முதல் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4

சகோதரர் சகோதரிகளே, திரண்டு வரும் மேகம்போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போகமாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 22: 25b-26. 27,29. 30-31

பல்லவி: ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!

25b உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;
ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! -பல்லவி

27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்;
பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;
புழுதிக்குள் இறங்குவோர் யாவரும், தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். -பல்லவி

30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்;
இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும்.
31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;
இனி பிறக்கப்போகும் மக்களுக்கு `இதை அவரே செய்தார்' என்பர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

மாற்கு 5:21-43

பொதுக்காலம், வாரம் 4 செவ்வாய்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, ``என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ``என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ``இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ``மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.

அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ``உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ``அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ``ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ``தலித்தா கூம்'' என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். ``இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

எழுந்து ஒளி வீசு ...

எழுந்து ஒளி வீசு என்ற நூலின் ஆசிரியர் மனுஷபுத்திரனின் வார்த்தைகள் ’ ஒருவனுக்குள் இருக்கின்ற உணர்வுகளை தூண்டி விட்டாலே போதும் எழும்பி விடுவான்”. நடைமுறையில் சமுதாயத்தில் எழுந்தவர்களின் வாழ்வு சான்றாகவே அமைகிறது. நிக்கோலஸ் மைக் வைஜிக் என்ற ஆஸ்திரிய மத போதகர், தன் தந்தையின் உணர்ச்சிமிக்க வார்த்தையினால் இன்று இளையோர் மத்தியில் ஒளிவீசுகின்றார். நீதித்துறையில் எழுந்து ஒளிவீசுகின்ற மைக்கிள் குன்ஷா பேசத் தெரியாதவன் மனிதன் என்று ஒதுக்கப்பட்ட மனிதன், எழுந்து பிரகாசிக்கின்றார். இவ்வாறு பலருடைய வாழ்வு நமக்கு கற்றுத் தருகிறது.

அதுபோலவே இன்றைய வாசகத்தில், இறைமகன் இயேசு கிறிஸ்து பெண்ணினம் எழுந்து ஒளி வீச தூண்டுவதை நாம் பார்க்கின்றோம். மூன்று விதமான பெண்கள் எழுந்து ஒளிவீச இயேசு காரணமாகின்றார். எவ்வாறெனில் ஒரு பெண் சமூகத்திலிருந்து விலக்கப்பட்ட நிலையிலும், மற்றொரு இரண்டு பெண்கள் இந்த மண்ணைவிட்டு அகலக்கூடிய நிலைமையில் இருந்தார்கள். ஆனால் இயேசு புதுவாழ்வு கொடுத்து (ஆவியின் தூண்டுதலால்) மகிழ்கின்றார். காரணம் நோயாளிகள் ஒதுக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டார்கள். இன்று சமுதாயம் உலக தொற்றுநோய் ஒழிப்பு என்ற அமைப்பை ஏற்படுத்திய நாளை கொண்டாட அழைக்கின்றது.

நாம் மறைக்கப்பட்டு வாழ்வு இழக்கக்கூடிய நபர்களின் வாழ்வில் ஒளியூட்டுகின்றோமா (அ) வாழ்வை அழிக்க முயற்சி எடுக்கின்றோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

======================

31.01.2023 – மாற்கு 5: 21 - 43
தொட்டாசிணுங்கி

தொட்டாசிணுங்கி இலைகளைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால் இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து மூடிக்கொள்கிறது. இந்த திரவத்தன்மை போன்று தான் தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது அந்த குழந்தை தாயின் அன்பில் வளர்கிறது. கவலையோடு இருக்கின்ற மனிதனை நாம் தொடும்போது அவன் கவலையை மறந்து புத்துயிர் பெறுகிறான். ஆனால் அந்த தாவரத்தின் தண்டு போன்றும் ஒரு சில தொடுதல்கள் இருக்கின்றன. இது சமுதாயத்தை இழிவுபடுத்தக் கூடியதாக இருக்கிறது. ஆசிரியர்கள் மாணவர்களை பாலியல் இன்பத்திற்கு தொடுதல், கணவன் மனைவியைத் தொடுதல், காவல் துறையினர் பொதுமக்களை தொடுதல் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

ஆனால் இயேசுவின் தொடுதல் மற்றவர்களுக்கு வாழ்வு அளிப்பதாக இன்றைய நற்செய்தி வாசகம் படம்பிடித்துக் காட்டுகிறது. இரண்டு நபர்களுமே பெண்கள் தான். பழைய ஏற்பாட்டு இஸ்ரயேல் சமுதாயமும், இயேசு காலத்து யூத சமுதாயமும் பொதுவாக ஓர் ஆண்வர்க்கம் சார்பு கொண்டவையாகவே இருந்தன. ஆனால் இத்தகைய அநீதி நிலைக்கு எதிராக சவால் விட்டவர் இயேசு. அதனால் தான் ஒரு பெண்ணை அவர் தொடுவதற்கும், இன்னொரு பெண் தன்னை தொடுவதற்கும் அனுமதி அளிக்கின்றார். பழைய ஏற்பாட்டில் இரத்தப்போக்கு என்பது தீட்டாக பார்த்தார்கள். ஆனால் இயேசு அப்படியொரு பெண்ணைத் தான் தொடுவதற்கு அனுமதி அளிக்கின்றார். காரணம், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனால் தான் ஒருவர் தொட்டு வாழ்வு பெறுகின்றார், மற்றொருவர் இயேசுவின் தொடுதலால் வாழ்வு பெறுகின்றார். ஒருவர் உயிர் பெறுகின்றார். மற்றாருவர் வாழ்வு பெறுகின்றார். ஒருவர் வறுமையில் வாடியவர், மற்றொருவர் செல்வ செழிப்பானவர். இருவருக்குமே பொதுவாக இருப்பவை 12 ஆண்டுகள். முதல் பெண்ணுக்கு 12 ஆண்டுகள் துன்பம், மற்றொரு பெண்ணுக்கு 12 ஆண்டுகள் மகிழ்ச்சி.

நாம் பிறரை தொடுகின்றபோது இத்தகைய அன்பை உணர்கின்றோமா? நமது தொடுதல் மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறதா? அல்லது வாழ்வைக் கெடுக்கிறதா? ஆனால் இயேசுவை நாம் தினமும் நமது கரங்களில் தொட்டு வாழ்வு பெற விரும்புகிறோம். நமது தொடுதல் மற்றவர்களுக்கு?

- அருட்பணி. பிரதாப்

===========================

4ம் வாரம் செவ்வாய்
“நோயினையும் சாவினையும் முறியடிப்போம்”

படிப்படியாக இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையை படம்படித்துக் காட்டுகிறார் நற்செய்தியாளர் தூய மாற்கு. இதன் உச்சமாக புயலை அடக்கியவர் (4: 35-41) பேயை ஓட்டியவர் (1:21-27) இன்றைய நற்செய்தியில் பிணியைப் போக்குகின்றார், இறந்தவரை உயிர்ப்பிக்கின்றார். இரண்டு அற்புதத்திற்கும் அடிப்படையாக இருப்பது “நம்பிக்கையோ”. நோயோ, இறப்போ, எதுவும் நம் ஆண்டவரின் இயேசுவின் மீது நம்பிக்கையோடிருந்தால் நம்மை அனுகாது, அனுகினாலும் அவர் அதனை வெற்றிக் கொள்வார். இதன் மூலம் அவர் மருத்துவர்கெல்லாம் மருத்துவராகவும், “என்னில் நம்பிகை கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” (யோவான் 11:26) என்ற இறைவார்த்தையும் நிறைவுப் பெறுகிறது. இன்றைய நற்செய்தியில் இருவருமே நம்மை ‘பயத்திலிருந்து நம்பிகையை’ நோக்கி அழைத்து செல்கின்றனர்.

இந்த இருவரைப் போலவே நாமும் இயேசுவின் “காலில் விழுவோம”; நம்பிகையோடும் உறுதியோடும்.
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” அன்போடும் பக்தியோடும்
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும்
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து அர்பணிப்போம்.

திருத்தொண்டர். வளன் அரசு

கடவுளின் வல்லமை

யூதர்களின் துக்கச்சடங்கு மிகவும் விரிவானது. ஒருவர் இறந்தவுடனே, அழுகையும், கூப்பாடும் வெளிப்பட்டு, இறப்பை, அங்கிருக்கிறவர்களுக்கு அறிவித்துவிடும். அழுகிறவர்கள் இறந்தவர்களின் மேல் விழுந்தும், தங்கள் முடிகளை பிய்த்துக்கொண்டும், தங்கள் உடைகளை கிழித்துக்கொண்டும் அழுவார்கள். எவ்வாறு உடைகள் கிழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒழுங்குகள் இருந்தன. குழல்கள் ஊதப்பட வேண்டும். ஏழையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு குழல் ஊதுவோராவது இருக்க வேண்டும். சோகத்தை வெளிப்படுத்தும் இசைக்கருவியாக இது பார்க்கப்பட்டது.

