முதல் வாசகம்

திருத்தூதர் பணியிலிருந்து முதலாம் வாசகம்: 10:25-26,34-35,44-48

அந்நாள்களில் கொர்னேலியு பேதுருவை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.பேதுரு, ;எழுந்திடும்: நானும் ஒரு மனிதன்தான் ; என்று கூறி அவரை எழுப்பினார். அப்போது பேதரு பேசத் தொடங்கி, ;கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்: ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, ;நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்? ; என்று கூறி, இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 98:1, 2-3, 3-4

பல்லவி: பிற இனத்தார்முன் ஆண்டவர் தம் நீதியை வெளிப்படுத்தினார்!

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்.
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3 உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4 உலகெங்கும் வாழ்வோரே! ஆனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி

 

இரண்டாம் வாசகம்
யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிலிருந்து இரண்டாம் வாசகம்: 4:7-10

அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை: ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

யோவான் 15:9-17

பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: (யோவான் 15:9-17)

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:"என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். ;நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்: ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 10: 25 – 26, 34 – 35, 44 – 48
இறைவன் அனைவருக்கும் தந்தை

கடவுளைப் பற்றிய தன்னுடைய புரிதலில் பேதுரு அடுத்த கட்டத்தை அடைகிறார். கடவுள் அனுபவம் என்பது ஒரேநாளில் நாம் பெறுவது அல்ல. சிறிது சிறிதாக நாம் அனுபவிக்கிறோம். அது முழுமை அடைகிற நிலையை, ஞானத்தின் நிறைவு என்கிறோம். யூதர்கள் கொண்டிருந்த அதே மனநிலையைத்தான், இயேசுவோடு மூன்றாண்டுகள் உண்டு, உறங்கிய பவுலும் கொண்டிருந்தார். இயேசு யூதர்களுக்கு மட்மே இறைவனால் அனுப்பப்பட்டிருந்தார், என்கிற யூத மனநிலை பேதுருவுக்கும் இருந்தது.

அத்தகைய மனநிலையை உடைத்து, இறைவன் எல்லாருக்குமானவர் என்கிற பரந்துபட்ட இறையனுபவத்தை கடவுள் அவருக்கு உணர்த்துகிறபோது, அதை அவர் ஏற்றுக்கொள்கிறார். கொர்னேலியஸ் என்கிற யூதரல்லாதவரை அவர் ஏற்றுக்கொள்கிறார். குறிப்பிட்ட இனத்தில் பிறக்கிறதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகிவிட முடியாது. மாறாக, “எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்” என்பதை அவர் புரிந்து கொள்கிறார்

மதத்தின் பெயரால் இன்றைக்கு பல வன்முறைகள் கட்டவிழ்த்துப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யார் பெரியவர்? என்று, தங்களை முன்னிறுத்துவதற்கான, கேவலமான காரியங்களில் பலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கடவுளுக்கு விரோதமானவர்கள். கடவுளின் தண்டனைக்காக காத்திருக்கிறவர்கள். நிச்சயம் கடவுளின் பார்வையில் இவர்கள் பெறுகிற தண்டனை, கற்பனை கூட செய்து கொள்ள முடியாததாகத்தான் இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

நம்பிக்கையுள்ள செபம்

கடவுள் நம் அனைவரையும் அவருடைய வாரிசுகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தந்தையின் பெயரால் நாம் கேட்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற சிறப்பு சலுகையை நமக்குத் தந்திருக்கிறார்.  செபத்தைப்பற்றிய ஆழமான செய்தி இங்கே நமக்குத்தரப்படுகிறது. செபம் என்பது நம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும். யாக்கோபு 5: 15 ”நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்”. நம்பிக்கையிழந்த செபம் வலுவுள்ளதாக இருக்க முடியாது. வலிமையோடு நாம் செபிக்க வேண்டுமென்றால், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நாம் செபிக்க வேண்டும்.

செபிக்கிறபோது இயேசுவின் பெயரால் செபிக்க வேண்டும். இயேசுவின் பெயரால் செபித்தல் என்பது, இயேசு விரும்பாததை நாம் செபிக்கக்கூடாது என்று அர்த்தம் கொள்ளலாம். விலக்கப்பட வேண்டியதற்காக, தவிர்க்கப்பட வேண்டியதற்காக நாம் செபிக்கக்கூடாது. நமது சுய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக செபிக்கக்கூடாது. நமது சுயவிருப்பம் மற்றவர்களுக்குத்தீங்கிழைத்தால் அது செபமாக இருக்க முடியாது. அந்த செபம் ஏற்கப்பட மாட்டாது. அதனால் தான் எல்லா செபத்தின் முடிவிலும், தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம். அதுதான் உண்மையான, கேட்கப்படக்கூடிய செபமாக இருக்க முடியும்.

