![]() ![]() ![]() ![]() ![]() |
![]() |
பல்வேறு ஜெபங்கள்.
பற்பல செபங்கள் காவல் தூதரை நோக்கி செபம்: எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே ! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென். அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்: இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக ! தொழிலாளிகளின் செபம்: அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும். தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே ! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென் ----------------- நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன். நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர். ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும். உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென். புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்: வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூயஅp;பிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரவுவே, தேவ கட்டளைபடி விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே, மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்தரின் சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென் காவல் தூதரை நோக்கிச் செபம் அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே ! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். ரூனெயளர் ஆமென்.
இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்: இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம். நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும். தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும். இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக. இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென் இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்: ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்; உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். சுவாமி! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை; வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்; இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக; இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக; எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும். ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை தீமையிலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.
தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு: தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். - ஆமென். கணவன் மனைவியரின் செபம்: மனைவியின் செபம்: கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென். தாய் தந்தையருக்காக செபம்: இறைவா! என் தாய் தந்தையரை உமகு நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவறிறிலும் அவர்களுக்குக் கீழ்படியவும் அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே. எல்லாம் வல்ல இறைவா உமது கற்பனைகளை ஆசையோடு முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது அருளைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், மதிக்கவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு உவப்புடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவறிறிலும் அவர்களுடைய நலனை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்சியோடும் பொறுமையோடும் சகித்துக்கொள்ளவும், எனக்கு உதவிசெய்தருளும்! அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத்தனததிலுமிருந்து என்னை விடுவித்தருளும. என் எல்லாப படிப்புகளிலும் வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்புடையவனாகவும் சோதனைகளில் பொறுமையுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் வாழ்நாள் முழுவதிலும் என் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை என்கிற பெயறுக்குத் தகுதியள்ளவனாய் இருப்பேனாக -ஆமென்.
பெற்றோரின் செபம்: மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற உனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும். ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென். முதியோர்களின் செபம்: ஆண்டவரே ! என் காலங்களெல்லாம் எவ்வகையாய் போனதென்று அறியேன். இப்போது தான் பிறந்து விளையாடி குடும்பக்காரியங்களை செய்துகொண்டிருந்ததாக என் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தச் சொற்ப காலத்தில் எத்தனை யோவிசை என் வாக்கினாலும் செயல்களினாலும் வீண் ஆசையினாலும் உமக்குத் துரோகம் செய்தேன். அப்போது எனக்கு கல்லறை கிட்டி வருகிறது. பயங்கரமான நடுத்தீர்வையிலே என்ன சொல்லப்போகிறேன் என்று அஞ்சுகிறேன். நான் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் அழுக்கடைந்து போயிருப்பதால் கடைசிகாரியங்களைத் தெளிவாய்ச் சரியாய் யோசித்து தியானிக்க முதலாய் அறியேன். ஆகையால் தேவரீர் என்பேரில் கிருபை கூர்ந்து நான் சாகுமுன் என் பாவங்களை நினைத்த அழுது பிரலாபித்து அவைகளுக்குப் பரிகாரமாக தவம் புரிந்து நல்ல மரணமடைய அனுக்கிரகம் செய்தருள உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.
தேர்வு எழுதுவோருக்காக ஜெபம் ஞானத்தின் ஊற்றே இறiவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக செபம்: வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக! மு. ; இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும். செபிப்போமாக ஆண்டவரே ! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் புகழ்ச்சி உண்டாகும் படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென். பஞ்சகாலத்தில் செபம்: நோய்ப்பட்ட கால்நடைகளுக்கான செபம்: ஆண்டவரே ! மிகுந்த தாழ்ச்சியோடே வணங்கி உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். கடின நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிற இந்த மிருகம் உம்முடைய ஆசீரினால் சுகம் அடைந்து, இனி யாதொரு நோய் படாதபடி எல்லாத் தொந்தரைகளும் விலகிப்போகச் செய்யும். நீரே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிரும். இரக்கம் மிகுந்த இறைவா, தேவரீர் தாமே இத்தகைய வாயில்லா ஜீவன்களை மனிதரின் நன்மைக்காக அளித்திருப்பதால், எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கு இல்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென். கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்: ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் ! நல்ல மரணத்துக்கு ஆயத்தம்: நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக. நோயாளிகள் சொல்லத்தகும் செபம் ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன். மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில் ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும். அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும். என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன். ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன். என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும். பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம் என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென். ஆசிரியரின் செபம்: அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென். இறை அழைத்தல் பெருக வேண்டுதல்: இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர். இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும். ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் , ஆண்டவரே. - ஆமென். ஊர்தி ஓட்டுநரின் செபம்: அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும். இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும். எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும். நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.
திருக்குடும்பத்தை நோக்கிச் செபம் இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன். இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள். ரூனெயளர் ஆமென்.
திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை ஆண்டவரே இரக்கமாயிரும் உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
மு. ரூனெயளர் இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். செபிப்போமாக இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ரூனெயளர் ஆமென்.
|