புலம்புகிறவர்கள் துக்கநாட்களில் வேலைக்குச் செல்லக்கூடாது. ஒரு கூலித்தொழிலாளி கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இறைவாக்கு நூல்களை வாசிக்கக்கூடாது. ஏனெனில், இறைவாக்கு நூல்களை வாசிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகும். யோபு, எரேமியா மற்றும் புலம்பல் நூல்களை மட்டும் வாசிக்கலாம். முப்பது நாட்களுக்கு ஊரைவிட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. திருமணமாகாதவர்கள் இறந்தால், அடக்கம் செய்வதற்கு முன்னதாக, திருமணச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, பல சடங்குகள் துக்கக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இனிமேல் ஒன்றும் நடப்பதற்கில்லை. அனைத்துமே முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இயேசுவின் வார்த்தைகள் அங்கிருந்தவர்களை ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளுக்குப்பின்னால் நடந்தது, அனைவரையும் மலைக்க வைத்தது. நம்பிக்கையின்மையை ஒரு வினாடியில் இயேசுவின் வார்த்தைகள் மலைக்க வைத்தன. அதுதான் கடவுளின் ஆற்றல். அதுதான் கடவுளின் வல்லமை. அதை நமது வாழ்க்கையில் நம்புவோம். வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையின் ஆழம்

மாற்கு நற்செய்தியாளர் ”தலித்தா கூம்” என்கிற அரேமேய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதற்காக மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியில் தனது நற்செய்தியை எழுதுகிறபோது, அரேமேய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்?  மாற்கு நற்செய்தியாளர் இந்த வார்த்தையை பேதுருவிடமிருந்து அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவின் மூன்று முக்கிய சீடர்களுள் ஒருவர். இறந்த சிறுமியை உயிர்ப்பிக்கும்போது, அவர் இயேசுவோடு நிச்சயம் இருந்திருப்பார். இறந்த போயிருக்கிற சிறுமி உயிரோடு எழுந்தது, பேதுருவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிச்சயமாக பதிந்திருக்கும். அந்த நிகழ்வு அவருடைய கண்களை விட்டு எளிதாக அகலக்கூடியது அல்ல. எனவே, இயேசு பயன்படுத்திய ”தலித்தா கூம்” என்கிற வார்த்தை நிச்சயமாக அவர் மறந்திருக்க மாட்டார். அதனால் தான் அந்த வார்த்தை மறக்கப்படாமல் இங்கே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு விதமான மனநிலையைப்பார்க்கிறோம். 1. சுற்றிருக்கும் மக்கள் கூட்டம் நம்பிக்கையிழந்த மனநிலையோடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இயேசு நம்பிக்கையோடு காணப்படுகிறார். அதன் வெளிப்பாடுதான் ”அஞ்சாதே” என்கிற வார்த்தை. 2. அழுது, புலம்பி அங்கலாயித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். மற்றொருபுறம் அமைதியான இயேசு. இறப்பு வருத்தமளிக்கும், நெஞ்சைக்கிழிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனாலும், எதிர்பாராத நிகழ்வுகளையும் தாங்கும் உறுதியான நெஞ்சம் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டுவிதமான மனநிலையின் வேறுபாட்டிற்கான காரணம், இயேசு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் கூட்டத்தினருக்கு நம்பிக்கையில்லை.

கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு வைக்கலாம், என்று நம்பிக்கையின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவை நமது வாழ்வில் பின்பற்றினால், நிச்சயம் நம்பிக்கையின் ஆழத்திற்கு நாமும் செல்ல முடியும். வாழ்வை இயேசுவின் மனநிலையோடு அணுக முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைநம்பிக்கை எது?

தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம்.

சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால் கைவிடப்பட்டநிலையில், அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியைச்சந்தித்த நிலையில், கடைசி முயற்சியாக இயேசுவிடம் வந்திருக்கிறார். கடவுள் மீது வைத்துவிட்ட நம்பிக்கையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தை ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் படைத்திருக்கிறார். இறைவனால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்கிற சிந்தனையை இயேசு இங்கே ஆழப்படுத்துகிறார்.

இறைவனை நம்பி நாம் செய்கிற எந்தவொரு செயலும் பொய்த்துப்போவதில்லை. அது எப்போதும் நமக்கு வெற்றியே என்பதை உணர்ந்து, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது.

  1. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார்.
  1. அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள்.
  1. ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார்.
  1. அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன.
  1. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள்.
  1. நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு
  1. வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”.

இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி... போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------

இயேசுவைத் தொட்ட பெண் ... !

இயேசு தம் பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கினார். இயேசுவைத் தொட்டுக் குணம் பெற்ற மனிதர்களில் ஒருவராகப் பெருமை அடைகிறார் பெயர்கூடக் குறிப்பிடப்படாத இந்தப் பெண். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் என்றுதான் இவர் அடையாளம் காட்டப்படுகிறாரே தவிர, பெயரினாலோ, வேறு எந்த சமூக அடையாளத்தினாலோ அல்ல. அதுதான் அன்றைய பெண்களின் நிலை!

