அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து

download

0627. அன்புருவாய் எம் நடுவில் ஆசையுடன் வந்துதித்து
பொன்னொளியில் வீற்றிருக்கும் பூபதியே நமஸ்காரம்

1. பரலோக உன்னதத்தில் பாக்கியமாய் வாழ்பவர் நீர்
நரலோக வாசிகளுள் நலமேது தேடி வந்தீர்

2. நித்திய பிதாவினண்டை பாக்கியமாய் நீர் வீற்றிருக்க
சுத்தமில்லா பூவுலகை சுதந்திரமாய் கொண்டதேனோ

3. விண்ணுலகத் தூதர்களின் விளக்கொளியே பாக்கியமே
மண்ணுலக வாசிகளுள் வந்ததென்ன வானரசே

4. வானமதில் மேலவர்கள் வாழ்த்தியென்றும் போற்றுகின்ற
ஞானமே எம் மத்தியை நீர் நாடினதே ஆச்சரியம்