கிறிஸ்து அரசே இரட்சகரே

download

1106. கிறிஸ்து அரசே இரட்சகரே
மகிமை வணக்கம் புகழ் உமக்கே
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடினர் ஓசான்னா

1. இஸ்ராயேலின் அரசர் நீர்
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆசிபெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்

2. வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ
அழிவுறும் மனிதரும் படைப்புகளும்
யாவும் ஒன்றாய் புகழ்ந்திடுக

3. எபிரேயர்களின் மக்கள் திரள்
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்
ஜெபமும் கீதமும் காணிக்கையும்
கொண்டு யாம் இதோ வருகின்றோம்

4. பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனை செலுத்தினரே
ஆட்சி செலுத்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்

5. அவர் தம் பக்தியை ஏற்றீரே
நலமார் அரசே அருளரசே
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே