குருத்து ஞாயிறு புனித வியாழன் புனித வெள்ளி பாஸ்கா திருவிழிப்பு

படல்கள் மட்டும்

 

புனித வாரம்
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

as

1. கிறிஸ்து பெருமான் தம் பாஸ்கா மறைபொருளை நிறைவேற்ற எருசலேமுக்கு வருகை தந்தைத் திருச்சபை இன்று நினைவுகூருகின்றது: எனவே, எல்லாத் திருப்பலிகளிலும் இந்த நினைவு கொண்டாடப்படும். முக்கியமாக திருப்பலிக்குமுன் பவனி அல்லது சிறப்பான வருகைச் சடங்கினாலும், மற்றத் திருப்பலிகளுக்குமுன் சாதாரான வருகைச் சடங்கினாலும், இது கொண்டாடப்படும், மக்கள் பெருமளவில் வரும் மற்றத் திருப்பலிகளுக்கு முன்னும் சிறப்பான வருகைச் சடங்கை நடத்தலாம். ஆனால் பவனியை மறுமுறை நிகழ்த்தலாகாது.

ஆண்டவர் எருசலேமுக்கு வருவதை நினைவுகூர்தல்

முதல் வகை: பவனி

தக்க நேரத்தில் மக்கள் கோயிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது மற்றொரு தகுந்த இடத்தில் கூடுவார்கள். அவர்கள் கையில் குருத்தோலை பிடித்திருப்பார்கள்.
சிவப்புநிறத் திருப்பலி உடைகளை அணிந்த குரு பணியாளருடன் அங்கு வருவார். குரு (காப்பா) மேற்போர்வையை அணியலாம். புவனி முடிந்ததும் இதை அகற்றிவிடுவார்.
குரு வருகையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும்.

பல்லவி மத் 21: 9
");

தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர்

ஆசி நிரம்பப் பெற்றவரே! இஸ்ராயேலின் பேரரசே, உன்னதங்களிலே ஓசான்னா!

பின்னர் குரு வழக்கம்போல மக்களை வாழ்த்துகிறார். சிற்றுரை ஆற்றி, இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் நன்கு அறிந்து அதில் ஈடுபட்டுப் பங்கெடுக்கத் தூண்டுகிறார். இதற்குக் கீழுள்ள உரையை அல்லது அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே! தவக்காலத் தொடக்கத்திலிருந்தே தவமுயற்சிகளாலும் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைப் பண்படுத்திய பின் நம் ஆண்டவரின் பாஸ்கா மறைநிகழ்ச்சியின் தொடக்கத்தைத் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட நாம் இதோ கூடியிருக்கிறோம். பாஸ்கா மறைநிகழ்ச்சியின் ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்த்தெழுதலையும் குறிக்கின்றது. பாஸ்காவை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்கு எழுந்தருளினார். எனவே, மீட்பளிக்கும் இந்த வருகையை நாம் முழு விசுவாசத்துடனும் பக்தியுடனும் நினைவிற்கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். இவ்வாறு அவருடைய அருளினால் சிலுவையில் பங்குகொள்ளும் நாம் உயிர்ப்பிலும் முடிவில்லா வாழ்விலும் பங்குபெறுவோமாக.

சிற்றுரைக்குப்பின் குரு கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைக் கைகளைக் குவித்துச் சொலகிறார்:

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

இந்தக் குருத்தோலைகளை உமது ரு ஆசியால் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக அவரோடு புதிய எருசலேமுக்கு வந்துசேர்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

எல். ஆமென்.

அல்லது

செபிப்போமாக (மன்றாடுவோமாக)

இரக்கமுள்ள இறைவா,

உம்முடைய மக்களாகிய எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தருளும். எங்கள் வேண்டுதலைக் கனிவுடன் கேட்டருளும்.
வெற்றி வீரராய்ப் பவனிவரும் கிறிஸ்துவின் திருமுன் நாங்கள் குருத்தோலைகளை ஏந்தி வருகின்றோம்.
கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ்ந்து நாங்கள் ஒவ்வொருவரும் நற்செயல்களால் அவரை மகிமைப்படுத்த அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென்.

குரு மௌனமாக குருத்தோலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.
ஆண்டவரிக் வருகையைப்பற்றி நான்கு நற்செய்தியாளர் எழுதியவற்றிலிருந்து நற்செய்தி வாசிக்கப்படும். அதை வழக்கம்போலத் திருத்தொண்டரோ, அவர் இல்லையெனில் குருவோவாசிப்பார்.

(முதல் ஆண்டு: 2008, 2011, 2014)

தூய மத்தேயு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 21:1-11

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், "இவை ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்."மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு.

இரண்டாம் ஆண்டு: (2009, 2012, 2015)

தூய மாற்கு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 11:1-10

இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு.


