எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும்

download

0583. எந்தக் காலத்திலும் எந்த வேளையிலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1. தந்தையும் நீரே தாயும் நீரே
சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே

2. ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே

3. அன்பனும் நீரே நண்பனும் நீரே
அனைத்தும் நீரே என் பாக்யமும் நீரே

4. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே என் பாதையில் நீரே

5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் நேசரும் நீரே

6. மீட்பரும் நீரே என் மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே

7. ஒளியும் நீரே வழியும் நீரே
உண்மையும் நீரே நன்மையும் நீரே