ஆனால், இயேசு அவரைப் பெருமைப்படுத்துகிறார். எப்படியெல்லாம்...
1. இயேசுவைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும் தொட்டவர் என்னும் பெருமையை அறிவிக்கும் வண்ணம் "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டதன் மூலம்.

2. "மகளே" என்று உரிமையுடன் அழைத்ததன் மூலம்.

3. "உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்று பாராட்டியதன்மூலம்.

4. "அமைதியுடன் போ" என்று வாழ்த்தியதன்மூலம்.

5. "நீ நோய் நீங்கி நலமாயிரு" என்று ஊக்கப்படுத்தியதன்மூலம்.

பெண்களைப் பற்றிய பார்வையையும், பழக்கங்களையும் மாற்றியவர் என்ற பெருமை இயேசுவுக்கு உண்டு. இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கான ஒரு சான்று

மன்றாடுவோம்: பெண்களைப் பெருமைப்படுத்திய ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பெண்களை மாண்புடன் நடத்த தூய ஆவி என்னும் கொடையைத் தந்தருள்வீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------

திருப்பாடல் 22: 25 – 26, 27, 29, 30 – 31
”ஆண்டவரை நாடுவோர் அவரைப்புகழ்வார்களாக!”

ஆண்டவரை நாடுவோர் அவரைப்புகழ்வார்கள் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ஆண்டவரை நாடுவோர் எதற்காக கடவுளைப் புகழ்வார்கள்? நாம் ஆண்டவரை நாடி வருகிறபோது, அவரைப்பற்றி அதிகம் அறிந்துகொள்கிறோம். ஒருவரை நாம் எதற்காக நாடிச்செல்கிறோம்? ஒருவரது அன்பைப் பெறுவதற்காக இருக்கலாம். உதவிக்காக இருக்கலாம். நம்முடைய எண்ண ஓட்டங்களை பகிர்ந்து கொள்வதற்காக இருக்கலாம். அப்படி ஒருவரை நம்பி நாம் செல்கிறபோது, அவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோர், நம்மை வரவேற்கிறார் என்பது நாம் அனுபவித்த பிறகு தான் நமக்குத்தெரியும். ஒருவேளை மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நாம் செல்லக்கூடியவர்களாக இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், நேரிடையான அனுபவம் தான், ஒருவரைப் பற்றி நமக்கு உண்மையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும். அப்படித்தான் கடவுளின் அன்பும், இரக்கமும் என்று திருப்பாடல் கூறுகிறது.

நாம் கடவுளைத் தேடி வருகிறபோது, அவரைப்பற்றி கேள்விப்பட்டதை விட, கடவுள் அதிக அன்புள்ளவராக இருக்கிறார். நாம் எதிர்பார்க்கிறதை விட அதிக நேசம் காட்டுகிறவராக இருக்கிறார். நாம் கேட்பதை விட, நமக்கு அதிகமாக பார்த்து, பார்த்துச் செய்கிறார். இன்றைய நற்செய்தியில் அந்த அனுபவத்தை தொழுகைக்கூடத்தலைவரும், பன்னிரெண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணும் பெற்றுக்கொள்கிறார்கள். இரண்டுபேருமே இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். கேள்விப்பட்டதை வைத்து இயேசுவை நாடி வருகிறார்கள். இரண்டு பேருமே கடவுளைப்புகழந்திருப்பார்கள். ஆக, கடவுளை நாம் நாடி வருகிறபோது, ஏமாறமாட்டோம் என்பது இங்கே சொல்லப்படுகிற செய்தி. கடவுள் மட்டில் நம்பிக்கை வைத்துதான்,

இன்றைக்கு பொதுநலனுக்காக உழைக்கிறவர்கள், பல தியாகங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த தியாகங்களில் பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், அவர்கள் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை, அதனை எதிர்கொள்வதற்கான பலத்தை நிச்சயம் தரும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

கடவுளின் வல்லமை

யூதர்களின் துக்கச்சடங்கு மிகவும் விரிவானது. ஒருவர் இறந்தவுடனே, அழுகையும், கூப்பாடும் வெளிப்பட்டு, இறப்பை, அங்கிருக்கிறவர்களுக்கு அறிவித்துவிடும். அழுகிறவர்கள் இறந்தவர்களின் மேல் விழுந்தும், தங்கள் முடிகளை பிய்த்துக்கொண்டும், தங்கள் உடைகளை கிழித்துக்கொண்டும் அழுவார்கள். எவ்வாறு உடைகள் கிழிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஒழுங்குகள் இருந்தன. குழல்கள் ஊதப்பட வேண்டும். ஏழையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு குழல் ஊதுவோராவது இருக்க வேண்டும். சோகத்தை வெளிப்படுத்தும் இசைக்கருவியாக இது பார்க்கப்பட்டது.