மூன்றாம் ஆண்டு: (2010,2013,2016)

தூய லூக்கா எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 19:29-40

ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்; பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்; "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்குப்பின் சுருக்கமாக மறையுரை ஆற்றலாம். பவனி தொடங்குமுன் குரு அல்லது பணியாளர் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அழைப்பு விடுப்பார்:

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப் பின்பற்றி, நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம்.

திருப்பலி நடக்கவிருக்கும் கோயிலுக்குப் பவனி புறப்படுகிறது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, எரியும் திரிகளைத் தாங்கும் இருபணியாளர்களிடையே அலங்கரிக்கப்பட்ட சிலுவை பிடித்திருப்பவரும், அவர்களுக்குப்பின் குருவும் மற்றப் பணியாளரும் செல்வர். இறுதியாக இறைமக்;கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு அணிவகுத்துச் செல்வர்.

பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுவர்.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம்
");
ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு
இரட்சகரே எழுந்தருளும்.

ஓசானா தாவீதின் புதல்வா - ஓசானா ஓசானா ஓசானா

மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசானா....

அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் தாபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் - ஓசானா....

தாவீது அரசரின் புத்திரரே - ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசானா....

கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை
சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் - ஓசானா....

புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே - ஓசானா....

குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீரே - ஓசானா....

மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே - ஓசானா....

யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம்
யூதர் ராஜனென்று முடிபெற்றீர்
யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர் - ஓசானா....

பாவிகளைகத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே - ஓசானா....

கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே - ஓசானா....

உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே - ஓசானா....

பல்லவி 1:
");
எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகளைப் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர்கொண்டனரே.

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன, பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே,
ஏனென்றால், கடல்களின்மீது பூவுலகை நிலைநிறுத்தியவர் அவரே, ஆறுகளின்மீது அதை நிலைநாட்டியவர் அவரே.

ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன். பயனற்றதில் தன் மனத்தைச் செலுத்தாதவன்,தன் அயலானுக்கு எதிராகவஞ்சகமாய் ஆணையிடாதவன்.

இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,இவனே தன்னைக் காக்கும் ஆண்;டவரிடம் மீ;ட்பு அடைவான்.
இறைவனைத் தேடும் மக்களின் இதுவே, யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள், பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்.போரில் வல்லவரான கொண்ட ஆண்டவரே இவர்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
சேனைகளின் ஆண்டவரே இவர். மாட்சிமிகு மன்னர் இவரே."

 

பல்லவி 2

எபிரேயர்களின் சிறுவர் குழாம் வழியில் ஆடைகள் விரித்தவராய்



"தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே" என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.

(தேவைக்கேற்ப இப்பல்லவியை 46ஆம் சங்கீதத்தின் அடிகளுக்கு இடையே பல்லவியாகப் பாடலாம்.)

சங்கீதம் 46
மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் அண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர், உலகுக்கெல்லாம் பேரரசர்.

மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார். நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்.தாம் அன்புசெய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.

மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார். எக்காளம் முழங்க, ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
பாடுங்கள் நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள் பாடுங்கள் நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.

ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்.அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
நாடுகள் அனைத்தின்மீதும் இறைவன் ஆட்சிபுரிகின்றார்.தம் புனித அரியணைமீது இறைவன் வீற்றிருக்கின்றார்.

ஆபிரகாமின் இறைமக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்
ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவகுக்குரியவர்கள். அவரே மிக உன்னதமானவர்.

கிறிஸ்து அரசருக்குப் பாடல்


கிறிஸ்து அரசே,இரட்ஷகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர், தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர்,
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.

எல். கிறிஸ்து அரசே,....

பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.

எல். கிறிஸ்து அரசே,....

பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்;
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு யாம் இதோ வருகின்றோம்.

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே,
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே.

எல். கிறிஸ்து அரசே.....

பவனி கொயிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடல் அல்லது இக்கருத்துள்ள வேறு பாடல் பாடப்படும்.

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில், எபிரேயச் சிறுவர் குழாம்
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய். குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெலாம்
அவரை எதிர்கொண்டழைத்தனரே. குருத்து மடல்களை ஏந்திநின்று
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

குரு பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்துவார்; வசதிபோலத் தூபம் காட்டலாம். பின்னர் தம் இருக்கைக்குச் சென்று ("காப்பா" மேல்போர்வையை அகற்றித் திருப்பலி உடை அணிந்து), திருப்பலியின் தொடக்கச் சடங்கை விட்டுவிட்டு, பவனியின் முடிவுரையாகத் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். வழக்கம்போலத் திருப்பலி தொடர்;ந்து நடைபெறும்.

