எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

download

1159. எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா
இனி அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ
இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே எந்தன் நெஞ்சுக்குள்ளே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்க வா

1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் - வழி
காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே

2. வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் - நான்
உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் வார்த்தை என் வாழ்வின்
உயிராகுமே உயிராகுமே