இயேசு நம்மையெல்லாம் அவருடைய சொந்த பிள்ளைகளாக ஏற்றிருக்கிறார். நம்மையெல்லாம் கண்ணின் மணி போல பாதுகாத்து வருகிறார். அவருடைய திருவுளத்தை நாடக்கூடிய மக்களாக நாம் வாழ ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

திப 10: 25-26,34-35, 44-48
யோவா 15: 9-17
“அன்பில் நிலைத்திருங்கள்”

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறாகிய இன்று உயிர்ப்புக் காலத்தின் மையப் பொருள்களில் ஒன்றான “அன்பில் நிலைத்திருங்கள்”“ என்னும் செய்தியைத் தருகிறது தாய்த் திருச்சபை.

உயிர்ப்பின் சாட்சிகளாம் தொடக்க கால சீடர்கள் அன்பில் நிலைத்திருப்பதைப் பார்த்து, யூதர்களும், புற இனத்தாரும் வியந்தனர். அவர்களின் அன்பு செய்தலைக் கொண்டே அவர்கள் கிறித்தவர்கள் என அறிந்துகொண்டனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் “ என் அன்பில் நிலைத்திருங்கள்”“ என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம். ‘அன்பில் நிலைத்திருத்தல்’‘ என்றால் என்ன? என்னும் விளக்கத்தையும் இயேசு தருகிறார். “நான் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்”“ என்கிறார் ஆண்டவர்.

ஆம், அன்பில் நிலைத்திருப்பதற்கு இயேசுவே நமக்கு மாதிரி. அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்ததுபோல, நாமும் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போமா? வேறு வகையில் சொல்வதானால், இறைவார்த்தையின்படி வாழ்வது இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பதாகும். நாள்தோறும் நாம் கேட்கும் இறைமொழியை நம் வாழ்வில் கடைப்பிடித்து, இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கும் வரம் வேண்டுவோம்.

மன்றாடுவோம்: தந்தையின் அன்பில் நிலைத்திருக்கும் இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

#8220;நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்னும் இந்தப் பிரபலமான இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம். நமது கிறித்தவ வாழ்வும், நமது பணியும், நமக்கு இறைவன் தந்திருக்கிற தனிப்பட்ட அழைப்பும்ரூhநடடip; அனைத்துமே நமது சொந்த முயற்சிகள் அல்ல. அனைத்தும் இறைவனின் கொடை. இறைவனே நம்மைத் தேர்ந்துகொண்டதால், நமக்குக் கிடைத்தவை. நமது தகுதியின்மையைப் பாராமல், அவரது இரக்கத்தையே கண்ணோக்கியதால், நாம் பெற்றுக்கொண்டவை. எனவே, இறைவனுக்கு நன்றியுள்ளவர்களாய் வாழக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்துடன், எதற்காக இறைவன் நம்மை அழைத்திருக்கிறார் என்பதையும் நாம் சிந்திக்க இன்றைய வாசகம் அழைக்கிறது. ‘நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்’. ஆம், இறைவன் நம்மைத் தேர்ந்துகொண்டதன் நோக்கமே நாம் கனி தரவேண்டும். நாம் பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். இந்த உண்மையை மறவாமல், நேர்மையோடு, பிறருக்குப் பயன்தரும் வகையில் நாம் உழைப்போமாக.

மன்றாடுவோம்: தாயின் வயிற்றிலேயே என்னைப் பெயர் சொல்லி அழைத்த இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் தந்த அழைத்தலுக்காகப் போற்றுகிறேன். இந்த அழைத்தலுக்கேற்ற வகையில் வாழ அருள்தாரும். மிகுந்த கனி தரும் மரமாக என்னை மாற்றும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.;

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு, 'இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன்...
உங்களை நான் நண்பர்கள் என்றேன்' என்றார்'' (யோவான் 15:15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு கலிலேயாவில் இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது பலரைத் தம் சீடராகச் சேர்த்துக்கொண்டார். அவரே விரும்பி தம் சீடரை அழைத்தார். அவர்கள் தம் பணியைத் தொடர வேண்டும் எனவும் இயேசு பணித்தார். எனவே, ஒருவிதத்தில் இயேசுவின் சீடர்கள் எல்லாரும் பணியாளர்களே. ஆனால் இயேசு தம் சீடர்களைப் பணியாளர் என அழைக்காமல் ''நண்பர்கள்'' என அழைக்கிறார். இதில் ஆழ்ந்த பொருள் அடங்கியிருக்கிறது. அதாவது, இயேசுவை அவருடைய சீடர்கள் ஒரு சிறந்த ஆசிரியராகப் பார்த்தார்கள்; ஓர் இறைவாக்கினராகக் கருதினார்கள்; அவருடைய தலைமையை ஏற்றுக்கொண்டார்கள். அக்காலத்தில் யூத சமயத்தில் வழக்கிலிருந்தவாறே இயேசுவைப் பற்றிச் சீடர்கள் சிந்தித்தார்கள். ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையைப் படிப்படியாக மாற்றினார். அவர்கள் இயேசுவை மெசியாவாகப் பார்த்தபோது இயேசு அவர்களுக்குத் தாம் ஒரு துன்புறும் மெசியாவாக வந்ததாக விளக்கினார். இவ்வுலக அதிகாரத்தோடும் ஆட்சித் தோரணையோடும் அவர் வரவில்லை. மாறாக, அவருடைய அதிகாரம் பணிசெய்வதில் அடங்கியது என இயேசு எடுத்துரைத்தார்.