2ஆம் வகை: சிறப்பு வருகை

கோயிலுக்கு வெளியே பவனி நடத்த முடியாதெனில், அந்நாளின் முக்கியமான திருப்பலிக்கு முன் கோயிலுக்குள்ளேயே சிறந்த முறையில் ஆடம்பர வருகை நடத்திக் கொண்டாடலாம்.

இறைமக்கள் கோயில் வாசல்முன் அல்லது கோயிலுக்குள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கூடி நிற்பர் அவர்களுள் பெரும்பான்மையோர் பார்க்கக்;கூடிய இடத்திற்குக் குருவும் பணியாளர்களும் இறைமக்களின் பிரதிநிதிகள் சிலரும் வருவர். இந்த இடம் பீடமுற்றத்திற்கு வெளியே இருக்கவேண்டும்.

குரு அங்கு வருகையில், "தாவிதின் மகனுக்கு ஓசான்னா" என்னும் பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும், பின் குருத்தோலைக்களை மந்திரித்தலும் ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்தைப்பற்றிய நற்செய்தி அறிவிப்பும் (எண 5-7இல் உள்ளதுபோல) நடைபெறும். நற்செய்திக்குப்பின் குருவும் பணியாளரும் பிரதிநிதிகளும் ஆடம்பரமாகக் கோயிலின் வழியாகப் பீடத்திற்குப் பவனியாகச் செல்வர். அப்பொழுது "ஆண்டவர் புனித நகரத்தில்" என்னும் பதிலுரைப் பாடல் (எண் 10) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும்.

பீடத்தை அடைந்;ததும், குரு வணக்கம் செலுத்தி, தம் இருக்கைக்குச் சென்று திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். திருப்பலி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்.

3ஆம் வகை: சாதாரண வருகை

சிறப்பு வருகை நடைபெறாத இந்நாள் திருப்பலிகளில் எல்லாம் சாதாரன வருகை நடத்தி, ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்ததின் நினைவு புதுப்பிக்கப்படும்.

குரு பீடத்திற்கு வரும்போது வருகைப் பல்லவி சங்கீதத்துடன் (எண் 18) பாடப்படும் அல்லது அதே கருத்துள்ள வேறு பாடலைப் பாடலாம். குரு பீடத்தை அடைந்து, வணங்கி, தம் இருக்கைக்குச் சென்று, இறைமக்களை வாழ்த்துவார். திருப்பலி வழக்கம்போலத் தொடர்ந்து நடைபெறும்.

திருக்கூட்டம் இல்லாத திருப்பலியிலும், வருகைப் பாடல் பாட முடியாதபோதும் குரு பீடத்தை அடைந்ததும், வணங்கி, இறைமக்களை வாழ்த்துவார். பின் வருகைப் பல்லவியை வாசித்து வழக்கம்போலத் திருப்பலியைத் தொடர்வார்.

வருகைப் பல்லவி :
பாஸ்கா விழாவுக்கு ஆறுநாள் இருக்கையில் ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில் சிறுவர் அவரை எதிர்கொண்டனரே:
கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள்மகிழ்வுடன்,‘உன்னதங்களில் ஓசான்னா,இரக்கப் பெருக்குடன் வருகின்றீரே, ஆசி பெற்றவர் நீரே’ என்று
பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே.

வாயில்களே, நிலையான உயர்த்துங்கள், சங் 23:9-10
நித்திய கதவுகளே, மேலெழுங்கள். மகிமையின் மன்னர் உட்புகுவார். மகிமையின் மன்னர் இவர் யாரோ?
வலிமைமிகு தளங்களின் ஆண்டவரேமகிமையின் மன்னர் அவர்தாமே. உன்னதங்களிலே ஓசான்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்றீர்.ஆசி பெற்றவர் நீர்தாமே.

பவனியோ சிறப்பு வருகையோ நடத்தமுடியாத இடங்களில், கிறிஸ்து எருசலேமுக்கு வந்ததையும் பாடுபட்டதையும்பற்றி இறைவாக்கு வழிபாடு நடத்துவது பயனளிக்கும். இதைச் சனிக்கிழமை மாலையில் அல்லது ஞாயிறன்று வசதியான நேரத்தில் நடத்தலாம்.

திருப்பலி

 

பவனி அல்லது சிறப்பு வருகைக்குப்பின் குரு சபை மன்றாட்டைச் சொல்லி திருப்பலியைத் தொடர்வார்.

சபை மன்றாட்டு
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருவுளத்திற்குப் பணிந்து எங்கள் மீட்பர் மனிதராகி, சிலுவைச் சாவுமட்டும் தம்மையே தாழ்த்தினார். நாங்கள் அவர்தம் பாடுகளின் பாதையைப் ப்pன்பற்றி அவரது உயிர்ப்பின் மகிமையிலும் பங்குபெறத் தயவாய் அருள்வீராக.

உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

(முதல் வாசகம்: 1,2,3 ஆண்டுகளில்: எசாயா 50:4-7)

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:

4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.

6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

 

தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24

பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர்

என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

ஏனனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன
பொலலாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப பார்கின்றார்கள் பார்த்து அக்களிக்கின்றார்கள்

என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப்போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்

நானோ உம் நாமத்தை உம் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்
சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்
ஆண்டவருக்கஞ்சுவோரே அவரைப் புகழுங்கள்
யாக்கோபின் சந்ததியே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள்
இஸ்ராயேல் மக்களே நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்

இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6-11

அப்போஸ்தலரான தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்:

6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

 

நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

 

ஆண்டவருடைய திருப்பாடுகளில் வரலாறு. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லையெனில், குரு அதை வாசிப்பார். வாசகர்களும் அதை வாங்கிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் குருவே வாசிக்க வேண்டும்.

திருப்பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன் திருத்தொண்டர்கள் மட்டும் நற்செய்திக்குமுன் நடப்பது போல குருவிடம் ஆசி பெறுவார்கள்.

முதல் ஆண்டு: (2008, 2011, 2014, 2017, 2020) மத்தேயு 26:14 - 27:66
இரண்டாம் ஆண்டு: (2009, 2012, 2015, 2018, 2021)மாற்கு 14:1 - 15:47
மூன்றாம் ஆண்டு: (2010, 2013, 2016, 2019, 2022) லூக்கா 22:14 - 23:56

முன்று ஆண்டு சுற்றுகளை கொண்ட ஞாயிறு வாசங்களில்
இயேசுவின் திருப்பாடுகளுக்கான வாசகங்களை இங்கே காண்கas

 

திருப்பாடுகளின் வரலாற்றுக்குப்பின் வசதிபோல சுருக்கமாக மறையுரையாற்றலாம். விசுவாச அறிக்கை சொல்லவும்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.

விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :

வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார்
தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார்.
பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார்.
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார்.
பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார்.
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்.
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம்
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.

 

விசுவாசிகளின் மன்றாட்டு:

 

ஆமென்.


நற்கருணை வழிபாடு

 

காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்- காணிக்கைப் பாடல்

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.
மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)

(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கைமிது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உம் திருமகனின் பாடுகளையும் இறப்பையும் கொண்டாடும் நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும். எங்கள் செயல்களால் உமது மன்னிப்பைப் பெற இயலாது எனினும். ஒப்பற்ற இப்பலியின் ஆற்றலால் உமது மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து வாழ்ந்திடச் செய்தருளும்.

எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

தொடக்கவுரை: வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் சாவு

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல். உம்மோடும் இருப்பாராக

குரு: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.

எல். ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

குரு: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

எல். அது தகுதியும் நீதியுமானதே.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும், எங்கள் கடமையும் மீட்புக்குரிய செயலுமாகும்

கிறிஸ்து மாசற்றவராயினும் பாவிகளுக்காகப் பாடுபடவும், பொல்லாதவர்க்காக அநீத முறையில் தண்டனை பெறவும் திருவுளமானீர்;
அவரது சாவு எங்கள் பாவங்களைப் போக்கியது, அவரது உயிர்த்தெழுதலோ எங்களை உமக்கு உகந்தவராக்கியது.

ஆகவே, நாங்கள் வானகத் தூதர் அனைவரோடும் சேர்ந்து உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களிப்புடன் குரல் எழுப்பிச் சொல்வதாவது:


பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா.

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர்
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன.
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா!

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ;
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :


அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ;
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக் : ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.


இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

மக் : ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :


குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
மக் : ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)



உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எம் மேல் இரக்கம் வையும்

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே!
எமக்கு அமைதி அருளும்.

(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)


திருவிருந்துப் பல்லவி மத் 26:42

என் தந்தையே, நான் குடித்தால் ஒழிய இத்துன்பக்கலம் அகல முடியாதெனில், உமது விருப்பப்படியே ஆகட்டும்.

திருவிருந்து பாடல்:

நன்றி மன்றாட்டு

ஜெபிப்போமாக:

அன்புத் தந்தையே,

இத்திருவிருந்தில் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நாங்கள் விசுவசிப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்னும் நம்பிக்கையை உம் திருமகனின் இறப்பினால் எங்களில் உறுதிப்படுத்தினீர்.
அவரது உயிர்த்தெழுதலால் எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோளை நாங்கள் கண்டடையச் செய்தருளும்.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று.
மக் : இறைவா உமக்கு நன்றி.

(குரு பீட வணக்கம் செய்து பரிசாரகருடன் திரும்பிச் செல்கிறார்.
நாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய இல்லம் திரும்புவோம்.)