புலம்புகிறவர்கள் துக்கநாட்களில் வேலைக்குச் செல்லக்கூடாது. ஒரு கூலித்தொழிலாளி கூட, குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வேலைக்குச் செல்வதிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும். இறைவாக்கு நூல்களை வாசிக்கக்கூடாது. ஏனெனில், இறைவாக்கு நூல்களை வாசிப்பது, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகும். யோபு, எரேமியா மற்றும் புலம்பல் நூல்களை மட்டும் வாசிக்கலாம். முப்பது நாட்களுக்கு ஊரைவிட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. திருமணமாகாதவர்கள் இறந்தால், அடக்கம் செய்வதற்கு முன்னதாக, திருமணச்சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு, பல சடங்குகள் துக்கக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இனிமேல் ஒன்றும் நடப்பதற்கில்லை. அனைத்துமே முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இயேசுவின் வார்த்தைகள் அங்கிருந்தவர்களை ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், இயேசுவின் வார்த்தைகளுக்குப்பின்னால் நடந்தது, அனைவரையும் மலைக்க வைத்தது. நம்பிக்கையின்மையை ஒரு வினாடியில் இயேசுவின் வார்த்தைகள் மலைக்க வைத்தன. அதுதான் கடவுளின் ஆற்றல். அதுதான் கடவுளின் வல்லமை. அதை நமது வாழ்க்கையில் நம்புவோம். வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையின் ஆழம்

மாற்கு நற்செய்தியாளர் ”தலித்தா கூம்” என்கிற அரேமேய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதற்காக மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியில் தனது நற்செய்தியை எழுதுகிறபோது, அரேமேய வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்?  மாற்கு நற்செய்தியாளர் இந்த வார்த்தையை பேதுருவிடமிருந்து அறிந்திருக்க வேண்டும். பேதுரு இயேசுவின் மூன்று முக்கிய சீடர்களுள் ஒருவர். இறந்த சிறுமியை உயிர்ப்பிக்கும்போது, அவர் இயேசுவோடு நிச்சயம் இருந்திருப்பார். இறந்த போயிருக்கிற சிறுமி உயிரோடு எழுந்தது, பேதுருவின் நெஞ்சில் பசுமரத்தாணி போல் நிச்சயமாக பதிந்திருக்கும். அந்த நிகழ்வு அவருடைய கண்களை விட்டு எளிதாக அகலக்கூடியது அல்ல. எனவே, இயேசு பயன்படுத்திய ”தலித்தா கூம்” என்கிற வார்த்தை நிச்சயமாக அவர் மறந்திருக்க மாட்டார். அதனால் தான் அந்த வார்த்தை மறக்கப்படாமல் இங்கே பயன்படுத்தப்படுகிறது.

இந்த பகுதியில் இரண்டு விதமான மனநிலையைப்பார்க்கிறோம். 1. சுற்றிருக்கும் மக்கள் கூட்டம் நம்பிக்கையிழந்த மனநிலையோடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், இயேசு நம்பிக்கையோடு காணப்படுகிறார். அதன் வெளிப்பாடுதான் ”அஞ்சாதே” என்கிற வார்த்தை. 2. அழுது, புலம்பி அங்கலாயித்துக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். மற்றொருபுறம் அமைதியான இயேசு. இறப்பு வருத்தமளிக்கும், நெஞ்சைக்கிழிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனாலும், எதிர்பாராத நிகழ்வுகளையும் தாங்கும் உறுதியான நெஞ்சம் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டுவிதமான மனநிலையின் வேறுபாட்டிற்கான காரணம், இயேசு கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் கூட்டத்தினருக்கு நம்பிக்கையில்லை.

கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு வைக்கலாம், என்று நம்பிக்கையின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இயேசுவை நமது வாழ்வில் பின்பற்றினால், நிச்சயம் நம்பிக்கையின் ஆழத்திற்கு நாமும் செல்ல முடியும். வாழ்வை இயேசுவின் மனநிலையோடு அணுக முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைநம்பிக்கை எது?

தொழுகைக்கூடத்தலைவர் பதவி என்பது யூத மக்களால் மதிப்பும், மரியாதையுமிக்க ஒரு பதவி. தொழுகைக்கூடத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அவர்தான் பொறுப்பு. அப்படிப்பட்ட நபர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்தார் என்பது ஆச்சரியமான செய்தி. ஏனென்றால், இயேசுவின் போதனைகளும், புதுமைகளும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும், மேல்மட்டத்தலைவர்களிடையே வெறுப்பைத்தான் சந்தித்திருந்தது. இயேசுவைப்பற்றி தவறான எண்ணங்கள் அவர்களிடையே மேலோங்கியிருந்தது. அதனால் தான், தொடக்கத்தில் தொழுகைக்கூடங்களில் போதிப்பதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் பிற்காலத்தில் அவ்வளவாக இயேசுவுக்கு கிடைத்திருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவைத்தேடி வருவது, மேல்மட்டத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயரைப்பெற்றுத்தரலாம். அதையெல்லாம் மீறி அவர் இயேசுவிடத்திலே உதவிக்கு வந்திருப்பது, இயேசுவின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மகள் மீது வைத்திருந்த பாசம்.