-- இவ்வாறு தம்மையே பணியாளராகக் கண்ட இயேசு தம் சீடர்களைத் தம் ''நண்பர்கள்'' என அழைத்தது ஏன்? இயேசுவுக்கும் அவர்தம் சீடர்களுக்கும் இடையே நிலவுகின்ற உறவு குரு-சீடன் என்னும் உறவைவிட ஆழமானது. அந்த உறவு அன்பின் அடிப்படையில் உருவாகும் ஒன்று. நண்பர்களுக்கிடையே நெருக்கமான உறவு நிலவும். ஒருவர் மற்றவருடைய சிந்தனைகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்வர்; இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்பர். தம்மிடம் இருப்பதை மகிழ்வோடு பகிர்ந்துகொள்வர். இந்த உறவைத்தான் இயேசு தம் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். சீடர்கள் இயேசுவின் அன்பை அருகிலிருந்து துய்த்து உணர முடிந்தது. அவர்கள் எப்போதுமே இயேசுவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவருடைய அன்பு ஒருநாளுமே குறைபடவில்லை. மன்னித்து ஏற்கும் பண்பும் நட்பின் அடையாளம்தானே. இயேசு தம் சீடர்கள் தவறியபோதெல்லாம் அவர்களை மீண்டும் அரவணைத்திட முன்வந்தார். ஆக, நமக்கும் இயேசு உண்மையான அன்பராக, நண்பராக இருக்கவே விரும்புகிறார். நாம் அவருடைய நட்பை ஒரு கொடையாக ஏற்றிட வேண்டும். அவருடைய அன்பைப் பெற நாம் தகுதியவற்றவர்களாக இருந்தாலும் அந்த அன்பு நம்மைத் தேடி வந்துகொண்டே இருக்கும். தேடி வரும் கடவுளை நாம் நாடிச் செல்லும்போது அங்கே நட்பும் அன்பும் உருவாகும். நம் அன்புக் கடவுளின் பாசக் கயிற்றினால் நாம் பிணைக்கப்படுவோம். அவருடைய பற்றினை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்வோம். இயேசுவின் நட்பைத் துய்க்கின்ற நாம் அந்த நட்புறவைப் பிறரோடும் பகிர்ந்திட முன்வருவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்பில் நாங்கள் நிலைத்திருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

சிறந்த அன்பு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றைய உலகில் உறவின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது நட்பு. ஒரு நல்ல நண்பன் நூறு உறவிருக்குச் சமம். நண்பர்கள், தோழர்கள் இவர்கள்தான் ஒவ்வொருடைய வாழ்க்கையையும் செதுக்கும் சிற்பிகள். ரேடியோ நிகழ்ச்சியில் ஒருவன்: காதல், நட்பு விளக்கம் தருக. மற்றவன்: காதல் ளை pழளைழn.நட்பு ளை அநனiஉiநெ. அதேவேளையில் உங்கள் வாழ்க்கையை உடைத்து உருக்குலைப்பதும் அவர்களே. கவிஞன் ஒருவன் இவ்வாறு செபிக்கிறான்: "இறiவா! என் பகைவனை நான் பார்த்துக்கொள்கிறேன்.நண்பனிடமிருந்து என்னை நீ காப்பாற்று" என்று. நட்பு, நண்பர்கள் அவ்வளவு கடினமான ஒன்று.

நட்பின் சிறப்பை உணர்ந்த இயேசு, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்றார்.தன்னைக் காட்டிக்கொடுத்தவரையும் 'தோழா, எதற்காக வந்தாய்?' என்ற உயிரை உறைய வைத்த வார்த்தைகள் பகைவனையும் பதற வைத்துவிடும். இவ்வாறு இயேசு, பகையைக்கூட நட்பாக மாற்றவேண்டும். இருக்கின்ற நட்பை, உயிரைக்கொடுத்தேனும்; வளர்க்க வேண்டும் என்பதைத் தெழிவுபடுத்துகிறார்.

உயிரை வாங்குகின்ற நட்பு பல வடிவங்களில் மாறுவேடங்களில் அலைவதைப் பார்க்கிறோம்.சுயநலம் என்ற போர்வையில், பணம் பதவி ஆசையில் காட்டிக்கொடுக்கும் துரோகங்கள் நட்பில் நயவஞ்சகமாக நடைபெறுவதை முன்னுணர்ந்தே இயேசு இதைச் சொன்னார். நட்பை வளர்ப்போம். உயிரைக்கொடுத்தும் நண்பனைக் காப்போம்.தலை போனாலும் ஒருபோதும் பகைவனைக்கூட காட்டிக்கொடுக்க வேண்டாம். அது அவனைத் திருந்தி வாழ வைக்கும். நட்பை வளர்க்கும். நம்மை வாழ வைக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்