இறையவனே என் வழித்துணை நீயே

download

0374. இறையவனே என் வழித்துணை நீயே
இறைஞ்சிடும் ஏழையில் வாழ்க

1. திசை தெரியாத மரக்கலம் போல
திரிந்திடும் வாழ்வு உனதொளி காண
கலங்கரை தீபம் எனக்கு நீ ஆவாய்
நலம் தரும் வானக உணவென வாராய்

2. இகவழியாக அகவொளியாவாய்
பகைமையை நீக்கிப் புது உறவாவாய்
தகுதியில்லாத எளியேனைத் தேடி
எழுந்துள்ளம் வாழ இறைவனே வாராய்

3. பழம்பெரும் பாவ மனிதனை நீக்கி
வளம் தரும் தேவ மகனுனில் சேர்ந்து
புது மனுவாக வந்திக வாழ்வை
முடித்திட ஆசீர் அருளிட வாராய்