சிறுமி இறந்துவிட்டாள். போதகரைத்தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற செய்தி கிடைத்தபோதிலும், இயேசு அவரிடத்திலே நம்பிக்கையை மட்டும் விடாமலிருக்கச்சொல்கிறார். தொழுகைக்கூடத்தலைவர் வந்ததே நம்பிக்கையில்தான். ஏனெனில் அவருடைய மகள் வருகின்றபோதே சாகுந்தருவாயில் இருந்தார். அதாவது, மருத்துவர்களால் கைவிடப்பட்டநிலையில், அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியைச்சந்தித்த நிலையில், கடைசி முயற்சியாக இயேசுவிடம் வந்திருக்கிறார். கடவுள் மீது வைத்துவிட்ட நம்பிக்கையை எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். இந்த உலகத்தை ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் படைத்திருக்கிறார். இறைவனால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்கிற சிந்தனையை இயேசு இங்கே ஆழப்படுத்துகிறார்.

இறைவனை நம்பி நாம் செய்கிற எந்தவொரு செயலும் பொய்த்துப்போவதில்லை. அது எப்போதும் நமக்கு வெற்றியே என்பதை உணர்ந்து, நம் விசுவாசத்தை ஆழப்படுத்த இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

அஞ்சாதீர், நம்பிக்கையை விடாதீர்!

இன்றைய நற்செய்தி வாசகம் உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறது.

  1. துயரம்: யாயிரின் மகள் சாகும் தறுவாயில் இருந்ததால், இயேசுவை நாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தார் என்றால், இயேசுவின் காலிலேயே விழுந்துவிட்டார்.
  1. அச்சமும், அவநம்பிக்கையும்: யாயிரின் மகள் இறந்துவிட்ட செய்தியைக் கொண்டுவந்த ஆள்கள் “போதகரை இன்னும் ஏன் தொந்தரவு செய்கிறீர்?” என்று சொல்லி, அவருடைய நம்பிக்கையையும், மனவலிமையையும் குலைக்கிறார்கள்.
  1. ஊக்கம்: இயேசுவோ “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று சொல்லி அவருக்கு ஊக்கமூட்டி, உடன் செல்கிறார்.
  1. அழுகை, துயரம்: இறந்த வீட்டில் ஒப்பாரியும், ஓலமும், புலம்பலும் நிலவுகின்றன.
  1. துணிவான நம்பிக்கை: “சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்னும் இயேசுவின துணிச்சலும், நம்பிக்கையும் நிறைந்த சொற்கள்.
  1. நகைப்பு: மக்களின் நம்பிக்கை இல்லாத நகைப்பு
  1. வியப்பும், மலைப்பும்: இயேசு சிறுமியை உயிர்ப்பித்தபோது, அங்கிருந்தோர் யாவரும் “மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்”.

இத்தனை உணர்வுகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது இயேசுவின் நம்பிக்கையும், இயேசுமீது யாயிர் கொண்டிருந்த நம்பிக்யையும். அச்சம், கலக்கம், துயரம், அழுகை, ஓலம், புலம்பல், அமளி... போன்றவை இறைநம்பிக்கையின் எதிரிகள். இவை இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்காது, எனவேதான், இயேசு, “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என அறிவுறுத்துகிறார்.

நமது வாழ்க்கையில் எவ்வளவு கொந்தளிப்புகள் வந்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடாமல், நம்பிக்கையுடன் வாழ்வோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கின்ற அச்சம், அவமானம், கலக்கம், குழப்பம், துயரம், சாவு போன்ற வேளைகளில் நம்பிக்கை இழந்துவிடாமல், உம்மைப் பற்றிக்கொள்ளும் அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------

இயேசுவைத் தொட்ட பெண் ... !

இயேசு தம் பணிவாழ்வில் பலரைத் தொட்டுக் குணமாக்கினார். இயேசுவைத் தொட்டுக் குணம் பெற்ற மனிதர்களில் ஒருவராகப் பெருமை அடைகிறார் பெயர்கூடக் குறிப்பிடப்படாத இந்தப் பெண். பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் என்றுதான் இவர் அடையாளம் காட்டப்படுகிறாரே தவிர, பெயரினாலோ, வேறு எந்த சமூக அடையாளத்தினாலோ அல்ல. அதுதான் அன்றைய பெண்களின் நிலை!

