய்யப்பட்டிருக்கும். பவனியின்போது "பாடுவாய் என் நாவே" என்னும் பாடல் (இறுதி இரண்டு அடிகள் நீங்கலாகப்) பாடப்படும் அல்லது வேறு பொருத்தமான நற்கருணைப் பாடலைப் பாடலாம்.

பாடுவாய் என் நாவே மாண்புமிக்க உடலின் இரகசியத்தை
பாரின் அரசர் சீருயர்ந்த வயிற்றுதித்த கனியவர் தம்
புதலத்தை மீட்கச் சிந்தும் விலைமதிப்பில்லா துயர்ந்த
தேவ இரத்த இரகசியத்ததை எந்தன் நாவே பாடுவாயே

அவர் நமக்காய் அளிக்கப்படவே மாசில்லாத கன்னி நின்று
நமக்கென்றே பிறக்கலானார் அவனி மீதில் அவர் வதிந்து
அரிய தேவ வார்த்தையான வித்து அதனை விதைத்த பின்னர்
உலக வாழ்வின் நாளை மிகவே வியக்கும் முறையில் முடிக்கலானார்

இருதி உணவை அருந்த இரவில் சகோதரர்கள் யாவரோடும்
அவர் அமர்ந்து நியமனத்தின் உணவை உண்டு நியமனங்கள்
அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் பன்னிரண்டு சீடருக்குத்
தம்மைத்தாமே திவ்விய உணவாய்த் தம் கையாலே அருளினாரே

ஊன் உருவான வார்த்தையானவர் வார்த்தையாலே உண்மை அப்பம்
அதனைச் சரீரம் ஆக்கினாரே இரசமும் கிறிஸ்து இரத்தமாகும்
மாற்றம் இது நம் மனித அறிவை முற்றிலும் கடந்த தெனினும்
நேர்மையுள்ளம் உறுதிகோள்ள மெய் விசுவாசம் ஒன்றே போதும்

 

அவ்விடத்தை அடைந்ததும் குரு நற்கருணைப் பாத்திரத்தை வைப்பார்: சாம்பிரா ணியிட்டபின் முழந்தாளிட்டுத் தூபம் காட்டுவார். அப்போது "மாண்புயர் இவ்வருட்சாதனத்தை" என்னும் அடி பாடப்படும். பின் பேழை பூட்டப்படும்.

சிறிது நேரம் மௌனமாக மன்றாடியபின் குருவும் பணியாளரும் தாழ்ந்து பணிந்து வணங்கிவிட்டுத் திருப்பண்ட அறைக்குச் செல்வர்.

பின் பீடத்தின் அணிகள் எல்லாம் நீக்கப்படும்: கூடுமானால் சிலுவைகள் எல்லாம் கோயி லிலிருந்து அகற்றப்படும். அகற்ற முடியாத சிலுவைகள் திரையிடப்படும்.

மாலைத் திருப்பலியில் பங்கெடுத்தவர்கள் திருப்புகழ்மாலையின் மாலைப்புகழ் சொல்வது இல்லை.

இடத்தின் வழக்கத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நற்கருணை ஆராதனை இரவிலும் நடைபெற இறைமக்களுக்கு அறிவுரை கூறவேண்டும்; ஆனால் நள்ளிரவுக்குப் பின் ஆராதனை வெளியாடம்பரமின்றி நடைபெறவேண்டும்.