ஆனால், இயேசு அவரைப் பெருமைப்படுத்துகிறார். எப்படியெல்லாம்...
1. இயேசுவைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும் தொட்டவர் என்னும் பெருமையை அறிவிக்கும் வண்ணம் "என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டதன் மூலம்.

2. "மகளே" என்று உரிமையுடன் அழைத்ததன் மூலம்.

3. "உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்று பாராட்டியதன்மூலம்.

4. "அமைதியுடன் போ" என்று வாழ்த்தியதன்மூலம்.

5. "நீ நோய் நீங்கி நலமாயிரு" என்று ஊக்கப்படுத்தியதன்மூலம்.

பெண்களைப் பற்றிய பார்வையையும், பழக்கங்களையும் மாற்றியவர் என்ற பெருமை இயேசுவுக்கு உண்டு. இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கான ஒரு சான்று

மன்றாடுவோம்: பெண்களைப் பெருமைப்படுத்திய ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் போல நாங்களும் பெண்களை மாண்புடன் நடத்த தூய ஆவி என்னும் கொடையைத் தந்தருள்வீராக. உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------

இணையதள உறவுகளே

என் ஆடையைத் தொட்டு சுகம் பெற்றது யார்? சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறார். கொடுத்த சுகத்தைத் திரும்ப பெறுவதற்கா? அவளைப் பிடித்து நான்கு வார்த்தை நறுக்கென்று கேட்வா? அதைக் கேட்டு அவளை அத்தனைபேர் முன்னிலையில் அவமானப்படுத்தவா? நிச்சயமாக இல்லை. கொடுத்த எந்த கொடையையும் திரும்ப எடுத்துக்கொள்பவர் அல்ல நம் இயேசு (நாமாக கெடுத்து அழித்தால் மட்டுமே). அப்புறம் ஏன் தேடினார்?

நற்செயல்கள் நான்குபேர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். நற்செயலைச் செய்தவர்களும் அதுபோல பாராட்டப்பட வேண்டும். அந்த பெண்ணை சந்தித்து நேரடியாக பாராட்டுகிறார். தொழுகைக் கூடத்தலைவனிடம் நான் உன் குழந்தையைக் குணமாக்க உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டதும், தனக்கும் தன் பக்தர்களுக்கும் இடையே உள்ளார்ந்த உறவு உண்டாக்கவே.

உங்களையும் நேரடியாக பார்த்து பேசி, உண்டு உறவாடி மகிழ நம் இயேசு விரும்புகிறார். உங்கள் வீட்டுக்கு வருவதற்கு அலாதி விருப்பம் அவருக்கு. தனிமையில் உங்களோடு பேச அவர் விரும்புகிறார். உங்கள் அன்றாட வாழ்க்கையை, வாழ்வின் எல்லாவற்றையும் தினமும் அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுமைகளை அவர் தாங்குவார். நற்சுகத்தோடு நல்வாழ்வு வாழ உதவுவார்.

-ஜோசப் லீயோன்

-------------------------

''இயேசு சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம் 'தலித்தா கூம்' என்றார்.
அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள்.
உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள்'' (மாற்கு 5:41-42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பன்னிரண்டு என்னும் எண் தனிப்பொருள் உடையது என்பது யூதர்களின் கருத்து. இயேசுவின் வல்லமையால் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த சிறுமிக்கு வயது பன்னிரண்டு. சிறுவயதில் இறப்பது ஒரு பெரிய இழப்புதான். அக்கால வழக்கப்படி பன்னிரண்டு வயதான பெண் திருமணத்திற்குத் தகுதி பெற்று, குழந்தைப் பேறு அடையும் பருவத்தை எய்தியவர். அவ்வயதில் இறக்க நேர்ந்தால் தாய்மைப் பேறு இன்றி இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்ற அவல நிலை அவருக்கு ஏற்படும். அது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கமாகும். இயேசுவைப் பார்க்கச் சென்ற தொழுகைக் கூடத் தலைவர் யாயிர் தம் மகள் இறந்துபோகும் தறுவாயில் இருப்பதாகத் தான் முதலில் தெரிவித்தார். ஆனால் பிறகு தம் மகள் இறந்துவிட்டாள் என்னும் செய்தியை அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அச்செய்தி இயேசுவின் காதிலும் விழுகிறது. இயேசுவின் உள்ளத்தில் இரக்கம் பொங்கி எழுகிறது. அவர் யாயிரின் வீட்டுக்குள் செல்கிறார். பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீடர்களை மட்டுமே தம்மோடு வர அனுமதிக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளின் போது இந்த மூன்று சீடர்கள் மட்டுமே இருப்பதை நாம் கருதலாம். எடுத்துக்காட்டாக, இயேசு மலை மீது தோற்றம் மாறியபோது இம்மூன்று சீடர்களும் அவரோடு இருந்தார்கள் (மாற் 9:2). எருசலேமின் அழிவுபற்றி இயேசு அறிவித்தபோது அவர்கள் இருந்தார்கள் (மாற் 13:3-4). கெத்சமனித் தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் செய்தபோதும் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருமே இயேசுவோடு இருந்தார்கள் (மாற் 14:33). எனவே, இயேசு பன்னிரு வயது நிரம்பிய சிறுமியைச் சாவிலிருந்து உயிர்பெற்றெழச் செய்த நிகழ்ச்சி ஒரு புதுமை மட்டுமல்ல, ஆழ்ந்த பொருளுடைய ஒரு நிகழ்ச்சியாகவும் இருந்தது.

-- அதாவது, இயேசு மக்களுக்கு வாழ்வளிக்க வந்தார். அவர்களுக்குப் புத்துயிர் வழங்க வந்தார். அவர்களுக்குக் கடவுளின் வாழ்வில் பங்களிக்க வந்தார். எனவே, பன்னிரு வயது நிரம்பிய சிறுமியை நோக்கி ''எழுந்திடு'' என இயேசு கூறிய சொற்கள் நாம் இயேசுவின் வல்லமையால் ஒருநாள் உயிர்பெற்றெழுவோம் என்பதற்கு முன் அடையாளமாயிற்று. சிறுமியின் தந்தையிடம் இயேசு, ''அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' (மாற் 5:36) என்று கூறினார். கடவுளால் எல்லாம் நிறைவேற்ற முடியும் என நாம் உளமார நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அப்போது இயேசு நமக்கு வாழ்வளிப்பார். நம்மைச் சாவிலிருந்து மீட்டு நாம் இறைவனோடு என்றென்றும் வாழ்கின்ற பேற்றினை நமக்கு அளிப்பார்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவும் அதனால் வாழ்வு பெறவும் அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''இயேசு இரத்தப் போக்குடைய பெண்ணிடம்,
'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று.
அமைதியுடன் போ, நீ நோய் நீங்கி நலமாயிரு' என்றார்'' (மாற்கு 5:34)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவை அணுகிச் சென்ற மக்கள் அவரிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்கள்? சிலர் அவர் புரிந்த அதிசய செயல்களால் கவரப்பட்டார்கள். சிலர் அவருடைய போதனையைக் கண்டு வியந்து அவரைப் பின்சென்றார்கள். மற்றும் சிலர் அவரை ஓர் இறைவாக்கினராகக் கருதி அவர் தங்களுக்குக் கடவுள் பெயரால் அறிவித்ததைக் கேட்குமாறு சென்றார்கள். இயேசுவின் எதிரிகளோ அவரிடத்தில் குற்றம் காண்பதற்காக அவரை அணுகினார்கள். இவ்வாறு பலரும் பல நோக்கங்களோடு இயேசுவிடம் சென்றதை நற்செய்தி ஆசிரியர்கள் பதிவுசெய்துள்ளனர். இயேசு கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி கூறியதை ஏற்றுக்கொண்டவர்களின் உள்ளத்தில் நம்பிக்கை என்னும் விளக்கு ஒளிர்ந்தது. அவர்கள் இயேசுவிடம் வெளிப்பட்ட வல்லமை கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடவுளின் வல்லமையை இயேசுவிடம் கண்ட மக்களுக்கு இயேசு மனமிரங்கி நன்மை புரிந்த தருணங்கள் பல உண்டு.

-- பல ஆண்டுகள் இரத்தப் போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவை நம்பிக்கையோடு அணுகிச் சென்று, அவருடைய மேலாடையைத் தொடுகிறார். இவ்வாறு தொடுவதால் தனக்கு நலம் கிடைக்கும் என நம்புகிறார். அந்நம்பிக்கை வீண் போகவில்லை. மக்கள் கூட்டத்தின் நடுவில் அப்பெண்ணை அடையாளம் கண்ட இயேசு அவருடைய நம்பிக்கையைப் போற்றியுரைக்கிறார்: ''மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' (மாற் 5:34). மனிதருக்கு நலம் வழங்கிய இயேசு எப்போதுமே அவர்களுடைய நம்பிக்கையைப் போற்றுவதைக் காண்கிறோம். நலம் பெறுவது தானாகவே நிகழ்வதல்ல, மாறாக, நம்பிக்கையோடு கடவுளை அணுகுவோர் நலம் பெறுவர். கடவுளின் வல்லமையால்தான் நமக்கு நலம் கிடைக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் நம் உள்ளத்தில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாத இடத்தில் நலம் பெறுவதற்கான ஆவல் கூட இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோருக்குக் கடவுளின் அமைதி பரிசாகக் கிடைக்கும் (மாற் 3:54).

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம்மை நம்புவதில் ஒருநாளும் குறைபடாதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்